31 Dec 2019

90 ஸ் தோழமை!

27 வருடங்களுக்கு பின்பு சந்தித்த பள்ளி தோழமைகள்.

 நாங்க முகம் பார்த்து பேசினது நாலாம் வகுப்பு வரை தான். ஏழாம் வகுப்பு வரை நீயா நானா என சண்டையிட்டு, மாறி மாறி ஆசிரியர்களிடம் மூட்டி விட்டு அடிவாங்கி கொடுத்த நாட்கள்.

 அடுத்த 3 வருடம் ஒளித்தும் மறைந்து பார்த்தும், பார்த்தும் பார்க்காதது மாதிரி,  கேலி பேசி ரோட்டின் இருவோரம் நடந்து சென்ற நட்புகள்.  பெண்களுக்கு ஒரு வழி என்றால் ஆண் மாணவர்களுக்கு இன்னொரு வழி . அவன் வகுப்பை கடந்து போனால் கூட, கொஞ்சம் கூட எட்டி பார்க்காமா கெத்தா எட்டு வைத்து நடக்க...
என்னடா பெரிய இவளுகளாட்டும் திமிறா போறா,
அவ பாவம்டா, அவ கூட போறா பாரு....
பெரிய உலக அழகிக....
அது விடு உனக்கு கிடைத்த காதல் கடிதத்தை எடு என ஒன்றாய் இருந்து வாசித்து கொண்டு
அந்த ஓட்டை ஓலப்பள்ளியில் இருந்து எட்டி பார்த்து கொண்டிருந்த மாணவர்கள்.

என்னடா இந்திரா காந்தி எப்படி இருக்கா? போம்மா இப்ப இதை கேட்டுகிட்டு. ஏன் பொண்டாட்டிட அடி வாங்கி தராம விட மாட்டே....

ஏய் அந்த தேயிலப்புர ஷெட்டு தானா....
 அப்புறம். என்ன அப்புறம். அவ வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டா
அப்போது அதையும் தெரிந்து வைத்திருக்க
ஏய் துபாயில் இருந்து வந்த சாபு சொன்னாமா
அப்ப நீ கேட்ட
விடுமா தாயே...
 அப்புறம்... நீ என்னடா படிக்கும் போது கிறிஸ்தவ சாமியாரா போகப்போறேன்னே....
யே ...அது விடு.
 இவ தான் என் மனைவி , இரண்டு ஆண் பிள்ளைகப்பா அடுத்து ஒரு பெண் பிள்ளைக்காக ஏங்கிட்டு இருக்கோம்.
என்னடா அனியாயம்... இனியும் ஏங்கிட்டு இருக்கியா ,
 டே கொல்லாதடா  நாங்கல்லாம் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்.

உன் விரலை காட்டு. எங்க வீட்டுக்கு டுயூஷன் படிக்க வந்த போது தானே தையல் மிஷனில் கைய விட்ட.
ஆமாப்பா இன்னும் அந்த தளும்பு இருக்கு பாரு...

என்ன மோனி ஒல்லி குச்சானா வெள்ளை வேட்டியை  ஒரு பக்க தும்ப மட்டும் பிடித்து கொண்டு ஈ ....ன்னு எங்க வகுப்பையே பார்த்துட்டு நிப்பயே?
நீ போம்மா  அத நினைக்குத மாதிரியா நிலைவரம். பொண்ணு காலேஜுல படிக்கா பையன் + 2 வில். .....
மோனி அந்த ரகசியத்தை தான் சொல்லி தொலையேன்.
அது அந்த உங்க வகுப்புல இருந்தாளே நெற்றில சந்தனம் வச்சு தலை முடியை விரிச்சு போட்டு வருவாளே....
அவ பேரு தான் மறந்திட்டு....

பொய் சொல்லாத அந்த ஷீலப்புள்ளை தானே?

நம்ம வகுப்புல அமர காதலுமா ஒருத்தன் இருந்தானே . சாரிடம் அடி வாங்குனானே..
அவனா....அவந்தான் குடிச்சு குடிச்சே செத்து போயிட்டானே
போன வருடம்.
இஸ்மாயில் தான் என்னன்னா கனவோடு இருந்தான். ரொம்ப கஷ்டபட்டு பட்டம் முடித்து அரசு தேர்வுலையும் தேர்வாகி ....அழகான இரண்டு சின்ன  பிள்ளைகளை விட்டுட்டுல்ல அந்த விபத்துல போயிட்டான்.
உன்னை தான்டா மறக்க முடியாது நீ மொறைக்கா நான் மொறைக்கா அந்த  பள்ளிமாணவர்கள் இலக்ஷன்ல என்ன தோற்கடிக்க என்னமா வேலை பார்த்தே...
அதை விடும்மா
அதை சமரசம் செய்ய தானே ஆரஞ்சு மிட்டாய் கொண்டு உன் கையில தந்தேன்.
இப்பவும் கவிதை எழுதுதையா
காதல்கடிதம் எழுதி கொடுத்து மாட்டினீயே
ஆமாம்மா உங்க கூட்டத்தில இருந்தவா தானே?
அப்புறவும் எழுதி கொடுத்து கொண்டு தான் இருந்தேன்... ஆனால் வேறு பிள்ளைக்கு

என்னம்மா இப்படி குண்டாயிட்டா?
மெலிய வீட்டுல மிஷின் வாங்கி போட்டுருக்காராம் கணவர், துபாய் பயணம் அழைத்து போகிறேன்னு சொல்லியிருக்காராம்.
ஆளுக்கு வேலை அப்புறம் தூக்கமாம்
என்னடி மாயா ஜாலம் 27 வருடத்திற்கு முன்பு பார்த்தது மாதிரியே இருக்கிறீக
என்ன மந்திரம்ப்பா...
உன் பொண்ணு உன்னை விடையும் அழகா பாடுதா
உங்க அப்பா மகிழ்ந்திருப்பாரே
நம்ம டான்ஸ் போட்டிக்கு உங்க அப்பா பாடுவார் பாரு இன்னும் மறக்கல

ஏன் அஜி வரலையாம்
அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்ப்பா
அன்று யாரிடவும் பேசாது மேரிகூடவே நடந்து போவாளே அவளாப்பா இது...நம்பவ முடியல
 அதுல ஒருத்தன் ஒருத்தியிடம் உனக்கு ஒரு உடாய்பு இருந்ததாமே
இது எவன்டா கிளப்பி விட்டது
யே....உண்மையை சொல்லு...
மனசுல கொஞ்சூண்டு அந்த ஓரத்துல
அவனுக்கு போன போடு கேட்டா போச்சு
அவனும் வீடியோ காள்ல வந்தான்
என்னடா இவனுக எல்லாம் உனக்கு காதல் இருந்துன்னு சொல்லுதானுக...
ஐய்யோ அம்மா அப்படி ஒன்னும் இருந்தது இல்லையேன்னு தலைதெறிக்க ஓட
நாங்ல்லாம் கேட்டவன பார்த்து இப்ப நம்புனையா கேனப்பயலேன்னு திட்ட

றீனா..... நம்ம ஆறாம் வகுப்புல நீ சொன்ன கதை ஞாபகம் இருக்காடி....

எந்த கதை?....அந்த கதையா
விடுப்பா அதை போய் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க...
நம்ம அப்படியே பருந்தன் பாற போவோமா. நம்ம தோழி திரேசாவிற்கு ஆச்சரிய விசிட் கொடுப்போம்.
நீயும் நானும் சண்டை பிடிக்கது கட்சிக்கு தானே
இப்போது எந்த அரசியலில் இருக்கே?

உனக்கு தெரியுமே நான் கேஎஸ்யூன்னு பின்பு
காங்கிரசில் இருந்தேன் இப்போது எந்த கட்சியிலும் இல்லை
நீயும் அஜியும் தானே முகநூலில் சண்டை போடுதீக
அவன் தான் கம்னீஸ்டுன்னு பேசுவான்ப்பா
ஆர்மி அனிலிடவும் வாக்கவாதம் தான்
அவன் சரியான சங்கி வெறியன்ப்பா
மைசூரில் இவனும் பிஜெபி
ஜிம்மி நீ எந்த கட்சி ?
நான் ஜெயிக்குத கட்சியில இருப்பேன்மா
நீ எப்பவும் அப்படி தானே
ஆமாப்பா பிழைத்து போக வேண்டாமா
பள்ளியில் படிக்கே ஒரே சட்டையை வைத்து கொண்டு கலர் பொடியில் முக்கி காய வைத்து கலர் கலரா சட்ட போட்டு வந்தவனாக்கும்
இப்போது நான் இருக்கும் வீடு கோடிக்கு பெறும்
ஷூபா உன்னை பார்த்தால் நம்ம அம்மினிக் குட்டியம்மா டீச்சர் மாலிரி இருக்க....
விடுங்கடி
கடந்த வருடம் இதே நாள் காலையில் இருந்து மாலை வரை 90 Batch  இவ்வாறாக பேசியும் சிரித்தும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அன்று, நாங்க பிரிந்த போது இருந்த வயதில் இருந்த பிள்ளைகள் நாங்கள் மகிழ்வதை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்

எங்களை கடைசிவரை சூரல் கம்பின் துணையுடன் பேச ஏன் பார்க்கவே அனுமதிக்காது இருந்த லக்ஷ்மி குட்டியம்மா முதன்மை ஆசிரியர் இருந்திருந்தால் இந்த பச்ச பாசமலர் புள்ளைகளையா புரிந்து கொள்ளாமலே இருந்தோம்ன்னு நிச்சயமாக வருந்தியிருப்பார்கள்.

29 Dec 2019

சரோஜா அத்தை. என் குழந்தைப்பருவத்தில் நான் சிரித்து மகிழ்ந்து தங்கிவிளையாடிய  ஒரே ஒரு இடம் அத்தை வீடு.

அத்தை, நாரயணன் மாமா ராணி, றீனா அக்காக்கள் அருள்  அத்துடன் என் தம்பி தங்கை,சித்தப்பா பிள்ளைகள் மூன்று, பெரியப்பா மகன்கள் 3, சில போது ஊரில் இருந்து  மாமி மகன்கள்,  மாமா வீட்டு சொந்தங்கள் என அத்தை வீடு எப்போதும்  விழாக்கோலம் தான்.

அத்தை கணவர் தேயிலை தோட்ட அதிகாரி என்பதால் காட்டுக்குள் வீடு, வீட்டில் இரு உதவியாளர்கள், 4-5 பசுக்கள், கோழி, வாத்து,  பூனைகள்  டைகர் நாய்,அருள் வளர்க்கும் முயல்,கிளி  என எப்போதும் பெரும் கும்பல்.

உணவு நேரம் என்பது தோட்டத்தில் இருந்து வெட்டிய வாழை இலை, சோறு, கோழிக்கறி, கறிப்பொரியல் அவியல், தைர், சாம்பார் , அப்பளம், ஊறுகாய் பாயசம் என கொண்டாட்டம் தான்.

வீட்டில் பல அறைகள். அதில் ஒரு அறை நாங்கள் எங்கள் உடைகளை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் அங்கு தான் பேய் இருக்கிறது என பேசிக்கொள்வோம். நடு அறை, படுக்கை அறை, முன் விருந்தினர் அறை , தேயிலை வேர் கொண்டு செய்த செருப்பு ஸ்டான்டு, வராந்தாவில் நாய் டைகர் தன் அதிகாரத்தை நினைவு படுத்தி கொண்டு கிடக்கும் இடம் என அந்த வீடு ஒரு  சொர்க்கம் தான்.

மாமாவிற்கு செடிகள் மேல் விருப்பம். அங்கு தான் விதவிதமான ஜீனியா பல வண்ணங்களிலான  டாலியா , கொய்யா மரம்  வீட்டோடு நிற்கும் சாமங்கா மரம் பலா மரம் என வீட்டை சுற்றி செடிகள்.

இத்தனை வேலைக்கு அப்புறம் சாப்பாட்டை முடித்து குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும் காப்பி பலகாரம் சாப்பிட்டு விட்டு மாமா மதியம் எப்போது மஸ்டர்டு ஆபீஸ் போவார் என காத்திருப்போம்.

அவர் நாலு மணிக்கு கிளம்பி போன பின்பு  அத்தை நரி, நாங்கள் கோழிகள் என வேடம் போட்டு ஓடி விளையாட்டு தான்.. அத்தை நரி என்பதால் மாமாவின் கால் சட்டை,  மழை கோட்டு , தொப்பி அணிந்து எங்களை விரட்டி வருவார்.
 6 மணிக்கு மாமா வீடு திரும்பும் முன் முகம் கழுவி பவுடர் போட்டு   பூவெல்லாம் சூட வைத்து சோபா , கதிரைகளில் கதை புத்தகங்களுமாக இருந்திடுவோம்.

அத்தை சொன்ன எத்தனை எத்தனை கதைகள். அவர் குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்வதும், நடித்து காட்டுவதும் இன்று நினைத்தால் எவ்வளவு அழகான குழந்தை பருவத்தை என் குழந்தைகளுக்கு கூட கிடைக்க இயலாது இழந்து விட்டேன் என பெரு மூச்சு கொள்கிறேன்.

இரவு படுக்க போகும் முன் ஜெபம் செய்து விட்டு தூங்க வேண்டும். மாமா ஜெபத்தை ஏறெடுத்து, பாட்டு பாடி அது போய் கொண்டிருக்கும். அவர் கண்ணை மூடி ஜெபிக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் பிள்ளைகள் கண்ணை திறந்து மாறி மாறி நோக்கும் போது எங்களுக்கு முன்னே அத்தையும் கண்ணை திறந்து எப்போது மாமா நெடிய ஜெபத்தை முடிக்க போறாரோ என செய்கை காட்டி கொண்டு இருப்பார்.

அந்த வீட்டில் தான்  எப்போதும் வெற்றிலை செல்லத்துடன் பைபிள் வாசித்து கொண்டிருக்கும் என் அப்பா பாட்டி ரத்னா பாய், என் அத்தையின் மாமியார்: ஒரு வயதான வட்ட வடிவ முகம் கொண்ட பாட்டியையும்  கண்டுள்ளேன். என் அம்மா பாட்டியும் அத்தை வீட்டில் வந்து தங்குவார்.

அத்தை கடைகுட்டி என்பதால்  நாலு அண்ணன்களும் அத்தையை பார்க்க தோட்டத்திலுள்ள பொருட்கள் கொடுக்க வந்து போய் கொண்டு இருப்பார்கள்.
டவுணில் கல்லாப்பெட்டியை விட்டு நகராத என் அப்பாவும் போகும் இடம் அத்தை வீடு தான். 
அத்தை வீட்டிலிருந்து திரும்புதல் என்பது எனக்கு பிடிக்காத விடையம் என்பதால்; ஒரு நாள் பிந்தி என் வீடு  வந்து சேரும் எனக்கு எங்க அம்மா நல்லா வெளக்குமார் பூசையும் வைத்திருப்பார்

ராணி அக்காவிற்கு பூப்பெய்து நிகழ்வில் கல் பட்ட தேனிகளாக அந்த கூடு கொஞ்சம் கலைந்தால் கூட ராணி அக்கா கல்யாணம் வரை அந்த தேனிக்கூட்டம் இருக்கதான் செய்தது.

5 வருடம் முன்பு அத்தையை சந்தித்து வந்த போது
 இப்போதும் அதே குழந்தைத்தனத்துடன்,  அதே குறுகுறுப்புடன் பார்வையுடன்,நோய்களையும் துணைக்கு வைத்து கொண்டு  சிரித்து பேசி அத்தை ஒரு மறக்க இயலா என் தோழி.!

14 Dec 2019

ஆணாதிக்கத்தின் உச்சம் தொட்ட நாவல் “உன்னை போல் ஒருவன்” - ஜெயகாந்தன்



x

ஜெயகாந்தன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பல நாள் ஆசை! அப்படி தான் இந்த நாவலை எங்கள் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தேன்.

இரு நாட்களில் வாசித்து முடித்தாகி விட்டது. துவக்கம் அருமையாக இருந்தது. கதை முடிச்சுக்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்க இரண்டு நாட்களில் படித்து முடித்தாச்சு. இதுவே எழுத்தாளர்களின் வெற்றியும். வாசிப்பவனுக்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து, நகத்தி கொண்டே போவது. வாசித்து முடித்த போது உப்பும் உறப்புமற்று “சப்’என்று இருந்தது தான் ஏமாற்றம். 

 இதில் இன்னும் ஒரு  சிறப்பு இந்த கதை ஜெயகாந்தனால் படமாக்கப்பட்டு 1964 ல் வெளியாகி  இந்திய ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளது. காமராசரே கூறியிருந்தாராம்  இது ’அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்’ என்று. என்ன வகையில்  இந்த கதை சிறப்பு என்று  தான்தெரிய இல்லை!



கதாப்பாத்திர படைப்பை எடுத்து கொண்டாலும் 'சிட்டி பாபு' என்ற 12 வயது சிறுவனுக்கு  கொடுத்த மரியாதையில் துளி கூட 'தங்கம்' என்ற தாய் கதாப்பாத்திரத்திற்கு கொடுக்கவில்லை. அந்த பெண்  யாரும் நெறுங்க இயலா தீயாக இருந்தார், என்னேரவும் உழைத்தார் என்று புகழும் அளவிற்கு அறிவோடு இருந்தார் , என கதாப்பாத்திரத்தை கட்டமைக்கவில்லை.
 தங்கம் நேர்மையை பற்றி கதாசிரியர் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு வளரும் பையனின் பொறுப்பான அம்மாவாக இருக்கும் தங்கம் தன் மகனின் மனதை மாற்றாது  இன்னொரு குழந்தைக்கு அம்மாவாகினதே சிறுப்பிள்ளைத்தனம் . சிட்டியை முகவரி இல்லாத ஒருவனுக்கு பெறுகிறார் அடுத்து அதை விட பாதகமாக ஒரு மகளை இன்னொரு முகவரியற்றவனுக்கு பெற்று கொடுக்கிறார். 
சேர்ந்து வாழ்வதில் தாலிகட்டும் முன்னே குழந்தை உருவாக்குவதில் இருக்கும் சிக்கலை  பெண்கள் இழக்க போகும் சட்டஉரிமை பாதுகாப்பை  பற்றி கூறாமல் இதை ஒழுக்கம், உணர்வு சார்ந்த நிலையில் நகர வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ; ஐந்து மாதம் கள்ள தொடுப்பாக இருக்கும் போது எழாத பல பிரச்சினைகள், ஒரு ஆண் மகனுக்கு மட்டும் மனைவியாக வாழ வீட்டிற்கு அழைத்து வரும் போது எழுகிறது. 




மகன் 12  வயதுற்கு மீறின பக்குவவும் சிந்தனையும் அடவடித்தனவும் வன்மவும். ஆனால் அம்மாவை மட்டும் புரிந்து கொள்ள இயலா மனம். நான் ஏன்  என் வீட்டை  விட்டு போகனும் என பொருளுற்கு சொந்தம் கொண்டாடும் மகன், பெற்று வளர்த்தின அம்மாவை வெறுத்து, மறந்து விடுவான். அம்மா என்ற உயிரின்  உரிமையை மறுத்து விடுவான்..அம்மாவிடம் வஞ்சம் தீர்க்க எடுத்த திட்டத்தில் புதிதாக வந்தவனை விரட்டி விட்டு, விட்டு சாப்பாட்டுக்காக வேலைக்கு போகும் அம்மாவை இகழ்ச்சியோடு பார்த்த மனநிலை, எத்தன கெட்ட வார்த்தைகள் தாய்க்கு எதிராக பிரயோகிக்கும் மனநிலை.கணவனை விட்டு விட்டு மன்னாருடன் ஓடி வந்த பக்கத்து வீட்டு அலமேலு வார்த்தையை கூட நம்பும்  மகன் அம்மாவை நம்பவில்லை மன்னிக்க வில்லை.

சிட்டியினால், கேவலமான வாழ்க்கை வாழும் கன்னியப்பன் கூட திருந்துகிறானாம். ஆனால் சிட்டியை விட கன்னியப்பன் பல இடங்களில் மனித பண்பு உள்ளவனாக மனிதர்களை/பெரியவர்களை மதிப்பவனாக  மிளிர்கிறான்.

வெறும் 16 வயதில் வாழ்க்கையை தொலைத்த  பெண் ஒருவனுக்கு ஊர் உலகம் அறிய மனைவியாக இருக்க நினைத்தது அப்படி பெரிய தவறா?
தங்கத்தின் மாணிக்கத்துடனான உறவைக்கூட உடல் சுகத்திற்கான என்பது போல் எழுதி முடித்துள்ளார் ஜெயகாந்தன்.


காதலனாகவும் மகனாகவும் அண்ணனாகவும் பல உருவத்திலுள்ள ஆணாதிக்கத்தையும் எதிர் கொண்ட தங்கம்  மரித்து போகுவது ஆணாத்திக்கததை எதிர்கொள்ளும் பெண்ணின் முடிவு மரணம் என்று அறுதியிட்டு கூறுவது போல் உள்ளது.

ஒரு பெண்ணின் அவலமான  முடிவிற்கு நேரடியாகவோ மறைமுகமகவோ காரணமான மகனுக்கோ, இடையில் வந்து சேர்ந்த மாணிக்கத்திற்கோ எந்த இடத்திலும் பட்சாதாபமில்லை. தாயை மதிக்காதவன் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு   அண்ணனாக மாறுவதுடன் அந்த கதாப்பாத்திரம் எல்லா புனிதவும் பெறுகிறது. கடைசியாக ஒரு உரையாடலையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை, “ எனக்கு அண்ணன் இல்லாததால் கட்டுபடுத்த ஆள் இல்லாததால் என் வாழ்க்கை சீர் கெட்டது. உன் பாதுகாப்பில் உன் தங்கையை கட்டுப்படுத்து  வளர்த்து என்று. 

பிடிக்காது பிறந்த குழந்தையை  அப்புறப்படுத்தி; தங்கவும் மகனும் மறுபடியும் சேருவது போலவும், பழையது போல தங்கம் வேலை செய்து சந்தோஷமாக வாழ்கிறாள் என காட்டியிருக்கலாம். கதாசிரியருக்கு தங்கத்தை சாகடிப்பது தான் புரட்சி எழுத்தாக நினைக்கிறார்

பழைக காலங்களில் வீடுகளில் 10 -12 ம் குழந்தைகள் இருந்த வீட்டில் பதின்ம வயது குழந்தைகள் வளரும் போதே தாய்மார்கள் புது குழந்தைகளை பெற்று வளர்ப்பது சாதாரணமானதே.. மேலும் சிட்டி பாபு குடும்பம் வசிக்கும் தெரு வரிசை வீடுகளாக சராசரிக்கும் தாழ்நிலையில் வாழ்க்கை தரம் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கும். அங்கு இருக்கும் மனிதர்களே  அன்னம்மா பாட்டி மாதிரி மனது விசாலமானவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருக்க சிட்டி தாயின் மேல் கொள்ளும் உரிமை; பாசத்தை தொலைத்த ஒரு வகையான உடமைப்படுத்தலையே கூறியுள்ளது. தாய் என்றால் மகன் விருப்பத்திற்காக தன்உணர்வுகளை  மறுதலித்து மகனுக்காக வாழும் ஜீவன் என்ற புனைவு எந்த வகையான சமூக முன்னேற்றம் கொண்டு வரும்.

ஜெயகாந்தன் எழுத்துக்கள் சமூகத்தில் பெரும் தாக்கததை ஏற்படுத்தி இருந்ததவை என வாசிக்கையில், தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த கதை சொல்லி 
 எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார் என்பதே கேள்வி?

கன்னியப்பன் என்ற கதாப்பாத்திரம் கூறும் வார்த்தைகள் “ பொம்பளைகளே மோசம்டா... எங்க அம்மாவும் இப்படி தான்.... உங்க அம்மாவும் இப்படி தான். ஆனால் இந்த பசங்க துண்டு பீடி பொறுக்கி தின்னும் காவாலி பசங்க. அடுத்து சிட்டி வீட்டிற்கு போவான் தாய் கதவை திறந்து வெளியே வருவார். அவள் தலையில் சூடியிருக்கும் மல்லிகை பூ மணம் இவனுக்கு நாற்றமெடுப்பதாக தோன்ற்றும், ஒரு குழந்தையை வகிக்கும் அவள் வயிறு அருவருப்பை கொடுக்கும். 

ஜெயகாந்தன் போன்ற முற்போக்கு வாதிகள் இந்த மனநிலைக்கு பதிலான ஒரு மேன்மையான மனநிலையை தங்கள் கருத்துக்களை இளம் சமுதாயம் மேல் பரவ விடவில்லை. இதனால் தான் பெண் உடலை இன்றும் இச்சையோடும் அருவருப்போடும் பொருளாகவும், அணுகுவதை தவிற்து பெண் உடலுக்கு பின் இருக்கும் மனதை இது போன்ற எழுத்தாள்ர்கள் தன் எழுத்து ஊடாக வெளிப்படுத்தவில்லை. 

மாணிக்கத்துடன் சயனித்து விட்டு, தங்கம்  மனநிலைகளை எழுத்தாளர் விவரித்திருப்பார். எல்லாம் ஒரு வகையான தற்கொலைக்கு சமமான் எதிர்மறை எண்ணங்களால் தங்கம் பேசிக்கொண்டிருப்பார், ஆனால் மாணிக்கமோ சுகத்தின் உச்சியில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருப்பான். அந்த சுயநலம் பிடித்த பொறுப்பற்ற மாணிக்கவும் அம்மாவையும் பையனையும் சேர்த்து வைத்து புனிதராக மாற்றியிருப்பார் ஆசிரியர். பக்கத்து வீட்டு அலமேலு கூட குழந்தையை கையில் வாங்குவதுடன் புனிதத்தன்மை அடைந்திருப்பார். 



ஜெயகாந்தனின் உண்மை வாழ்க்கையில்  இரு மனைவிகள், இரு மகள்கள் என  வாழ்ந்து வந்தவருக்கு தங்கத்திற்கு இரண்டாம் கணவர் என்ற விருப்பதை தன் கதையூடாக கரி தேய்த்து பெண் வாழ வேண்டும் என்றால் பெண் ஒழுக்கம் என்றால் முகவரி தெரியாத ஒருவனுக்கு பெற்ற மகனாக இருந்தாலும் மகனுக்கு பணிவிடை செய்து சொச்ச காலத்தை கடந்து போக வேண்டும் என்ற உபதேசத்துடன் கதை முடிகிறது. 

ரஜனிகாந்த் நடிப்பில் தன் திரைப்படங்களில் உரையாடல்கள் வழி எப்படி பெண்களை ஆண்களுக்கு தாழ்ந்த கதாப்பாத்திரங்களாக கட்டமைத்தாரோ அதையே தான் ஜெயகாந்தனும் செய்து வந்துள்ளார். 


10 Dec 2019

எரியும் பனிக்காடு வாசிப்பில் - பாலாவின் பரதேசி



பி. எச் டானியல் எழுத்தில் ஆங்கில மொழியில் 1969 ல் வெளிவந்த புத்தகம் ஆகும்   ’ரெட் டீ . பின்பு  ஈரா முருகவேல் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பொன்னுலகம் பதிப்பகத்தில்  வெளி வந்துள்ளது.


ஆங்கிலேயர்கள் 1902 ல் கொண்டு வந்த  தேயிலை தோட்டச்சட்டத்தை ஆதாரமாக வைத்து 1900-முதல் 1930 வரையுள்ள வால்ப்பாறை தேயிலைதோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக எழுதப்பட்ட நாவலாகும் ’எரியும் பனிக்காடு’.

எழுத்தாளர். 1941 முதல் 1965 வரையிலும் 25 வருடம் தேயிலை தோட்டங்களில் மருத்துவராக வேலை பார்த்துள்ளார். அன்றைய குடியரசு தலைவர் வி வி கிரி முன்னுரை எழுதியுள்ளது இப்புதகத்திற்கு சிறப்பாகும்.

1925 –ஓர்  இரவு; திருநெல்வேலியில் மயிலோடை கிராமத்தை சேர்ந்த் மனைவி வள்ளி , வயதான் தாயாருடன் மிகவும் வறிய நிலையில் வசித்து வரும் கறுப்பன்,எஸ்டேட்டில் மேஸ்திரியாக வேலைபார்க்கும்  இரண்டு மனைவியுள்ள சங்கர பாண்டியனை சந்திப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. அரிசி வாங்கக்கூட இயலாத நிலையில் நின்ற கறுப்பனுக்கு வெள்ளையும் சொல்லையுமாக அங்கு வந்த வெள்ளையப்பனுக்கு இருக்க கதிரை கொடுத்து குடிக்க டீ தண்ணீர் கிளாசில் கொடுக்க  நிலத்தில் இருந்து செரட்டையில் காப்பி குடித்து கொண்டிருந்த வெள்ளையப்பன் மேல் பெரும் மரியாதை பிறக்கிறது.


தானும்  தேயிலை தோட்ட வேலைக்கு போனால் கைமேல் காசு தான் மானம் மரியாதையாக வாழலாம் என்ற ஆசை துளிர்க்கிறது.தேவர், ஆசாரி, கொல்லர், மலையாளிகள், தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லோரும் தொழிலாளிகளாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதாக வெள்ளையனிடம் இருந்து அறிந்து கொள்கிறார். தொழிலாளிகள் பழனி, ஈரோடு, ராமநாதபுரம் சேர்ந்தவர்கள் என அறியும் போது  தானும் வீடு காடு வாங்கி விடலாம் என்ற கனவில்  தானும் வள்ளியுடன் செல்லலாம் என் முடிவு எடுக்கிறார்.

மிகவும் கடினமான பயணம் மேற்கொண்டு எஸ்டேட்டை அடைந்த வள்ளி -கறுப்பன் தம்பதிகளுக்கு முத்து லக்சுமி கணவர் சின்ன ராமன் மரணம் திகிலடைய செய்கிறது. 
நயமாக பேசின மேஸ்திரிகளின் உண்மை முகம் வெளிப்பட  அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். செருப்பு அணிதல் கூடாது. தொப்பி குடைகள் அணியவும் அனுமதி இல்லை. க்ள்ளு குடிக்கலாம் அதிகாரிகள் அருந்தும் பிராந்திக்கு அனுமதி இல்லை

எஸ்டேட்டில் வேலைக்கு என சென்று விட்டால் தப்பியோட இயலாது. தப்பி ஓட நினைத்தாலும் பிடித்து வந்து அடி உதை தான் கிடைக்கும். முன் கூறாக வாங்கின ஊதியம் கடனில் பிடித்து கொள்ள; ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ இன்னும் பல வருடம் காத்திருக்க வேண்டும். காலநிலையும் மோசன்காக உள்ளது.  அட்டை கடி , அடை மழை,  நடுங்கும் பனி விஷ காச்சல் என மக்களை வாட்டி எடுக்கிறது. மேலதிகாரிகளின் பெண் விடையங்களில் உள்ள சபலங்களையும் எதிர் கொள்ள வேண்டும்.

இந்த கதையின் பிராதன கதாப்பாத்திரம் வள்ளி இறந்து விடுவார். எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கும், வலுவற்ற எதையும் எதிர்க்கும் நம்பிக்கையற்ற மனநிலையில் படைத்திருப்பது  வருத்தமாகவே உள்ளது.



எஸ்டேட்டில் அதிகாரிகளாக கோபாலன் குணசேகரன், குமஸ்தா ஜாண்சன், டாக்டர் குருப்பு, தலைமை குமஸ்தா சாமிதாஸ், தலைமை எழுத்தர் மாணிக்கம், மலையாளி ஜோஸ் அவர் மனைவி அம்மணி என கதாப்பாத்திரங்கள் அணிவகுக்கின்றனர்.  இந்திய அதிகாரிகள் மாட்டுக்கறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், சின்ன சின்ன சண்டைகள், புரணி பேசுவது, சில கள்ள தொடர்புகளுடன் காலத்தை தள்ளுகின்றனர்.

மேனேஜர் பதவி வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமானது.


http://thisisguhan.blogspot.com/2013/03/paul-harris-daniel-red-tea.html
இந்த சூழலில்தான் ஒரு இளைஞரான மருத்துவராக ஆபிரகாம் கோட்டயம் திருவல்லாவில் இருந்து எஸ்டேட்டுக்கு வந்து சேருகிறார். போராட்டம், இரக்கம், மனித நலம் உரிமை நலன் கொண்ட டாக்டருக்கு மக்கள் நிலை கண்டு வெகுண்டு எழுகிறார். தொழிலாளிகளுக்கு நல்ல மருத்துவம் தர நல்ல மருத்துவ மனை உருவாக்க அயராது பாடுபடுகிறார்.வெள்ளைகாரர்களிடம் ஊளைக்கும்பிடு போடாது மக்களுக்கான  உரிமைகளை பற்றி சிந்திக்கும் மனித நேயராக கதையில் பிரவேசிக்கிறார்.

பின்பு இந்தியா சுதந்திரம் பெற்றதும் வெள்ளைகாரர்கள் இந்தியா விட்டு போக வேண்டிய சூழலில் பல சட்டசலுகைகள் பெற்று  தொழிலாளிகள் நிம்மதியாக வாழ துவங்குகிறதுடன் கதை முடிகிறது.

ஒரு படித்தவன், சக மனிதனைபற்றி சிந்திப்பவனாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த நாவல் எடுத்துரைக்கிறது. படிப்பு இருப்பதால் மட்டுமே தன் உரிமையை பற்றி சிந்திக்கவும் உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்த்து குரல் எழுப்பவும் இயல்கிறது என படிப்பின் அவசியத்தையும் கதைகருத்தாக  நகத்துகிறார்.

இந்த நாவலை தழுவி இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான  திரைப்படம்  ’பரதேசியில்’ மதமாற்றம் நடப்பதைபற்றி காட்சிப்படுத்தி  எடுத்திருந்தார். இந்த நாவலில் எங்கும் மதம் மாற்றம் பற்றி குறிப்பிடவில்லை. இருந்தும் பாலா எதனால் இந்த கதைக்குள் மதமாற்றம் என்ற விற்பனை யுக்தியை புகுத்தினார் என சிந்திக்க வேண்டியுள்ளது. எஸ்டேட் வாழ்க்கையிலும் மதம் பெரிய தாக்கத்தையோ அல்லது மக்கள் மதம் பின்னால் போகும் அமைப்போ அந்த சமூகத்தில் அந்நாட்களில் இருக்கவில்லை.மக்கள் தங்கள் உடல் உழைப்பை சார்ந்து மட்டுமே வாழ்ந்து வந்தனர்.

வெள்ளைக்காரன் இந்தியர்களை நேரடியாக துன்புறுத்தியதை விட இந்திய தலைமைகள் மேச்திரிகள், குமஸ்தாக்கள், ரைட்டறுகள் துன்புறுத்தி இருப்பதை உணரலாம்.

டாக்டர் ஆபிராகாம் கதாநாயகனாக கதையில் இருந்தவர். இவர் கதாப்பாத்தித்திற்கு பதிலாக குறுப்பு என்ற கம்பவுண்டரை வைத்து கதையை நகத்தியிருப்பார். நாவலிலும், குறுப்பு ஒரு பெண் லம்பாடன், ஏமாற்று பேர்வழியாக குறுக்கு வழியில் பணம் ஈட்டுபவனாகவே இருதது.

அடுத்து கதை ஆசிரியரை பற்றியது. இவருடைய பிறப்பிடம் தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி. இவர் எதற்காக  கோட்டயத்தில் இருந்து வந்த மலையாளியாக டாக்டர் கதாப்பாத்திரமாக கதை சொல்லியிருக்க வேண்டும் என்று நெருடலை உருவாக்குகிறது.  

பல இடங்களில் தோட்டம் தொழிலாளர்கள் , அதிகாரிகள் மனைவிகள், வெள்ளக்காரர்களின் மனைவில்களில் கள்ள தொடர்பை பற்றி சொல்லி கொண்டே இருப்பார். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை பற்றிய ஒரு வித கேவலமான பார்வையை கொடுக்கும் ப்டியாக பல கள்ள் தொடர்பு கதைகள்.  கள்ள தொடர்பு பற்றிய கதாசிரியரின் பார்வை அவருடைய கிறிஸ்தவம் சார்ந்த உளவியிலின் தாக்கம் என்றே கருத தோன்றுகிறது.  தோட்டம்காடுகளில் கள்ள தொடர்பு இல்லை என்றல்ல.  ஆனால் டாக்டர் சொல்லும் அளவிற்கு உடலை விற்றே தோட்ட காடுகளில் ஜீவனம் நடத்த இயலும் என்ற தொனியில் எழுதியிருப்பது கண்டனத்திற்குறியது.  ஒரு வேளை புத்தகத்தை சந்தைப்படுத்தும் யுக்தியாகவும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இது வரலாற்று ரீதியான தவறும் கூட .

ஆசிரியரை பெருமையாக எண்ணி பார்க்kஉம் படி  ஒரு வரலாற்றை பதிந்துள்ளார்.. தேயிலை தோட்டங்களின் அடுத்த சில வருடங்களிaல் இருந்த  பிரச்சினைகளை டி செல்வராஜின் புத்தகம் தேனீரில்  காணலாம். தேனீர் மூணார் எஸ்டேட் சூழலை வைத்து எழுதப்பட்ட நாவல்.  

திருநெல்வேலி வாசகவட்டம் சார்பில் இப்புத்தகம் பற்றிய விரிவுரைக்கு வாய்ப்பு கிட்டியது. புவனா அடக்கம் அனைத்து நிர்வாகிகளுக்கும்  நன்றிகள்


Recently I have gone through your article in ”Behind Woods” regarding Bala’s Paradesi & Dr. Paul Harris Daniel’s Red Tea.

Many people unaware of Dr. Paul Harris Daniel and his Novel Red Tea.

I am sharing here the details of Dr. Paul Harris Daniel, which are in my memory for long time.

·         He was a Chief Medical Officer of Peria Karamalai Group Hospital, a plantation Hospital at Peria Karamalai Estate, Valparai and was living with his family in the Bunglow provided by the Plantation Company near by Hospital.

·         My memory never lost, because I was the first born child in the said Hospital in 1956 ( 1955) and Dr. PH Daniel named me as ’ Mohan Das’, as he was staunch supporter and admirer of Gandhi.

·         In those days, the plantation life was very miserable, and every thing good or worse, was happening around the plantations were known to him.

·         He was also visiting other Plantation Hospitals, like Mudis, Paralai etc., and the doctors working there are well known to him.

·         His visits to different plantations instigated him to write the novel ‘ RED TEA’ which I read when I was in 8th Std. The narrations in the novel are still in my memory.

·         What I read in the novel were really happening in our presence.

·         My father was also working in the said hospital till his retirement and we were frequent visitors to there and know the doctor PH Daniel.

·         The photographs of Dr. PH Daniel were with us for long time and have been lost in the changing locations.

·         He started the co-operative movement of Anaimalai Staff Association at Valparai.

·         As a part of Election Campaign, he organised a programme at Valparai Ground. Mr. T M Soundararajan & LR Easwari were invited by him, in the year(not exactly known)

·         He was a faithful Christian. But never involved in Conversion of plantation workers to Christianity.

·         Always he fought for the betterment of plantation workers, health, hygienic living conditions, sanitation etc.

·         Bharat Scouts & Guides – movement was in the Plantation School ( Peria Karamalai Aided Middle School) and then Head Master Mr. P Israel worked closely with Doctor Daniel for the children of Plantation Workers.

·         After leaving the plantation, he was at Coimbatore for quite some time (ref.Personal Interview by Mr. Raviraman for his thesis ‘ Bondage in Freedom and Colonial south India Plantation Area-1797-1947”.


·       Photograph of the Hospital, where Dr. Paul Harris Daniel worked.


14 Aug 2019

இந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்


a.      புத்தமதம் ஆட்சியில் 2ஆம் நூற்றாண்டு வரையில்
b.      குருகுல கல்வி -இந்து மதம் ஆட்சியில் 2000 வருடங்கள்
c.      மெக்காலே ஆங்கிலக் கல்வி திட்டம்-1834 
d.      டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு-1948
e.      டாக்டர் லட்சுமணசாமி குழு-1952
f.        கோத்தாரி குழு திட்டம்-1964 
g.      புதிய தேசிய கொள்கை (1986 மே மாதத்தில் பிரதம மந்திரி ராஜீவ் காந்திஅரசாங்கங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது).
h.      தேசிய கல்வி கொள்கை (NPE) 1992 அதிரடி திட்டம் (PoA),
i.        யஷ்பால் கல்விக் குழு திட்டம்-2009
j.        மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019
புத்த மதம்இந்தியாவில் ஆட்சிசெய்தபோது நாலந்தாபோன்ற இடங்களில்பல்கலைக்கழகங்கள்சாதி பாகுபாடு இன்றிஅனைவருக்கும் கல்விஅளித்திருந்தது.(அந்தக் காலத்தில்கல்வி என்பது மதபோதனைதான்).தமிழகத்தில்சிதரால்,கழுகுமலையிலும் உண்டு -உறவிட கல்விகூடங்கள்இருந்ததிற்கான சான்றுகள் உள்ளன.

புத்தமதம் அழிக்கப்பட்டு இந்து மதம் தழைத்தோங்கிய பின்சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர்சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில்வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்ததுஇதன்விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால்பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது.. அந்தஅதிகார வர்க்கம்கல்வி சாமனியரை சென்றடைவதைத்தடுத்துசிறு மற்றும் குறுநில மன்னர்கள் ,உயர் சாதியினரைமட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் [JA1]  மட்டும்பயனடைய உதவி செய்தது.

மெக்காலே கல்வி முறை
இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனிஇந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்ததுபிரிட்டன்பாராளுமன்றம்கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாகஇலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும்என்று உத்திரவிட்டதுஅந்த லட்சம் ரூபாயை எவ்வாறுசெலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோதுஅப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டுமுறைகள்ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த"தாய் மொழிவடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை.மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்விஅந்தஇரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறைஅடிப்படையான ஆங்கில வழிக் கல்விஅது தான் இன்றையதேசியவாதிகளாலும்இந்து மத அடிப்படைவாதிகளாலும்சாடப்பட்டு வருகிறது.

அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவதுசமஸ்கிருதம்அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக்கல்விதான்மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை மறுத்து மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்னகாரணங்கள் . ஆங்கிலம் என் ஒரு பகுதியும் சஸ்கிருதவும்அரபியும் என் இன்னொரு சாரார் வாதாடிய போது மெக்காலேபதில் இப்படியாக இருந்தது .
 I have no knowledge of either Sanscrit or Arabic.--But I have done what I could to form a correct estimate of their value. I have read translations of the most celebrated Arabic and Sanscrit works. I have conversed both here and at home with men distinguished by their proficiency in the Eastern tongues. I am quite ready to take the Oriental learning at the valuation of the Orientalists themselves. I have never found one among them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. The intrinsic superiority of the Western literature is, indeed, fully admitted by those members of the Committee who support the Oriental plan of education. 


மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை,அறிவியல்வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவுபுத்தகம் உள்ளதுஅது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தைஅறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மதபோதனைகளை கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியானகல்விக்கு செலவிடுவது வீண்இந்தியர்களின் அறிவுத் திறனைவளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறைஇருக்க வேண்டும்எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப்படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலைபடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்அது உலகத்தரத்தில் இந்தியர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும்.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையைஅறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசுசெய்திருந்தால் அன்றைய இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருப்பார் ஆனால் வருணாஸ்ரமம் சார்ந்த குருகுல கல்வி தான் வளர்ந்திருக்கும். ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம்இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகியதுஎன்பதை மறுக்கல் ஆகாது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு
நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டேபல்கலைக்கழகக்கல்வியின் தரத்தை ஆராயஅப்போது ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர்ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல்கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு.  இந்தியப்பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது, உயர்கல்வியை நிறுவனமயமாக்கிதனியார் கல்லூரிகளை உள்ளூர்க்குழுமங்கள் உருவாக்கிமானியக் குழுவிடம் பணஉதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர்ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி - 1952
1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தடாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக்குழு அமைக்கப்பட்டது இதில் தந்தை பெரியார்ஜி.டி.நாயுடுஉட்பட பலர் நேரில் ஆஜராகிகல்வி குறித்து விவாதித்தனர்.பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத்தொடங்குதல்தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்றுமொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழுமுன் மொழிந்தது.
 கோத்தாரி கல்விக் குழு
டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கியஇந்தக் குழுவில் பிரிட்டன்அமெரிக்காரஷ்யா போன்றநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்கல்வியாளர்கள்இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத்தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்கஅறிக்கையை 1966-ல் வழங்கியதுஇந்தியக் கல்விக்குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரிகல்விக் குழுதான்.

கோத்தாரி குழு  அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1.14
(i)                 அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக்கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைசெய்தது
(ii)               வயது வரை கட்டாயக் கல்வி
(iii)             ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
(iv)             மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடியமும்மொழிக் கொள்கை
(v)               சமமான கல்வி வாய்ப்பு
(vi)             சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
(vii)           பகுதிநேர கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
(viii)         இடைநிலைக் கல்வியைதொழிற்சார்புடையதாக்குதல்
(ix)             பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
(x)               அறிவியல் அடிப்படையிலும்வகுப்பறைச்செயல்முறையிலும் சீர்திருத்தம்.
(xi)              ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச்சாலைகளைக் கட்டமைத்தது.
(xii)           தறிப் பயிற்சிதோட்டக் கலைகுடிமைப் பயிற்சிஆகியவற்றை அறிமுகம் செய்தது.
(xiii)         விளையாட்டுநாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவைஇக்குழுவின் சாதனைகள்.

இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாகஅமல்படுத்தவில்லைஇப்படி இருக்க  பிரதம மந்திரி ராஜீவ்காந்தி அரசாங்கங்கத்தால், 1986 மே மாதத்தில் ஒரு புதிய தேசியகொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய கல்வி கொள்கை,

1.                    வேறுபாடுகளை அகற்றுதல் மற்றும் கல்விக்குசமமானதாகும் வாய்ப்பு
2.                  குறிப்பாக இந்திய பெண்கள்பழங்குடியினர் (ST)மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (SC) சமூகங்களுக்குமுக்கியத்துவம் அளித்தது.
3.                  அத்தகைய ஒரு சமூக ஒருங்கிணைப்புக்கு,உதவித்தொகைகள்,
4.                  வயது வந்தோர் கல்வியை விரிவுபடுத்துதல்,
5.                  தாழ்த்தப்பட்டவா்களிடமிருந்து அதிகஆசிரியர்களை நியமித்தல்,
6.                  ஏழை குடும்பங்களுக்கான ஊக்கத்தொகைதங்கள்குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புதல்,
7.                  புதிய நிறுவனங்களை மேம்படுத்துதல்,
8.                  வீட்டுவசதி மற்றும் சேவைகளை வழங்குதல்ஆகியவற்றுக்கான கொள்கைகள்.
9.                  தேசிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில்"குழந்தையை மையமாகக் கொண்டஅணுகுமுறைக்குஅழைப்புவிடுத்தது,
10.               மேலும் நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளைமேம்படுத்துவதற்காக "கரும்பலகை திட்டம்"தொடங்கப்பட்டது.



1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி திறந்தவெளிபல்கலைக்கழகத்துடன் இந்த திறந்த பல்கலைக்கழக முறைவிரிவுபடுத்தப்பட்டது. 1986 நாட்டில் தொழில்சார் மற்றும்தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டங்களுக்குஅனுமதிக்கப்படுவதற்கான அனைத்து இந்தியஅடிப்படையிலான பொது நுழைவுத் தேர்வையும் நடத்ததிட்டமிட்டது.

தேசிய கல்வி கொள்கை (NPE) கீழ், 1992 ஆம் ஆண்டின் அதிரடிதிட்டம் (PoA),

பொறியியல் மற்றும் கட்டிடக்கலை / திட்டமிடல்நிகழ்ச்சிகளுக்கான சேர்க்கைக்குஅக்டோபர் 18, 2001 தேதியிட்டதீர்மானம்மூன்று நிலை தேர்வுத் திட்டம் (தேசிய அளவிலான JEEமற்றும் AIEEE மற்றும் மாநில அளவிலான பொறியியல் நுழைவுதேர்வுகள் நுழைவுத் தேர்வுகளின் பெருக்கம் காரணமாகமாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்மேலோட்டப் பிரச்சினைகள் மற்றும் உடல்மன மற்றும் நிதிசுமையை குறைக்கிறது.


இக்கல்விக்கொள்கையை செயல்படுத்திட 23 சிறப்புப்பணிக்குழுக்களை அமைத்திருந்தது.

யஷ்பால் கல்விக் குழு
சாதிசமயவர்க்க வேறுபாடுகள் இன்றிஒரே மாதிரியான கல்விஎனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான்பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு.
1.        தேர்வுகளுக்குப் பதிலாகமாற்றுக் கல்வித் தொடர் மற்றும்முழுமை மதிப்பீட்டை (சி.சி..) இக்குழு அறிமுகம் செய்தது.
2.      எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழுகொண்டுவந்ததுஇதனால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பு வரை  தக்கவைக்கமுடிந்துது.


மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக்கொள்கைபல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது.யஷ்பால் குழு போன்ற பழைய கல்வி கொள்கைகளுக்குதொடர்ச்சியாக அறிவித்து இருக்க  வேண்டும்ஆனால் அதைசெய்யவில்லை.