header-photo

முகத்திரை கிழிந்த ஷாருக்கான்!

அமெரிக்கா விமான நிலையததில் அமெரிக்க காவல் அதிகாரிகள்   2 மணி நேரம் காக்க வைத்து பரிசோதனை செய்தனர் என்று அமெரிக்காவிற்க்கு எதிராக இந்திய பத்திரிகை உலகம் மட்டுமல்ல பல அரசியல் வாதிகளும் குரல் கொடுத்தனர்.  ஏழைகளுக்கு உணவு உத்திரவாதம் அளிக்க மறுத்த சரத் பவார் கூட ஷாருக்கானுக்காக குரல் கொடுத்தார்.
 
இந்தியாவில் சாதாரண  மக்கள் ரேஷன் கடை வாசலிலும் அரசு அலுவலங்கள் முன்னும் பெண்கள் குடி தண்ணீருக்கு என  குழா அடியில்  நாள் கணக்காக  காத்து கிடக்கும் அவலம் நாம் கண்கூடா காண்கின்றோம். இவர்கள் மேல் சாதாரண மக்கள் என்ற காரணத்தால் கரிசனை கொள்ளாத இந்திய சமூகம் அமெரிக்காவின் பாரபட்சமற்ற காவல் முறையை குறை கூறினர்.   அமெரிக்க வெளியுறவு தூதரை அழைத்து தங்கள் வருத்ததை தெரிவித்தது. இந்தியாவின் ஒட்டு மொத்த முகமே ஷாருக்கான் போன்று காட்டி கொண்டனர்.

ஆனால் ஷாருக்கான் பற்றிய சமீபத்திய செய்திகள்  இவரின் பொய் முகத் திரையை    தெளிவுப்படுத்தி கொண்டே இருக்கின்றது.  விருந்து வேளையில் நண்பரை அடித்தது மட்டுமல்ல, விளையாட்டு மைதானத்தில் புகைபிடித்து நீதிமற்றம் ஏறினவர் இவர். தற்போது குடித்து விட்டு ஆடுகளத்தில் புகுந்து ரகளையில் ஏற்படுத்தியது மட்டுமல்லாது  காவலர்களையும் தரக்குறைவாக  திட்டி ரகளையில் ஏற்பட்டுள்ளார். இவரை தண்டித்திருப்பதையும் குறை கூறியுள்ளனர் அதிகார ஜீவிகள். இதில் மமதா பானர்ஜி "ஜனநாயக தன்மையற்ற தண்டனை" என்று கூறியிருப்பது நகைப்பை தான் வரவழைக்கின்றது. தன்னை கேலி சித்திரம் வரைந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக தன் ஆதரவாளர்களை கொண்டு  வரைந்த பல்கலைகழக பேராசிரியரை விரட்டி விரட்டியடித்தவர் இந்த மமதா பானார்ஜி. மக்களின் கருத்து சுதந்திரத்தை மறந்து பல அறிக்கைகள் வெளியிட்டவர்.

ஷாருக்கான் ஒரு நடிகர், மக்கள் ஆதரவு பெற்ற நடிகர், கொல்கத்தாவின் அதிகார பூர்வமான மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து கொண்டு கேவலம் தெரு பொறுக்கி போல் நடந்து கொண்டது சரியா? குடித்து விட்டு பொதுவிடத்தில் வந்ததே தவறு மேலும்  அரசு அதிகாரிகளை கேவலமாக திட்டியுள்ளார். இவர்களை போன்ற கெட்ட உதாரணங்களான நடிகர்களுக்கு  கடினமான தண்டனை வழங்குவதே சரியாக இருக்கும்.  பணவும் புகழும் இருந்தால் எதையும் செல்லாம் என்ற அகங்காரமே இதன் விளைநிலம்.

சட்டம் என்பது எல்லோர்ருக்கும் பொதுவாக இல்லாது ஆளாளுக்கு மாறுவதும், நியாயங்கள் நியாயமற்றவர்கள் உரைக்கும் போதும் சட்டம் வெறும் பறக்கும் பட்டமாக மாறுகின்றது என்றால அதுவே உண்மை.

3 comments:

Srikandarajah கங்கைமகன் said...

வணக்கம் அமரிக்கா ஒரு யனநாயக நாடு. சனாதிபதி குற்றம் செய்தால் சாதாரண மனிதருக்கான சட்டம்தான் அவருக்கும். 1989ம் ஆண்டு நகர சுத்திகரிப்பு தொழிலதளர்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். அதனால் குப்பை ஏற்றும் வண்டியை நியூயோர்க் முதல்வர் ஓட்டிச் சென்று குப்பைகளை ஏற்றினார். அப்போது அவரிடம் அந்த வண்டியை ஓட்டுவதற்கான ஓட்டுனர் பத்திரம் இல்லை. அதனால் அவருக்கு 1000 டொலர் அபராதமும் 3 மணித்தியால சிறையும் விதிக்கப்பட்டது. பொலிசார் கைது செய்து பொலிசின் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். ஷாருக்கான்! என்றால் கொக்கா அமரிக்காவிற்கு. நன்றி.

பழனி.கந்தசாமி said...

நல்ல கண்டனம். உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுகள்.

Subathiran Thambi said...

அமெரிக்க இமிகிரேசன் அதிகாரிகளை தங்கள் நாட்டு இமிகிரேசன் அதிகாரிகள் என ஷாருக்கான் நினைத்தது முதல் தவறு . அதிகார வார்த்தைகளை இவர் பிரயோகித்தார் . அவர்கள் கேட்ட கேள்விக்கு இவர் சொன்ன பதிலுக்கும் தொடர்பே இல்லை . இங்கு சட்டம் பொது . பல ஜனாதிபதிகளை கோர்டுக்கு கொண்டு சென்றது என்றால் இவர்கள் யார் .???????. இங்கு பல பணக்காரர்களும் பிரபலங்களும் இன்றும் சிறையில் . இந்தியாவில் அவர்கது சகாக்கள் செல்வார்கள்
சல்மான்ஹான் நடைபாதையில் இருந்தவர்களை கார் மிதித்து கொன்றார் . இன்று அவர் வெளியில் .இங்கு நடந்த்திருந்தால் ?????

Post Comment

Post a Comment