header-photo

கொலைகாரியாகும் மனைவிகள்!(2) கொலைகாரியாகும் மனைவிகள்lஆண் உலகம் விழிப்புணர்வு பெறுக என்பது தான் தற்போதைய தேவை.  பெண்களை சரியாக பாதுக்காக்கவும் தங்கள் பராமரிப்பில் பாதுகாப்பான அன்பு பிடியில் வைக்க பழகி கொள்ள வேண்டும். பல கணவர்கள் மனைவிகள் மீறும் விதி மீறல்களை தங்கள் எல்லை  மீறலுகளுக்கு சாதகமாக்க துணியும்  வேளையில் இப்புதை குழியில் சிக்கி தாங்களும் அழிந்து போகின்றனர்.
இன்றைய குடும்ப வாழ்க்கையில் பெரும் சிக்கல் தம்பதிகள் பரிபூர்ணமான குடும்ப வாழ்க்கையில் வாழ்வது இல்லை என்பதே. இருவரும் இருவழியில் வேலைக்கு போய் பணம் ஈட்டி  திரும்பி வந்து முகம் பார்த்து பேசக்கூட நேரம் கிடைக்காது அல்லல் படுகின்றனர் ஒரு ஊழியர் வெகுதூரம் பயணம் செய்து வரவேண்டியதால் அதி காலை வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவி தூக்கம் கெடுக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் விடை கூறுவதில்லை.  இரவும் வீடு போய் சேர  வெகு நேரம் ஆகுவதால் தூக்கத்தில் மூழும் மனைவியை எழுப்பி தொல்லை தரவும் விரும்பாததால் இவர் பேச்சு நேரம் அலுவல பெண்கள் என்ற நிலையில் சுருங்கி விடுகிறது. இவர்கள் தொடர்பாடல் என்பது சாப்பாட்டு மேஜையின் மேல் வைத்திருக்கும் சில குறிப்புகளுடன் முடிந்து விடுகின்றது.

மேலும் தமிழக கலாச்சாரத்தில் பல பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்ற காரணம் காட்டி கணவரிடம் பாசமுடனோ காதலுடனோ ஆன உறவு பேணுவதில்லை. மேலும் நகர வாழ்வியலில் வசதியற்ற குடியிருப்புகளும் இவர்கள் அன்னியோன்ய நெருக்கத்தை கேள்விக்குறியாக மாற்றுகின்றது. பல வேலையிலுள்ள பெண்கள் வீட்டிலும் தங்களை இயல்பான நிலையை களைந்து ஆபீசருகளாக வாழ்கின்றனர். ஆண்களும் வேலைப்பழு நட்பு என பல காரணங்கள் கூறி அன்பான உயிரோட்டமான திருமண வாழ்க்கைக்கு விடை சொல்லி வருகின்றனர்.

பழம் காலங்களில் திருமணம் என்பது பல நாட்கள் கொண்டு விசாரித்து குண நலன் ஆராய்ந்து நடத்துவதை விடுத்து இன்று பல திருமணங்கள் பெறும்  வரதட்சணை என்ற வணிகத்தில் நடைபெறுகின்றது. பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு வேறு தொடர்புகள் இருப்பதாக தெரிந்தாலும் அதை திருமணம் சரி செய்து விடும் என்று எளிதான முடிவில் எட்டி விடுகின்றனர். இன்று பல திருமணங்களில் மணமக்களில் வசதி வாய்ப்பு, ஜாதி, மதம் போன்றவற்றுக்கு கொடுக்கும் இடம் மணமக்களின் குணநலங்களை பற்றி விசாரிப்பதில் செலவிடுவதில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் திருமண வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பொய் பித்தலாட்டம், புகுந்து விடுகின்றது.

ஆண்களோ பெண்களோ திருமணம் முன்பு சரியாக விசாரித்து தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் அந்தஸ்து சுய நலனுக்காக பொருத்தமற்ற, விருப்பமற்ற நபர்களை திருமணம் என்ற பந்தத்தில் இணைப்பதை விட சரியான துணையை கண்டடைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்.

 திருமணம் பின்பு தங்கள் துணையை பிடிக்க வில்லை என்றால் சரியான முறையில், சட்ட உதவியுடன் நட்பு உள்ளத்துடன் பிரிந்து விடுவதே நலம். நம்பிக்கை துரோக மனம் கொண்டு தன்னை நம்பும் கணவரை/மனைவியை கொலை செய்வது மிகவும் கொடிய செயல். இச்செயலில் இறங்கிய பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களையும் சிறைச்சாலை வாழ்க்கையை பற்றியிம் ஊடகம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதனால் மற்று பெண்களுக்கும் புரிதலுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மீடியாக்கள் இச்செய்தியை கள்ள காதல் என்ற ஒற்றை பார்வையில் கொச்சையான செய்தியை மட்டும் கொடுத்து கொண்டு செல்வதால் உலகில் இப்படியான பல பெண்கள் உண்டு; தானும் கொலை செய்வதில் பெரிய பிரச்சினையாக காணாது சிக்கலில் வீழ்கின்றனர்.

ஒரு பெண் எடுக்கும் ஒரு அவசர்ர முடிவால் அவள் மட்டுமல்ல அவள் சார்ந்த குடும்ப நபர்கள் என பல தலைமுறைக்கும் களங்கவும் பாவச்சுமையுமாக வாழ்க்கை தொலைகின்றது.

கணவர்களும்; தங்களை பிடிக்க வில்லை என்று ஒரு மனைவி கருதும் வேளையில் சட்ட உதவியுடன் மிகவும் முன் எச்சரிக்கையுடன் அவர்களை விட்டு விலகுவதே நல்லது. தங்கள் ஆண்மைக்கான இழுக்காக காழ்புணர்ச்சியோடு அணுகும் போது வெறி கொண்ட பெண்கள் தங்கள் கணவனுக்கே யமனாக மாறி விடுகின்றனர். காலத்தின் மாற்றம் என்ற வண்ணம் ஆண் உலகம் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய தேவை உணர வேண்டியுள்ளது.

மேலும் காதல் என்பதை கொள்கையாக  கொள்ளாது நேரம் போக்காக எடுத்து கொண்டு உறவுகளை மிகவும் எளிதாக இடை போட்டு வாழ்கை தடத்தையை சிக்கலாக்கி விடுகின்றனர். தங்கள் வீட்டிலுள்ள பூட்டியையும் பாட்டியையும் மனதில் கொண்டு பெண்ணை அடக்கி  விடலாம் என்று நினைப்பது அவர்கள் உயிருக்கே உலையாகி விடுகின்றது!!!

6 comments:

Avargal Unmaigal said...

உண்மையை அப்படியே எடுத்துரைக்க தைரியம் வேண்டும். பெண்ணாகிய நீங்கள் இந்த பதிவில் சொன்ன பலவிஷயங்கள் மிக சரியே. பாரட்டுக்கள்

Avargal Unmaigal said...

மேலை நாட்டு கலாச்சராம் இந்தியாவில் புகுந்துவிட்ட பின் அவர்களைப் போல பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து வாங்கி செல்வதுதான் சரி அத்ற்கு பதிலாக முட்டாள்தனமாக கொலை முயற்சிகளில் இரங்குவது தவறு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பழைய காலத்தைப் போலன்றி தற்போது பெண்களுடைய மனதை புரிந்து கொள்வது அவசியமாகிறது ஆண்கள் பெண்கள் இருவருமே கவனத்துடன் பிரச்சனைகளை கையாள வேண்டிய காட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

Josephine Baba said...

தங்கள் பின்னூட்டம் பெற்றமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.

Seeni said...

aamaam innum sollungal...

திண்டுக்கல் தனபாலன் said...

மனங்கள் சேர வேண்டும்... பணங்கள் சேர்ந்தால்...? மற்றும் புரிதலில்...

Post Comment

Post a Comment