21 Mar 2015

Beatiful-அழகானது

சமீபத்தில் கண்டு ரசித்த மலையாளப்படம் பியூட்டிபுஃல்.

அனூப் மேனோன், ஜெயசூரியா மேஹ்னா ராஜ் போன்றவர்கள் நடித்த கவித்துவமான அழகியல் சார்ந்து எடுக்கப்பட்டப்  படமிது.    

  சினிமா என்ற ஊடகத்தை ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டுமல்லாது ஒரு மாற்றத்தின், சராசரி மனிதனின் சிந்தனையை உலுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது.

 ஸ்டீபன் (ஜெயசூரியா)  ஒரு கோடிஸ்வரன் ஆனால் கழுத்திற்கு கீழ் எந்த இயக்கவும் அற்றவர். இவர் வாழ்க்கையை அலுப்பாக நோக்காது அதன் நல்ல பக்கங்களை மட்டும் உள்கொண்டு வாழ்ந்து வருகின்றார்.       இந்நிலையில் பாடகரான ஜோனை(அனூப் மேனோனை)       சந்திக்கின்றார்.  அவரை தான் கேட்க விருப்பும்  பாடல்கள்  பாடும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

ஜோன்  பணத்தின் பற்றாக்குறையுடம் மல்லிட்டு வாழ்பவர். ஆனால் தன் நட்பை பயண்படுத்தி ஸ்டீபனிடம் இருந்து  பண உதவி பெற விரும்பாதவர். இந்நிலையில் ஸ்டீபனை கவனிக்க ஒரு பெண் வருகின்றார். இவர் தன்னுடைய எளிமையான பாசமான அணுகு முறையால் இந்த இரு ஆண்ளள்ளையும் தன்  காதல் பார்வைக்குள்  உள்ளாக்குகின்றார்.  இவர்களில் யாரை உண்மையாக காதலிக்கின்றார், யாரை திருமணம் முடிக்கப்போகின்றார் என காண்பவர்கள் குழம்பும் வேளையில் இந்த பெண்  இன்னொருவனின் கள்ளக்காதலி; மேலும் ஸ்டீபனை கொலை செய்ய அமர்த்தப்பட்ட கொலையாளி என தெரிய வருகின்றது.

மறுபடியும் இந்த நண்பர்கள் வாழ்க்கை எந்த எதிர்பார்ப்பும் அற்ற  பாச- நேச உணர்வு கொண்ட  நட்பில்  கலந்து செல்கின்றது.  அனூப் மேனோனின் திரைக்கதையை பாராட்டாது இருக்க இயலாது. அவ்வளவு கச்சிதமாக வடிவமைத்துள்ளார்.

 மனித வாழ்க்கையில்  நிகழும்   , பாலியல் சிந்தனை, வேட்கை,        குற்ற மனநிலை போன்ற இயல்பான விடையங்களை இணைத்து அருமையான திரைப்படமாக கொடுத்துள்ளனர்.

அலட்டாத நடிப்பு தேவையற்ற உணர்வு போராட்டத்திற்கு,  காண்பவர்களின் உணர்வு சுரண்டலுக்கு இடம் கொடுக்காது, வாழ்க்கையின் நல்ல பார்வையுடன் செல்லும்  இத்திரைப்படம் எல்லோரும் பார்க்க வேண்டியது.

 மழைப் பாடல் 

தன் வசம் உள்ளதை நினைக்காது இல்லாததை பற்றியே சிந்தித்து வாழ்க்கையை வீணாக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியின் இருப்பிடம் எது என உணர்த்தும் திரைப்படம் இது.  காதல் சமூகம் என பெரிய பெரிய கருத்துக்களுடன் வரும் படங்கள் மத்தியில் மனித உலகின் அடிப்படையான மனிதனின் நுண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கை முழுதும் படுக்கையில் கிடக்க  நிர்பந்திக்கப்பட்டிருக்கும் கதாநாயகனின் கதையை நம்பி வெளிவந்த அழகான படம் தான் 'பியூட்டிபுஃல்'.     வாழ்க்கை அழகானது அழகான மனிதர்களின் மனதினால் என்று உணர்த்திய படமிது.                                        

2 comments:

  1. Mohammed Rishan ShareefMarch 21, 2015 11:02 pm

    நல்ல பதிவு சகோதரி J P Josephine Baba!
    பாய்ந்து பறந்து சண்டை போட்டு, பஞ்ச் வசனங்கள் பேச வேண்டிய கதாநாயகன், படம் முழுவதும் கட்டிலில் படுத்திருப்பான். நாயகனுக்காகவும், குடும்பத்துக்காகவும் பல தியாகங்கள் செய்து, கனவுக் காட்சிகளில் உடல் காட்டி மரத்தினைச் சுற்றி ஆடிப் பாட வேண்டிய கதாநாயகன், வஞ்சகம் நிறைந்தவளாக, கெட்டவளாக இருப்பாள். தமிழ் மற்றும் மலையாள சினிமா நியதிகளை உடைத்தெறிந்த படம். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.
    அனூப்பினதும் ஜெயசூர்யாவினதும் சமீபத்திய படமான 'ஆமையும் முயலும்' பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருப்பீர்கள்

    ReplyDelete
  2. Satta Nathan · VOC College, TuticorinJanuary 27, 2018 9:34 pm

    Narration is nice

    ReplyDelete