
அவள் தன் மாணவிகளுக்காக தன் வாழ்க்கையை
அர்ப்பணித்தாள்."
நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த The Keepers ஏழு பாகங்களைக் கொண்ட ஒரு ஆவணத் தொடர் ஆகும். 2017 மே 19ஆம் தேதி வெளியானது. அமெரிக்காவில் 1965 வாக்கில் நடந்து, 1994 ஆம் ஆண்டு விசாரணக்கு வந்த ஒரு வழக்கை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம். Archbishop Keough என்ற கத்தோலிக்க பள்ளியைச் சுற்றி நடந்த பாலியல் குற்றங்கள் மற்றும் அதன் மோசமான உண்மைகள் இத்தொடர் ஊடாக வெளிப்பட்டன
கல்லூரி மற்றும் பள்ளிக்கு போகும்
பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டிய ஆவணப்படம். ஏற்கனவே ஏதோ ஒரு சூழலில் பாதிப்பிற்கு உள்ளான பெண்கள் என அறிந்து கொள்ளும் பள்ளி நிர்வாகத்தால் எவ்வாறு
இரையாக்கப்பட்டனர் என தீர்க்கமாக இத்தொடர் ஊடாக விசாரிக்கப்பட்டு உள்ளது.
பாலியல் குற்றங்களை பொறுத்தவரை
குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்தியாவில் இருக்கும் சிக்கலை பேசிக்
கொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்காவிலும்
பாலியல் குற்றவாளிகள் அதிகார மற்றும் மதத்தில் உள்ள தங்கள் ஆதிக்கத்தால் தண்டனை பெறாதே தப்பித்தனர் என ஆதாரபூர்வாமாக
நிறுவியுள்ளது.
இது போன்ற ஆவணப்படங்கள் பெண் பிள்ளைகளை எவ்வாறு வலுவானவர்களாக வளர்க்க வேண்டும், தங்களது தனி நபர் பிரச்சினைகளை கற்கும் பள்ளிகளில் உளவியல் ஆற்றுப்படுத்தும் நபர்களிடம் பகிரும் போது எவ்வாறான ஆபத்தில் முடிக்கிறது என இவ் ஆவணப்படம் சொல்கிறது.
இப்போதும் பெண் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம், உரிமை கொடுக்கிறோம் என அவர்கள் விருப்பத்திற்கு இணங்க கட்டற்ற நிலையில் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள்ளே தளம் அனுமதித்து கொடுப்பதும் ஏதேனும் பாலியல் பிரச்சினையில் சிக்கிக் கொண்டால் இதே பிள்ளைகளை பள்ளி /கல்லூரிநிர்வாகமே தண்டனை என்ற பெயரில் அவர்கள் இருப்பையே அழிப்பதை கண்டும் வருகிறோம். அவ்வகையில் மிகவும் படிப்பினையான ஆவணப்படம் இது.
தங்கள் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சிஸ்டர்
கேத்தின் செஸ்னிக் கொலை செய்யப்பட்டதை அறிந்து தோழிகளுக்குள் விசாரிக்கும் முன்னாள் மாணவிகள், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தை இத்தொடர் ஊடாக மக்கள் பார்வைக்கு கொண்டு சென்றனர்.
“தி கீப்பர்ஸ்” பள்ளி மதகுருவாக இருந்த ஜோசப் மாக்கல் பாதிரியாரின் பாலியல் துஷ்பிரயோகத்தில் மாட்டப்பட்டு உளவியல் தாக்கத்தில் இருந்த மாணவிகளுக்கு ஆசிரியை கேத்தி ஒரு பாதுகாவலராக வருகிறார். பாலியல் துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவிருந்ததால் ஆசிரியை கொல்லப்பட்டார்
என்ற மாணவிகள் கண்டு கொள்ளும் உண்மையை ஆவணப்படம் மூலம் உலகிற்கு தெரிவித்து உள்ளனர்.
ஜீன் வெஹ்னர் மற்றும் தெரசா லான்காஸ்டர் போன்ற மாணவிகள் பல ஆண்டுகளுக்குப் முன் தங்கள் பள்ளிப் பருவத்தில் பாதிரியார் ஜோசப் மாஸ்கெல் தங்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்
சாட்டினர். 1969 ஆம் ஆண்டு தனது ஆசிரியை கேத்தியின் காட்டில் கிடந்த உடலை ஜோசப் மாஸ்கெல் தன்னை அழைத்து சென்று காண்பித்ததாக ஜீன் வெஹ்னர் குற்றம் சாட்டினார். 1965 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் 1992 களின் நடுப்பகுதியில் மாஸ்கெல் மீது 40 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு சிவில் வழக்கைத் தாக்கல் செய்தனர், அது முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.
குற்றசெயல் நடக்கும் போது பாதிரியார் ஜோசப் மாஸ்கல், பெண்கள் உயர்நிலை பள்ளியின் பொறுப்பாளராகவும் மாணவிகளின் உள நல
ஆலோசகராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
தனது வீட்டில் சித்தப்பாவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிய ஜேன் , தனது அம்மாவுடன் நல்ல பிணைப்பில் இல்லாத இன்னொரு மாணவி, தகப்பனால் கரிசனை இல்லாது மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட மாணவி பாதிரி ஜோசப் பாஸ்கலிடம் கவுன்செல்லிங்/ஆற்றுப்படுத்துதல் என்ற பெயரில் தங்களுக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கலை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதை வாய்ப்பாக பயண்படுத்தி ஜோசப் பாஸ்கலால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் சில பாதிரிகள், போலிஸ் அதிகாரிகளுக்கும் மாணவிகளை இரையாக அனுப்புகிறான்.
பாலியல் சீண்டல்களுக்கு இரையாகும் மாணவிகள் , வாழ்
நாள் முழுக்க எத்தகையை உளவியல் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர் என்று இப்படம் சொல்கிறது.
அமெரிக்காவில் பால்டிமோர் நகரத்தின் நடுத்தர வர்க்கக்
கத்தோலிக்க சமூகத்தைப் பற்றிய பார்வையையும் தருகிறது இத்தொடர். எங்கும் மதத்தை கண் மூடித்தனமாக
நம்புகிறவர்கள் ஏமாற்றுதலுக்கு உள்ளாகிறவர்களாகவே உள்ளனர்.
இந்த தொடர் 1969ல் மர்மமாக காணாமல்
போய் , பிறகு, இரண்டு மாதங்கள்
கழித்து சடலமாகக் கண்டு எடுக்கப்பட்ட ஆசிரியையான பெண்
துறவி கேத்தி செஸ்னிக்கு என்னவானது என்று அவருடைய மாணவிகள்
தேடும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
கேத்தி ஆங்கிலம் மற்றும் நாடகம் கற்பிக்கும் ஆசிரியையாக இருந்துள்ளார். கொல்லப்படும் போது அவருக்கு 26 வயது. நவம்பர் 7, 1969 அன்று நகரத்தில் உள்ள தனது குடியிருப்பை விட்டு வெளியேறிய பிறகு செஸ்னிக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பால்டிமோர் கவுண்டியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அவரது சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.. அவரது இடது பக்கம் மண்டை ஓட்டில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு பின் சில நாட்களுக்குப்
பிறகு, ஜாய்ஸ் மாலெக்கி என்ற மற்றொரு இளம் பெண்ணும்
கொலை செய்யப்படுகிறார். இவர்கள்
இருவருக்குமான ஒரே ஒற்றுமை பாதிரி ஜோசப் மாஸ்கெல் என்பவருடன் தொழில் சார்ந்த
தொடர்பில் இருந்தவர்கள் என்பதே. செஸ்னிக் மாயமாகி கொலை செய்யப்பட்ட காலத்தில், இந்த நகரத்தில் பாதிரி
மாஸ்கெலுக்கு மிகவும் செல்வாக்கு இருந்தது. நகர போலீசுக்கான
காப்பாளராகவும், மெரிலாண்ட் மாநில போலீஸ் மற்றும் மெரிலாண்ட்
நேஷனல் கார்டுக்கான காப்பாளராகவும் பணியாற்றி வந்தவர்.

1965 ல் மாணவிகள் ஆக இருந்த கியோ அபி சாப் மற்றும்
ஜெம்மா ஹாஸ்கின்ஸ் என்ற இரு முன்னாள் பள்ளி மாணவிகள் பெண் துறவியின் கொலையை குறித்து 1994ல் கேள்விகள் எழுப்ப
ஆரம்பிக்கின்றனர். அவமானத்தால் பல
ஆண்டுகள் தன் அடையாளத்தை பொது வெளியில் மறைத்து வைத்து இருந்த ஜேன் வெஹ்னர் பாதிக்கப்பட்ட ஒருவராக வெளிப்படையாக
வெளிச்சத்திற்கு வருகிறார். இவர்கள்
மூவரும் இணைந்து கொலையின் காரணத்தையும் வழிகளையும் தேடி, நினைவுகளை
ஒப்பிட்டு,
தகவல்களைச் சேகரிக்கின்றனர். இயக்குனர் ஜேன் வெஹ்னரின் நினைவுகளை மிக கவனமாக
கையாண்டும் உள்ளார். துறவி கேத்தியின் ஒரு மாணவி இயக்குநர் ரையன் வொயிட்டின் தங்கை என்பது இன்னொரு
சிறப்பு.
மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்த தொடர், ஒரு சமூகம் எப்படி நீதி தேடுகிறகிறதென்ற கதையை
உணர்ச்சிகரமாகக் சொல்லி உள்ளது. அதிகப்படியான முன்
முடிவுகளை செலுத்தாமல், பல சாத்தியமான சந்தேக நபர்களைப் பின் தொடர்வது
ஆவணப்படத்தின் தனித்துவமாக இருந்தது.
.இயக்குநர் தன்னை முன் நிறுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
பாங்கு சிறப்பாக இருந்தது.
மத நிறுவனமான கத்தோலிக்க சபையின் வலிமைக்கும், சாதாரண மக்களின் அநீதியை எதிர்த்து போராடும் உழைப்புக்கும்
இடையே உள்ள மோதலே முக்கிய கதைப்பின்னல் ஆக இருந்தது.
செஸ்னிக்கின் மரணம் அவரது மாணவர்களுக்கும் மத
சமூகத்திற்கும் துக்கத்தையும் பயத்தையும் கொண்டு வந்தது என்று ஷாப் மற்றும்
ஹாஸ்கின்ஸ் தெரிவித்தனர்.
"அந்தப் பள்ளியில் அவள்
ஒரு புத்துணர்ச்சியூட்டும் காற்றாக இருந்தாள். அவள் வகுப்பறையில் நான் பிரமித்துப் போனேன். அவளுடைய கற்பித்தலில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
அவள் உண்மையிலேயே உயர்ந்த கரங்களைக் கொண்டிருந்தாள், எங்களை கடினமாக உழைக்க வைப்பாள். ஆனால் நாங்கள், ' உன்னை நேசிப்பதால் எங்களை இன்னும் கடினமாக உழைக்கச் செய்' என்று கூறுவோம். அவள் முன்னிலையில் இருப்பது மிகவும் இனிமையான விடயமாக
இருந்தது. இப்படியாக தனது ஆசிரியையை பற்றி மாணவிகள் உரையாடுகின்றனர்.
கத்தோலிக்க சபை 1992 ஆம் ஆண்டுதான் ஜோசப் மாஸ்கலின் துஷ்பிரயோகம் பற்றி முதன்முறையாகக் கேள்விப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் சபையில் கூற்றை "தி
கீப்பர்ஸ்" பொய் என்கிறது. 1967 ஆம் ஆண்டு தனது மகன் ஜோசப் பாதிரியில் இருந்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக மாஸ்கெல்லாவின் அவரது
தாயாரால் தெரிவிக்கப்பட்டது, அதை தேவாலய நிர்வாகம் மறுத்துள்ளது. கேத்தியின் மரணத்தின் காரணமான பாதிரியார் விசாரணைக்கு உட்படாது சபையில் பல பதவிகளை அலங்கரித்து தான் இறந்து போயுள்ளான். ஆனால் கொல்லப்பட்ட பெண் துறவிக்கு காதலர் இருந்தார் என்று சபை நிர்வாகம் கட்டுக்கதை கட்டவும் மறக்கவில்லை
தி கீப்பர்ஸ்' ஆவணப்படம் வெளியானபோது எங்கள்
மறைமாவட்டத்தின் ஒரு பாதிரியார் நிறைய குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தார்
என்பதையும் நாங்கள் அதே ஒரு சோகமான, வேதனையான உண்மையாக ஏற்று அதற்காக நாங்கள் நீண்ட காலமாக
மன்னிப்பு கேட்க முயற்சித்து வருகிறோம், தொடர்ந்து மன்னிப்பு
கேட்போம் என்று குறிப்பிட்டு உள்ளது”
அவ்வகையில் பெண் துறவி கேத்தி செஸ்னிக்கின் கொலையை பற்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதும், கத்தோலிக்க
திருச்சபையின் இருண்ட காலகட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும் 'தி கீப்பர்ஸ்' ஆவணபடம் வெற்றி கண்டுள்ளது.
ஜோசப் பாஸ்கல் இறந்து போன நிலையில் "ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதிலிருந்து மக்களின் பல
அழைப்புகள் வந்திருந்தாலும் அவை
வழக்கில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை. என்ற துயர் மிகு விடயத்தையும் பகிர்ந்துள்ளனர்.
"ஒவ்வொரு அதிகாரமற்ற ஆவியும் இந்த உலகால் கேட்கப்படும் வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன்#
0 Comments:
Post a Comment