14 Nov 2011

குழந்தைகள் தினம்!


எல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர்.   குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முன்னுரிமையையும் உரிமைகளை  நினைவுப் படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் முதல் பிரதமர் ‘ஜவஹர்லால்’ அவர்களின் பிறந்த நாளாம் நவம்- 14 இன்று குழந்தைகள் பேச்சு போட்டி, படம் வரையல் என பள்ளிகளில் கொண்டாடியுள்ளனர்.  குழந்தைகள்  வீட்டின் - நாட்டின் உயிர் நாடியாக, எதிர்காலமாக உள்ளனர் என்பதை நாம் அறிந்ததே.  வீடுகளில் குழந்தைகள் தான் முடி சூட மன்னர்களாக வலம் வருகின்றனர்.  பல பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்கவும் அவர்கள் மனம் கண்டு நடக்கவும் குழந்தைகளுக்காக வாழவும் முன் வருகின்றர். குழந்தைகள் கருவில் உருவாகுவதில் இருந்து அவர்கள் பிறப்பு, 'பிறந்த தினம்' என குழந்தைகள் சார்ந்தே பல கொண்டாட்டங்கள் வீடுகளில் அனுசரிகின்றனர்.

உலக ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கான குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்க  பல சட்டங்கள் வகுத்துள்ளனர்.   வாழுவதற்க்கான உரிமை, மற்றவர்கள் துன்புறுத்தலில் இருந்து மீண்ட வாழ்க்கை, பேச்சுரிமை, எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்ககும் உரிமை,எல்லா நாட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும்.  ஆனால் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் செய்திகள்  கணக்கில் கொள்ளும் போது குழந்தைகள் உரிமைகள் போற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.                                                                                                                                          

கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமையாக இருக்கும் போது பல குழந்தைகளின் குடும்ப சூழல், வறுமை, பெற்றோர்கள் பொறுப்பற்ற நிலை, ஏழ்மை, அறியாமையால் குழந்தைகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுப்படுகின்றது. தமிழகத்தை எடுத்து கொண்டால் பள்ளி செல்லும் 35% குழந்தைகளில், 15 % மட்டுமே உயர்பள்ளிப்படிப்புக்கு செல்கின்றனர். அவர்களிலும் 7% பேர் மட்டுமே பல்கலைகழக படிப்பை பெற முடிகின்றது.  பள்ளி செல்லும் குழந்தைகளும் விரும்பும் பாடம் படிக்க அனுமதிக்காதும்,  தன் ஆற்றலுக்கு மிஞ்சி பாடம் கற்க நிர்பந்திக்கப்பட்டும், துன்புறுத்தப்படுகின்றனர்.  மேலும் சில குழந்தைகள் 6 வயதிற்க்கு முன்பே பெற்றோர்களால் பள்ளிக்கு அனுப்பபட்டு கல்வியை கட்டாயமாக திணிக்கப்படுவது மட்டுமல்லாது டுயூஷன் என்ற பெயரிலும், வீட்டு பாடம், தேர்வு என்றும் உள-மனம் சோர்வாக காரணமாகின்றது.  மேலும் பல குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் கொடிய வார்த்தை செயல்களால் வருந்தப்பட வைத்து தற்கொலை செய்து தன்னை மாய்த்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவின் ஜனத்தொகையின் 40 %(400 மிலியன்)  குழந்தைகளே.   உலக குழந்தைகள் எண்ணிக்கையில் 19% குழந்தைகள் இந்திய குழந்தைகளாகவே உள்ளனர். ஆனால் 50 சதவீதத்திற்க்கும் குறைவான குழந்தைகளை பள்ளி செல்லும் சூழலில் உள்ளனர்.  50% மேலுள்ள குழந்தைகள் தேவையான அளவு போஷாக்கு உள்ள உணவு பற்றாக்குறை உள்ளவர்களாகவே உள்ளனர். பிறக்கும் 12 மிலியன் குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே தன் ‘முதல் பிறந்த நாள்’ காண உயிருடன் உள்ளது.  5-9 இடையிலுள்ள 25% பெண் குழந்தைகள் உறவினர்கள் தெரிந்த, தெரியாத நபர்களால் மோசமான நிகழ்வுக்கு ஆளாக்கப் படுகின்றனர். 

குழந்தை பணியாளர்கள் என்று எடுத்து கொண்டால் இந்தியா குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.  1976ம் ஆண்டு முற்றிலும் ஒழித்திருந்தாலும் பெற்றோர்களின் உந்துதலால் அல்லது குடும்ப சூழலால் 17 மிலியன் குழந்தைகள் தொழிலாளரகளாக உள்ளனர்.  







 குழந்தைகள் சார்ந்த பாலியல் தொழில்; ஆசியா நாடுகளில் அதிகம் என்றிருந்தாலும் உலகளாவியலாக இதே நிலை தான்!.  ஒவ்வொரு நாளும்  2 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே துயரான உண்மை.    5-15  வயதிற்க்கு உள்பட்ட 2 மிலியன் குழந்தைகள் மற்றும் 15-18 வயதில் 3.3 குழந்தைகள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.  இதற்க்கு என்றே மாபியாக்களும் செயல் ஆற்றி வருகின்றது. 1.2 மிலியன் இந்திய க்குழந்தைகள் பாலியல் தொழிலாளர்கலாக உள்ளனர்.  இதில் 80 % குழந்தைகள் இந்தியாவிலுள்ள 5 மெட்ரோ நகரங்களில் வசிக்கின்றனர்.   அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் உள்ளனர்.  குழந்தைகளை மையம் கொண்டே ஏஜென்று வழியாக குழந்தை பாலியல் சுற்றலாவும் கொடிகட்டி பறக்கின்றது.   வெறும் 20 டாலர் பணத்திற்க்கு குழந்தைகள் இந்த கொடிய நிலையில் வசிப்பதை ஒரு பத்திரிக்கையாளர் பதிவு செய்துள்ளார். http://www.youtube.com/watch?v=h7En-A1k1Ac  குழந்தைகளை விலைக்கு கொடுக்க பெற்றவர்களும் தயங்குவது இல்லை. மேலும் குழந்தை திருட்டு, கடத்தல் வழியாகவும் இத்தொழிலை வளமையாக்கி வைத்துள்ளனர்.   பல போது வீட்டு வேலைக்கு எனவும் தத்து எடுப்பது வழியாகவும் , அனாத ஆசிரமம் வழியாகவும் குழந்தை கடத்தல் நடைபெறுகின்றது.  கம்போடியா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுள்ள 98% பெண்குழந்தைகள் தங்கள் குடும்பங்களின் ஒரே வருமான மார்கமாக உள்ளனர்.

குழந்தைகள் அவலம் பெற்றோர் பொறுப்பின்மை,ஊழல் அரசு போன்றவற்றால் மட்டுமல்ல; போர் போன்ற சூழலாலும் இன்னும் மோசமாக மாறுகின்றது.  போரில் தாய் தந்தை கொல்லப்பட்டு அனாதை ஆகுவது மட்டுமல்லாது, போரிலும் குழந்தைகள்  கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.   சமாதானப்படை என்று நாட்டில் குவியும் படை வீரர்களாலும் குழந்தை பாலியல் தொழில் வளர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதற்க்கு ஒரு உதாரணமே அமெரிக்காப் படை புகுந்த பிலிப்பைன்ஸ்(1970),  வியற்னாம், கம்போடியா, மற்றும் போஸ்நியாவியா. சமீபத்தில் இலங்கையில் நடந்த நாலாம் ஈழப் போரிலும் பல அப்பாவி குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டது அறிந்ததே.

குழந்தைகள் மாண்பை கெடுக்காத விதம் ஊடகம் குரல் கொடுக்க வேண்டும்.  தன் குழந்தை போல் அனைத்து குழந்தையும் காண்பது வழியே இத்துயரே விலக்கி குழந்தைகளை நிம்மதியாக வாழ வைக்க இயலும்.

திருநெல்வேலியில் தெருவோரங்களில் 5 வருடமாக  வளராத கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண்ணும்,  குழந்தைகளை கோயில் ஓரம் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோரும், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மகளை தொழு நோயாக்கு விற்ற தாயும்,  தத்து கொடுக்கப்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு செல்லும் அழகான பெண்குழந்தையையும் காணும் போது சட்டம் எப்போது தன் கடமையை செய்து குழந்தைகள் உரிமையை காப்பாற்ற உதவி செய்யும் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகின்றது நமக்கு!

7 comments:

  1. தன் குழந்தை போல் அனைத்து குழந்தையும் காண்பது வழியே இத்துயரே விலக்கி குழந்தைகளை நிம்மதியாக வாழ வைக்க இயலும்.//

    உண்மை நீங்கள் சொல்வது.

    குழந்தைகள் தினத்தில் நல்ல பதிவு.

    ReplyDelete
  2. Subi Narendran · Good Shepherd Convent Kotehena
    மனசைத் தொட்டு வேதனைப் படுத்துகிறது இந்தப் படைப்பு. உலகில் எத்தனை குழந்தைகள் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகிறது என்று உங்கள் நல்ல தமிழில் புரிய வைத்திருக்கிறீர்கள். தங்களைத் தாங்களே பாது காத்துக்கொள்ள முடியாத குழந்தைகளுக்கு கொடுமை செய்யக் கூடியவர்கள் மனிதர்களே இல்லை. சிறுவர் தினத்துக்கு நல்ல ஒரு அர்ப்பணிப்பு. உங்கள் சேவை தொடரட்டும். All the best wishes to you my sis Jos.

    ReplyDelete
  3. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் · Subscribe · Works at Al rafid group
    மனசைக் கனக்க வைத்த ஒரு பதிவு..தவிர்க்கமுடியாத கட்டுரை நன்றி ஜோசபின் ...

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    வேதனையாக இருக்கிறது. என்ன தான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் மக்களது மனப்பூர்வ முழு ஒத்துழைப்பு அவசியம்.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம் பாபா. மிகவும் அருமையான விடையத்தைப் புள்ளிவிபரங்களுடன் தந்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது. ஒரு கவிதை படித்தேன் "சிவகாசி வெடியில் சிறியவர்களின் விரல்களே வெடிக்கின்றன" என்று. ஐரோப்பாக் கண்டத்தைப் பொறுத்தவரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறாக குழந்தைகளை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்து பராமரித்தலுடன் கல்வி வசதியையும் அளிக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்களுக்கு இவை நன்கு தெரியும். ஏனென்றால் அவர்களது குழந்தைகளும் ஐரோப்பிய சட்டங்களுக்கு அமையவே பாடசாலை செல்கிறது. நாட்டுக்காகப் பாடுபடுபவர்கள் நமது நாடுகளைப் பொறுத்துவரை இல்லை என்றே குறிப்பிடலாம். ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி என்பதுபோல் நமது நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் நடந்துகொள்வது எதிர்காலச் சந்ததியினரின் தலைவிதி என்றே கருதவேண்டி இருக்கிறது. நன்றி.(கங்கைமகன்)

    ReplyDelete