இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் சபையின் உன்னத அதிகார மட்டத்தில் இருந்த பிஷப்பிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கூறி பெண் துறைவிகளால் தொகுக்கப்பட்ட முதல் வழக்கு இது.
பஞ்சாப் அரசியல் காங்கிரஸ் + பிஜேபியின் ஆதரவு பெற்ற பிஷப்பிற்கு எதிராக கேரளா கொச்சியில் இருந்து மட்டுமே போராட இயன்றது.
பிஷப்பின் கட்டுபாட்டில் இருந்த பிரான்சிக்கன் லாட்டின் கிறிச்தவ மிஷனரிகள் மடத்தில் இருந்த பெண் துறவியை பிஷப் துன்புறுத்தினார் அவரை கைது செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது வழக்கு. பிஷப்பு பின்பு கைதானார். ஆனால் துறவி கேரளா மீடியாவிற்கு கொடுத்த நேர்முகத்தில் சொன்ன வார்த்தைகளை வைத்து பிஷப்பை வழக்கறிஞ்சர்கள் காப்பாற்றினர் .
பிற்பாடு போராட்டத்தில் குதித்த 6 துறவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலை உருவானது. மடத்திற்குள் ஒதுக்கப்பட்டனர். துன்புறுத்த பட்டனர். அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் கோபத்திற்கு உள்ளானர்.
இருவரும் விருப்பம் கொண்டு நிகழ்ந்த பாலியல் உறவு என பிஷப் வழக்கில் இருந்து விடுதலையாக்கப்பட்டார்
பிஷப்பின் அசுறுத்தலுக்கு பயந்து மடத்தை விட்டு வெளியேறின 10 க்கு மேற்பட்ட துறவிகளின் நிலையை விசாரிக்கவில்லை.
கடைசியாக போராட்ட களத்தில் இருந்த முக்கிய மூன்று துறவிகள் மடத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.
பெண்கள் விவாகரத்து ஆகும் போது கணவனில் இருந்து ஜீவனாம்சம் கிடைப்பது உண்டு. 16 வயதுகளில் பொய் உறுதி மொழிகள் கொடுத்து , ஏழை குடும்பங்களில் இருந்து அழைத்துச் செல்லப்படும் பெண் குழந்தைகள் தங்களது மத்திய வயதில் வெளியேற்றப்படும் போது கர்த்தரின்
மணவாட்டிகள் என சபையில் இரண்டாம் மட்டத்தில் இருந்தவர்கள் வெறும் முன்னாள் துறவியாக குடும்பங்களில் செல்லும் போது இயல்பான உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
ஆதரவற்ற இவர்களுக்கு சபை இழப்பீடு என்ன வழங்கினது என்ற கேள்வியும் உண்டு.
இருப்பினும் அனுபமா சிஸ்டர் தைரியமாக வெளியேறி ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது ஆறுதல். அவரை ஏற்ற அவர் சகோதரன் அடங்கிய குடும்பமும் பாராட்டுதலுக்குறியது.
தற்போது கேரளாவில் பெண் குழந்தைகளை துறவிகளாக அனுப்புவது குறைந்து உள்ளது.
மலையோரம் மற்றும் வயநாட்டு பகுதியில் இருந்து தான் சில பிள்ளைகளை கொண்டு போக இயல்கிறது.
உண்மைக்காக, நீதிக்காக போராடின இந்த துறவிகள், இந்திய நீதி மன்றத்தில் நீதி கிடைக்காது வழக்கில் தோல்வியடைந்து மேலும் இரண்டு வருடம் அதே மடம் வாழ்க்கையில் இருந்து விட்டு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவரவர் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டனர்
இவர்கள் முதன்மை துறவிக்காக போராட போய் தாங்கள் விரும்பி வந்த துறவி நிலையும் துறந்து திரும்பினர்.
கர்த்தரின் மனைவி ஸ்தானத்தில் இது வரை பணி செய்த துறவிகளுக்கு இழப்பீடு கிடைத்தாக இல்லை.
ஆனால் எப்படி ஒரு பெண் கிறிஸ்தவத்தில் துறவி ஆகிறாள் என்பது குடும்பம் மற்றும் சபையும் சேர்ந்து செய்யும் மாபெரும் துரோகம்.
தைரியமாக போராடினவர்கள் தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.
கிறிஸ்தவ பெண்கள் மதத்தால் எதிர் கொள்ளும் பாசிசம் அதி பயங்காரம்.
தமிழக கிராமப்புறங்களில் இப்போதும் பெண் பிள்ளைகளை மடத்திற்கு அனுப்புகின்றனர். சில பெற்றோர்கள் பெருமையாகவும் சிலர் கடமை கழிந்தது எனவும் கண்டு கொள்கின்றனர்.
விலையில்லா வேலைக்காரிகள் ஆண் துறவி சமூுகத்தின் பாலியல் அடிமைகள் ஆக நடத்தப்படுவது இன்னும் தொடர்கிறது.
அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு பெண்ணிய கும்பலும் இல்லை என்பதே உண்மை.
மைனோறிட்டி அரசியலை தான் பார்ப்பார்கள்.
பிரம்மசரியத்தில் இருக்க வேண்டிய கத்தோலிக்க பிஷப் (வலுகட்டாய) வல்லுறவு கொண்டதை ஒத்துக் கொண்டும் எதனால் கடந்து போன புரட்சி போப் ; பிஷப்பை அடிப்படை ஆண் துறவி நிலையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை? அது தான் ஒற்றுமையாக இயங்கும் உலகலாவிய ஆண் உலகம்!
கேரளா பொது சமூகத்தின் ஆதரவு இருந்தும் துறவிகளுக்கு எதனால் நீதி கிடைக்கவில்லை?
பொது கல்வி , கல்வி கல்வி , சமூுக அறிவு ,
பாலியல் வல்லுறவு பற்றி அறிவு இல்லாத துறவிகளை, உண்மையான போலீஸ் விசாரணை , செம்மையாக அரசு வழக்காடும் எனக் கூறி ஏமாற்றினர்.
அதுவரை சபையாரிடம், கரிதனால் #தாத்தா, பிஷப் #அப்பா , பாதிரிகள் #மணவாளன் மாதிரி போன்றவர்க்களிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தனர்,
தியான குருவிடம் ( கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டுக்கிறவர்கள்) பகிர்ந்து ஆறுதல் தேடிக் கொண்டு இருந்தனர்.
பொதுவாக பாலியல் அறிவு கிடைக்காத சமூகம் பெண் துறவிகள். அவர்களுக்கு கிடைக்கும் கல்வி ஒரு வெறும் ஒரு பட்டயப்படிப்பு, அத்துடன் சில தொழில் படிப்பு, கோழி ஆடு வளர்ப்பது, தோட்டம் கவனிப்பது பைபிள் வாசிப்பது ஜெபமாலை சொல்வது. இதனிடையில் எது வந்தாலும் அல்போன்சா புனிதை மாதிரி சகித்து சொர்க்கம் அடைவது மட்டுமே மதம் கற்பிகிறது.
ஆனால் பாதிரிகளுக்கு கிடைப்பது 9 வருட கல்வி. அதில் ஆங்கிலம் ஆங்கிலேயனையே போட்டி போடும் படி பேசக் கற்று கொடுப்பார்கள்.
உலகலாவிய அதிகாரத்தை தாங்கி நிற்கும் சபை சட்டம், அரசியல் அறிவு, மற்று மதங்கள் பற்றிய அறிவு அப்போது மத ரீதியாக கட்டமைபில் நின்று வெல்ல இயலும், அடுத்து மன, உள அறிவு. யாரை எப்படி அணுகுவது, யாரை தன் வசப்படுத்துவது, யாரை உளவியலாக அடிமையாக வைப்பது இப்படி மனித தொடர்பாடல் (human communication) சார்ந்த கல்வி. அத்துடன் மனித உரிமை போன்ற டுபாக்கூர் கல்வி. அப்போது தான் மனித உரிமையை பேசி மனிதனை அடிமையாக வைக்க இயலும்.
இவர்கள் அதிகார கட்டமைப்பு எப்படி இருக்கும்!
பாதிரி கர்த்தரின் மறுபதிப்பு. ஒவ்வொரு கிறிஸ்தவ பெண் உள்ளத்திலும் ஒரு கிறிஸ்தவ பாதிரி சிலையாக குடியிருப்பார். அவரை கண்டதும் கர்த்தரை கண்டது மாதிரி குதூகுலித்து விடும். அதிலும் பெண் துறவி கர்த்தரின் மணவாட்டி. அப்போ உளவியலான நெருக்கத்தை நினைத்து கொள்ளலாம்.
அடுத்து பிஷப், தந்தை. அவர் கடவுளுக்கு ஈடானவர். அவரை கண்டதும் எந்த கொம்பனும் கொம்பியும் முட்டு மடக்கி கையை எடுத்து கடவுளின் முத்திரையுள்ள மோதிரத்தில் முத்த வேண்டும். அது தான் கடவுள் மேல் நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் வழக்கம்.
அப்படிப்பட்ட பிரங்கோ முளக்கல் பிஷப் இரவு 10 மணிக்கு மடம் வந்து அணைகிறார். சாப்பாடு முடிக்கிறார். பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி பக்குவமாக சீனி , மிளகு கலந்து கரண்டியால் கலக்கி சிஸ்டர் மேசையில் வைத்து இருப்பார்கள். ( தற்போது இத்தனை அரவணைப்பு கணவன்களுக்கு கிறிஸ்தவ குடும்பத்தில் கிடைத்தால் விவாகரத்தே நடைபெறாது) இத்தனையும் ஒரு பெண் பிஷப் முன் தானாக செய்வாள் அது தான் அந்த பரிசுத்த கட்டமைப்பு..
பிராங்கோ தனது மடத்தில் இருந்த 20 எண் அறைக்குள் போகிறார். மடத் தலைவியிடம் தன் உடைகளை அயன் செய்து தரச் சொல்கிறார். பின்பு கட்டிட கணக்கு வழக்கு புத்தகத்தை எடுத்து வரச் சொல்கிறார்.
துறைவி பணிவோடு வந்து 55 வயது தந்தையிடம் கொடுக்கிறார்.
சாத்தப்பட்ட கதவு ஒரு மணி நேரம் பின்பு கணக்கு வழக்கு பார்த்து திறக்கப்படுகிறது.
கன்ஸ்திரீயின் 45 வது வயதில் நேர் கொண்ட அனுபவம் பற்றி சரியா தவறா, இது என்ன வகை வல்லுறவு என்பதை நீதியின் பக்கம் சொல்லவும் தெரியவில்லை. விளங்க வைக்கவும் தெரியவில்லை. அவருக்கே தெரியவில்லை.
அவர் குடும்பத்தில் உறவினரான ஒரு வக்கீலிடம் சொல்கிறார். அவர் சொன்ன சில வழி காட்டுதல் துறவிக்கு தைரியம் கொடுத்து இருக்கலாம்.
ஆனால் விசாரணைக்கு
நீதிமன்றம் வந்த போது நீதிபதியின் மனதில் உருவான "நீ உத்தமியா?" என்பதில் தான் வழக்கு தொடங்கி முடிக்கிறது.
0 Comments:
Post a Comment