header-photo

ரதிநிர்வேதம்- 1978-2011இந்த வருடம் ஜூன் 2011 ல் டி.கெ ராஜிவ் குமார் இயக்கத்தில் கேரள திரை உலகில் ஆஹோஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம்.  மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் என்றதால் பார்க்கலாம் என்று  ஆவல் கொண்டேன்.  மேலும் இதே பெயரில் இதே கதையில்இதே திரைக்கதையில் 30 வருடம் முன்பு 1978 ல் ஜெயபாரதி நடிப்பில் வெளி வந்த  படத்தின் மறுபதிப்பே இப்படம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.  

                                                                                                     படத்தின் கதை இப்படியாக சொல்லப்பட்டுள்ளது. கதைத் தளம் எஸ்டேட் ஏரியாவில் குடியிருக்கும்  இரு வீட்டு குடும்ப நபர்கள் மிகவும் பாசமாக  உறவினர் போல் பழகி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் இரணடு அக்கா தங்கைகள்  தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அக்காளின் கணவர் வெளிநாட்டிலும், தங்கை கணவர் ராணுவத்திலும் பணி புரிகின்றார்.  அக்காவுக்கு ஒரே மகன்.  இப்போது தான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் நாட்களை எதிர் நோக்கி இருக்கின்றான். தங்கைக்கு  2 குழந்தைகள்.  பக்கத்து வீட்டில் 26 வயதுள்ள  ஜெயபாரதி (ரதி) தகப்பன் இழந்த சூழலில் தாய் மாமா -அம்மா  பாதுகாப்பில் இருக்கின்றார். அக்கா அக்கா என்று பாசமாக பழகி வரும்  பக்கத்து வீட்டு பையனுக்கு  திடீர் என்று அக்கா மேல் காமம் வந்து விடுகின்றது.  தன்னை 2 வயது முதல் தூக்கி வளர்த்த அக்கா இப்போது உடை அணிந்திருந்தால் கூட நிர்வாணமாகவே தெரிகின்றார். சரியான தருணம் பார்த்து தன் காதலை  கொச்சையான தன் செயலால் அக்காவுக்கு தெரியப்படுத்துகின்றான். அக்காவும் பையன் தப்பாக வளர்ந்து விட்டான் என்று  சுதாரித்து ஒதுங்கி இருந்து கொள்கின்றாள். ஆனால் பையன் தன் கண்ணீரால் அக்கா நீ இல்லாவிடில் சாக போகிறேன் என்று அக்காவின் மனதில் மறுபடி இடம் பிடிக்கின்றார். அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கின்றார் அவருடைய விதவையான அம்மா!  பையனுக்கு கல்லூரிக்கு போகும் நாளும் வந்து விட்ட்து.  அக்காவை சந்தித்து 'நான் அடுத்த விடுமுறைக்கு வரும் முன்னே நீ உன் கணவர் வீட்டுக்கு போய் விடுவாய்'; அதனால் இன்று இரவு ஒரு குறிப்பிட்ட இடம் வந்து சேர  அக்காவிடம் வேண்டுகின்றான். அக்காவும் இடம் வந்து சேர மழையும் இடியும் சேர்ந்து வர முதலில் அக்கா மறுத்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து விடுகின்றனர்அக்கா பையனிடம் விடை பெற்று வீடு திரும்ப போகும் போது பாம்பு காலில் தீண்டி விடுகின்றது. அக்காவை மருத்துவ மனைக்கு கொண்டு போகின்றனர். அடுத்த நாள் காலை பையன்  கல்லூரிக்கு பேருந்தில் ஏற அக்காவை சுடுகாட்டுக்கு எடுத்து செல்கின்றனர். இதுவே காலம் சென்ற  பத்மராஜன் திரைக்கதையில், அமரர் அரவிந்தன் இயக்கத்தில் ரதிநிர்வேதம்என்ற பெயரில் 1978 ல் வெளிவந்த படம்.  

ஜெயபிரதாவுக்கு 26 வயது என்கின்றனர்  கதைப்படி. ஆனால் 36 வயதுக்கிற்க்கு மேல் அவர் முகம், உடல் காட்டி கொடுக்கின்றது. அக்கா என்பதை விட காட்சிகளால் சித்திஅம்மா போன்ற உருவத்திலே தெரிவதால் இருவரும் வரும் காட்சிகள் காண அருஅருப்பாக உள்ளது. பையனுக்கு வந்த காதலை அக்கா ஏற்று கொள்ளாத நிலையில் ஏன் இரவில் சின்ன பையனை நம்பி போனார் என்று கேள்வியாகவே உள்ளது.

                                                                           அடுத்தது கதையில் மையமே விடலை பருவ பையனினின் காதல் பற்றியதே அவனுக்கு அக்கா, கணவர் வீடு போகும் முன் அனுபவித்து விட்டு தான் கல்லூரி செல்லுவேன் என்று அடம் பிடிப்பதின் மனநிலை தான் விளங்க வில்லை.  விடலைப்பருவ காதல் இந்த அளவு வன்மம்  நிறைந்ததா? அது தன்னலம் அற்ற காமம் குறைவான பாச உணர்வு கொண்ட தெய்வீக காதலாக தானே இருக்கும் என பலருடைய அனுபவ கதைகள் கேட்க வைக்கின்றது.

                                                                    அக்காவும் சில அக்காக்களை போல் அணைப்பது போல் கட்டி பிடிக்கவோ, மறைவாக கிள்ளி வைக்கும் ரகமோ அல்ல.  ரொம்ப நல்ல அக்காபையான்னு தான் அழைக்கின்றார், பையனை ஒரு தாய் அன்புடன் தான் நேசிக்கின்றார். ஒரு போது கூட அக்காவுக்கு பையன், அந்த பார்வையில் தெரியவும் இல்லை.  இருந்தும் அக்காவை காணும் போது எல்லாம், அவர் உடை இல்லாது தெரிவதும்   அக்கா மனதை பார்க்காது உடலை மட்டும் பார்ப்பதும் அக்கா ஒன்றும் புரியாத வெள்ளைந்தியாக இருப்பது தான் நெருடலாக உள்ளது.  இந்த சூழலில் பையன் அழைத்தானாம் அக்காவும் போய் படுத்தாராம்.  இந்த கருத்து தான் பெண் உளைவியலுக்கு எதிரானதாகப் படுகின்றது.

மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இது எல்லா ஆண்கள் வாழ்விலும் நிகழும் சூழல் என்றும் அதை திரையில் கண்ட போது ஆனந்தம் கொண்டதாக சொல்லியுள்ளனர். ஆனால் பல ஆண்கள் முதல் காதல் அவர்கள் ஆசிரியைகள் பக்கத்து வீட்டு அக்காவாக இருந்த சூழலிலும் உடலே உயிர்என்று அலைந்திருப்பார்களா என்று இந்த விமர்சனத்தை வாசிக்கும் ஆண்கள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.
                                                                                                                                    மேலும் ஆண் பையன் வயதில் இப்படியாக சேட்டை செய்வான் என்றும் பெண் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என உரையாடல்கள் வழியாக ஆண்மகன்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்மையை அவர்கள் மனவலிமையை கொச்சைப்படுத்துவதாகவும் தான் உள்ளது.  அப்படியும் பெண்கள் உண்டு என்று இயக்குனர் காட்ட விரும்பினால் அக்கா பாத்திரபடைப்பில் மாற்றம் கொண்டு வந்திருக்க வேண்டும்.

அடுத்து இந்த  திரைப்படத்தை முடித்திருப்பது ஒரு பாம்பு சென்றிமென்ட் வைத்தே. அந்த பாம்பு  அப்பெண்ணை மட்டும் ஏன் கடித்தது பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல்லை.  சமூக நீதியின் படி தப்பு செய்த பெண் இனி பூமியில் உயிருடன் இருக்க கூடாது என்றும் ஆண் அதை ஒரு தூசி போல் தட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்வதும் பெண் மேலுள்ள காலாகாலம் தொட்டுள்ள எண்ணமே நிலை நாட்டுகின்றனர்.  

திரைக்கதை, கதைத்தளம், கதாபாத்திரம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் கதை ஓட்டையாகவே இருந்ததுகேரளா கிராமப்புறத்தில் இருக்கும் இரு வீடுகளை கதைத்தளமாக  கொண்டு இதே கதையை அப்படியே அதேபடியாக  நடிகர்களை மட்டும் மாற்றி 30 வருடம் கடந்து விட்ட நிலையில் ராஜிவ் மேனோன் இயக்கத்தில் அதே பெயரில் படமாக்கிள்ளனர்.  ஜெயபாரதிக்கு பதில் ஸ்ருதி மேனோன் என்ற நடிகை நடித்துள்ளார். ஜெயபாரதியை விட யதார்த்தமாக நடித்திருந்தார் இருப்பினும் படத்தில் சொல்லியிருக்கும் வயதை விட முதுமை காட்டியது. மேலும்  நடிப்பு திறமையுள்ள நடிகைகளின் உடலை வன்மையாக காட்டி கதையில் வரும் எல்லா ஓட்டைகளையும் மறைக்கலாம் என்று எண்ணுவது நல்ல யுக்தி அல்லபடத்தின் காலமாக 1978 என்றே காட்டப்படுள்ளது

காட்சி ஊடகம் வழியாக பெண் உடலையும், ஆண்-பெண் உடல் உறவையும் இதே போல் காட்சியாக எடுத்து பாலியல் பற்றியும் பெண் மனது பற்றியும் சமூக நிலை பற்றியும் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாது எடுத்த இந்த படத்தை  மீடியா ஏற்று கொண்டு விளம்பரப் படுத்தியிருந்தாலும்; மக்கள் ஒரு தரமான படமாக ஏற்று கொள்ளவில்லை என்பது பாராட்டுதல் குறியது. திரைப்பட ரசனையில் மக்கள் நல்ல நிலையை எட்டி விட்டனர் என்றே காட்டுகின்றது இப்படத்தின் வெற்றி நிலைவரம்.  பாலியல் பற்றி எவ்வளவோ அறிவு வளர்ந்து விட்ட நிலையில், இன்னும் ஆண் பெண் மனநிலைகள் பற்றி சரியான அறிவுகள்  பெற வேண்டிய தருணத்தில் இப்படியான படத்தை எடுத்து இயக்குனர்கள் தங்கள் பெயர், நேரம், பொருள், ஆவியை விரயமாக்கவே செய்கின்றனர் என்று மட்டுமல்ல மனிதனை மிருங்களுக்கு சமமாக காட்டுகின்றனர்.  

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என்று மாற்றுவது போல் மீடியாவின் துணை கொண்டு வெறும் சாரம் அற்ற ஒரு படத்தை  அதி மகத்தான படம் என்ற வளையத்திற்க்குள் கொண்டு வந்திருப்பது உண்மைக்கு மாறானதே.

கதை,  படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும் இது ஒரு மட்டமான படமே என்று இப்படத்தை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒரு சிறந்த படம் தேடி கொண்டு வருகின்றேன் என்று உறுதி அளித்து விடை பெறுகின்றேன்,  நன்றி வணக்கம்

10 comments:

Anonymous said...

எழுதாமலே இருந்திருக்கலாமோ...?

J.P Josephine Baba said...

சகோதரா சில போது இவ்வகையான படங்கள் காணும் போது தான் மற்று சில படங்களின் சிறப்பு தாக்கம் தெரிகின்றது. அவ்வகையில் இப்படம் கண்டதும் நல்லதே.

Anonymous said...

வணக்கம் பாபா. படத்தை விளங்கவைத்த விதம் அருமை. இதில் ஆணாதிக்கம் என்று சொல்வதைவிட சமுகத்தில் நடைபெறும் ஒரு உண்மைச் சம்பவததை வெளிக் கொண்டுவந்திருப்பதையெ நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். அமரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் தாயுடன் மகனும்; தகப்பனுடன் மகளும் சேருவதை இக்கால இலக்கியங்களில் காணலாம். இவை நடைமுறைச் சாத்தியம் அற்றதாக இருந்தாலும் புறநடை என்று முலாம் பூசி மளழுப்பிவிடுகின்றனர். என் கடந்தகால வாழ்க்கையில் எனது வயதிற்குக் கூடிய முன்வீட்டுஅக்காமார்; மச்சாள் மார்கள் என்னை உடலுறவிற்கு அழைக்கவில்லை. ஆனால் இனம்தெரியாத ஒரு காம இச்சை வட்டத்திற்குள் என்னை இழுத்துச் சென்றனர். நான் விரும்பியும் விரும்பாமலும் நடப்பதுபோல் பாசாங்குகாட்டி காமத்தை அவர்கள்மூலமாகவே கற்றுக்கொண்டேன். அந்தவயதில் அது எனக்குத் தப்பாகப்படவில்லை என்பதைவிட தேவைப்பட்டது ஒன்று இலகுவாகக் கிடைப்பதுபோல் பெருமை கொண்டென். காலங்கள்மாற காட்சிகளும் மாறியது. இதைவிட நான் பாடசாலையில் உடலுறவு; ஆண்பெண் சேர்க்கை என்றாலே என்ன என்று தெரியாதவயதில் எனக்கு ஆங்கிலம் படிப்பித்த அழகிய ஆசிரியைமேல் ஒரு காதல் வந்தது. இதை ஒருதலைக்காதல் என்றுகூட சொல்லலாம். அந்த ஆசிரியை இறக்கும்வரை எனக்கு சிறியவயதில் தோன்றிய எண்ணம் அவரைக் காணும்போது எல்லாம் நினைவில் வரும். இவை அனைத்தும் உண்மையாக நடந்தது. நான் ஒரு சினிமாத் தயாரிப்பாளராக இருந்திருந்தால் மேற்கூறப்பட்ட சம்பவங்களைச் சித்தரிப்பதற்கு பல பாத்திரங்களைப் படைத்திருப்பேன். பாபா என்ன சொல்கிறார் என்று பாரர்ப்போம்.

J.P Josephine Baba said...

உங்கள் வாழ்க்கை சம்பவங்களுடன் உண்மையான கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தோழா!

சி.பி.செந்தில்குமார் said...

>>
கதை, படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும் இது ஒரு மட்டமான படமே என்று இப்படத்தை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒரு சிறந்த படம் தேடி கொண்டு வருகின்றேன்

ஹா ஹா செம

சி.பி.செந்தில்குமார் said...

<>>மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இது எல்லா ஆண்கள் வாழ்விலும் நிகழும் சூழல் என்றும் அதை திரையில் கண்ட போது ஆனந்தம் கொண்டதாக சொல்லியுள்ளனர்.

அவரவர் வாழ்க்கையில் 1000 ... 1000 மாற்றங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

குட் ரெவியூ

J.P Josephine Baba said...

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா!

Santhi M Mary · Subscribed · Gce tly · 3,237 subscribers said...

/பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல்லை. சமூக நீதியின் படி தப்பு செய்த பெண் இனி பூமியில் உயிருடன் இருக்க கூடாது என்றும் ஆண் அதை ஒரு தூசி போல் தட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்வதும் பெண் மேலுள்ள காலாகாலம் தொட்டுள்ள எண்ணமே நிலை நாட்டுகின்றனர்./ Rightly said.. iT CLEARLY SHOWS THE VULgar mentality of the male chauvinist director..

Ramji Yaho · Top Commenter · Works at Own said...

இசை மூலமே காதலைச் சொல்கிறார்களே.

ரொம்ப நல்ல அக்கா… பையான்னு தான் அழைக்கின்றார், பையனை ஒரு தாய் அன்புடன் தான் நேசிக்கின்றார். ஒரு போது கூட அக்காவுக்கு பையன் அந்த பார்வையில் தெரியவும் இல்லை. இருந்தும் அக்காவை காணும் போது எல்லாம்,

பின்னணி இசையும் தேர்ந்து எடுக்கும் ராகமும், காதல் சார்ந்த ராகங்கள் தானே. அதில் தான் காதல் கம உணர்வைக் கொண்டு வருகின்றனர் காட்சி இயக்குனர், இசை இயக்குனர்.

Post Comment

Post a Comment