header-photo

நவீன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

பெண்கள் கல்வியறிவு பெற்று விட்டால் நாட்டில் எல்லா துன்பங்களும் துயர்களும் நீங்கியது போல் பிரசாரம் செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள்  அரசியல் அதிகாரத்தில் வந்து விட்டால் நம் இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்றும்  கதையளக்கின்றனர். ஆனால்  அரசியலில் வந்த பெண்களால் அரசியல் என்னவானது?  ஆண் தலைவர்கள் வாய் கட்டி, வங்கி கணக்கை மட்டும் உயர்த்த ஆரம்பித்து விட்டனர். அடிமட்ட பஞ்சாயத்து தலைவிகள் கூட அடி தாதாக்களாக மாறினர்!  நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவி கூட  பெண் கையில் சென்ற போது விதிவிலக்காகவில்லை இன்னும் கேலிக்குரியது .


பெண்களுக்கு என்ற சில குணங்கள் உண்டு. அது அவர்கள் மன உளவியலும் உடல் அமைப்பும்  சார்ந்து வருவதே. அவ்வகையில் பெண்களால் விசாலமாக சிந்திக்க இயலாது. கருணை, பரிவு கொண்டவர்கள் தான் என்றாலும்  தன் குடும்பம் கடந்து தான் அடுத்த தளத்தில் வருவார்கள். அதே போல் பழகுவதில் ஆண்களை போன்று பெரும்தன்மையாக இருப்பதில்லை. வைராக்கியம், வன்மம் கொண்டு ஒரு தொடர் கலவர சூழலில் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனர். தன்னை சீண்டியவர்களை காத்திருந்து அழிக்க துடிக்கும் மனம் அவர்களுடையது. ஆனால் ஆண்களால் மன்னிக்க, மறக்க இயலும் இது ஆண்கள் சிறப்பு அல்லஅவர்கள் இயல்பு, அவர்கள் மூளை அமைப்பே அப்படி தான் அமைந்துள்ளது. இப்படி எல்லாம் எழுதினால் சில பெண்கள் நினைப்பார்கள் பெண்களுக்கு எதிராக இன்னொரு பெண் எழுதுகின்றார் என்று. ஆனால் அதுவே கசக்கும் உண்மை.

ஆண் ஒரு கோடியில்  என்றால் பெண் மறு கோடியில் நிலை கொள்கின்றனர். பாஸ்ட்டிவ்-நெகட்டீவ் மின் கம்பிகள் இணைந்து  மின்சாரம் இயங்குவது போல்  இரு வெவ்வேறு துருவங்கள் சரியான வகையில் இணைந்து செயல்படுவாதல்  மனித குலம் செழிக்கின்றது.  

அதிகார மட்டத்தில் மட்டுமல்ல கல்வியறிவு பெற்ற  பெண்கள் மத்தியிலும் பெண்கள் படித்தால் எல்லாம் சுபமாகி விட்டது என்றால் அது பொய்க்கு ஒரு முகமூடி இட்டது போன்றதே. இன்று பல பொறியியல் கல்லூரிகளில் ஆண்களுக்கு நிகராக படித்து வேலைக்கு போகவுள்ளோம் என்று போட்டி போட்டு படிக்கும் பெண்களில் எத்தனை பேர் வேலைக்கு செல்கின்றனர் என்று கணக்கெடுத்தால் தெரியும், அரசு கொடுக்கும் பல ஆயிரம் ரூபாய் மானியம் விரயமாக்கப்படுகின்றது இவ்வழியாக. நடுத்தர வயது அம்மாக்களின் நிலை இன்னும் பரிதாபமாக செல்கின்றது.  குழந்தை எழும் முன் வேலைக்கு போய் அடைந்த பின்பு வீடு வந்து சேருகின்றனர்.  குழந்தைகள் பெற வேண்டிய உளைவியலான நெருக்கம், பாசம், அன்பு மறுக்கப்பட்டு முரடர்களாக வளர்கின்றனர். பல குழந்தைகள் குடியிருப்புகளில் பூட்டியிடப்பட்ட அறைகளில் தனிமையில் வளர்கின்றனர், விளையாடுகின்றனர், வாழ்கிகின்றனர்.அம்மாக்களும் வேலையிடங்களில் மன அழுத்ததுடன் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு போவதால் நாடு- வீடு செழிக்கும் என்று மேல் போக்காக கூக்கிரலிடும் சமூகம் அடுத்த தலைமுறையின் வளமையான எதிர்காலம் பற்றி உண்மையாக சிந்திக்க தவறி விடுகின்றனர். பழைய பல வீடுகளில் பாட்டிகளாவது பேரக்குழந்தைகளுடன் சுகமாக இருந்தனர். ஆனால் இன்று பென்ஷன் வாங்கும் பல பாட்டிகள் தங்கள் தனி அறைகளில் தொலைகாட்சி பெட்டியுடன் முடங்கி விட்டனர். இவர்களால் தங்கள் நிலையை விட்டுக்கொடுக்கவும் இயலவில்லை ஒத்து போகவும் இயலாது கொடிய துன்பத்தில் வாழ்கின்றனர்.  பாசத்தை கொடுக்க நேரமில்லாது வேலை வேலை என்று ஓடி  குடும்பத்தை பணத்தால் உயர்த்தியவர்கள் இன்று மாளிகைகளில் மனித வாசமற்று தனிமையில் அல்லாடுகின்றனர்.

என் உறவினர் வீட்டுக்கு சென்ற போது எதிர்வீட்டில் ஒரு வயதான பெண்மணி மாடியில் இருந்து கொண்டு சன்னல் வழியாக வெளியே நோக்கி கொண்டு நின்று கொண்டிருந்தார்.  அவ்வீட்டு குழந்தைகள் பள்ளி விட்டு ஆட்டோவில் வந்தன, பையிலிருந்து சாவியை எடுத்து நுழைவு வாயிலை திறந்து தங்கள் வீட்டிற்க்குள் செல்கின்றனர்.  அப்பாட்டியும் பேரக்குழந்தைகளை நோக்கவில்லை அக்குழந்தைகளும் பாட்டியை தேடவில்லை.  


 இன்னொரு வீட்டில் வேலை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான வயதான பெண்மணிக்கு எக்காரணம் கொண்டும் கல்லூரி பேராசிரியையான தன் மருமகளுடன் ஒத்து போக இயலவில்லை. தன் பெட்டியும் படுக்கையும் எடுத்து கொண்டு கட்டனம் செலுத்தி வசதி வாய்ப்பாக தங்க கூடிய அனாதை ஆஸ்ரம் சென்று விட்டார். வீட்டு விசேஷங்களுக்கு மட்டுமே  பங்கெடுத்து சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில்  மருமகள் ஒரு விபத்தில் இறந்து விட சிறு பிள்ளைகள்   தங்கள் வீட்டில் அனாதர்களாக வளர்கின்றனர்.

ஆண்களுக்கு  பெண்கள் படித்து வேலைக்கு போவதால் நல்லது  என்றால் அவர்கள் நிலை பெரும் கவலைக்குறியதாக மாறிவிட்டது. காலை, நேரமே எழுந்து சமையல் செய்து வேலைக்கு கொண்டு விடுவதிலிருந்து தன் அலுவல் முடிந்து பேருந்து நிலையத்தில் காத்து  நின்று, மனைவியும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்வது வரை போராட்டம் ஓயவில்லை.   நிம்மதியாக மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் கிடைக்கின்றதா என்றால் இல்லை என்ற நிலையே.


இதற்க்கு மத்தியிலும் சந்தேகச் சண்டை, நானா நீயா என்ற சண்டை, பணத்தை வங்கியில் போடுவது, எடுப்பது, எடுத்து செலவழிப்பது என எல்லாம் சண்டையில் முடிகின்றது.  பிள்ளைகளும் தேவைக்கதிகமான பொருட்கள் வாங்கி பயண்படுத்தி  நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.


இளம் பெண்கள் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றால் படிப்பு படிப்பு என்று பட்டிணி-பசியோடு கல்லூரி படிப்பை முடிக்கும் பெண்கள்; பின்பு வேலையிலும் போதிய விடுமுறை கிடைக்காது மன-உடல் அளவில் அழுத்தத்தில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். பல அலுவலங்களில் அவர்களுக்கான சுகாதாரமான கழிவறை வசதிகள் கூட இல்லை. சமீபத்தில்   இளம் பெண்கள் ஐடிநிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலே  தன் தகப்பன், தாயை விட பல மடங்கு டாலராக ஊதியம் வாங்கினர். வீட்டில் வந்தால் பெற்றோர்கள் பூச்சி புழுபோல் தெரிந்தனர். கல்யாணம் முடித்த போதோ கணவர்கள் நெளியும் புழுவாக தெரிந்து வாழ்கையை தொலைத்தவர்கள் பலர். அப்பாவை அப்பா என்று அழைத்து வளர்ந்த பல மகள்கள் போ, வா நீ என்று அழைத்தும் அவ மரியாதை செலுத்தினர். 

திருமணம் பின்பு நிம்மதியாக இருந்தனரா என்றால் வேலை நிரந்தரம், உயர்வு விடுமுறை என எல்லாம் நோக்கி  வாழ்க்கையை ரசித்து வாழாது ஒரு வித அலுப்பிலே நாட்களை கடத்தி சென்றனர். ஒரு திரைப்படம் கண்டு வரக்கூட நேரம் இல்லாது அல்லாடினர். பல பெண்கள் குழந்தை பேறு கோளாறுகள், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் அற்று பிறந்தது, என பல சவால்களை எதிர் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  


இதுவெல்லாம் படித்த பெண்கள் கொண்ட துன்பம் என்றால் படிக்காது கூலி வேலைக்கு  சென்ற பெண்கள் கொண்ட துயர் வேறு ஒரு விதமாக இருந்தது.

அதை அடுத்த பதிவில் நோக்குவோம்.....................6 comments:

Seeni said...

thodarunagal sako!

unmai sonnaal yaar ketpaanga aankal sonnaal aanaathikkam-
enpaarkal!

பழனி.கந்தசாமி said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Elango Simeon said...

great message..

Rajini Sri said...

கொலையும் செய்வாள் பத்தனி தெரியுமுள்ள ...super..

சேகர் said...

நல்ல பதிவு..சொல்லி இருக்கும் தகவல் அருமை... இன்றைய எனது பதிவு http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

Anonymous said...

hey there josephinetalks.blogspot.com admin found your site via Google but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have found site which offer to dramatically increase traffic to your blog http://bestwebtrafficservice.com they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my site. Hope this helps :) They offer most cost effective services to increase website traffic Take care. Mike

Post Comment

Post a Comment