ஜப்பானின் ஏற்பட்ட துயர்மிகு சுனாமிக்கு பின் கிருஸ்தவர்கள் மத்தியில் ஒரு கலவரம் ஏற்படுத்தி “நான் வருட ஆரம்பமே சொன்னேன் சுனாமி வருமென்று வந்து விட்டது” என்று கூறி கொண்டு யேசு நாதரின் பினாமிகள் வர ஆரம்பித்துள்ளர்.
சுனாமி என்பது ஜப்பான் பொறுத்தவரையில் எப்போதும் நிகழும் நிகழ்ச்சியே. சுனாமி என்ற வார்த்தை கூட ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த முறை ரிக்டர் அளவு அதிகமானதால் விளைவும் அதிபயங்கரமாகி போனது; அதிலும் அணுஉலையின் பாதிப்பும் ஒன்று சேர அவர்கள் மிக கடுமையான கொடும் போராட்ட சூழலில் தள்ளி விட பட்டுள்ளனர்.
குழந்தைகள் தேர்வு நேரம் என்பதால் கேபிள் துண்டித்துள்ளதால் நேரடி ஒலிபரப்பாக காணாவிடிலும் இணையம் வழியாக செய்திகளை அறிந்து கலங்கி தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க போகும் கூடன்குளம் அணு உலையை பற்றியே என் சிந்தனை போய் கொண்டிருக்கின்றது. இதன் மத்தியில் தான் ஆண்டவரின் விசேஷ சேவகர்களான பால் தினகரன் போன்றோரின் அருள் வாக்கு செய்தி வருகின்றது.
ஜப்பானுக்கு இவருடைய குழுவையோ இவருடைய கொள்ளை பணத்தை அனுப்பினாரா என்றும் தெரியவில்லை ஆனால் இவ்விதமான பயத்தை மக்கள் மனதில் விதைத்து பணம் அறுவடை செய்ய தயார் ஆகி விட்டனர் என்பது மட்டும் தெளிவாகின்றது. நெல்லையில் கிருஸ்துமஸ் துணி எடுக்க என்று சென்ற ஒரு ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் அவருடைய கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலி செயினும் களவு போனது அன்று! இது தான் இங்கு நடப்பதும். ஜப்பான் மக்களுக்கு எவ்விதம் நான் இத்துயர வேளையில் துணை புரிவது என்று இல்லாது இதை சொல்லியே பயம்காட்டி காணிக்கை பெற நினைக்கும் மனிதர்களை என்ன சொல்வது? இனி உலக அழிவு தான் நீங்கள் சொர்கம் போக வேண்டும் என்றால் பணத்தை எங்களிடம் காணிக்கையாக அனுப்பி விடுங்கள். சொர்கத்தில் உங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய இடம் அமைக்க பட்டிருக்கும். இங்கு உள்ளது போலவே பெரிய காம்பவண்டு போட்ட வீடு, எசி அறை வீட்டின் முன்பு பூங்கா உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னோருடன் ஆடி பாடி அங்கு கழியலாம். யேசு நாதர் என் கனவில் இப்படி சொன்னார், இடையிடை மனம் திரும்புங்கள் இதோ உலகம் அழிய போகிறது எங்கும் கொள்ளை நோய்,யுத்தம் நாடு நாடுக்கு எதிராக மக்கள் மக்களுக்கு எதிராக இப்படி இவர்கள் பிரசங்கம் போய் கொண்டே இருக்கும்.
இவ்வாறாக தீர்க தரிசனம் சொல்வதால் என்ன பலன். யேசு நாதர் ஒரு வீட்டிற்க்கு நேரம் கிடைக்கும் போது செல்வாராம். அவருடைய உபதேசத்தை கேட்க மேரி என்ற சகோதரி அவர் அருகில் இருந்து உற்சாகமாக கேட்பாளாம் இன்னொரு சகோதரி அவருக்கு உண்ண உணவு எடுத்து வருவாராம். அவர்கள் சகோதரர் லாசர் ‘யாம் பராபரனே’ என்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருந்து கொள்வாராம். ஒரு முறை யேசு நாதர் ஒரு பெரும் பயணம் முடிந்து வந்த போது அவன் மரித்து போனான் என்று அவர்கள் அழுதவுடன் யேசுவும் அழுது அவனை உயர்ப்பித்தார் என்று ஒரு கதை பைபிளில் உண்டு. யேசு நாதர் இப்படி தான் அழுபவருடன் அழுங்கள் சிரிப்பவருடன் சிரிங்கள் என்று சொல்லியிருப்பார் அல்லாது அழுபவர்களின் துயரில் விண்ணாரம் பேசி கொண்டு இருக்க அவர் விரும்புவர் இல்லை.அவர் உபதேசம் மட்டும் செய்யாது வாழ்ந்தும் காட்டியிருப்பார் அப்படிதான் ஒரு பெண்ணை விபசாரி என்று விதிக்கும் போது உங்கள் விதியால் நீங்கள் விதிக்க படுவீர்கள் என்று எச்சரிப்பார்.
யேசு நாதர் பிறக்கும் காலயளவில் அவருடைய யூத நாடு ரோமர்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஒரு பக்கம் ரோம அதிகாரிகளின் ஆதிக்கம் என்றால் மறுபக்கம் யூத தலைவர்கள் மற்றும் மதபோதகர்களால் அதிலும் சோதனை. யூத மக்கள் கடலுக்கு பேய்க்கும் நடுவில் என்பது போல் வாழ்க்கை இருந்தது.அந்த காலயளவில் தான் அவர்கள் மத்தியில் யேசுவின் போதனைகள் இருந்தது. அவருடைய போதனைகள் மன – ஆத்ம விடுதலை சார்ந்தே இருந்தது. ஆனால் இன்றுள்ள கிருஸ்தவ பிரசங்கிமார் பிசாசு கட்டு, செய்வனை கட்டு, வறுமைகட்டு என்று மக்களை பயமுறுத்தி பல வித கட்டுகளில் அவர்கள் மனங்களை கொண்டு அடிமை வாழ்க்கைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் சில கிருஸ்தவர்கள் நாங்கள் பிறப்பால் கிருஸ்தவர்கள் என்றாலும் எந்த மதத்தையும் பின் பற்றவில்லை என்று ஒதுங்கி இருந்து கொள்கின்றனர்.
ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக தினகரன் தன் பேச்சாற்றல் வைத்து மரணம் சொர்கம் நரகம் போன்ற கதைகள் சொல்லியே அவர் கோடிபதியாகி விட்டார். இவருடைய வளர்ச்சியை கண்ட இன்னும் சில தமிழக பிரசங்கிமார் இன்னும் சில பல கதைகளை கதைத்து பணத்தை மிரட்டியும் பயமுறுத்தியும் பிடுங்கி பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.
கிருஸ்தவ தொழில் அதிபர்களிடம் பணிபுரியும் அலுவலகர்களின் சம்பளம் அடி மாட்டு விலையாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு பேச்சு சுதந்திரம் என்றல்ல நவீன அடிமைகளாகவே அவர்கள் தொழில் சாலைகளிலும் அலுவலகங்களிலும் நடத்த படுகின்றனர். ஊழியர்கள் சம்பளம் கூட்ட கேட்டால் அது ஆண்வர் சித்தம் ஆகும் போது நடைபெறும் என்று தலையை உருவி விடுவர். ஆனால் கொள்ளை கொண்ட பணத்தில் ‘தசம பாகம்’ என்று காணிக்கை கொடுத்து ஆண்வரின் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிவிடுவர். ஆண்டவர் அவர்களை பொறுத்து கைகூகி வாங்கும் அதிகாரி அல்லது வியாபாரியா? ஆலயங்கள் ஆத்தும விளைநிலமல்லாது பண நிறுவனங்களாக்கி வருகின்றனர்.
ஆதிம திருச்சபையில் பணமுள்ளவன் கொண்டு கொடுக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து எல்லோரையும் வறுமை அற்று வாழ செய்வதாகவே கிருஸ்தவ பைபிள் கூறுகின்றது. காரல்மார்க்ஸ் கூட இதை தான் ‘காப்பிடல் தஸ்’ என்று புத்தகமாக எழுதியிருப்பார். சொல்ல போனால் யேசு நாதர் தான் முதல் கம்னிஸ்டு. அவர் ஒரு சிறந்த போராளியாகவே இருப்பார். இவ்விதம் மக்களை மத சட்டம் என்ற போர்வையில் நடைபெற்ற கொடுமையில் இருந்து மீட்க வந்த யேசுவை கொலை செய்ய கூறியதே இந்த கடவுளின் பினாமிகள் அதாவது ஊழிய காரர்கள் தான். இன்று யேசு வந்து கூறினாலும் அவரை மறுபடியும் கொலை செய்ய தயங்க மாட்டார்கள்.
இந்து சமய கோட்பாடால் பல மக்கள் எப்படி பிச்சைகாரர்கள் ஆகி வருகின்றனரோ அதே போல் இன்று கொள்ளையடித்து பணத்தை சேர்ப்பதை கண்ட கிருஸ்தவர்கள் கொள்ளைகாரர்களாக மாறி வருகின்றனர். (பல தமிழ் படங்களில் கூட ஆண்டனி, ஜான் போன்றோர் கொள்ளையர்களாக காட்டுவதும் இதனால் தானோ)
அரசு அலுவலங்களில் வேலை செய்யும் கிருஸ்தவர் தான் கையூட்டு வாங்காது இருக்கின்றனரா? பல அலுவலங்களில் கோளு மூட்டி பதவி வாங்கும் படலத்திற்க்கு இவர்கள் தான் தலைமை தாங்குவர் மேலும் ஒரு நல்ல வேலை அழகான மனைவியும் இருப்பின் அவர்கள் நெருங்கிய உறவுகளை கூட கிட்ட நெருங்க அனுமதிப்பது கிடையாது.
கிருஸ்தவம் என்பதின் அடிப்படை அன்பு, சகோதரத்துவம், எளிமை. பொறுமை தான். அன்பு என்பதை அறிவுரையில் மட்டும் தான் இருக்கும் சகோதரத்துவம் என்பதற்க்கு ஆண்டவர் பிள்ளை ,புறம் ஜாதிகள் என்று ஒரு பெரிய பாகுபடை உருவாக்கி பிரிவை உருவாக்கி விட்டனர். எளிமை இவர்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களில் சென்றால் அறியலாம், பொறுமை என்பது பகைவனை எதிர்க்கும் தந்திரம் ஆகி விட்டது இவர்களுக்கு!
யேசுவின் போதனை எப்போதும் ஒரு உபமையுடன் சேர்ந்த கதை யாக எளிமையானதவே இருக்கும் . ஊழியக்காரர்களின் பேச்சில் வன்மம், ஆணவம் இளக்கராம் சேர்ந்த கூட்டு கலவை தான். ஒரு ஜெபக் கூட்டத்திற்க்கு சென்ற போது ஒரு ஊழிய காரர் அருள்வாக்கு பாலிக்கின்றார், இந்த கூட்டத்தில் ஒரு பெண் உள்ளார் அவர் மனம் திருந்த வேண்டும் கணவர் வேலைக்கு சென்ற உடன் காமுகனை தொலைபேசியில் அழைக்கின்றார். இது எந்த அளவு வன்மம் கொண்ட கற்பனை. ஏன் அந்த கூட்டத்தில் காதலியுள்ள ஒரு கணவர் கூடவா இல்லை, பெண் என்ற இளக்காரம்.
ஆனால் யேசுவின் போதனைகள் ஒரு போதும் மனிதம் இல்லாததாக இருந்தது இல்லை. உன்னை போல் அயலானை நேசி, உன் நண்பனை மட்டுமல்ல பகைவனையும் நேசி, அன்பு உண்மையாக இருக்கட்டும், அடுத்தவனை விதிக்காதே, பழிக்காதே, உனக்கு என்ன தான் உண்டு எனிலும் அன்பு இல்லை எனில் நீ ஒன்றும் இல்லை இது தான் அவருடைய போதனை. ஆனால் சில கிருஸ்தவ மனிதர்கள் அன்பு மட்டும் இல்லாது கொள்ளாது என்னவெல்லாமோ கதைத்து யேசுவிடம் உரிமை பாராட்ட முயல்கின்றனர்.




















