12 Feb 2016

சுபி அக்காவும் நானும்

இணையத்தில் வாசிப்பினூடை எழுத்தினூடை அக்காவும் நானும் நண்பர்களாக இணைந்தோம். பின்பு எங்கள் நட்பு உடன் பிறவா சகோதரிகளாக பரிணமித்தது.  அக்கா இந்தியா வந்து செல்லும் போது எங்கள் சந்திப்பை பயணங்களாக மாற்றினோம். எங்கள் பாச நட்பு எங்கள் குடும்ப உறவுகளாக மாறின. 


முதல் முதலாக அக்காவை தூத்துக்குடி விமானநிலையத்தில் வைத்து சந்தித்த போது.  நெடுநாளாக  அயல்நாட்டில் இருந்து விட்டு  சொந்த வீட்டிற்கு வந்து சேரும் உடன் பிறந்த  சகோதரியாகவே தெரிந்தார். முதல் நாள் காணும் எந்த அன்னியவும் எங்களை அணுகவில்லை.  நரேன் அண்ணாவும் என்னவரும்  சில மணித்துளிகளுக்குள்ளில் எங்களை விட பாசமிகு சகோதரகளாக மாறிவிட்டனர். எங்கள் பிள்ளைகள் வருடம் ஒரு முறை அண்ணா-அக்கா  வருவதை எதிர் நோக்கி காத்திருக்க தொடங்கினர். 

உலகில் இரத்த  உறவுகளையும் கடந்து நல்ல பாசத்தின் அன்பின் நேசத்தின் உறவை பேண இயலும் என உணர்த்தியது.  இந்த முறை சூழல் சிக்கலால் நாங்கள் சிக்குண்டு இருந்த போது சுபி அக்கா இந்தியா வருகை   இருந்தது. நாங்கள் ஒரு மாற்றம் என கருதி சென்னையில் அக்காவுடன் நாட்களை கழித்தோம். 


அக்கா ஓர் சிறந்த வாசிப்பாளர் ஓர் பண்பான விமர்சகர். அவர் வாசிப்பதை மட்டுமெ விமர்சிப்பார். அதிலும் இசையில் மிகவும் ஈடுப்பாடு கொண்டவர். அக்கவிற்கு பழைய இளைய ராஜா பாடல்கள் என்றால் அதீத விருப்பம். எஙகள் பயணங்களில் அக்கா வருகையில் நேரம் அந்த பாடல்கள் தான் ஒலிக்க செய்வோம்.  அக்கா சிறந்த படகரும் கூட. திறமைகளை தன்னகை கொண்டு அதை வெளிக்காட்டாது வாழும் ஆழ்ந்த ஞானம் உடைய ஆளுமை. என் புத்தகமான " நன் தேடும் வெளிச்சங்கள்" அக்காவின் ஊன்றுதலில் தான் வெளி வந்தது. என் எழுத்தை என்னை நானாக நேசிக்கும் அக்காவாக சுபி அக்கா உள்ளார். 

எங்கள் பேச்சுக்கள் சமூகம், எழுத்து, பயணம் சார்ந்தே பல பொழுதும் அமையும். அக்காவின் அமைதி, நீடிய சாந்தத்தை அருகிலிருந்து கண்டு உணர்ந்து கற்று கொள்ள முயன்றுள்ளேன். வாழ்க்கையை அன்பு மயமாக, அழகியலாக நோக்கும் அக்காவை நான் எப்போதும் பின் தொடர முயல்வது உண்டு.   அக்காவிற்கு ஆலயம் தரிசனம் என்றால் விருப்பமானது. எங்கள் ஊருக்கு வந்த போது நெல்லையப்பர் கோவில், ஆழ்வாத்திருநகரி கோயில் , நாகர்கோவில் சுசீந்தரம் தாணுமாலயம் கோயில் சென்று வந்தது நல்ல நினைவுகள். 

இலங்கை போர் சூழலால் அக்கா இலண்டம் மாநகரில் குடியேறினாலும் அவர் உயிர் மூச்சு இலங்கை ஈழத்தில் நிலைபெற்றிருப்பதை காணலாம். அக்காவிற்கு பிடித்த பூஞ்செடி தோட்டம் காண நாகர்கோயில் செல்லும் போது நேரம் ஒதுக்குவது உண்டு. அக்கா வாங்கி தந்த செடியின் பூவில் அக்காவின் சிரிப்பை கண்டு நான் மகிழ்வது உண்டு.  


எவ்வித மனிதர்களையும் நேசிப்பதில் மதிப்பதில் நிகர் அக்காவிற்கு அக்கா மட்டுமே. சகமனிதனை மனித மாண்புடன் காணும் அவர் பார்வை அகலமானது.  நட்புகளை பேணுவதில் அக்கா எடுத்து கொள்ளும் சிரத்தை மனித அன்பால் நிறைந்தது. 


 செடி,  புத்தகம், பயணம் என எங்கள் பாச நட்பு அன்பு நிலைபெறுகின்றது. எங்கள் அன்பிற்கு உரு துணையாக எங்கள் குடும்பவுவும் உள்ளது.  எங்கள் வீட்டிலுலுள்ள ஒவ்வொரு பண்டிகையும் பிறந்த நாட்களும் அக்கா- அண்ணா வாழ்த்துதல் பெற்றே துவங்குகின்றது.  


அக்காவை ஒவ்வொரு நொடியும் தாங்கி அரவணைத்து நடத்தும் பாசமிகு அண்ணா நரேன் அண்ணாவையும் நினைத்துபார்க்கின்றேன் ஓர் கணவர் ஓர் மனைவிக்கு கொடுக்கும் அன்பு, மரியாதை, அளவிடக் கூடாதது இயலாதது.  ஓர் பெண் உண்மையாக மதிக்கப்படுவது நேசிக்கப்படுவது தன் குடும்பத்தில் அது துவங்குவது தன் கணவரில் இருந்து மட்டுமே. அவ்வகையில் நரேன் அண்ணா ஓர் எடுத்து காட்டு!  குழந்தைகள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற நியதியே. ஆனால்  பெற்றோர் எவ்விதம் நம் குழந்தைகளை மதிக்க வேண்டும் கரிசனையாக நடத்த வேண்டும்  என  பிள்ளைகளாக வரம் பெற்ற அஷாந்த, ஆரணி  நடத்தும் விதத்தில் இருந்து அக்காவிடம் கற்று கொள்ளலாம். 
அக்காவை பற்றி எழுத நினைக்க நிறைய நிறைய உண்டு. அக்காவை இந்த பிறந்த நாள் அன்று என் ஓர் பதிவனூடாக வணங்குவதில் மகிழ்கின்றேன். இறைவன் எல்லா வளவும் நிறைவும் அக்கா- நரேன் அண்ணா குடும்பத்திற்கு வழங்க வேண்டும். வாழ்க வளமுடன். 

அன்பே சுபி அக்கா! 
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. (கொரிந்தியர் 13:4-8),.அன்பு ஒருபோதும் ஒழியாது.  

3 comments:

  1. I am speech less Jo. இந்தப் பகிர்வு என் மனதை மிகவும் ஆழ ஊடுருவுகிறது. இதில் நீங்கள் எழுதியதெல்லாம் நான்தானா என்று நினைக்க வைக்கிறது. உங்களோடு முதல் முதல் கதைக்கும் போதோ, அல்லது சந்திக்கும் போதோ, உங்கள் வீட்டில் வந்து சாப்பிடும் போதோ எனக்கு ஒரு அந்நியமான உணர்வு வரவில்லை. எனது சின்ன தங்கை போலதான் உணர்ந்தேன். பாபா பிள்ளைகள் கூட மிக நெருங்கியவர்கலாகத்தான் பட்டார்கள். ஒவ்வொரு முறையும் எங்களை நாம் விரும்பிய இடங்களுக் கெல்லாம் கூட்டிச் சென்று அன்பை பொழிந்து தள்ளிவிட்டீர்கள்.
    உங்கள் அன்புக்கு நன்றி என்ற வார்த்தை காணாது. நான் இம் மண்ணுலகில் வாழும் வரை எம் அன்பு நிலைக்கட்டும் ஜோ. God bless you, Baba. Sam, and little Jery.

    ReplyDelete
  2. Bama Ithayakumar · Vancouver, British ColumbiaFebruary 12, 2016 7:33 pm


    அப்படியே உண்மையை எழுதி விட்டீர்கள் , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்

    ReplyDelete