17 May 2011

தேர்வுகள் தோல்விக்கு அல்ல!!!


+2 தேர்வு முடிவு அன்று, பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன்.   ஓர் மத்திய வயதை எட்டிய பெண் பேருந்தில் முன் இருக்கையில் ஒட்டி இருந்து கொண்டு பரபரப்பாக அலை பேசியில் தனக்கு தெரிந்த குழந்தைகளின் தேர்வு முடிவைப் பற்றி வினவி கொண்டிருந்தார்.  அவர் முகம் போர்க் களத்தில் “வாழ்வா சாவா” என்று நிற்க்கும் படைவீரருடன் ஒத்து இருந்தது.  ஒன்று இரண்டு பேருடைய  அல்ல தனக்கு தெரிந்த பலருடைய தேர்வு முடிவு பற்றியும் கேட்டு அறிந்து  கொண்டிருந்தார்.   என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் பெண் 1050 க்கு மேல் எடுத்து விடுவாள் என்றும் ” மருத்துவம் தான் எடுக்க சொல்லியுள்ளதாகவும், கட் ஆஃப்  மார்க்கு 97, இருந்தால் தான் விரும்பிய மருத்துவ கல்லூரிக்கு செல்ல இயலும் இல்லா விடில் பயோடெக்நோலஜி எடுக்க பணிந்துள்ளதாக    நண்பியிடம் தன் கடைசி தீர்ப்பை வெளியிட்டு கொண்டிருந்தார்.  இன்னும் பரபரப்பு விட்டு அகலவில்லை முதல் வரிசையில் இருக்கும் பெண்ணுக்கு!!  அவருடைய ஆர்வக் கோளாறு எண்ணி மனதில் எரிச்சல் பட்டு கொண்டே பயணம் தொடரும் போது என் நிறுத்தம் வந்து விட்டது.

எங்கள் பள்ளி தேர்வு முடிவு நாட்கள் மனதில் ஓடியது,  தேர்வு முடிவு நாட்கள் மட்டுமல்ல அந்த வருடமே ஆபத்து ஆனது தான். உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள் பக்கத்து வீட்டுகாரார்கள் என எல்லோர் கண்ணிலும் நாம் தான் தெரிவோம்.  பார்க்கும் போது எல்லாம் படிப்பு எப்படி செல்கின்றது, என்ன மதிப்பெண் எடுத்து விடுவாய், வாழ்க்கையே இதில் தான்  என அன்பான, ஆக்கபூர்வமான, கேலியான என பலவித அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.  பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவு என்பதில் தன்மானம் சார்ந்த சில நோக்கங்கள் எதிர்பார்ப்புகளும் உண்டு என்று மறுக்க இயலாது.

என்னுடைய பள்ளி படிப்பு, அரசு பள்ளியில் தான், மாணவர்கள் எண்ணிக்கை 100 க்கு மேல் அதில்  10 மாணவர்கள் மட்டுமே ஜெயிப்பவர்கள் என்று அடையாளப்படுத்தி படிக்க வைப்பது உண்டு. அதிலும் முதல்வர்  லெக்ஷ்மி குட்டியம்மா  நாவு கருநாக்கு என்பதால் அவர் வாயில் விழுந்தால் அந்த வருடம் சோகா தான் என்று பயந்து நடுங்கியே அவரை கண்டு நாங்கள் பதுங்கி ஒதுங்கி ஓடுவோம்.  அதையும் தாண்டி சில மாணவர்களை அவர் அழைத்து “நீ குணம் பிடிக்கில்லடா” என்று வாழ்த்தியதால் தேர்வு எழுதாதே பள்ளி விட்ட மாணவர்களும் உண்டு.  

எங்கள் பள்ளியில் தரமான ஒரு மாணவியாக இருந்தாலும், ப்ரீ டிகிரிக்கு கல்லூரி சென்ற போது வகுப்பில் 40 மாணவிகளில் நான் கடைசி பெஞ்சு மாணவியாக தள்ளப்பட்டேன்.  கேரளாவின் கல்வியின் தொட்டில் கோட்டயம்! உடன் படித்த மாணவிகளின் பெற்றோர் உயர் பதவியில் உள்ளோர், அல்லது வெளிநாட்டு உள்நாட்டு தொழில் அதிபர்களின் வாரிசுகள் என்று கல்வி பணம், பதவி உள்ள பெற்றோரின் வாரிசுகள் எங்களுடன் படித்தனர்.  முட்டாள் பெஞ்சில் இருந்து படித்து கொடும் நினைவுகள் கொண்ட நாட்கள் இருப்பினும் அன்பான பண்பான பேராசிரியர்களால் மீண்டு வந்தோம்.

தேர்வு மதிப்பெண் மட்டுமே வாழ்வின் வெற்றியை நிர்ணயித்து விட இயலுமா.  என் பள்ளியில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவி மேல்படிப்பில் திணறிய போது தற்கொலைக்கு முயன்றதாக கேள்விப் பட்டுள்ளேன்.  அதே போல் முதல் மாணவனாக தேற்வாகிய என் ஊர் நண்பர் பல போராட்டம் கடந்து தான் தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளார்.   பல பொழுதும் மாணவர்கள் தேற்வு முடிவு என்ற பெயரிம் கொடிய மன அழுத்ததிற்க்கு பலியாக்கப் படுகின்றனர்.  ஒரு 11 வகுப்பு மாணவி பேருந்து   பயணத்தின் போது அறிமுகம் ஆனார்.  காலையில் 8 மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகும் என்றும் திரும்பி இரவு 7 மணிக்கு தான் வர  இயலும் என்றும், 11 வகுப்பு பாடத்துடன் தாங்கள் வரும் வருடம் படிக்க வேண்டிய 12 வகுப்பு பாடவும் கற்று கொள்ள வேண்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விதமான அதீத வேலைப்பழு  பெண் குழந்தைகள் என்ற நிலையில் உடல் மன நலம் சார்ந்து பாதிப்படைவதையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.  பல மாணாக்கள் நல்ல சாப்பாடு நிம்மதியான தூக்கம் மறுதலிக்கப்பட்டு கடும் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  பயணநேரவும் கொடியதே, கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து உள்ளது போல் பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதியும்   கிடைப்பது இல்லை.  காலை 7 மணிக்கு துவங்கிய போராட்டம் முடிவு பெற இரவு வீடு வந்தாக வேண்டும்.  சில குழந்தைகளுக்கு வீட்டிலும் கொடிய பொழுதாகத் தான் இருக்கும்.  இதில் படிக்காத பெற்றோரை விட படித்த  பட்டதாரிகளான பெற்றோரின் நடவடிக்கை இன்னும் அராஜகமானது!  தங்களால் பெற இயலாது போய் விட்டது, எல்லாம் தங்கள் பிள்ளைகள் வழியாக பெறவேண்டும் என்ற பேராசையில்  தங்கள் குழந்தைகளை பூட்டியிட்ட அறையில் படிக்க செய்வது,  விரட்டி விரட்டி நாலு பேர் அறியும் வண்ணம் அடிப்பது, திட்டுவது என்பது பெற்றோரின் “அக்கரை” என்ற பெயரில் நிகழும் துயரங்கள் எண்ணில் அடங்காதவை!!

கல்வியால் குழந்தைகள் சூழலுக்கு தகுந்தும் எதிர்மறையான சூழலிலும் வாழத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே மிகவும் தேவையானது. மெட்ரிக்குலேஷன் மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் சூழலுக்கு தகுந்து மாறவும் துணிவாக காரியங்களை கையாளவும் தெரிந்தவர்கள்   (emotional intelligent) என்று சில ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் சமூக அக்கரை, போராட்ட குணம் இவர்களிடம் அதிகம் உள்ளதாகவே காணப்பட்டுள்ளது.

குழந்தைகள் தேற்வு வெற்றி மட்டுமே, அவர்கள் வாழ்க்கையின் வெற்றியை நிற்ணயிப்பது இல்லை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களின் உந்துதல் கொண்டு மட்டுமே தேற்வில் ஜெயிக்கும் பல குழந்தைகள், பிற்கால வாழ்வில் போராடி ஜெயிக்க வேண்டிய சூழலில் கோட்டை விட்டு  விடுகின்றனர்.  அதுவாக நடப்பதும் நடக்க வைப்பதும் நிறைய வித்தியாசம் உள்ளது.   பல ஆசிரியர் படித்தவர்கள் வீடுகளில் பிள்ளைகள் வெற்றி என்பது அவர்கள் மதிப்பை நிர்ணயிக்கும்  அளவு கோல் ஆவதால் தேவையற்ற மன அழுத்ததை கொடுத்து குழந்தைகளை தற்கொலை, மற்றும்  மன அழுத்த நோய்க்கு தள்ளுகின்றனர்.   பல குழந்தைகள் படிப்பதை தேற்வில் எழுதும் போது நினைவில் வராது பதட்ட சூழலுக்கு தள்ளப் படுவதும் உண்டு.  சில வீடுகளில் தேர்வில் மதிப்பெண் வாங்கும் குழந்தைக்கு அதிக மதிப்பும் இடமும் தருவது உண்டு. நாலு உறவினர்கள் கூடும் இடத்தில் தன் பிள்ளைகள் என்று பார்க்காது கேலி பேசுவதும் நடந்து வருகின்றது.

எங்கள் வகுப்பில் என் சக மாணவன் ஒருவன் ஒழுங்கீனத்தின் உச்சத்தில் இருந்தான். பெண்களை விரட்டி காதலிப்பது பணியாதவர்கள் பெயரை கெடுப்பது என்று திளைத்து வந்த அவனால்; 10 வகுப்பில் ஜெயிக்க மட்டுமே முடிந்தது.  இன்னொரு தோழனோ எல்லா நன்மைகளில் பதிப்பாக இருந்தான் நேரத்துக்கு வகுப்புக்கு வருவது உடன் படிக்கும் மாணவிகளை மதித்து உதவுவது என்று. நல்ல மதிபெண்களுடன் கல்லூரியிலும் சேர்ந்து படித்தான்.  10 வருடம் பின்பு என்  பிறந்த ஊருக்கு நான் சென்ற போது எனக்கு  அறியக் கிடைத்தது அந்த முதல் மாணவன் காவல் அதிகாரியாக கேரளா அரசு இலாகவில்  பணிபுரிவதும், முன்மாதிரியாக திகழ்ந்த என் வகுப்பு தோழன் எங்கள் ஊரில் எல்லோரின் தூக்கம் கெடுத்தும் மிகப் பெரிய  கொள்ளைகாரனாக மாறியுள்ளான் என்பதுமே.  

என் வகுப்பு  சில தோழர்களை காணும்  போது நான் ஆச்சரியப்படுவது உண்டு வகுப்பு அறையில்  ஆசிரியரின் செல்ல பிள்ளைகளாக இருந்த பலர் வீட்டில் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை என்றும், சிலர் வாழவே வழியற்று தற்கொலை செய்து கொண்டும் உலகையே விட்டு சென்ற போது  எல்லோராலும் கேலி பேசப்பட்ட சில தோழர்கள் மகிழ்ச்சியான தன்னம்பிக்கையான வாழ்க்கை சூழலில் வாழ்கின்றனர்.

என் வகுப்பு தோழியை ஒரு பந்தயக் குதிரையாக அவர்கள் பெற்றோர் வளர்த்தனர்.   அவருடைய நட்பு, ஆசைகள் எல்லாவற்றுக்கும் தடையிட்டனர்.   அவர்கள் விரும்பியது போலவே அவர் ஓர் உயர் வேலையுடன் அமெரிக்காவில வசிக்கின்றார்.   ஆனால் அவர்கள் பெற்றோரை அவர் கண்டு கொள்வதில்லை என்ற துயரில் உள்ளார்களாம்.

வீட்டில் வரும் ஒவ்வொரு விருந்தினர் கேள்வியும் பையன் /பிள்ளை படிப்பு எப்படி போகின்றது என்பதாகும். மேலும் தேற்வு நெருங்கும் வேளையில் உபதேசம், தேர்வு நாட்களில் கூட தேர்வு அறைக்குள் ஊடகத்துடன் கலெக்டர்கள் புகிர்வதும் பறக்கும் படையின் பதற வைக்கும் பணியும் வருந்தக்க தக்கதே. வெற்றியை அதீத ஆர்பாட்டமாக கொண்டாடுவதும் தோற்றவர்களை கேலியாக நோக்குவதுடன் உதாசீனப்படுத்துவதும் அவர்கள் வாழ்க்கையை அழிக்கவே உதவும்.  கல்வித் துறைகூட 8 வகுப்பு வரை முகாந்தரம் இல்லாது ஜெயிக்க வைத்து விட்டு 10 அல்லது +2 ஈவு-இரக்கம் இன்றி மாணவர்களை தோற்க்க வைப்பதும்  வெற்றி எப்படியும் பெற்றாக வேண்டும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் போட்டி சூழலில் தள்ளுவதும் கண்டிக்க தக்கதே!!  

7 May 2011

மாணவர்களுக்கு வேதனை தரும் தமிழ்மொழி !!!!



8ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் என் பார்வையில் கடந்து சென்றது.  பல இலக்கிய பாடங்கள் ஆசிரியர் -மாணவர் உரையாடல்கள் பாணியில் அமைத்துள்ளனர்.  இது ஒரு வித அலுப்பையே தருகின்றது.  அம்மா –குழந்தை,  அப்பா- மகன் உரையாடுவது, நண்பர்களுக்குள் உரையாடுவது என இன்னும் சுவாரசியம் கலந்து உள்படுத்தியிருக்கலாம்.  மாணவர், ஐயா ஐயா என்று கதறி காலில் விழுகின்றது ஏதோ ஒரு நெருடலாகவே உள்ளது.  தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு நகல் பெறுக்கி வேலையில் ஒதுக்கீடு உண்டு என்பதற்க்கு இணங்க “ஆமா சாமி” இனத்தை  உருவாக்கும் நோக்கமா என்றும் தெரியவில்லை. பல ஊர்களில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் டில்லி(Central board), உலகத்தர (international schools) பள்ளிகளாக மாறி கொண்டிருக்கும் நிலையில், சிறப்பாக அரசு உயர் அதிக்காரிகள், பணக்காரர்கள் குழந்தைகளுக்கு இப்பள்ளிகளுக்கு மாறும் சூழலில் சமசீர் பள்ளி பாடத் திட்டம் திட்டமிடப்பட்டே  கொண்டு வரப்பட்டுள்ளதா?

நாங்கள் எஸ்டேட்டில் வாழ்ந்த சூழலில் மேல் அதிகாரிகளை தொழிலாளர்கள்,  மட்டுமல்ல அதிகாரிகள் தங்களுக்குள் ஐயா என்று அழைப்பதிலும் கேட்பதிலும் இன்பம் கண்டிருந்தனர்.  அவர்கள் மனைவி, மக்கள் கூட ஐயா என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதிகார வாஞ்சையுடன் வாழவும் பழகினர்.  ஐயாக்கள் மனைவிகளும் அம்மாக்களாகவும், அவர்களின் தொட்டிலில் ஆடும் குழந்தைகள் கூட ஐயா பிள்ளை என்றே அழைக்க பட்டனர்.  இதன் துவக்கம் பிரிடீஷ் அதிகாரிகள்  தேயிலை தோட்டத்தை ஆட்சி செய்வதில் இருந்து வந்தது என்று சொல்லப் படுவது உண்டு!


பின்பு கல்வி, நாகரிகம் எங்கள் பகுதியை வந்தடைய துவங்கிய போது ஐயா என்று அழைப்பது தன்மானத்திற்க்கு வேட்டு வைப்பதாக கருதியதால் ஒரு தீர்மானத்துடன் சார் (sir) என்று மாற்றி கொண்டனர்; சிலர் பிரத்தியேகமாக அழைக்காது மொட்டையாக அழைக்கவும் கற்று கொண்டனர்.  என்னுடைய ஒரு உறவினர் தமிழகத்தில் அரசு அதிகாரியாக பணிபுரிகின்றார் அவருடைய மேல் அதிகாரியை சக ஊழியர்கள் “ஐயா’ என்றே அழைக்க வேண்டுமாம்.  மேல் நாடுகளில் மாணவர்கள் திரு. என்று சேர்த்து பெயர் சொல்லி அழைக்கும் போது இந்திய மாணவர்களின் மன நிலைமையும் அதற்க்கு எதிர்மறையாக வளர்ப்பதால் உலகச் சந்தையில் தரம் தாழ்ந்த இடம் வழங்கப் பட வாய்ப்புக்கள் நிறையவே உண்டு என்று மறக்கல் ஆகாது!.

 மலையாளிகளுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் வாங்க போங்க என்று அவர்களை பவ்வியமாக அழைப்பது தான்!! ஆனால் அவர்கள் நம்மவர்களை ஒருமையில் அழைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.  தமிழர்களுக்கு அடிமை மனோபாவம் காலா காலம் தொட்டு இரத்தத்தில் ஊறிய பண்பே; எங்கும் அடங்கி போக ஒத்து கொள்வான் இவனை மட்டம் தட்டியே பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலான்மையை நிலைகாட்டி கொண்டு இவனை நடத்தி செல்வார்கள் என்று மறுக்க இயலவில்லை. தமிழன் வேற்று மொழியாரை புகழும் அளவுக்கு நம்மில் ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள, அங்கிகரிக்க தயங்குவார்கள்.

தமிழனுக்கு இரட்டை வாழ்க்கை முறை,கலாச்சாரம், பேச்சு, மொழிப் பற்று, அரசியல் என்பதில் பாடுபாடு இல்லாது அவன் அறியாதே அவனை பின் தொடந்து வருகின்றது.  தமிழன் மொழிபற்று என்று காட்டி கொண்டாலும் ஆங்கிலத்திலும் தங்கிலிஷிலும் கதைத்து தன்னை அறிவாளி என்று  காட்டி கொள்ளும் ஆற்வம் இவனை விட வேறொருவனுக்கும் இருப்பதில்லை.  ஈழத் தமிழர்கள் மறு நாடுகளில் குடிபெயர்ந்திருந்தாலும் தங்களுக்குள் நடைபெறும் தொடர்பாடலுக்கு, ஏன் வெட்டி பேச்சுக்கு கூட தமிழ் மொழியவே பயன்படுத்த  விரும்புவர்.   ஆனால் தமிழகத் தமிழன் அவன் தலைநகரம் சென்னையில் கூட தமிழ் பயன்படுத்த நடுங்குவான், வெட்கப்படுவான். ஒரு விதமான தன்மான மற்ற பொய் மரியாதை கொடுக்கின்றான் மட்டுமல்ல பெறவும் விரும்புகின்றான் என்பதே இதன் காரணம்!!   எல்லா நாடுகளிலும் சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், நோர்வே, கனடா, ஆஸ்தேரிலியா போன்றவற்றில் மட்டுமல்ல ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிலும் அவரவர் தாய் மொழியில் தொடர்பாடல் பேணும் போது தமிழகத்தில் ஆங்கிலம் பேச்சு மொழியாக அறிவு சார்ந்த மொழியாக மாற்றம் பெற்று வருகின்றது என்பது தான் உண்மையிலும் உண்மை!!   சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும் போது வெளிநாட்டு காள்சென்றருகளில் வேலை செய்யும் நபர்கள் உச்ச ஸ்தாயியில் ஆங்கிலத்தில் கதைத்து தங்கள் அறிவை பறைசாற்றி கொண்டு செல்வதை காணலாம்.                                                                                                                                                                                                 அமெரிக்காவில் உணவகம் வைத்துள்ள ஒரு தோழர் கூறுகையில் தமிழக பெற்றோர்கள் தும்முவது கூட ஆங்கிலத்தில் என்று கருதலாக இருப்பார்களாம் பொது இடங்களில்; இவர்கள் வெத்து பந்தாவை வைத்தே தமிழகத் தமிழர்கள் என்று கண்டு பிடித்து விடுவாராம்.   சமீபத்தில் ஒரு அமெரிக்க உறவினரை சந்திக்க நேர்ந்தது.  அவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்து 10 வருடத்திற்க்குள் தான் இருக்க வேண்டும் இருப்பினும் அவர்கள் 12 வயது  மகன் கஷ்டப் பட்டு மாமா என்று உச்சரித்தான். அவர் நெருங்கின உறவினர்கள் அம்மா பாட்டியிடம் கூட உடல் மொழியால் தான் கதைத்து கொண்டிருந்தான். அக்குழந்தையின் பார்வை எங்கள் கேரளாவில், தமிழர்களை மலையாளிகள் நோக்கும் ஒருவித அருவருப்பு, எகத்தாளம் நிறைந்து இருந்தது.  இந்த நிலையில் நம் தமிழக பள்ளியில் தமிழை அழகான பேச்சு மொழியாக கற்பிக்காது வெறியாகவும் அரசியல் நோக்குடன் கற்று கொடுப்பது எவ்விதம் பலன் தரும் என்றே கேட்க தோன்றுகின்றது.


 மரியாதை என்பது மனதில் இருந்து வர வேண்டும், வார்த்தைகளில் மட்டும் ஆகாது.  என் சமீப கல்லூரி நாட்களில், நான் அறிந்த ஒரு இளம் பெண் பிறந்த நாள் அன்று ஆசிரியர்கள் காலில் விழுந்து  ஆசிர்வாதம் பெறுவார் ஆசிரியரிடன் கோபம் வந்துவிட்டால் கீழ்த்தரமாக ஒருமையில் தான் அவரை திட்டுவார் .

நான் என் நண்பர்களுடன் கதைக்கும் போது சார், சார் என்று விளிப்பது உண்டு. இந்த வழக்கம் பெரிய குளம் கல்லூரியில் படிக்கும் போது தான் என்னுடன் ஒட்டி கொண்டது.  எங்கள் கேரளா சூழலில் இப்படியான ஊள கும்பிடும் இடும் சூழல் இருந்தது கிடையாது.   நான் தமிழகத்தில் பெரிய குளம் கல்லூரியில் சேர்ந்த போது என் பெயர், ஊர் பெயர் என்ன என்று ஒரு பெண் பேராசிரியரால் கேட்கப் பட்டது.  பதில் அளிக்கயில் பேராசிரியை, என்னை கடலையை சட்டியில் போட்டு வறுப்பது போன்று சொற்களால் வறுத்து எடுத்து விட்டார்.   நீ எந்த ஊர், ஓ கேரளாகாரியா,  நினைத்தேன் மரியாதை இல்லாது பேசுகின்றாய் என்று  நிறுத்தம் இல்லா பேருந்து போல் போய் கொண்டே இருந்தது அவருடைய கோபம்.  ஒரு கட்டத்தில் என் கண்ணீரை கண்ட போது தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டு எனக்கு மன்னிப்பு தர முன் வந்தார்.  பின்பு என்ன சொன்னாலும் கேட்டாலும் “எஸ் மேம், ஆமாங்க  மேம், இல்லை மேம்” என்று என் பதில் தர பழகி கொண்டேன்.  தற்போது நண்பர்களுடன் கதைக்கும் போது 'நாய் வாலு நிமிராது' என்பது போல் “சார், சார்” என்று என்னால் சொல்லப் படும் போது அவர்கள் கேலி செய்வது உண்டு. அவர்கள் நாடு வழக்கம் பற்றி சொல்லி தருவர்,  தென் தமிழகத்தில் தான் இந்த நோவு அதிகம் என்று கருதிய போது தமிழக பாடப் புத்தகமே போதிப்பது இது தான் என்பது வருந்த தக்கது.ஆனால் பெண்களை பொம்பளை என்றும் வயதானவர்களை கிழவி என்றும் மிக சாதாரணமாக பொது இடங்களில் அழைப்பதும் அதை கேட்டு கேலியாக சிரிப்பதும் தமிழகத்தில் தான் காண இயலும்.  ஒரு வித நாடக தன்மை தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் வாழ்க்கையிலும் உண்டு .  புத்தகத் தமிழுக்கும் பேச்சு தமிழுக்கும் எந்த சம்பந்தவும் இருப்பது இல்லை.  ஆனால் மலையாள மொழியில் இந்த பாகுபாடு காணல் மிகக் குறைவே, மொழியை சாதாரணமாக போதை வெறி கொண்டு அல்லாது பயன்படுத்துவர் !  அவர்கள் மொழியை எந்த அளவு நேசிப்பார்களோ அதே போல் அடுத்தவர் மொழியை பற்றி அறியவும் அவர்களுக்கு ஆசை, ஆவல் உண்டு. பொது இடங்களில் அவர்கள் மொழியில் கதைக்க வெட்கப் படுவது இல்லை.


நான் கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது என் அறை தோழிகள் தமிழ் எழுத்து வார்த்தைகள் என்னிடம் எழுதி ஆற்வமுடன் கற்று கொண்டனர். ஆனால் தமிழகம் பெரியகுளம் வந்த போது மலையாள மொழி மூக்கில் பேசுவது என்று கேலி பேசிக் கொண்டு; தமிழ் மட்டும் தான் உலகிலே சிறந்த மொழி என்ற எண்ணம் கொண்டு ஒரு வார்த்தை கூட கற்று கொள்ள விரும்பவில்லை நம்மவர்களால்.   இந்த மன நிலையால் மற்றவர்களிடம் பழகுவது வேலை பார்ப்பது எல்லாமே அடுத்தவர்கள் தலைமையில்  தள்ளபடும் சூழலுக்கு ஆளாகுன்றனர் தமிழர்கள்!!   



“ஆகுபெயர்” என்ற பகுதியில் 17 தடவை “ஐயா” என்ற வார்த்தை இரு பக்கத்திற்க்குள் வருகின்றது.  கண் திறந்தது என்ற ஒரு பாடம் அதில் கவிதா எழையாம் அவர் அம்மா சொல்வதாக சில வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளது அவை “பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியுமா, உடுப்பதோ கந்தலாடை…….. எதற்க்கு ஐயா படிப்பு என்ற சொல்லாடல்கள் நாடக தன்மை கொடுக்குமே தவிர மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்க்க, சிந்தனை வளம் வளர்க்க உதவாது. மேலும் அரசு அளிக்கு இலவச புத்த்கங்கள், உடுப்பு பற்றிய தம்பட்டம் மாணவர்களின் நல்ல பண்புகளை அழிக்கும் என்பதில் ஐயமில்லை.  மேலும் உண்மையற்ற கிராம விவரணங்கள் நம்பக தன்மையை குறைப்பதுடன் ; அரசியல் வாதிகள் நினைப்பது போல், சினிமா கதைகளில் காண்பது போல் அல்ல இன்றுள்ள கிராம நிலை என்று உணர இயலும்.  கந்தை உடுத்தால் கூட தன்மானத்துடன் வாழ்கின்றனர் கிராம மக்கள். மேலும் குழுவாக உறவினர்களுடன்  வாழ்வதால் அவர்கள் ஆற்றல் தன்னம்பிக்கை மிகுதியானதே.   சொல்ல போனால் நகர்புற மக்கள் தான் தங்கள் வேலை, சம்பளம், சாப்பாடு தொலைகாட்சி என்று அடுக்கு மாடி வீடுகளில் கூண்டு கிளிகளாக வாழ்கின்றனர் .


தமிழர் வானியல் என்ற பாடத்தில் திருக்குரல் பெருமை சேர்த்துள்ளனர்.  திகட்ட திகட்ட சாப்பிடால் வாந்தி வருவது போல் எங்கும் எதிலும் திருக்குரல் என்று நுட்பமாக ஏதோ ஒரு காரணத்திற்காக மாணவர்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு வடிவமைத்துள்ளனர்.  அதில் வரும் பல பாடப் பகுதிகளும் சுவாரசியம் அற்று மாணவர்களை மூச்சடைக்க வைப்பதாகவே தோன்றுகின்றது.

அடுத்தது தமிழர்கள், தமிழ் மொழி என மாணவர்களை கிணற்று தவளையாக வலம் வர பலவந்தப் படுத்துவதாகவும் உள்ளது.  தமிழ்மட்டும் தான் சிறந்தது தமிழ் மட்டுமே உண்மையான மொழி  என்ற தற்-பெருமை ஆபத்தானது மட்டுமல்ல வன்முறையும் கூட!!  நம் கலாச்சாரங்கள் மட்டுமே சிறந்தது என்றால் மற்றவையை பற்றிய நம் அறிவு, தேடுதல் என்ன என்றும் அறிய வேண்டியுள்ளது.

கவிதைகள் கூட 4 வரி கவிதைகள், முழுமையற்ற கட்டுரைகள், நிறைய பொய் மூட நம்பிக்கைகள் என சிந்தனையை அறிவை வளர்க்க, பகுந்தாய்வு திறன் கொடுக்காத வகையில்  எழுதப் பட்டதாகவே உள்ளது.  உதாரணமாக ராமாயணத்தில் புஷ்பக விமானம் உண்டாம் அதனால் தமிழர்கள் அன்றே வானூர்தி பயன்படுத்தியிருந்தனராம்.  ராமாயணம் ஒரு கட்டு கதை சைவ மதத்தை அழிக்க எழுதப் பட்டது என்று உண்மை நிலை உள்ள போது; இவ்விதம் குழந்தைகள் மனதில் பொய்யை திணிப்பதால் என்ன பயன்? என்னதான் நியாயம்?   தமிழ் மொழியை சில நோக்கங்கள் சில குறிக்கோளுடன் தமிழக கல்வித் துறை கற்பழிப்பது மட்டுமல்லாது கொலையும் செய்ய துணிந்துள்ளது என்பதே வருந்த தக்கது.

1823-74ல் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் பாடல் ஒன்று வாடிய பயிரை……………… இந்த காலத்தின் துயர் கொண்ட கவிதைகள் கட்டுரைகள் என்று ஒன்றுமில்லை.  பல பாடங்கள் ஒரு 13 வயது மாணவனை மனதில் கொண்டு தயாரித்தது போல் தெரியவில்லை. இக்கால மாணவர்கள் வாழும் சூழல் அவர்கள் மனநிலை, கற்பனை வளம்  ஒன்றும் கணக்கில் எடுக்காதை இப்புத்த்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது. . வாடிய பயர் கடந்து பாக்கட் தண்ணீர் மணல் கொள்ளை, சுகாதாரம் மற்ற சுற்றுப் புறம் என்று எங்கோ போய் கொண்டு இருக்கின்றது தற்போதய சூழல்.

இதைவிட 1000 மடங்கு அருமையான எழுத்துக்கள் பதிவு உலகில் உலவுகின்றது என்பது உலகறியும் ஆனால் கல்வித் துறையல்ல.   தற்கால எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெய மோகன் , நாஞ்சில் நாடன், ராம கிருஷ்ணன் போன்றோரின் கதைகள், ஈழத்து கதைகள் கவிதைகள் தற்கால கவிஞர்களின் கதைகள் சேர்த்திருக்கலாம்.  ஒரு நண்பர் கல்வித் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் 2435 புத்தகங்கள் வாசித்துள்ளவர், நான் அறிவேன்.   இவரை போன்றோரின் எழுத்துக்கள் மாணவர்கள் மத்தியில் சென்று அடையும் போது தான் தமிழ் மொழி மேல் காதல், பற்று கொண்டு படிக்கும் காலம் வரும் !!!!

3 May 2011

நேர்முகத்தில் காணும் கொடிய முகங்கள்!!!


நேர்முகத் தேற்வு எப்போதும் சங்கோஜத்தோடும் ஒரு வித ஐயத்தோடும் என்னால் நோக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நேர்முகம் நிகழும் போதும் அடுத்த முறை இந்நிகழ்ச்சிக்கு இனி வரப் போவதில்லை என்ற உறுதியுடனே வெளியேறி வருகின்றேன். அணியும் உடையில் இருந்து, செயல் எல்லாம் அளக்கப்படும் மேடை.! இந்திய மரபு அனுசரித்து 6 மீ சேலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் என்னையும் அழைத்துள்ள என்னவருடைய அன்றய பயணம் ½ டண் மூட்டையை சுமந்தது சென்றது போல் இருந்திருக்கும். பானல் என்ற பெயரில் 5 -6 பேர் வரிசையாக இருந்து கேள்வி எழுப்புவதை நினைத்தாலே குளிரூட்ட அறையில் இருந்தால் கூட நான் வியர்த்து நடுங்கி தவிப்பது உண்டு. என் நண்பர்கள் உங்களுக்கு என்ன எளிதாக ஜெயித்து விடுவீர்கள் என்று வாழ்த்துவார்கள். என்னை மதிப்பிட போகின்றார்கள் என்று அறியும் போதே வரும் வார்த்தை தொண்டையில் இருந்து வாய் பக்கம் வர தயங்குகின்றது. நெருங்கிய நட்பு வட்டத்தில் நான் கலகலப்பான நபராக இருந்தால் கூட ஒரு புது கூட்டத்தில் பூனை போல் அவதானித்து கொண்டு பம்மியிருக்கவே எனக்கு எப்போதும் பிடித்தாக இருந்துள்ளது.


சில நேர்முகத் தேற்வுகள் வழமைக்கும் மீறி சுவராசியமாக மாறுவதும் உண்டு. நேர்முக தேற்வுக்கு  சென்ற இடத்தில் முதல் முதலாக ஆங்கிலத்தில் பாடம் எடுத்த அனுபவவும் உண்டு. சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வு போல் நெல்லையில் இல்லை. இங்கு ஒரு வித இறுக்கம் இரு பக்கவும் நிகழும். ஒரு முறை நேற்முகம் கண்டவர் என் பெயரின் அர்த்தம் கேட்டார். அது ஒரு எதிர்பாராத கேள்வியாக இருந்தால் கூட பெயரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால் மகிழ்ச்சியாக விவரித்தேன்.




நாகர்கோயிலில் ஒரு நேர்முகம் சென்ற போது உட்கார ஒரு நாற்காலி கூட தரவில்லை. கணவருடன் தான் பேசுவோம் என்று கூறினர். என் சாற்றிதழ் நோக்காது என்னவரிடம் உள்ள பணத்துக்கு தான் மதிப்பு என்பது பின்பு புரிந்தத போது அந்த வேலை மேல் எனக்கு இருந்த மதிப்பு அற்று போனது!!.


இன்றும் அது போல் தான் ஒரு நேர்முகத்துக்கு வந்து சேர்ந்தேன். பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். வர வேண்டிய சிறப்பு தேற்வாளர்களுக்கு என காத்திருந்தனர்.  அலுவலகத்தில் விசாரித்த போது நான் இன்னும் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததால் நாற்காலி தேடி என் கால்கள் போயன. பெண்கள் அவர்களுக்கு ஒன்றும் அவர்கள் கை பைக்கும் என இடம் பிடித்து இருந்ததால் ஒரு ஓரமாக ஒரு இளைஞர் பக்கம் 5 நாற்காலி தள்ளி இடம் பிடித்தேன். பெண்கள் பக்கம் இடம் கிடைக்காததில் மகிழ்ச்சியும் தான் அவர்கள் படபடப்பு என்னையும் பற்றி கொள்ள கூடாது என்று கருதலாக இருப்பது உண்டு. ஆனால் ஓரந்தில் குந்தியிருந்த நபர் நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் தன் இருப்பை பற்றி தன் நண்பர்களுடன் அலைபேசியூடாகவும் குறும் செய்தி வழியாகவும்  உரையாடி கொண்டிருந்தார் என்பது பின்பு தான் புலன்பட்டது.

கொஞ்சம் நேரத்தில் அவர் நண்பன் வியர்வை நெடியுடன் வந்து, நெல்லையில் அப்படி பார்க்க ஒன்று மில்லை ஆலயம் அல்லது அறிவியல் மையம் சென்று வரலாம் என்று நெல்லையின் இல்லாமையை பற்றி சாடி கொண்டிருந்தார். அந்த கொடிய நெடியோ, திருநெல்வேலி வெயிலோ அல்லது நேர்முகம் எண்ணிய கலக்கமோ நான் தலைவலியால் சுழன்று கொண்டிருந்தேன் அப்போது! “இதோ பதில் வந்து விட்டது” என்ற குறும் செய்தி ஒலி என் தலைவலியை இன்னும் கூட்டியது. அவர் காதலி இப்போது இணைப்பில் வந்து விட்டார் போலும். கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். அவரும் விலாவரியாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். பல போது கொஞ்சியும் பின்பு மிஞ்சியும் பேசுவது அவர் காதலியிடம் தான் என்று உறுதி செய்தேன். இந்த கலவரத்திற்க்கு அந்த பெண்கள் பக்கமே இருந்திருக்கலாம் என்று எட்டி பார்த்த போது அங்கு காலி இருக்கைகள் ஒன்றும் தென்படவில்லை. கொஞ்சம் நேரத்தில் தோழன் வந்தவுடன் இடத்தை காலி செய்து என் தலை வலி மட்டுபடுத்த உதவினார் அந்த இளைஞன்.




என் துறை சார்ந்த இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். எனக்கு அவரிடம் கதைக்க கனக்க ஆசை தான்! ஆனால் எனக்கு ஒரு நேற்முகம் வைத்து. உள்ள தைரியத்திலும் மண் அள்ளி போட்டு விட கூடாது என்பதால் சிரிப்புடன் என் இருக்கையில் பற்றி கொண்டு இருந்து விட்டேன். நேற்முகத்துக்கான சிறப்பு அழைப்பு மணி ஒலித்து விட்டது. என்னை அழைத்து அலுவலகத்துக்குள் போருக்கு தயாராகும் போர்ப் படை வீரர் போல் உட்கார வைத்திருந்தனர்.  திடீர் என்று ஓடி வந்து அந்த பெண் "மேடம் நீங்கள் ஜோசபின் தானே, உங்களுக்கு வகுப்பு எடுத்தலில் முன் அனுபவம் உண்டா?" என்று பதட்டத்துடன் வினவினார் என் எதிராளி பெண். அது இல்லை என்பது தான் என்னுடைய பதட்டமே. நான் வெளியில் காட்டி கொள்ளாது ஆமாம் சிறிய காலம் என்று மொழிந்து நீங்கள் எந்த கல்லூரியில் பணி புரிகின்றீர்கள் என்றேன். அவர் கூறிய கல்லூரியில் எங்கள் துறையை சேர்ந்த ஒரு தம்பதி இருப்பது எனக்கு தெரியும். இருப்பினும் வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என எண்ணி மிதமான சிரிப்புடன் அமைதியாக நின்று கொண்டேன். அவர் என்னை விட்ட பாடில்லை உங்களை எங்கள் கல்லூரியில் வேலை பார்ப்பவருக்கு தெரியுமாமே உங்களுக்கு அவர்களை தெரியுமா எந்த வருடம் முடித்தீர்கள் என்று புலனாய்வுத் துறை போன்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எத்தனை பேர் வேலைக்கு தேவை என்பது தெரியாது அவருக்கு ஏற்கனவே வேலை உள்ளது, இருந்தும் அவரும் முகம் சிவந்து என்னையும் நீல நிறம் ஆக்குகின்றார். இதே போல் பலர் தங்கள் போட்டி, வெற்றி வெறியால் கொள்ளும் பதட்டம் அவர்களை மட்டும் அடையாது பக்கத்தில் இருப்பவர்களையும் பதட்டத்தில் தள்ளுவது உண்டு!



1998 ல் ஒரு தனியார் ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் 4 பெண்களில் ஒருவராக நானும் வலியை தாங்கி என் முதல் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றேன். அதில் என் வலப்பக்கம் ஒரு பெண் இளம் பெண்; மிகவும் இக்கட்டான சூழலில் அனுமதிக்கப் பட்டிருந்தார் மாப்பிள்ளை உயர்பதவியிலுள்ள கறுப்பு தமிழன் அவருக்கு வெளுத்த பெண் வேண்டும் என்றது வாழ்க்கை லட்சியம் என்பதால்; 18 வயது நிரம்பாத சிவப்பு நிறம் கொண்ட அழகான சிறு மலையாளப் பெண்ணை மணம் முடித்து ஆஸ்பத்திரியில் அனுமத்திருந்தார். அவர் பக்கத்தில் திடகாத்திரமான மலையாள பெண்குட்டி, பக்கத்தில் வேறு யாரோ 2 பெண்கள் இரண்டாவது பிரசவத்திற்க்கு என . எங்கள் 3 பேருக்கும் முதல் பிரசவ அம்மாக்கள் என்பதால் தனி கவனிப்பு இருந்தது எங்களுக்கு. ஒவ்வொரு முறை செவிலியர் பரிசோதனை கழிந்து செல்லும் போது இப்பெண் ஒரு வித பதட்டம் பொறாமையுடன் உங்களுக்கு நோவு வந்து விட்டதா என்று விசாரித்து கொண்டே இருப்பார். நானோ 3 நாட்களுக்கு முன்பே அனுமதிக்கப் பட்டு ஊசி இட நரம்புகள் இல்லாத அளவுக்கு மருத்துவ சேவை வாங்கி கொண்டிருக்கின்றேன். சிறுத்தை படம் நாயகன் போல் 'வலியிலும் சிரிப்பு உதடுகளில் மறையாது இருக்க வேண்டும் ' என்ற எண்ணத்தில் முகம் வாடாது கருத்தாக இருக்கும் என்னிடம் இப்பெண்ணின் கேள்வி பதட்டத்தை கொடுக்க ஆரம்பித்தது. இப்படியாக தங்களை மட்டும் நோக்காது பக்கத்தில் இருப்பவர்களையும் இரத்த கொதிப்புக்கு அழைத்து செல்லும் இரத்ததின் இரத்ததமான இந்த உடன் பிறவா எங்கள் இனத்தை பற்றி என்ன சொல்ல ?

19 Apr 2011

மாத்தூர் தொட்டி பாலம்!-திருவனந்தபுரம் வேளி-சங்குமுகம்




மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள்  போய் கொண்டிருக்கின்றோம்.  இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது,  திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும்.  ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம்,   115 அடி உயரம் கொண்ட   28 தூணுகளின் மேல்  1240 அடி ( 1 கி.மீ) நீளமும் 7 ½ அடி வீதியிலும் இரண்டு மலைகளை இணைக்கும் பாதையாக கட்டப்பட்டுள்ளது.  சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி  தரும் மாத்தூர் தொட்டி பாலம்   விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’  என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும். 

பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது.  மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் 'ஹிட்சுகாக் படத்தின் ஹீரோ’ போல் பெருமிதத்துடன் ஒரு நடை பயணம் செல்லலாம்.  பாலத்தில் இருந்து  கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.  அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .  சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு  நடந்து செல்கின்றனர்.  வெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் நாங்கள் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.  மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!


இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ  தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்க வில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

போகும் வழியாவும்  செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது. நம்மவர்கள், அன்னாச்சிப் பழம் செடி வைத்தால்  நல்ல பாம்பு படம் எடுத்து விடும் என்று படம் காட்டுவது உண்டு. இங்கோ வீட்டுக்கு வீடு சுற்று சுவர்  போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.

இங்கு நெல்லையில் 25 ரூபாய்க்கு வாங்கும் அன்னாச்சி பழம் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு வாங்கும் இளநீர் 10 ரூபாய்க்கும்  குறைந்த விலையில் கிடைக்கின்றது. மேலும் நாகர்கோயில் பழமான ஆயினி பழம், சாமங்கா போன்றவையும் வளமாக கிடைக்கின்றது. பெண்களுக்கு நல்லதொரு தொழில்வாய்பாக அமைகின்றது இப்பாலம்.


பசி மயக்கம் ஆரம்பித்தது.  மார்த்தாண்டத்தில் ஒரு உணவகத்தில் உணவருந்தினோம். எங்கள் மேஜைக்கு எதிர்பக்கம் இருந்த ஒரு பெண் போலிஸை விழுந்து விழுந்து கவனித்த சர்வர் எங்களை கண்டும் காணாதது போல் பாவித்தார். போலிஸ் பெண் மணி பழைய பற்றில் சேர்த்து விடு என்று விடை பெற்று சென்ற பின்பே எங்கள் அருகில் வந்தார்.  பிரியாணி,  புரோட்டா என்று வயிற்றை நிரப்பி அடுத்து சிதரால் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் இருந்து 80 கி.மீ உம் கன்னியாகுமாரியில் இருந்து 45 கி.மீ தள்ளி உள்ளது இக்கோயில்.

மார்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ பயணம் செய்து சிதறால் வந்தடைந்தோம்.  மலை உச்சியில் சிறிய புள்ளி போன்று தெரிந்தது. அழகான காட்சியாக இருந்தது, பார்க்கும் திசை எங்கும் பரவசம் மூட்டும், பூமி பச்சை போர்வை விரித்து கிடக்கும் போல் உள்ளது. மிகவும் சிரமத்துடன் வழி கேட்டு கேட்டு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தோம்.  7 ம் நூற்றாண்டுவரை முனிவர்கள் இக் கல்குகைகளை தங்கள் வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 13 ம் நூற்றாண்டில் இது பகவதி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.  7வது நூற்றாண்டிலுள்ள கல்வெட்டுகள் காணும் நோக்கில் இருந்த எம்மை, மலை அடிவாரத்தில் இருந்து அழகான படிகள் மேலை கூட்டி செல்ல காத்திருக்கின்றது.  ½ கி.மீ நடந்து போய் கொண்டிருந்தோம். மழை இதோ வந்து கொண்டு இருக்கின்றேன் என்று குரல் எழுப்பி கொண்டு வந்து கொண்டிருந்தது.  மேல் பக்கம் போகவா கார் பக்கம் போகவா என்று கலங்கி நின்ற போது 5-6 இளைஞசர்கள் குப்பியும் பொதியுமாக வெடி கொண்ட பன்றி போல் புதர் உள்ளில் இருந்து தாவி வெளியில் ஓடி  வந்தனர்.  கையில் இருப்பது மலைத் தேன் அல்ல,  தமிழக அரசுவின் மயக்க ரசம் என்று மட்டும் புரிந்தது.  அவர்களை படம் பிடிக்க காமராவை தயார்செய்யும் முன் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது.  நாங்களும் அவர்கள் பின்னால் ஓடி வந்து காரில் ஏறி கொண்டோம்.





 இனி எங்கள் பயணம் திருவனந்தபுரம்  வேளி-சங்குமுகம் கடற்கரை நோக்கி போய் கொண்டிருந்தது.  திருவனந்தபுரம்  கேரளா தலைநகரம் என்று  தலைக்கனம் ஏறாது எளிமையான பட்டிணம்.  வழி நெடுக பூத்து குலுங்கும் மரங்கள், விஷு வருவதால் கொன்னை பூக்களும் பாதைக்கு அழகு சேர்த்தது.  தேர்தல் காலம் என்பதால் கேரளா தலைவர்களும் வழி சுவர்களில் அக்மார்க்கு சிரிப்புடன் நம்மை வரவேற்றனர். கோயிலுகளில் சிறப்பு ஆராதனை, ஆலயங்களில் ஜெபக்கூட்டம் என மக்கள் பக்தியில் திளைத்து கொண்டு இருந்தனர்.   வழி நெடுக தலைவர்களும் தொண்டர்களும் கொடி பிடித்து சிந்தா பாத் இட்டு சென்று கொண்டிருந்தனர்.  திருவனந்தபுரம் விமானத் தாவளம் பக்கம் வந்து விட்டோம்; இனி 3 கி.மீ தான்.  மணர்காடு என்ற ஏரியாவில்  வந்த போது கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல சேரிகளின் நாடும் தான் என்று புரிய வைத்தது. தமிழகத்தில் காணப்படுவது போல் சுத்தமற்ற தெருவுகள் வசதியற்ற வரிசை வீடுகள், களையற்ற மக்கள் என கேரளாவின் எதிர்பாராத  இன்னொரு முகவும்  தெளிய   துவங்கியது.   


அழகான குடியிருப்புகள், விருந்தினர் குடியிருப்புகள்  தெரிய தொடங்கியது. வேளி என்ற கடற்கரையில் 19 கி.மீ ரோட்டின் இருகரையிலும் சங்குமுகம்  வியாபித்துள்ளது.  ஒரு நபருக்கு ஒரு நாள் முழுக்க  5 ரூபாய் மட்டுமே கட்டணம்.   கடற்கரையில் அழகான ஒரு பூங்கா, கேரளா கலை ரசனையுடனான அழகிய  சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் பாலம் என மொத்ததில் கேரளா அழகுணற்ச்சியுடன் அமைத்திருந்தனர்.  


ஏதேன் தோட்டத்தில் குடிபுகுந்தது போல் இருந்தது. அதற்கு ஏற்றது போல் மனித இணைக்குருவிகள் மரத்தடியில் கொஞ்சி கொண்டும் சிலர் கவலை மறந்து நிம்மதியாக மரத்தடியில் தூங்கி கொண்டும் சிலரோ அதீதமான சிந்தனையில் மரத்தடியில் குந்தியிருந்தனர். குழந்தைகளுக்குக்கும் பெரியாவர்களுக்கும் என 50 ரூபாய்க்கு குதிரை சவாரியும் உண்டு. என் குழந்தைகள்கும் 50 ரூபாய் கொடுத்து இந்நாட்டு மன்னர்கள் குதிரை சவாரி செய்து வரட்டும் என்று அனுப்பினால் குதிரையை நடக்க வைத்து என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி இட்டனர்.  60 ரூபாயிலிருந்து 1000வரை படகு சவாரியும் உண்டு.  இளம் பெற்றோர்கள் கால்-பந்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.  உடையற்ற பெண் சிலை பக்கம் என் கண் சென்றது சிறு ஆண்குழந்தைகள்  சிலையின் பக்கமாக தொட்டு விளையாடி கொண்டிருந்தது நெருடலாகத் தான் இருந்தது.  என் கண்கள் அவ்வகையான ஆண் சிலை உண்டா என்று தேடியது அப்படி ஒன்றும் காணவில்லை. ஆண்களால் மட்டுமே பெண்களை இவ்விதமாக ரசனையுடன் வடிவமைக்க இயலுமோ அல்லது ஆண் சிலைகள் ரசிக்க ஆட்கள் இல்லையா என்றும் என் மனம் கேட்டு கொண்டது.  



 மிதக்கும் பாலம் வழி கடற்கரை சென்றடைந்தோம்.  வரிசையாக இருந்த சிறு சிறு கடைகளின் முதளாளிகள் பெரும் பாலும் நைற்றியணிந்த பெண்களாகவே இருந்தனர். நைற்றி தேசிய உடையாக வெகுதூரமில்லை என்றுமட்டும் தெரிந்தது.


இணையத்தில் தங்க கலர் கொண்ட மணல் சுத்ததிற்க்கு பெயர்பெற்ற கடற்கரை என்று இணையத்தில்  எழுதி இருப்பதை நம்பலாகாது.  கடல் அலை கொஞ்சம் வக்கிரமாகவும் சகதி மண் கலரில் தான் இருந்தது. திடீர் என அலை கரைகடந்து வந்து பயமுறுத்தியது. காவலாளிகள் கம்புடன் மக்களை கட்டுக்குள் வைத்துள்ளனர்.  ஐஸ் கிரீம் விற்பவர்களே விற்கவும் குப்பையை பொறுக்கவும் செய்கின்றனர். பல பொழுதும் இவ்வகையான இடங்களை அசுத்தப்படுத்துவதற்கு அங்குள்ள உணவகமே  மிக பெறும்  பங்கு அளிக்கிறது என்பது மறுக்க இயலவில்லை. குப்பையிட என ஒரு குப்பை தொட்டிவைக்காது சுத்தம் என்பதில் ஐயம் கொள்ளவே வைக்கின்றது.  இக் கடலை கண்ட போது தமிழகத்திலுள்ள மணப்பாடு கடலின் அழகே மனதில் வந்தது. நம் தமிழக அரசு இவ்விதம் ஒரு திட்டத்துடன் செயலாற்றினால் அழகான சுற்றலாத் தலம் உருவாக்கலாம். சங்குமுகத்தை பின்பற்றி தமிழகத்தில் உருவாக்கிய சங்குத் துறைமுகம் கூட ஒரு சங்குடன் கவனிப்பாரற்று தான்  உள்ளது.







அங்கு வரும் பயணிகள் பெரும் பகுதியானோர் அப்பகுதி மக்களாகவே தெரிந்தனர். வெளிநாட்டு பயணிகள் கண்ணில் படவில்லை. கோவளத்தின் வசதி இங்கு இல்லாததாக கூட இருக்கலாம். மலையாளி அம்மாக்களை கண்டு கொண்டே நிற்கலாம். பல தமிழக அம்மாக்கள் போல் அல்லது அழகான உடை அலங்காரத்துடன் பொலிவான முகத்துடன் குழந்தை குட்டி யுடன் வலம் வருகின்றனர்.



சங்கு முகத்தில் இருந்து திரும்பும் போது ஏதோ ஏமாற்றபட்ட காதலி போல் மனதில் ஒரு கவலை ஊஞ்சலாடி கொண்டே இருந்தது.  பின்பு மறுபடியும் இணையத்தில் உலாவந்த போது தான் தெரிந்தது, பக்கத்திலுள்ள 'ஜலகன்னியகா' என்ற புகழ்பெற்ற சிலையை பார்க்காது வந்துள்ளது.  சங்குத் துறைமுகம் இன்னும் அழகுபடுத்த சுத்தபடுத்த வேண்டி நிற்பதாகவே எனக்கு படுகின்றது. நேரம் மாலை 6  அஸ்தமிக்கும் கதிரவனை கண்டு கொண்டு திரும்பினோம் திருவனந்தபுரம் பட்டிணம் நோக்கி.  அதிகாலை 1 மணிக்கு நெல்லையில் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

  

15 Apr 2011

பத்மநாபா அரண்மனை உங்களை வரவேற்கிறது!!!

கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace  வந்து விடலாம். 

 திருவனந்த மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது.  அங்கும் கட்டண வேட்டை தான்! https://www.youtube.com/watch?v=pofoU12oh2o  40 ரூபாய் அரண்மனை நிலைகொள்ளும் தொகுதிக்குக்கு செலுத்த வேண்டும். பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர். அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றலா பயணிகளால் நிரம்பி வழிந்திருந்தது. கேரளத்து சேச்சிமார் கண்ணத்தில் கை கொடுத்து தமிழக அக்காக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.
ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு,  சாதாரண பெண்கள் மேல் சட்டை அணிய கூடாது என்று  மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.

என் மகனிடம் வுட்(wood) வர்க் அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்றினால் ஒட்டியுள்ளதை சுட்டி காட்டினான். டிக்கட்யை காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம்.

 சேலம் பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு  "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்கோ, போய்கோ என்று பொறுமை இழந்து வழி விட்டார். தமிழர்ன்னா சும்மாவா?

அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். சிலர் மலையாள அன்போடு ’கொஞ்சும் தமிழில்’ விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும் விரட்டி விட்டு கொண்டிருந்தனர். 

அரண்மனை வரவேற்பறை    கருப்பட்டி. சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண் விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்லத்தில் பக்கத்தில் நின்றே ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.
விரும்பும் திசையில் திருப்பி வைக்க கூடிய ஒரு தொங்கும் விளக்கு அதன் அடியில் கல்லால் ஆன பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதையும்  சுட்டிக் காட்டி கதைத்து கொண்டிருந்தனர். நம் தமிழ் ஆசாமி ஒருவர் இவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெளிவு படுத்த விரும்பி விளக்கின் மேல் கை வைத்ததும் அப்பெண் நீங்கள் தொடக்கூடாது இது பழமையானது, ஆசாரமானது என்று  தடுத்தது நெருடலாக இருந்தது.கோபம்
 கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக தொடுவதை தடுத்தார்.
அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டபட்டு மார்தாண்ட ராஜா காலத்தில் புதுக்கி பணியப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்ல பணிந்தனர்.

பின்பு ஒரு இடுங்கிய படிகள் வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர். அரசன் தர்பார் மண்டம், குறைகேட்கும் அறை, அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி, கட்டில், மஹா ராணியின் சாப்பாட்டு அறை , அவருடைய கழிவறை என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம். குளிக்கும் அறையில் கல் தொட்டிகள், அரைக்கும் அரைகற்கள், எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்கப் பட்டது.  

 அரசி தன் கணவர்-மன்னரை தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து விட்டு ஆலயத்திற்க்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக  எளிமையான அழகியலுடன் செய்யப் பட்டிருந்தது.

 அம்மராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் ’அம்மாராணி’ என்றால் யாரு என்று தன் நியாமான சந்தேகத்தை எழுப்பியதும் ’ராஜாவின்றே அம்மா’ என்று அவர் பதில் உரைத்தவுடன் ’ஓஹோ ராஜமாதாவா’ என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.
ஒரு மண்டபம் தரை செம்பரத்தி, மரிதாணி இலையால் சாயம் பூசப் பட்டு சிவப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்தது. அதன் ஒரு தூண் வாஸ்துப் படி பலாமரத்தில் செய்யபட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப் பட்டதாகவும் கூறினர். நம்ம சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு ”ஆகா அற்புதம், நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச..... வேறு ஒரு பெண் பயணி ஆமாம், இது இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது என்று பரவசப் பட்டு கொண்டிருந்தார்.

விளக்கி கொண்டிருந்தவர், ”அப்படி எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாட்டு பக்கம் பல வீடுகள் இதை விட, ஆடம்பரம், கலை நயத்துடன் உள்ளது தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.

மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர். கட்டிலை பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்து கொண்டிருந்தார். ”கீழ் மாடியில் விருந்தினர், மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும் நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் அங்கு செல்ல கூடாது” என்று உருக்கமாக கூறினார். 127 அறைகளில் 60 அறைக்கள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்று அறை என்னை நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.


சுற்றுப் புறம் உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது மட்டுமல்லாது பழமையான முல்லைப்பூ, செம்பரத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு அழைத்து செல்கின்றது என்றால் மிகையாகாது.

திருவனந்தபுரம் அரச பரம்பரை ஆங்கிலேய அரசுடன்  இணக்கத்தில் கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி தருகின்றது. வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர். தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில் நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல் அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் போல!
 மகா ராணிகள் மன்னர் தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளனர்.  ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது. 

பதவி, குடும்பப்பிரச்சினையால் அவர்கள்  சண்டையிட்டு மடிந்ததும் ராஜகுடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய  அரண்மனை வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.

அடுத்தது எங்கள் பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில் எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல் விட்டு விடுவேனா!!!!





டச்சு கோட்டை-புலியூர்க்குறிச்சி





குழந்தைகளை  பள்ளி அனுப்பி விட்ட பின்பு மாலை வரும் வரை அம்மாக்கள் தனிமையில் துன்புறுவது  போலவே, விடுமுறை கிடைத்த பின்பும்  குழந்தைகளை சமாளிக்கவும் சிரமம் கொள்ள வேண்டி வருகின்றது. 


 
குழந்தைகள் மகிழ்விக்க பயணமே சிறந்த வழியாக பட்டது.  முன்பு பயணம் பெரியதொரு பிரச்சனையாகவே இருந்திருக்கவில்லை.  எப்போது பயணம் என்று ஆசை வருகின்றதோ எங்கள் இருச் சக்கிர வாகனத்திற்க்கு பெட்ரோல் நிரைப்புவது வாகனத்தை பிடித்த திசைக்கு திருப்புவதுமாக இருந்துள்ளது எங்கள் பயணம்.  ஆனால் இன்று குழந்தைகள்  வளர்ந்து விட்ட  நிலையில் வாடகை கார் பிடித்து பயணம் தொடரும் சூழலுக்கு தள்ளப் பட்டோம்.



நாங்கள் அனைவரும்காலை ஏழு மணிக்கு காரில் இடம் பிடித்து விட்டோம் .   என்னவர் ஓட்டுனர் அருகில்,  நான் பின்னால் இருக்கையில் ஜன்னல் ஓரமாக இடம் பிடிக்கலாம் என்றால் இரு வாரிசுகளும்  போட்டி போட்டு கொண்டு சன்னல் பக்கம் இடம் பிடித்து விட்டதால் எனக்கு  நடு பக்கம் இடம் கொடுத்தனர்.  அவர்களுக்குள் சண்டை வரும் போது இரு பக்கமிருந்தும் இடிப்பது, தூக்கம் வரும் வேளையில் மடியில் படுத்து தூங்குவதுமாக எங்கள் ராஜ்ஜியம்;  குஜ்ஜலாலா என்ற பெருமிததுடன் வந்து கொண்டிருந்தனர்.   பேருந்தில் பயணிக்கும் போல் சுவாரசியம் நிரம்பியதாக எனக்கு  தோன்ற வில்லை.  இருசக்கிர வாகனத்தில் கடந்து போகின்றவர்கள் கொஞ்சம் முறைத்து பார்த்து கொண்டு கடந்து சென்றது போல் தோன்றியது.  அதே போன்று பேருந்து பயணிகள்  பள்ளத்தில் பார்ப்பது போன்று கார் பக்கம் தன் பார்வையை  விட்டு  சென்று கொண்டிருந்தனர்.



ஓட்டுனரும் என்னவரும் பேசி அறிமுகமாகி கொண்டிருந்தனர்.  அப்போது  ஓட்டுனருக்கு இன்சுரன்ஸ் முகவரிடமிருந்து அலை பேசியில் அழைப்புவந்தது .   அவரும் சாவகாசமாக  கதைத்து கொண்டிருந்தார்.  நானோ, நமக்கு இன்சுரன்ஸ் கிடைக்க வைத்து விடுவாரோ என்று பயத்துடன் எப்போது அலைபெசியை துண்டிப்பார் என்று நோக்கி கொண்டிருந்தேன். வழியில் இரண்டு வாகனங்கள் விபத்தி சிக்கி கிடந்தது.  அதில் ஒன்று முட்டை லாரி என்பதால் துற் நாற்றம் ½ கி.மீஅளவுக்கு எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.  பின்பு ஓட்டுனர் ஒரு விபத்தை பற்றி கதைக்க என்னவர் அவர் கண்ட இன்னொரு  விபத்தை பற்றி கதைக்க என எரிச்சல் கொள்ள வைத்து கொண்டே வந்தனர்.  வழியில் ஒரு வேளான்கன்னி மாதாவின் ஆலயத்தில் ஜெபித்து விட்டு பின்பு பயணம் ஆரம்பித்தோம்.


கொஞ்சம் நேரத்தில்  தலைவலியும் ஆரம்பம் ஆகி விட்டது.  ஒரு பெண்  நொங்கு வியாபாரி தன் காலை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்.   தண்ணீர் குடமுடன்  போய் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகாரரை அழைத்து அண்ணா கூட்டம் கூடும்போது நொங்கை கொஞ்சம் கவனித்து தர வேண்டும்.  அவரு தம்பிக்கு பூவைக்க சென்றுள்ளார் என்று நாகர்கோயில் தமிழில் வேண்டிகொண்டார்.  பின்பு தன் கையில் இருக்கும் துண்டை எடுத்து நொங்கின் மேல் படிந்த தூசியை தட்டுவதும் மறு கையில் அலைபேசியில் கடை நிலவரத்தை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதுமாக பரபரப்பாக  செயல்பட்டு கொண்டிருந்தார்.  நொங்கு ஜூசின்  பணத்தை கொடுத்த போது பய பக்தியாக கண்ணில் ஒத்தி கல்லா பெட்டியில் இட்டு விட்டு  தன் வேலையில் மூழ்குவது தெரிந்தது.   




அதன் பக்கத்தில் ஒரு இந்து ஆலயம் இருந்தது.  காலை நேரம் என்பதால் வேண்டுதலை ஆண்வரிடம் போட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர் மக்கள்.  எதிர்பக்கம் கல்லில் ஒரு சாமியார் காவி உடையுடன் பூமியை நோக்கி சிந்தையில் ஆழ்ந்திருப்பதும் தெரிந்தது!! நொங்கு குடித்த உற்சாகத்தில் ஓட்டுனரும் தன் பேச்சை அரசியல் பக்கம் திருப்பி வேகமாக கார்யை பிலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டை பக்கம் திருப்பினார்.




கொஞ்சம் நேரத்தில் புலியூர்குறிச்சி வந்து சேர்ந்தோம்.http://en.wikipedia.org/wiki/Udayagiri_Fort 1741-44 ல் மார்த்தாண்ட மன்னன் காலத்தில் டச்சு தளபதி டிலை நோயித் த்லைமையில்  கட்டிய கோட்டைக்கு அதன் சுற்றுமுள்ள அடர்ந்த காடுகள் மேலும் அழகு சேர்த்தது.  அதன் மேல் பக்கம் இருக்கும் குகைப் பாதை வழியாக சென்றால் பத்மநாப அரண்மனையை சென்று விடலாம்   என்று எழுதப் பட்டிருந்தது.  காடுகளை விரும்புவர்களுக்கு தகுந்த இடம். வெயில் வரும் முன் சென்று விட்டால் கிளிகளின் ஓசை கேட்டு கொண்டே  வெகு நேரம் நடக்கலாம்.  நாங்கள் முதல் பயணிகள் என்பதால்  மயான அமைதியான சூழலின் கொஞ்சம் பயம் இருந்தால் கூட காட்டின் ராஜாக்கள் போன்று   அடர்ந்த காடுகள்  ஊடாக டச்சு படைவீரர்களின் கல்லறை நோக்கி நடந்து சென்றோம்.  பழம் பெரும் தமிழில் எழுதியிருந்த கல்வெட்டுகள் கல்லறையில் காணப்பட்டது. ஆங்கிலேயர்  காலத்தில் கட்டிய கோட்டை மிடுக்காக காட்சி அளித்து     கொண்டிருந்தது.  அழகாக சுத்தமாக   பராமரிக்கின்றனர். தற்போது வெயில் என்பதால் மான் போன்ற மிருகங்களை காண இயலவில்லை 
குழந்தைகளுக்கு விளையாட என்று மரத்தில் ஆன வீடு, கயற்றால்   மரத்தில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல், கயிறு பாலம் என பொழுது போக்கு அம்சவும் இருந்தது. 5ரூபாய் செலுத்தி விளையாட பயண்படுத்தலாம். மக்கள் நடந்து தளரும் போது ஓய்வு எடுக்க என சிறு மண்டபங்கள்  உள்ளது. காதலர்கள் தங்கள் காதல் சுவராக பயன்படுத்தி கிறுக்கி வைத்துள்ளர்.


கோட்டைக்குள் செல்ல அனுமதிக் கட்டணம் 5 ரூபாய். கோட்டை வாசலில் வாகனம் நிறுத்த காருக்கு 30 ரூபாய் இரு சக்கிர வாகனத்திற்க்கு 10 ரூபாய் என கட்டண வேட்டை நடைபெறுகின்றது.  பெண்களே அடியாள் போன்று பின் தொடர்ந்து வந்து பணம் கேட்டு  மிரட்டல் விடுக்கின்றனர். வாகனங்களை நிறுத்த என ஒரு ஓலைக் கூரை கூட இல்லை. ஆகாயமே கூரை என குப்பைக்கு மேல் நிறுத்தும் வாகனத்திற்க்கு ஏன் கட்டணம் என்று தான் புரியாது இருந்தது. 
அடுத்து  பத்மநாப அரண்மனையை நோக்கி கார் பாய்ந்தது. என்னவரின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி நடித்த படத்திலுள்ள பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது …பாட்டு ஒலித்து கொண்டிருந்தது.  தந்தன தந்தா என்று என்னவர் தாளம்  இட்ட போது தான் அவரும் பாட்டுடன் தான் பயணிக்கின்றார் என்று நினைத்து கொண்டு சன்னல் வெளியே நோக்கிய போது வழி எங்கும்  பூத்து குலுங்கும் மரங்கள் , சரம் சரமாக காய்த்து கிடக்கும் மாமரம், வேண்டும் என்றால் வேரிலும் காய்ப்பேன் என்று  தொங்கும் பலா மரங்கள் என நாகர்கோயில் செடி கொடிகளின் ராணியாக காட்சியளித்தது.
சரி நாம் இனி பத்மநாப அரண்மனை வளாகத்தில் வைத்து சந்திப்போம். வரட்டுமா!!