நண்பகளை காணாது கதைக்காது இருந்தது சொல்லி கொள்ள இயலாத துன்பம் தந்தது மட்டுமல்ல இனம் தெரியாத ஒரு துயர் கூடவே ஒட்டிகொண்டதாகவும் உணரப்பட்டேன். ஒரு சூனியமான நிலையில் பயணிப்பது போன்று உணர்ந்த போது தான் இவை தரும் துயரம் அளவற்றது என்று புரிந்தது.
ஆனால் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க உதவியது. இக்கட்டான வேளையில் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் சில பொழுது தெளிவு கிடைக்காத பிரச்சனைகளுக்கு தெளிவு பெறவும் உதவியது . உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருபோதும் சந்திக்க இயலாதவர்களிடம் நட்பில் இணை பிரியா உறவை பேணுவதும் மகிழ்ச்சியை தந்தது. புதிய அறிவை நாம் பெறவும் நம் கருத்துரையாடல் சிந்தனைகளை பகரவும் வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது. மறந்து போன உறவினர்கள் வீடு போய் நலம் விசாரிக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.
ஒவ்வொரு இணையப் பயணிகளின் உணர்வுகளும் உங்கள் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது. மனதுக்கு நெருக்கமான உணர்வு.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஇணையம் நேரத்தை சாப்பிடுகிறது - உண்மை தான். நிறைய கற்றுக் கொள்கிறோம்.
வாழ்த்துக்கள்.
அடேங்கப்பா .. நம்ம மேல அவ்ளோ பாசமா?
ReplyDeleteஉண்மையான பகிர்வு. நான் வழிமொழிகிறேன்.
என் பதிவுக்கு வருகை தந்த டொக்டர் சாப், ரத்னவேல் ஐயா வுக்கும் மிக்க நன்றி, வணக்கம்!! விசரன் அண்ணா சந்தேகம் வேண்டாம், நிறைய பாசமே! உங்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்!!
ReplyDeleteஉள்நாட்டில் இருக்கும் உங்களுக்கே இப்படி னா , வெளிநாட்டில் இருக்கும் எமக்கு.?..
ReplyDeleteநட்புகளுக்காக நான் இணையம் வருவதில்லை.. ஆனால் நிறைய தகவல்கள் , வாசிப்புகள்..
ஆதலால் இணையம் இல்லாவிட்டாலும் நட்புகள் பிரிவு பெரிதாக தோன்றுவதில்லை...
what is the meeeting in the 2nd photo
ReplyDelete2 வது படம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தொடர்பியல் துறை (எங்கள் வகுப்பு 2008) மாணவர்களுடன் ஆனந்த விகடன் பத்திரிக்கையாளர் கருத்துரையாடுவது.
ReplyDeleteஉண்மை அனால் இணையத்தின் மூலம் கிடைக்க பெற்ற facebook மிக சுவாரசியம் மானது. எனக்கு இணைய தொடர்பு 2001 ம் ஆண்டு தொடக்கம் இருந்தாலும் facebook போன்றா சமுக வலைதளங்களின் மூலம் தான் அதிக சுவாரசிகம். மேலும் இதேபோல் skype மற்றும் செய்தி தளங்கள் அனால் நீங்கள் சொன்னது போல் தள இணைப்பு இல்லாத போதுதான் பலரின் பல விடுபட்ட வேலைகள் முடிகிறது. Chelvaranjan Chellathamby
ReplyDeleteஉங்கள் வெளிப்படையான ஆரம்ப வரிகளில் ஆரம்பித்து அனுபவம் அனைத்தையும் வாசித்து அறிந்து கொண்டேன். ரசித்த வரிகள்:”எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது.”
ReplyDeleteஉண்மையான உங்கள் உணர்வுகளைப் படிக்கும்போது எனக்குள் தோன்றியது இதுதான்:- காலை எழுந்ததும் நம் முகம் காட்டும் கண்ணாடி அறையில் இல்லையெனில் எதையோ இழந்தது பொல இருக்கும்...முகனூல் வரிகளின் தரிசனம் தினசரி இருந்தால் அகம் மலரும்..வேலையின்றிருக்கும் என் போன்றோருக்கு அதுதான் இதம் தரும் சோலை
ReplyDeleteபின்னூட்டம் இட்டு சென்ற என் நட்பு உறவுகளுக்கு நன்றி வணக்கங்கள்!
ReplyDelete