header-photo

அத்தான் என்ற அணையாத காதல் தீபம்!

பாபா அத்தான் இன்று உங்கள் கல்லறைக்கு வந்த போது என்னால் தாங்க இயலவில்லை. உங்க கால் பக்கம் தொட்டு கும்பிட்டேன். உங்க தலைப்பக்கம் மெழுகுவத்தியை பற்ற வைத்தேன். இன்று பத்தியும் வாங்கி வந்திருந்தேன். உங்கள் நெஞ்சு பக்கம் சிலுவை  வைத்துள்ளனர்.  உங்க நெஞ்சில் கை வைத்து வெகு நேரம்.அழுதேன்.  என்ன தான் கதறி உருண்டு புரண்டு அழுதாலும் நீங்க வரப் போவதில்லை என்று தெரியும். அத்தான் என் நினைவுகள் நம் நாட்களுகளுகள் சென்றது.  அத்தான்..... அத்தான் அந்த கல்லறை மேல் படுத்து நிம்மதியாக தூங்கி விடுவோமா என்றிருந்தது எனக்கு. 


நிதானமாக சிந்தித்த போது என் விருப்பம் கூட உங்கள் விருப்பதிற்கு எதிரானதாகத் தான் பட்டது.  நீங்கள் உங்கள் மரணத்திற்காக கடந்த எட்டு மாதமாக நிதானமாக தயார் ஆகி உள்ளீர்கள். அன்பாகவும் பண்பாகவும் கெஞ்சியும் அறிவுரையாகவும் நான் எவ்வளவோ வேண்டாம் எனக் கூறியும் உங்க தம்பியை நம்பி எவ்வளவு பணம் கொடுத்துள்ளீர்கள்?  என்னிடம் என்னவெல்லாம் பொய் சொல்லி உள்ளீர்கள் என்று அவனிடமும் கூறியுள்ளீர்கள்.  அவனிடம் நீங்கள் பேசுவது நான்  விரும்பாததையும் அதன் உண்மையான காரணம் சொல்லாது உங்கள் இருவருக்குமான உறவு எனக்கு தெரிந்தால் பிரிவு வரும் என கூறியுள்ளீர்கள். 

நமக்கு பல அனுபவங்கள் உங்கள் வீட்டுடன் இருந்தது.  முதன் முதலாக நய வஞ்சகமாக எடுத்து கொண்டு போன புல்லட் பைக்கின் விலையாக 10 ஆயிரம் தரக்கூறி நான் ஓர் கடிதம் எழுத  உங்களை அழைத்து என்னை  திட்டி சாபம் போட்டு அந்த ரூபாயை கொடுத்து அனுப்பினர். அந்த பணம் பெற்ற மூன்றாவது நாளை உங்களுக்கு வேலை போய் பின்பு மறுபடியும் வேலை கிடைக்க மூன்று மாதமானது. 

அடுத்து  உங்க கைசெயினை உங்க அம்மா கேட்டு கொண்டே இருந்தார். அது கொடுக்க நீங்க விரும்பவில்லை. உங்களூக்கு கைச்செயின் மேல் அவ்வளவு ஆசை இருந்தது. ஒரு தருணத்தில் அதை உங்கள் நண்பருக்கு விற்க, வாங்கின மறுவாரமே விபத்தில் சிக்கி அவர்கள் அப்பா கோமா நிலைக்கு போய் விட்டார் என்பதால் விற்ற முழுபணம் கூட உங்களுக்கு கிடைக்கவில்லை. நாம் வீடு கட்டின போது உங்க மாலையும் விற்க வேண்டி வந்தது. மறுபடியும் ஒரு மாலை எடுக்க கூறி கொண்டே இருந்தேன். அதன் முன் போய் விட்டிர்களே அத்தான். 

அத்தான் நம்ம காரை ஒவ்வொரு முறையும் உங்க வீட்டிற்கு எடுத்து செல்லும் போதும் கார் ஏதாவது பிரசினையுடன் வரும். ஒரு முறை கண்ணாடியில் கீறல் விழுந்தது. அடுத்த முறை  கண்ணாடி உடைந்து வந்தது. அப்படி எத்தனை அனுபவங்கள்.

ஆகஸ்து மாதம் குளிக்க நீங்களும் சாம் ஜோயலும் போட்டி போட்டு ஓட அவன் மல்லாக்க  விழுந்து தலையில் அடிபட, நான்  அடிபட்ட இடத்தில் எண்ணை போட்டு விட அது கண்ணில் பட்டு அவன் கதறி அழ, அவனை கண்டு நீங்க அழ என அன்றைய இரவு நம் வீட்டில் வரப்போகும் சகுனத்தை விளக்கியது. ஆனால் உங்களுக்கு ஏன் புரியவில்லை?  அவனுக்கு ஒவ்வொரு முறையும் லட்ச லட்சமாக வங்கியிலிருந்து அல்லவா எடுத்து கொடுத்து உள்ளீர்கள். உங்களுக்கு கை எழுத்து இட்ட நண்பர் வீட்டிற்கு வந்து வங்கி மேலாளருக்காக பேசினார். மேலாளர் இரக்கம் கொண்ட நல்ல மனிதராம். அது எப்படி எந்த பிடிப்பும் இல்லாது உங்களுக்கு 5 லட்சம் கொடுத்துள்ளார். மனைவியை தெரிவிக்க வேண்டும் என்று சட்டத்தில் இல்லையா? உங்களிடம் காட்டிய கருணை என்னிடம் காட்டவில்லையே.

ஒரு முறை உங்க வீட்டிற்கு சென்ற போது உங்க அம்மாவிடம் உணவு கேட்டதற்கு ரமேஷ் வர உள்ளான். என்று உங்களுக்கு தர மறுத்தவர். ஜனுவரி ஒன்று அன்று சென்ற போது கையில் துடைப்பவுமாக எதிரேற்றார். என்ன அத்தான் துடைப்பான் பிடித்துள்ள பிடி சரியில்லையே என்ற போது சிரித்து தள்ளினீர்கள். ஒவ்வொரு முறை நாம் வீட்டிற்கு போகும் போதும் அந்த தாய் எங்காவது ஒளிந்து கொண்டு மனம் இல்லாது வருவார். ஒரு முறை நாசரேத் கோயில் கிறிஸ்துமஸ் வெடியை பார்த்து விட்டு வீடு சென்ற போது உறங்க போய் விட்டார் என்ற பதில் கிடைத்தது . ஆனால் கடந்த எட்டு மாதமாக விருந்தும் மட்டன் குளம்புமாக நடந்தது தான் ஆச்சரியாமாக உள்ளது. வங்கியில் இருந்து  லட்ச லட்சமாக கொடுக்கும் போது உங்க அம்மாவிற்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

அத்தான், சாம் ஜோயல் கடந்த வாரம் அவர்களை சந்திக்க சென்ற போது அவர்கள்  குடும்பத்துடன் மாடியில் விளையாடி கொண்டு இருந்தார்களாம். சாம் அப்பா கொடுத்த பணத்தை பற்றி எனக்கு தெரிய வேண்டும் என்றதும் அதன் வெள்ளை கறுப்பு அறிக்கையை ஜூன் 2 அன்று சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளான் அந்த திருடன். ஆனால் எந்த வருட ஜூன் என்று  தான் தெரியாது.


அத்தான் உங்க கஷ்ட காலத்தில் என் 50 பவன் நகையும் என்ன நம்பிக்கையில் உங்களிடம் கொடுத்தேன். அதே நம்பிக்கையுடன் நீங்க விடை தரும் மட்டும் இருந்தேன். அத்தான் என்ன ஆதாரத்தில் உங்க தம்பியை நம்பினீர்கள். கேட்கும் நபர்கள் எல்லாம்  சொந்த  தம்பி இப்படி செய்வானா?  என்று என்னிடமே கேட்கின்றனர். நீங்களும் போயே தீர வேண்டும் என பாஸ்போர்டும் எடுத்து வைத்து விட்டீர்கள். நீங்க பாஸ்போர்ட் எடுக்கும்போது கூட அதன் பயண் தெரியவில்லை. ஆனால் நீங்க செல்வி -பால்துரை மகன் தான் என்ற சான்றை எடுத்து வைத்து போய் உள்ளீர்கள்.

கடவுள் முன் உங்கள் மனைவி என எடுத்த சத்தியத்தை மீறாது இருந்திருக்கலாம். அல்லது அந்த கள்ளன் தம்பியை மாதிரி என்னையும் உங்க பங்காளியாக மாற்றியிருக்கலாம். ஒரு பக்கம் உங்க பிரிவு; நியதி, உங்க விதி, நீங்க இட்ட திட்டம், என ஆறுதல் கொண்டாலும் எல்லா வினையின் பலனும் எனக்கு தானே கொடுத்து போய் உள்ளீர்கள்

அத்தான். உங்க குரலை கேட்க வேண்டும், உங்க பார்வையை காண வேண்டும், உங்களுடன் பயணிக்க வேண்டும். எல்லாம் நினைவுகளிலும் கனவுகளில் மட்டும்தான் அத்தான் . நீங்க கொடுத்த அன்பு , பரிவு, நேசம் எல்லாம் நினைவுகள் மட்டும் தானா அத்தான்.  கணவன் மனைவி உறவு எந்த நிபந்தனையற்ற அன்பு கொண்டது நம்பிக்கையின் மேல் கட்டுண்டது என்பது எல்லாம்  நினைவாகி விட்டதே அத்தான்.  பெரும் மனநோயாளியாக மாறும் முன் என் கல்லூரி வேலை துவங்க வேண்டும். என் குழந்தைகளை சந்திக்க வேண்டும். என் நண்பர்களுடன் வேலை செய்ய வேண்டும்.

அத்தான் உங்களை எண்ணி எண்ணி நான் பைத்தியமாக மாறி வருகின்றேன். அத்தான் தூங்க போகும் போதும் தூங்கி எழும்போதும் ஒரே கேள்வி தான் இனி அத்தான் ஓடி வர மாட்டாரா?  இனி பேச மாட்டாரா? ஏன் என்னிடம் பொய் சொன்னிங்க.,   ஏன் என்னை ஏமாற்றினீங்க. பத்தொன்பது வருடம் கண்ணும் கருத்துமாக காப்பாறிய என் முதல் குழந்தை,  எட்டே மாதத்தில்  இப்படி ஒரு பொய்காரனாக மாறுவீர்களா? அத்தான் நம் காதல் உண்மை தானே? நம் நேசம் உண்மை தானே? நம் காதல் உடலை கடந்து மனதை துளைத்து  ஆன்மாவில் கலந்த போது ஏன் என்னை விட்டு போனீர்கள். நான் இப்போது உங்க அன்பான இதயத்தை உங்க ஆன்மாவை தான் தேடி அலைகின்றேன். அத்தான் அத்தான் என் உண்மையான அன்பு, என் காதல் உங்களை காப்பாற்றவில்லையே, ஏன் ஏன் என்று தான் கலங்கி தவிக்கின்றேன். நம் உறவுக்குள் ஏன் அந்த சகுனியை , சனியனை கொண்டு வந்தீர்கள். ஐயோ என் வாழ்க்கையே கிணற்றில் விழுந்த பாறாங்கல் ஆகி போய் விட்டதே,  மகாராணி போன்று நிமிர்ந்து நடந்த என்னை  சிறக்குள் , சகதிக்குள் அல்லவா தள்ளி அடைத்து விட்டீர்கள்.

என் மகன் வளர்ந்து எனக்கு விடுதலை வாங்கி தர வேண்டும். சிம்ஹாசனத்தில் இருந்து புழுதியில் விழுந்து கலங்கி  தவிக்குகின்றேன்.  அத்தான் நானும் செத்து விடக்கூடாது அந்த கொலைக்காரி தாயும்  மாண்டு விடக்குடாது, இனி தான் உண்மையான போர் ஆரம்பிக்க உள்ளது. அவ என் முடிவையும் பார்த்து விட்டு தான் போக வேண்டும்.

0 comments:

Post Comment

Post a Comment