header-photo

சிதம்பர சிந்தனைகள்!

சமீபத்தில் வாசித்து நேரம் சிந்தனையில் ஆழ்த்திய புத்தகம் " சிதம்பர சிந்தனைகள்". மலையாள கதாசிரியர் கவிஞர் பாலசந்திர சுள்ளிக்காடுhttp://www.thehindu.com/news/cities/Kochi/im-the-poet-of-a-lost-and-failed-generation/article4967478.ece தன் வாழ்க்கை அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் இது.   நாட்க்குறிப்பு நடையில் கதை போன்ற அமைப்பில் 21  கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. 

முதல் கதையில் சிதம்பரனார் ஆலயத்தில் தான் சந்தித்த ஓர் வயதான தம்பதிகளை பற்றி கதைக்கின்றார். 
கல்லூரியில் செய்த குறுபுத்தனத்தை கேள்வியுற்று கேள்வி கேட்ட தந்தையிடம் பதில் கூறாது தன் சொந்த வீடு விட்டு வெளியேறுகின்றார் பாலசந்திரன். பின்பு அவர் தன் வீட்டு வாசல்ப்படியை மிதித்தது தன்னுடைய தகப்பனாரின் கடைசி கர்மங்கள்  செய்ய மட்டுமே. 

Image result for balachandran chullikkad blogஅடுத்த ஒரு பயணவேளையில் தன்னுடன் மேல்நிலை பள்ளி பள்ளியில் படித்த மாணவியை சந்திக்கின்றார். ஒரு சில சம்பவங்களால் அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் பாலசந்தருக்கும் சண்டை வருகின்றது. பால சந்தரன் கல்லூரி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுகின்றார். தன் வெறுப்பின் அவமானத்தின் பொறுட்டு  மாணவிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செய்த  அட்டூளியவும் பின்பு வருடங்களுக்கு பின்பு சந்தித்த போது மன்னிப்பு பெற்று கொண்ட நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். அந்தக்காலத்தில் மாணவராக இருந்த இவர் இப்படியுமா? என சிந்திக்கும் போதே வெளியில் பிச்சை எடுத்து வந்த தாயின் கதையை கேட்டதும் தன் தாயை நினைத்து , தன் பெற்றோர்களை பல காலங்களாக சந்திக்காது இருப்பதை நினைத்து பட்சாதபிக்கின்றார். உருகின்றார்.

Image result for balachandran chullikkad blogகாதல் தோல்வியால் பைத்தியக்காரனாக மாறி தெருவில் அலைந்த தன் நண்பனை சந்திக்கின்றார். நண்பனை குளிப்பித்து துணிமணி சாப்பாடு வாங்கி கொடுத்து மறுபடியும் தெருவிலே விட்டு விடுகின்றார். தன் மனநல மருத்துவரான நண்பரிடம் அழைத்து செல்லாது  நண்பனை மறுபடியும் தெருவில் விட்டதை நினைத்து வருந்துகின்றார்.

கல்லூரிப்பருவத்தில் காதல் கொண்டு தன்னுடன் ஓடி வந்த இவர் மனைவி யும் இவரும் வெவ்வேறு விடுதியில் இருந்து படிக்கின்றனர்.  இச்சூழலில் மனைவி கர்ப்பம் ஆகுவதும் தன் இயலாமையை எண்ணி தன் முதல் மகனை கருவை கலத்தைதயும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையில் நிறம் சிவப்பு என்ற நிலையிலுள்ள வாழ்க்கையில் சாப்பிட்டு விட்டு உணகத்தில் பில் கட்டாது வந்த போது, உணவக உரிமையாளர்  பிடித்து வைத்து  அடி கொடுத்து அரைமூட்டை வெங்காயத்தை உரிக்கி வைத்ததையும்; பசிக்கொடுமையால் இரத்ததை விற்று பிழைப்பு நடத்தியதையும் அங்கு தன் தங்கையின் சிகித்தசைக்காக இரத்தம் விற்ற இன்னொரு இளைஞனை பற்றியும் எழுதியுள்ளார்.

 ஒரு இக்கட்டான நிலையில்; ஒரு விபசார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததும்;  தன் மனைவியிடம் இப்பெண்னுக்கு பணம், உணவு கொடுக்க கூறின போது "நான் செய்யாத வேலைக்கு பணம் வாங்க மாட்டேன்" என்று விடை பெற்று சென்ற அப்பெண்ணை பற்றி மட்டுமல்ல தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த வசதியான இரண்டு பெண்கள் விபசாரிகளாக வாழ்ந்ததை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை ஓர் இளம் பெண் ஊறுகாய் விற்க வருகின்றார் இவர் வீட்டிற்கு. ஏதோ ஒரு சபலத்தில் அப்பெண்ணின் இடுப்பை கிள்ளுவதும் அப்பெண் இவருடை கன்னத்தில் அறைந்த நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையின் ஒரு நிலையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கவிஞராக வலம் வருவதும்; பலர் ஆராதனை கண்ணோடு அவரை நோக்குவதும், மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுடன் விருந்து உண்ணுவதும் இன்னொரு சூழலிலோ சாப்பிடக் கூட உணவு இல்லாது பிச்சைக்காரனை போன்று உணவை  இரந்து உண்டதை பற்றியும் விளக்கியுள்ளார். 

ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த எழுத்தாளரால் தன் வீட்டுடன் சமரசப்பட்டு போக இயலவில்லை.  கல்வி கற்கும் காலயளைவில் கேரளா நக்சல் புரச்சியில் ஆற்வம் கொண்ட கவிஞர் தன் பிறந்த வீட்டை நாட்டை பெற்றோர் அவர்கள் கொடுத்த கல்வியையும் தூக்கி எறிந்து பின்பு  ஒரு பிடி சோறுக்கான பசியில் போராட்டவும் இல்லை புரட்சியும்  என விளக்கியுள்ளார்https://en.wikipedia.org/wiki/Balachandran_Chullikkadu

Image result for balachandran chullikkad blogஇப்படியாக ஒரு மனிதனின் நல்ல பக்கங்கள் பெரிமைக்குறிய புகழ் கொண்ட பக்கங்கள் மட்டுமல்லாது அவன் அவஸ்தைக்கு உள்ளான, அவன் வறுமையிலும் பட்டிணியிலும் கிடந்த பிச்சைக்காரனாக அலைந்த நிலைகளிலுள்ள  வாழ்க்கையை பற்றியும் துணிவாக எழுதியுள்ளார். மாணவப்பருவட்த்தில் புரச்சி என்ற பெயரில் தங்கள் கல்வி சூழலை கிடைக்காமல் செய்யும் பல மாணவர்களுக்கு வழி காட்ட உள்ளது இப்புத்தகம். இது போன்று ஒரு முகமூடி அற்ற எழுத்து, ஆன்மாவை தட்டி எழுப்பிய இதயத்தை நொறுக்கிய  எழுத்து தமிழில் வந்திருக்க வாய்ப்பே  இல்லை. வேடங்களற்ற இலக்கியமே வாழ்க்கையை பேசும் என இவர் எழுத்து ஊடாக நிரூபித்துள்ளார். http://www.jeyamohan.in/42665#.VlnX1NIrJdg

இப்புத்தகம் மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயற்கப்பட்ட புத்தகம். வம்சி பவா செல்லத்துரையின் மனைவியும் பேராசிரியருமான       கெ.வி. ஷைலஜாவால் மொழிபெயற்கப்பட்டுள்ளது. மிகவும் சீரிய மொழிப்பெயர்பு. அன்னிய மொழியில் இருந்து மொழிபெயற்கப்பட்டது என்றே சுவடே தெரியாத வண்னம் சிறப்பான தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.http://balachandranchullikkad.blogspot.in/

0 comments:

Post Comment

Post a Comment