header-photo

தன் அழகால் வீழ்த்தப்பட்ட பத்மாவதி!


பத்மாவதி என்ற பெயரில் எடுக்கப்பட்டு மத அடிப்படைவாதிகளால் பத்மாவத் என பெயர் மாற்றி வெளியிடப்பட வேண்டி வந்த திரைப்படம். காட்சியல் அழுகிலும், தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத்தி எடுத்த மிகவும் அழகாக வரலாற்றுப் படம். வரலாறு தவறா இல்லையா என்பதை தாண்டி வரலாற்றை அறிந்து கொள்ள தூண்டிய படம்.

மேவார் மன்னர் இரத்தன் சிங், அவருடைய காதல் மனைவியாக தீபா படுக்கோன் ‘பத்மாவதியாக’ நடித்துள்ளார்.  எதிர்பாராத விதமாக மான் வேட்டையில் இருந்த  இளவரசியில் அம்பால் காயப்பட்டவர் இரத்தன் சின் என்ற சிங்கம். பத்மாவதி கண்டவுடன் காதலில் வீழ்ந்த மன்ன்ன், எளிதாக, உடனே திருமணம் செய்து தன் நாட்டுக்கு அழைத்து வருகின்றார் சிங்கள இளவரசியை. .
  
ராணியை கண்ட மாத்திரத்தில்  அழகில் மதிமயங்குகின்றான்  ராஜகுருவும், மன்னரின் ஆசிரியருமான பிராமணன். இராஜாவும் ராணியும் தனிமையில் இருக்க அவர்களை மறைந்திருந்து பார்க்க துணியும் இழிச்செயல் கொண்டவன் கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் கதை சூடு பிடிக்கின்றது..


பிராமணனை கொல்லுதல் ரஜபுத்திர கொள்கையில் தவறு என்பதால் நாடு கடத்தப்படுகின்றான்.. பகை உணர்வால் பைத்தியக்காரனான பிராமண குரு, டில்லியில் கில்ஜியை சந்திக்க முடிவு எடுக்கின்றான்.  தன் சூது வாதால் ஆட்சிக்கு வந்த அலாவுதின் கில்ஜியின் பெண் மோகம் அறிந்த பிராமண குரு, மேவாப் நாட்டு இளவரசியின் அழகை பற்றி விளக்க,  அதிகார மோகவும் பேராசையும் கொண்ட கில்ஜி மேவாப் நாட்டை முற்றுகை இடுகின்றான். மேவாப் நாட்டுக்குள் வர இயலாத சூழலில் தோல்வியுடன்  டில்லிக்கு திரும்பி செல்லவும் மனம் வராது, கில்ஜி தன் நரி தந்திரத்தை கையில்லெடுக்கின்றான். சமாதானம் எனக்கூறி நட்பு கரம் நீட்ட, மேவாப் மன்னனும் இளைய ராணியின் அறிவுரையை மீறி சந்திக்கின்றான். பத்மாவதியை சந்திக்கும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த,  தேடி வந்த விருந்தினரை   பகைக்க வேன்டாம் என்ற முறையில் ராணியை நொடியில் காணும் வாய்ப்பை பெறுகின்றான். தண்ணீர் ரஜபுத்திர ராணி தன் முகத்தை காண்பித்தார் என்றது வரலாற்று பிழை என்ற எதிர்ப்பிற்கு அஞ்சி இளைய ராணி சாரளம் வழியாக தன் முகத்தை காண்பதாக காண்பிக்க பட்டுள்ளது இப்படத்தில்.

ராணி மேல் பித்தாக இருந்த கில்ஜி,   பின்பு பைத்தியக்காரனாக மாறுகின்றான். இராணியை டில்லிக்கு வர வைக்க வேண்டும் என்ற நோக்கில் மேவாப் ராஜாவை விருந்துண்ண அழைத்தவன்  கடத்தி சென்று விடுகின்றான். இராஜாவை மீட்க வேண்டும் எனில் பத்மாவதி டில்லி வந்தே ஆக வேண்டும் என கட்டளை விதிக்கின்றான்.  நாட்டு மக்கள், மந்திரி எல்லாரும் தடை இட்டும்; இளைய இராணி தன் காதல் கணவரை மீட்டே தீர வேண்ட்ம் என்ற சூழலில் தன் புத்தி கூர்மையில் நம்பிக்கை கொண்டு  இரத்தன் சிங்கை டில்லி சென்று மீட்டு வருகின்றார்.  
  
ராணியை அடைய இயலாத கில்ஜி தன் படைகளை திரட்டி வந்து மேவாப் கோட்டையை  தகர்க்க துணிகின்றான். இரத்தன் சிங்க நேரடியாக போராட்ட களத்தில் இறங்கு கின்றார் . போர் களத்தில் கொள்கையற்ற போர் முறையால் கொல்லப்படுகின்றார்.

இனி தப்பிக்க வழி இல்லை என அறிந்த மேவாப் பெண்கள் சத்துருவை  எதிர் கொள்ள இயலாத சூழலில் தங்கள் மானத்தை காத்து கொள்ள, தீயில் தங்களை மாய்த்து கொள்கின்றனர்.

 பல நாடுகளை தன் வலுவால் கீழ்படுத்திய கில்ஜி,  பலரை எளிதாக கொன்று குவித்த கில்கஜி, பெண்ணாசையில் நாட்டையும் நாட்டு மன்னரை அழித்தாலும், மானமுள்ள பெண்களிடம் தோற்று போவதுடன்  கதை முடிகின்றது.
  
2017 வெளி வந்த இப்படம் ஷூட்டிங் ஆரம்பித்த்தில் இருந்தே பல எதிர்ப்புகளை ஹிந்து அடிப்படை வாதிகளால் சந்தித்தது. ஒரு கட்டத்தில் இயக்குனர் அடிக்கப்பட்டார், படம்பிடிப்பு தடை செய்யப்பட்டது. நடித்த தீபிகா படுக்கோனை கொலை செய்து விடுவோம் என்று வரை மிரட்டல்களை எதிர் கொண்ட்து.  ஒரு எளிமையான கதையாடல் கொண்ட படம், இந்த அளவு எதிர்ப்பு சந்தித்தது ஆச்சரியத்தை தான் கொடுக்கின்றது..

1540 களில் வாழ்ந்த முகமது ஜயாசி என்ற கவியின் ஒரு இஸ்லாமிய சூபி கவிதையை ஆதாரமாக எடுத்த படம் தான் இது. இயக்குனரின் கற்பனையும் கலந்த போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாரியின் பல படங்கள் பெண்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக திகழ்ந்துள்ளனர்ணவ்வகையில் இதுவும் பெண்ணின் வாழ்க்கையை மைய்ய கருத்தாக கொண்ட படமாகவே எடுக்க இயலும்.


போர் குணமுள்ள ஒரு பெண் தன்னை காப்பாற்றி கொள்ள நிராதரவாக தீயில் சாடிய போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. கொடிய ஆண்கள் கிறுக்கு பிடித்த ஆண்களால் அவனை சார்ந்திருக்கும் மனைவி உறவினர் பெண்கள் மட்டுமல்ல பல மைல் தூரத்திலிருக்கும் அந்நிய  பெண்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்,


ஒரு மனிதனின்  பெண், மண் பொருளாசை அவன் வாழ்க்கையில் அமைதி இன்மையை கொடுப்பதுடன் அவன் ஆட்சிக்கு உட்பட்ட அனைவரின் வாழ்க்கையும் அழிக்கும் படி சக்தி வாய்ந்த்தாக இருக்கின்றதை காணலாம்.


கில்ஜியை முதலில் வளர்த்து விட்டதே அவனுடைய மாமாவான டெல்லி சுல்த்தான் தான். பின்பு சுல்த்தானும் அலாவுதினால் கொல்லப்படுகின்றார். சுல்த்தான் மகளும் அலாவுதின் மனைவியான நூறுவும் சிறையில் அடைபடுகின்றாள். சுல்த்தான் பரிசாக கொடுத்த அடிமை தான் பிர்காலத்தில் கில்ஜியின் எல்லா குற்ற செயலுகளுக்கும் பின் புலனாக இருக்கின்றான்.  சுல்த்தானின் வாழ்க்கை சொந்த செலவில் சூனியம் வைத்தவனாக மடிகின்றது.

காதலும் போருக்கும் கொள்கை தேவை இல்லை என உறுமும் கில்ஜியும், ரஜபுத்தர்ர்களின் கொள்கையை நம்பும் இரத்தன் சிங்கும் மோதிக் கொள்கின்றனர்.  அறவும் கொள்கையும் கொள்கையில்லாதவனிடம் மோதும் போது இலகுவாக அழிக்கப்படுகின்றது , தோற்கடிக்கப்படுகின்றது. நல்ல மனிதர்கள் தங்கள்  கொள்கையால் அழிக்கப்படுகின்றது வருத்தமாகத்தான் உள்ளது, இருப்பினுக்ம் இதுவே நிதர்சனமான உண்மை என்பதை  மறுக்க இயலாது.

இரத்தன் சிங்  என்ற மன்னர் தன்னுடைய கொள்கை என்ற பெயரில்  எடுக்கும் பல தீருமானங்கள்  முட்டாளத்தனமோ என சிந்திக்கவைக்கின்றது. 

பிராமனனை கொல்வது ரஜபுத்திர கொள்கையல்ல என நாடு கடத்தும் போது, அவனை கொன்று விடுங்கள் என்று இளைய நாணி கூறுவதை கணக்கில் எடுக்க மாட்டார். கில்ஜி பல நாட்களாக தொல்லை கொடுத்து விட்டு ஜெயிக்க இயலாது என்ற சூழலில் நட்பு கோரி வர அரண்மனைக்குள் அனுமதிப்பதை பரிசிலியுங்கள் என்று சொல்வதையும் கண்டு கொள்ளமாட்டார்.    
எதிராளி நட்பு அழைப்பு விடுத்ததும், அவன் கூடாரத்தில் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் போதும் இளையராணியின் அறிவாற்றலான அறிவுரைகளை  கண்டு கொள்ளாது சென்று எதிராளியின் வலையின் எழிதாக விழுந்து சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்.

மன்னன் சிறையில் அடைபட்டு கிடக்கும் போதும் இளைய ராணியின் மேல் பழி போடுவார் முதல் ராணி. உன் அழகால் தான் இப்பிரச்சினைகள், நீ ஒழிந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் நீ டில்லி சென்று தன் கணவரை மீட்டு வர கட்டளை இடுவார்.

இந்த சூழலில் தன் மதியால் டில்லி வரை சென்று கணவனை மீட்டு வர; அடிபட்ட பாம்பாக நெளியும் அலாவுதின் கில்ஜி, மறுபடியும் மேவாபை தாக்க முற்படும்  போது,  மன்னரும் மக்களும் காப்பாற்றப் பட தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க கூறுவார் இளைய ராணி, அப்போதும் இரத்தன் சிங்கின் ராணியின் மேலுள்ள காதல் அனுமதிக்காது. இராணியின் அழகை ஆராதித்த இரத்தன் சிங் அதே நிலையில் அவர் போர் திறமையையும்  புத்தி கூர்மையையும் மதித்தாரா என கேல்வி எழுகின்றது..  எவ்வளவு திறமை இருந்தாலும் போர் திறன் இருந்தாலும் ஒரு மன்ன்னின் காதல் ராணியாக இருந்தாலும் தன்னை காப்பாற்ற தன்னையை அழித்து கொண்டது கவலையும் சிந்தனையும் தரவல்லது. பெண்கள் வாழ்க்கை எப்போதும் சூழலின் கைதிகளாக முடிந்து போகின்றது துன்பமே.  
  
அல்லது இராஜாவின் பாத்திரவமைப்பில் கொள்கைப்பிடுப்புள்ள ராஜா என்ற கருத்தில் கொடுத்த முக்கியம் அவருடைய நுட்பான செயலுகளுக்கு கதையில் இடம் கொடுக்கவில்லை என்பதாக நாம் சமாதானப்படுத்தி கொள்ள வேண்டும். . மென்மையான கொள்கை பிடிப்பு கொண்ட வீரம் மிக்க இரத்தன் சிங்காக நடித்திருக்கும் ஷாகித் கபூர் நடிப்பும் அபாரம். இயல்பாக கதாப்பாத்திரத்திர்கு தகுந்து நடித்துள்ளார்.  

தீபிகா படுக்கோன் வரும் ஒவ்வொரு காட்சியும் பெண்மையும் அறிவும் ஒருங்கே நிழலாடியது.  அவருடைய உடை, பாவனை என ஒரு இராணியாகவே அசத்தியிருக்கிறார். அவருடைய அணிகலன் உடை வடிவமைப்பாளரின் ரசிப்பு தன்மையை  புகழ்ந்தே ஆக வேண்டும். அழகுகிற்கு அழகு சேர்க்கும் சிறந்த வடிவமைப்பு.

அலாவுதில் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் அருமையான கையாடல். அல்லாவுதில் கில்ஜியாக நடித்திருக்கும் கொடுங்கோலன் இரத்த வெறியன், பெண் லம்பாடி, ஓரின சேக்கரையாளனாக நடித்திருக்கும்  ரன்வீர் சிங்கின் நடிப்பு தான் இப்பட்த்தின்  வெற்றிக்கே ஆதாரம். ஒரு தன் உடல் மொழியால், வெறும் ஒரு கண்  பார்வையால் உடல் அசைவால் அந்த காதப்பாத்திரமாகவே மாறியுள்ளார். ஒரு அருவருப்பான கொடியமனிதனாக இயல்பாகவே நடித்துள்ளார்.

லாவுதீன் மனைவியாக நடித்த ஆதி ராவு ஹைடரி  ஒரு சில காட்சியில் வந்திருந்தால் கூட  தவிர்க இயலாத கதாப்பாத்திரம். இரத்தன் சிங் பத்மாவதியை தப்பித்து செல்ல உதவினார் என தன் சொந்த மனைவியை சிறையில்  அடைத்து தண்டிக்கின்றான். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் கதாப்பாத்திரம் தேவைக்கு ஏற்ப அழகாக இயல்பாக நடித்துள்ளார்.

தற்கால ஆரிய திராவிட அரசியல், அல்லாஹ் பெயரால் உலகும் முழுக்க கீழடக்க புறப்பட்ட ஆட்சியாளர்களின் மனநிலை, என தற்கால  அரசியல் சூழலையும் தொட்டு சென்றுள்ளது இப்படம். 

திரை வசனங்களும் அருமை. பஞ்ச் டயலோக் அல்லாது சிந்திக்க வைக்கும் வாழ்வியல் தத்துவம் அடங்கிய திரைவசனம். திரைக்கதைக்கு இன்னும் சில நுட்பமான முக்கியம் கொடுத்திருக்க வேண்டும். மிகவும் எளிமையாக நேர்கோட்டில் கதை சில இடங்களில் விருவிருப்பு இல்லாது செல்கின்றதை தவிற்க இயலாது. முதல் 10 நிமிடம் கதை அநியாயத்திற்கு மெதுவான நடை போடுகின்றது.

இசையும் அருமை. கடைசி சீன் இசை மனதில் ரீங்காரமாக பின் தொடர்வதை மறுக்க இயலவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் வந்த படங்களில் இந்த படவும் சிறப்பான இடத்தை பெறுகின்றது. 

சினிமாவை,அரசியலாக  வரலாறாக குழப்பிக்கொள்ளாது பார்த்தால் அருமையாக காட்சிப்படுத்தப்பட்ட அருமையான திரைப்படம்

1 comments:

Usharani Jayashankar said...

Fantastic n Comprehensive review...

Post Comment

Post a Comment