சமீபத்தில் வாசித்து நேரம் சிந்தனையில் ஆழ்த்திய புத்தகம் " சிதம்பர சிந்தனைகள்". மலையாள கதாசிரியர் கவிஞர் பாலசந்திர சுள்ளிக்காடுhttp://www.thehindu.com/news/cities/Kochi/im-the-poet-of-a-lost-and-failed-generation/article4967478.ece தன் வாழ்க்கை அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் இது. நாட்க்குறிப்பு நடையில் கதை போன்ற அமைப்பில் 21 கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது.
முதல் கதையில் சிதம்பரனார் ஆலயத்தில் தான் சந்தித்த ஓர் வயதான தம்பதிகளை பற்றி கதைக்கின்றார்.
கல்லூரியில் செய்த குறுபுத்தனத்தை கேள்வியுற்று கேள்வி கேட்ட தந்தையிடம் பதில் கூறாது தன் சொந்த வீடு விட்டு வெளியேறுகின்றார் பாலசந்திரன். பின்பு அவர் தன் வீட்டு வாசல்ப்படியை மிதித்தது தன்னுடைய தகப்பனாரின் கடைசி கர்மங்கள் செய்ய மட்டுமே.
கல்லூரிப்பருவத்தில் காதல் கொண்டு தன்னுடன் ஓடி வந்த இவர் மனைவி யும் இவரும் வெவ்வேறு விடுதியில் இருந்து படிக்கின்றனர். இச்சூழலில் மனைவி கர்ப்பம் ஆகுவதும் தன் இயலாமையை எண்ணி தன் முதல் மகனை கருவை கலத்தைதயும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையில் நிறம் சிவப்பு என்ற நிலையிலுள்ள வாழ்க்கையில் சாப்பிட்டு விட்டு உணகத்தில் பில் கட்டாது வந்த போது, உணவக உரிமையாளர் பிடித்து வைத்து அடி கொடுத்து அரைமூட்டை வெங்காயத்தை உரிக்கி வைத்ததையும்; பசிக்கொடுமையால் இரத்ததை விற்று பிழைப்பு நடத்தியதையும் அங்கு தன் தங்கையின் சிகித்தசைக்காக இரத்தம் விற்ற இன்னொரு இளைஞனை பற்றியும் எழுதியுள்ளார்.
ஒரு இக்கட்டான நிலையில்; ஒரு விபசார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததும்; தன் மனைவியிடம் இப்பெண்னுக்கு பணம், உணவு கொடுக்க கூறின போது "நான் செய்யாத வேலைக்கு பணம் வாங்க மாட்டேன்" என்று விடை பெற்று சென்ற அப்பெண்ணை பற்றி மட்டுமல்ல தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த வசதியான இரண்டு பெண்கள் விபசாரிகளாக வாழ்ந்ததை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை ஓர் இளம் பெண் ஊறுகாய் விற்க வருகின்றார் இவர் வீட்டிற்கு. ஏதோ ஒரு சபலத்தில் அப்பெண்ணின் இடுப்பை கிள்ளுவதும் அப்பெண் இவருடை கன்னத்தில் அறைந்த நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையின் ஒரு நிலையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கவிஞராக வலம் வருவதும்; பலர் ஆராதனை கண்ணோடு அவரை நோக்குவதும், மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுடன் விருந்து உண்ணுவதும் இன்னொரு சூழலிலோ சாப்பிடக் கூட உணவு இல்லாது பிச்சைக்காரனை போன்று உணவை இரந்து உண்டதை பற்றியும் விளக்கியுள்ளார்.
ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த எழுத்தாளரால் தன் வீட்டுடன் சமரசப்பட்டு போக இயலவில்லை. கல்வி கற்கும் காலயளைவில் கேரளா நக்சல் புரச்சியில் ஆற்வம் கொண்ட கவிஞர் தன் பிறந்த வீட்டை நாட்டை பெற்றோர் அவர்கள் கொடுத்த கல்வியையும் தூக்கி எறிந்து பின்பு ஒரு பிடி சோறுக்கான பசியில் போராட்டவும் இல்லை புரட்சியும் என விளக்கியுள்ளார்https://en.wikipedia.org/wiki/Balachandran_Chullikkadu.
இப்புத்தகம் மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயற்கப்பட்ட புத்தகம். வம்சி பவா செல்லத்துரையின் மனைவியும் பேராசிரியருமான கெ.வி. ஷைலஜாவால் மொழிபெயற்கப்பட்டுள்ளது. மிகவும் சீரிய மொழிப்பெயர்பு. அன்னிய மொழியில் இருந்து மொழிபெயற்கப்பட்டது என்றே சுவடே தெரியாத வண்னம் சிறப்பான தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.http://balachandranchullikkad.blogspot.in/

மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை, சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும் பெய்து கொண்டே இருக்கும். இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது.
பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும். அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது ! பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள். எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.