ஆண்கள் யார் ? மனிதவியல் நிபுணர்கள் , தனிப்பட்ட வரையறைகள், அனுபவங்கள், கருத்துக்களையும் தாண்டி, உலகத்தின் பல பகுதிகளில் மற்றும் வரலாற்றின் பல கட்டங்களில் உள்ள சமூகங்களில் உள்ள ஆண்கள் தன்மைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆண்களைப் பற்றிய விவாதங்களும் கருத்தாக்கங்களும் மற்றும் பாலினம் குறித்த ஆய்வுகளில் anthropology வழங்கிய பங்களிப்பு முக்கியமானவை. ஆண்கள் மற்றும் ஆண்மை குறித்து பயன்படுத்தப்படும் மொழிகளிலும் anthropology சிறப்பு கவனம் செலுத்தியது. ‘toxic’, ‘dominant’, ‘traditional’, ‘alpha’ போன்ற சொற்கள் மூலவும் வகைப்படுத்தி இருந்தனர்.
ஆண்மையின் கருத்தாக்கம் வரலாறுகளும் பண்பாடுகளும் மாறுவதன் அடிப்படையில் தொடர்ந்து மாற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது.
பழமையான இலக்கியங்கள் கிமு 3000 காலத்தைச் சேர்ந்தவை. அவற்றில், ஆண்களிடம் உள்ள நேரடியான எதிர்பார்ப்புகள், , கடவுள்கள், மன்னர்களிள், வீரர்களிள், புராணக் கதைகளிலும் சட்டங்களில் உருவாக்கப்பட்ட ஆண்மையின் மாதிரிகளில் தெளிவாகக் காணப்படுகின்றன.
டாசிட்டஸ், தனது (கி.பி. 98) ஜெர்மானியா என்ற நூலில், அர்மீனியசை (Arminius) ஆண்மையின் உயரிய வடிவாகக் அவரது மனைவி துஸ்நெல்டாவை ரோமர் தளபதி ஜெர்மானிக்கஸ் கடத்திச் சென்றபின், அர்மீனியசின் ஆண்மை என்பது அவளை காப்பாற்றி கொண்டு வருவதில் இருந்தது என காட்டுகிறார்.
விக்டோரியன் காலத்தில், ஆண்மையின் கருத்து பழைய வீரத்திலிருந்து விலகியது.
வரலாற்றாசிரியர் ஜெஃப்ரி ரிச்சர்ட்ஸ், ஐரோப்பாவின் நடுக்கால “ஆண்மை” கிறித்தவத் தரிசனமும் கலந்ததாகக் கூறுகிறார் . தைரியம், பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை, ஆகியவை முக்கிய பண்புகளாக இருந்தன.
டேவிட் ரோசன் கருத்துப்படி ஆண்மை என்பது“ஆணை பெண்களிடமிருந்தும், பிற ஆண்களிடமிருந்தும், உணர்ச்சிகளிலிருந்தும், குடும்ப வாழ்க்கையிலிருந்தும் விலகச் செய்யும் ஒன்று.”பெண்களுடன் தொடர்புடைய பண்புகளை மறுப்பதே ஆண்மையுடன் தொடர்புடைய மற்றொரு அம்சமாகவும் கருதப்படுகிறது.
அராபுக் கலாச்சாரத்தில், ஹாதிம் அல்-தாயி ஒரு முழுமையான ஆண்மையின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் தனது குதிரையும் ஆயுதங்களையும் தவிர, தனது சொத்துக்களை எல்லாம் கொடுத்து விடுகிறவர்.
19ஆம் நூற்றாண்டில் குத்துச்சண்டை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு தொழில்முறை விளையாட்டாக வளர்ச்சி பெற்றது. அதில் ஆண்மை என்பதை உடல் வலிமை மற்றும் தாக்குதல் தன்மைகள் வலியுறுத்தப்பட்டன. குத்துச்சண்டை அந்தக் காலத்தில் “உண்மையான ஆணின் கலை” எனக் கருதப்பட்டது.
நம் ஊரில் இதே இடத்தில் களரி வீரர்களை கணக்கில் கொள்ளலாம்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மேற்கத்திய நாடுகளில் சாதாரண குடும்ப அமைப்பு இவ்வாறு இருந்தது:
தந்தை வெளியே சென்று வேலை செய்து வருமானத்தைப் பெறுவது (ஆண் பங்கு) தாய் வீட்டு வேலைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பராமரிப்பு (பெண் பங்கு) பெண்கள் ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டு குடும்ப வருமானத்தை உயர்த்தியிருந்தாலும், ஆண்களின் அடையாளம் பெரும்பாலும் வேலை மற்றும் பொருளாதார பங்களிப்பு என்ற கருத்தைச் சுற்றியே இருந்தது.
1974-ல், ஆர்ஹ். கூல்ட் ஒரு ஆண் குடும்பத்திற்குச் செய்யும் பொருளாதாரப் பங்களிப்பின் அளவைப் பொறுத்தே பெரும்பாலும் ஆண்மையை (masculinity) மதிப்பிடப்படுகின்றனர் என்கிறார். .
2008ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, ஆண்கள் நல்ல உடல்நலம், அமைதியான குடும்ப வாழ்க்கை, மனைவியோ துணையோ உடைய நல்ல உறவு ஆகியவற்றுக்கு, பெண்களிடம் வெற்றிப் பெறுவதையும் விட அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
தற்கொலை குறித்து நடைபெறும் மனிதவளவியல் ஆய்வுகளிலும் இதே போன்ற வாதங்கள் பொருந்துகின்றன. உலகளவில் பெண்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமான ஆண்கள் தற்கொலை செய்கின்றனர், ஆனால் தற்கொலை செய்ய முயற்சிப்பது அதிகமாக பெண்கள்தான். எனவே, ஆண்களின் தற்கொலையை மனிதவளவியலில் பல கோணங்களில் இருந்து பகுப்பாய்வு செய்கின்றனர்; குறிப்பாக வன்முறை மற்றும் ஆண்மை என்பவை முக்கிய வடிகட்டிகளாக உள்ளன.
கடந்த நாற்பது ஆண்டுகளில் தற்கொலை குறித்துப் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வி ஆய்வுகள் மனநல மருத்துவம், உளவியல் மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளிலிருந்து வந்தவையாகும், மேலும் அவை பெரும்பாலும் கடுமையான மனச்சோர்வு அனுபவிக்கும் தனிநபர்களை முன்னிறுத்துகின்றன. ஆதிக்கம் , மேலும் குடும்பத்தைக் கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட குடியேற்ற ஆண்களில் காணப்படும் தற்கொலைப் பாங்குகள் போன்றவை ஆனால் மனிதவளவியலாளர்கள் சமூக காரணிகளைக் கவனத்தில் கொள்கின்றனர் .
சில்வேயா சாரா கனெட்டோ (2017) கண்டுபிடித்ததன்படி, வாழ்க்கையில் தெளிவான குறிக்கோள் குறைந்துவிட்டால் ‘வளைவில்லாத சமாளிப்பு’ (rigidity in coping) மற்றும் புதிய ‘சுயத்தை’ (sense of self) உருவாக்க முடியாத நிலை போன்றவை அமெரிக்காவின் வெள்ளை இன, நடுத்தர வர்க்க, ஓய்வு பெற்ற ஆண்களிடையே தற்கொலை அதிகரிக்கக் காரணமான சமூகச் செயலிகளாக இருக்கக்கூடும் என்கின்றனர்
மேலும் சமூக கலாச்சார காரணிகளே ஆண்களின் வன்முறையான நடத்தைக்கு மிகப் பெரிய காரணங்களாக விளக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்மை பற்றிய பகுப்பாய்வு (Deconstructing Masculinity in India)
இந்திய ஆண்மை பல வரலாற்றுச் சூழல்களின் தாக்கத்தில் உருவானது.
இந்துக் புராணங்களில், ஆண்மையின் கருத்து இன்னும் நுட்பமானது.
பாரம்பரியமான வலிமை, தைரியம் ஆகியவற்றுடன், கருணை, ஞானம், மனக்கட்டுப்பாடு, சமச்சீரான அணுகுமுறை ஆகியவையும் அடங்கும். சிவன் தவமும் பேராற்றலும் கொண்டவர்; ஆனால் அதே நேரத்தில் அன்பு, படைப்பு, சமநிலை ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறவர். விஷ்ணு உலகைப் பாதுகாக்கும் கடமையும் கொண்ட தர்மத்தின் மாதிரி. இங்கே “ஆதர்சமான ஆண்” என்பது தன்னைக் கட்டுப்படுத்துபவர், தர்மத்தை காக்குபவர், பாதுகாவலர், குடும்பத்துக்கு முன்னேற்றம் அளிப்பவர் என்று வரையறுக்கப்படுகிறது.
உதாரணமாக, பகவத்கீதை ஆண்மையின் முக்கிய பண்புகளாக கடமை (தர்மம்), சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது (Chakraborty, 2011). இவை அனைத்தும் பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஆண்மைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்து மதம் கடமை, சுய கட்டுப்பாடு, பற்றின்மை ஆகியவற்றை ஆண்மையின் முக்கிய அம்சங்களாகக் காண்கிறது. இதற்கான உருவகமாக இராமரை குறிப்பிபடுகின்னர். இஸ்லாம் தைரியம், தாராளம், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பது ஆகியவற்றை ஆண்மையின் முக்கிய பண்புகளாகக் கருதுகிறது;
முகலாய காலம் (1526–1756) முகலாய ஆட்சிக்காலத்தில் அரச அரண்மனைப் பாரம்பரிய அன்பு, வீரியம், தாராளம் போன்றவை ஆண்மையின் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. அக்பர் பேரரசரின் ஆட்சியிலும் இது தெளிவாகத் தெரியிறது (Richards, 1993). நபி முகம்மது அவர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணம் (Schimmel, 1985). இம்மதக் கருத்துகள் இந்திய ஆண்மையை ஆழமாகப் பாதிக்கின்றன. இந்து ஆண்கள் கடமையை நிறைவேற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முஸ்லிம் ஆண்களை தைரியமும் தாராளமும் கொண்டவர்களாகப் பார்க்கப்பட்டது (Osella & Osella, 2006).
மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ காலம் (1757–1947) இதில் முக்கிய பங்காற்றின. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஒழுக்கம், விவேகம், முன்னேற்றம் போன்ற மேற்கு மதிப்பீடுகள் இந்திய பண்பாட்டுடன் கலந்ததால் புதிய மற்றும் சிக்கலான ஆண்மைக் கருத்துக்கள் உருவானது (Chatterjee, 1993).
தற்போதைய இந்திய பண்பாட்டில் ஆண்மையின் கலாசார வடிவங்கள்
திரைப்படங்கள், கிரிக்கெட், ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகியவற்றின் மூலம். தைரியம், நம்பிக்கை, காதல் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆண் கதாபாத்திரங்கள் அடிக்கடி காட்சிப்படுத்தப்பட்டன.
பின்பு விளையாட்டு முக்கியமாக கிரிக்கெட் இந்தியர்களின் தேசிய பெருமையையும் ஆண்மையையும் இணைக்கும் விளையாட்டாக மாறினது. சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் கொண்ட ஆண்மைக் கோட்பாடுகளுக்கான மாதிரிகளாகச் பார்க்கப்படுகின்றனர் (Appadurai, 1996).
காலப்போக்கில் சினிமாவின் ஆண்மைக் காட்சி மாறிவருகிறது. பாரம்பரிய வீரர்கள் இருந்து அதிக உணர்ச்சி வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரங்களாக மாறியுள்ளன. சினிமாவின் தாக்கம் நகரங்களில் மட்டுமல்ல; செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கைபேசிகள் மூலமாக கிராமங்களிலும் பரவியுள்ளது. இதன் மூலம் ஆண்மை மற்றும் நுகர்வோர் பண்பாட்டின் தொடர்பு மேலும் வலுப்பெறுகிறது.
இந்திய தொலைக்காட்சி தொடர்களும் ஆண்களை உணர்ச்சி வாய்ந்தவர்களாகவும் உறவு மையப்படுத்தப்பட்டவர்களாகவும் காட்சிப்படுத்தி ஆண்மையின் புதிய வரையறைகளை முன்வைக்கின்றன.
குடும்ப அமைப்பும் உறவுகளும் இந்திய ஆண்மையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. தந்தை மையக் குடும்பங்களில் ஆண்கள் அதிகாரம் கொண்டவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். ஆனால் நகரமயமாதலும் நவீனமாதலும் இந்த அமைப்பை வெகு அதிகமாக மாற்றியது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு அதிகரிப்பதும் ஆணாதிக்கம் கொண்ட கட்டமைப்புகளை சவாலில் ஆழ்த்துகிறது. கூட்டு குடும்பங்கள் குறைந்து, கணவன்–மனைவி சமத்துவம் மற்றும் அதிக உணர்ச்சி பகிர்வு உருவாகிறது.
நகரப் பகுதிகளில் வாழும் நவீன ஆண்கள் விருப்பம், சுயநிறைவு, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பண்புகளை ஏற்றுக்கொண்டாலும் பாரம்பரிய ஆண்மைக் கட்டுப்பாடுகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன.
சமூக ஊடகங்களின் வளர்ச்சி இந்திய ஆண்மையை பெரிதும் மாற்றியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஆண்கள் வலிமை, ஸ்டைல், நகைச்சுவை போன்றவற்றை முன்னிறுத்தி ஆன்லைன் உருவங்களை உருவாக்குகின்றனர். ஆனால் சமூக ஊடகம் விஷ ஆண்மை, பெண் விரோதம் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இது ஆண்களின் பதட்டங்களையும் ஆசைகளையும் பிரதிபலித்தன.
மனநலமும் ஆண்மையுடன் ஆழமாக இணைந்துள்ளது. ஆனால் பாரம்பரிய ஆண்மை உணர்ச்சி வெளிப்பாட்டைத் தடுக்கிறது. எப்போதும் வலிமையானவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது எனினும், மனநல விழிப்புணர்வு ஆண்களுக்கு உதவி கேட்கவும் பாரம்பரிய எண்ணங்களை சவாலில் ஆழ்த்தவும் வாய்ப்பு அளிக்கிறது.
குடும்பத்தின் கண்ணியமும் சமூக நிலையும் அடிப்படையாக கொண்டு ஆண்களின் செயல்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த தரநிலைகளில் இருந்து விலகுவது ஆண்களுக்கு அவமானமாக கருதப்படுகிறது. மரியாதை மற்றும் அவமானம் என்ற இரு கருத்துகளும் இன்றைய ஆண்மையுடன் தொடர்புடையவை மேலும் சிக்கலாக்குபவை.
ஆகவே, இந்திய ஆண்மை ஒரு ஒற்றை கருத்துமல்ல; அது வரலாறு, பண்பாடு, மதம், ஊடகம், உலகமயமாக்கல், சமூக–அரசியல் சூழல் ஆகியவற்றின் கலவையாகும். வலிமை, மரியாதை, கடமை, அதிகாரம் போன்ற பாரம்பரிய ஆண்மைக் கோட்பாடுகள் இன்னும் நிலைத்திருந்தாலும் உணர்ச்சி வெளிப்பாடு, சமத்துவம், சிந்தனை போன்ற புதிய மதிப்புகளுடன் மோதிக்கொண்டும் இணைந்தும் இந்திய ஆண்மை வளர்ந்து வருகிறது.
முகலாய–பிரிட்டிஷ் தாக்கத்துடன் கூடிய இடைக்கால கருத்துக்களும் மத அடிப்படையிலான நடைமுறைகளும் ஆண்மையை உருவாக்கியும் சவாலில் ஆழ்த்தியும் வருகின்றன.



.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
