header-photo

மரணத்திலும் கொள்ளை!

பாபா அத்தான் ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவுகளாக தான் செல்கின்றது. காலை எழுவது துவங்கி இரவு தூக்கம் வரை உங்களுடன் கலந்த  நினைவுகளே. இன்று தான் முதல் முதலாக நானே தோசை சுட்டு கொடுத்துள்ளேன் நம் பிள்ளைகளுக்கு. எனக்கு  சரியாக தோசை சுடத்தெரிவதில்லை என்று நீங்கள் எப்போதும் குற்றப்படுத்துவீர்கள்.  கல்லூரிக்கு செல்லும் போது நீங்கள்: என் பணப்பையில் எடுத்து வைக்கும் பணம், என்னை அழைத்து வர நீங்கள் நிற்கும் கல்லூரி வாசல், நீங்கள் தொலைபேசியில் அழைத்து பேசும் நேரங்கள் என் மன அலையில் பாய்ந்து போய் கொண்டே இருக்கின்றது. இனி உங்கள் குரலை கேட்க முடியாது என்றதும் என் தொண்டை அடைக்கின்றது.  உங்கள் போட்டோவை  சுவரில் மாட்டி பார்த்து கொண்டே இருக்கின்றேன். நீங்கள் நக்கலாக என்னை பார்த்து சிரிக்கும் போல் உள்ளது அத்தான். அந்த போட்டோவில் உங்களை நேரில் பார்த்து கொண்டிருக்கின்றேன்.  

இன்னும் துயரான செய்தி நான் நேற்று தான் புரிந்து கொண்டேன். உங்களுக்கான அடக்க பெட்டியை பாப்புலர் வெங்கடேஷ் ஏற்பாடு செய்திருந்தாராம். அதன் விலை 3200 ரூபாய் என்றிருந்ததாம். ஆனால் உங்கள் ஆலயத்தை சேர்ந்த  ஐசக் என்ற பணப்பேய்  தன் ஏற்பாட்டில் சிறிய பெட்டியை ஏற்பாடு செய்து அதற்கு 5000 ரூபாய் பில் போட்டு கொடுத்துள்ளார். அந்த பெட்டியில் உங்களை மிகவும் கஷ்டப்படுத்தியை வைத்துள்ளனர்.  உங்கள் இடுப்பளவை விட பெட்டி சிறிதாக இருந்ததாம். மரண கிரியையில் கூட பணத்தை கொள்ளையிடும் கூட்டங்களை பார்த்தீர்களா? அந்த நபரை கைபேசியில்  அழைத்து மனைவி என்ற நிலையில் என்னை மிகவும் வருந்த செய்தது. இது போன்ற ஓர் நிலை இனி எந்த மனைவிக்கும் ஏற்படுத்தாதீர்கள் என்றேன். அதற்கு அந்த பெரிய மனிதன் ”திருமால் நகரில் இருந்து ஒரு விபத்து கேஸ் என்றதும் நானும் இரத்தின சாமியும் மிகவும் பாடுபட்டு ஏற்பாடு செய்தோம்” என்றார். நானும் விடவில்லை உங்கள் ஆலையத்திற்கு தொடர்ந்து வரிகட்டிவரும் ஒருவர் எப்படி கேஸ் ஆகுவார். அவர் உயிருடன் இருக்கும் போது உங்கள் கிருஸ்துவில் பிரிய சகோதரர் தானே என்றேன். அதனால் ஒரு மனிதன் மரித்ததும் கேஸ் என்று கூறி கொச்சைப்படுத்தாரீர்கள் என்று கூறி வைத்து விட்டேன்.

உங்களுக்கு எடுத்து வந்த சட்டை கூட உங்களுக்கு சேரவில்லையாம். சரியான அளவில் சட்டை எடுத்து வராதற்கு மருத்துவ பெண்மணி திட்டியுள்ளார்.  அளவுக்கு, தகுதிக்கு  மீறி செலவழிக்கும் யாரை  பார்த்தாலும் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கும்  உங்களுக்கு இந்த நிலையா அத்தான்.. உங்கள் உறவினர், அது தான் உங்கள் பெரியப்பா மகன், நீங்கள் வாரம் ஒரு முறை சந்திக்கும்; வீட்டில் நிறைய மீன் இருந்தால் அந்த ஆளுடன் சேர்ந்து சாப்பிட போகிறேன் என்று அள்ளி செல்வீர்களே! அவருக்கும் உங்களுக்கு தகுந்த ஓர் சட்டை எடுத்து கொடுக்க கூட மனம் வரவில்லையா? அந்த  உதவாக்கறை என்னிடம் சொல்கின்றது ஏதும் உதவி வேண்டும் என்றால் அழைக்க வேண்டுமாம். அத்தான் அந்த பதட்டத்தில் நம் கல்யாண சேலையை எடுத்து உங்களுக்கு புதைத்து விட மறந்து விட்ட பாவியாகி விட்டேன்!. என்னை விட உங்களுக்கு தான் பட்டு சேலைகள் என்றால் பிடிக்கும்.  ஆனாலும் உங்களுக்கு பிடித்த வெள்ளை சட்டையை  உங்கள் கால் அருகில் இட்டு அனுப்பினேன். 


உங்களை இழந்த துயரில் இருந்து  மீழத்தானோ. சில இடியாப்ப சிக்கல்களையும் எனக்கு உருவாக்கி வைத்து சென்றுள்ளீர்கள்.  ஆனால் உங்களை நயவஞ்சகமாக உங்க சகோதரன் ஏமாற்றி உள்ளான் என அறிந்தேன்.  கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எல்லாவற்றையும் மிகவும் நேர்மறையாக பார்ப்பவர்,  நான் தான் உங்கள் சிந்தனைக்கு என சில எதிர்மறை சூழலையும் விளக்க முயன்றுள்றேன், அதனாலே கடந்த இரண்டு மாதமாக சில சொல்ல வேண்டிய உண்மைகளையும் மறைத்துள்ளீர்கள்.  நான் இதை அறிந்து வருந்தின போது உங்கள் உடன்பிறவா தம்பி ரீகன் கூறினார்  "நீங்கள் உங்கள் அன்பால் அண்ணனை கொன்று விட்டீர்கள், அண்ணனும் உங்களிடம் இருந்த அன்பால் நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று நினைத்தே சிலவற்றை மறைத்து விட்டார்கள்" என்று.

நான் பொதுவாக சில விடையங்கள் பற்றி கதைக்கும் போது நீங்கள் கூறிவீர்கள் "நீ என் சந்தோஷத்தில் மட்டும் கலந்து கொண்டால் போதும் என் துக்கத்தை நீ தெரிந்து கொள்ள வேண்டாம்" என்று. நானும் கடந்த சில மாதங்களாக மிகவும் அமைதி காத்து வாழ்ந்தேன். ஆனால் உங்கள் இழப்பு வழியாக என் வாழ்கையை மயான அமைதியாக்கி  விட்டு சென்றுள்ளீர்கள். 

அத்தான் தினம் தினம் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் ஆன்மா சாந்தியாக வேண்டும். உங்களுக்கு எவ்வளவு ஆசைகள் இருந்தன. நம் பிள்ளைகளின் பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், மகன்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது அவர்கள் மனைவியர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். நாம் வயதான காலம் யாருக்கும் தொல்லை கொடுக்காது அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும்.  நிறைய தூண்கள் கொண்ட ஊஞ்சல் உள்ள வீடு கட்ட வேண்டும். அந்த ஊஞ்சலில் நானிருந்து புத்தகம் வாசிக்க நீங்கள் பாட்டு கேட்டு இருக்க போவதாக கூறினீர்கள். அத்தான் உங்கள் மூக்கு கண்ணாடி, நீங்கள் வைத்திருந்த கைபேசி எல்லாம் சிறு கீறல் கூட இல்லாது என் கையில் கிடைத்தது. அதை என் கையில் சேர்த்த இறைவன் உங்களை மட்டும் என்னிடம் இருந்து பிரித்தார்.  உங்கள் தலை மிகவும் காயப்பட்டிருந்ததாம். 

அத்தான், நீங்கள் உங்கள் பிராடு சகோதரனோடு சகவாசம் வைத்திருந்தது தான் இந்நிலைக்கு காரணமா?  அந்த கொடிய மிருகம் உங்கள் முகத்தை பார்க்க கூட வந்து சேரவில்லை. உங்களுக்கான கடைசி வேலைகளை கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள் தான் அந்த மிருகத்தை நம்பி அவனுடன் பயணித்தீர்கள், அவனுடன் உணவு எடுத்தீர்கள். அவன் கால் வைத்த உங்கள் அலுவலகம், அவன் கால் வைத்த உங்க கார் போய் விட்டது. அத்துடன் உங்களையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டான்.  அவன் சென்னையில் தண்ணீரில் மிதந்த போது 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்களாமே? அவன் தொழில் செய்ய என்று உங்கள் கணக்கில் மூன்று லட்சத்திற்கு மேல் கொடுத்துள்ளீர்கள். அந்த கொடிய மிருகத்தை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள் என பெப் 15 ல் கூறினேன்.  அதனால் உங்கள் வீட்டை உங்கள் நினைவால் என்னிடம் உள்ளது.

உங்களை ஒருவள் பெற்றாளே அவள் என்னவெல்லாம் உங்களை பற்றி என் குடும்பத்திர்னரிடம் கூறினாள் தெரியுமா? நீங்கள் 500 ரூபாய் தான் கொடுப்பீர்களாம்! அந்த அம்மா தான் உங்களுக்கு இன்வெர்ட்டர் வாங்கி கொடுத்தாளாம். என்னிடம் யாரும் பதில் பேசக்கூடாது என்று சொல்லி விட்டனர் . நீங்கள் இரவு பகலாக சி.எஸ்,ஐ ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்தது, ஒரு பெண்ணை தினம் 250 ரூபாய் கூலிக்கு அமர்த்தி கவனித்தது, நம் வீட்டில் வைத்து 15 நாள் வைத்து பார்த்து அனுப்பினது, உங்கள் அப்பாவின் கடைசி கிரியைக்காக நீங்கள் என் அறிவில் செல்வழித்த 42 ஆயிரம், நீங்கள் பெல் மருத்துவமனையில் வைத்து உங்கள் அப்பாவிற்கு செலுத்திய மருத்தவ செலவை எல்லாம் மறைத்து  உங்களை அவமதிக்கும் விதமாக  "ஒருத்தன் இறந்து விட்டான் இருப்பவனை நான் பார்க்க வேண்டாமா" என்று கூறி சென்றாள் !

அத்தான் உங்கள் பிரேத பரிசோதனை சாற்றதழை கொடுத்த போது எவ்வளவு துயறுற்றேன் தெரியுமா. நீங்கள் சொன்னீர்கள் உங்கள் ராசிப்படி  70 வயது வரை இருப்பதாகவும் என் உயிரும் உங்கள் கையில் தான் பிரியும் என்றீர்கள். என் அப்பாவை  போல் பார்க்கின்ஸ்தான் வருமா?  என்று  நான் பயந்த போது நீங்க மகிழ்ச்சியாக கூறினீர்கள் "அந்த நோய் என்றால் ரொம்ப நல்லது, நீ அமைதியாக இருப்பாய் தானே நான் உன்னை பார்த்து கொள்கிறேன்" என்று. அத்தான் நீங்க நிறைய பொய் சொல்லி விட்டிர்கள். எல்லாம் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் தெரியும் ஆனால் இப்போது துக்கத்தால், அவமானத்தால் நொறுங்கி விட்டேன், நான் யார் முன்னும் அழுவதே இல்லை. நான் அழுவது கூட உங்கள் கையில் கிடந்து கொண்டு தான் .நீங்க கூட துக்கம் பீறிடுனம் போது சத்தமாக அழுது இருக்கின்றீர்கள். ஆனால் இன்று என் வாழ் நாள் முழுதையும் அழுகையாக மாற்றி விட்டீர்கள்.     ஆனால் என்னை உங்கள் தாய் முன் வைத்து புரண்டு புரண்டு அழ வைத்து விட்டீர்கள். நீங்கள் என்னை தோற்க வைத்து விட்டிர்கள். 

அத்தான். ஒரே நிம்மதி உங்களுக்கான அன்பை கடந்த 19 வருடமும் எந்த கஞ்சத்தனவும் அற்று எந்த நிபந்தனையும் அற்று கொடுத்துள்ளேன்.   சில போது உங்கள் விருப்பப்படி சேயாக மாறினேன் மற்று சில நேரம் நான் உங்கள் தாயாக மாறினேன்  அத்தான் நான் நினைத்து பார்க்க பார்க்க உங்கள் பேரால், உங்கள் அன்பால் அடிமையாக தான் கிடக்கின்றேன், இப்போதும் உங்கள் அடிமை தான் நான் . உங்களுக்காக நான் என்ன போராட்டத்தையும் எதிர் கொள்வேன். நான் இப்போதும் இறைவனிடம் கேட்பது கடவுளே அவரை எனக்கு உயிருடன் தந்திருக்க கூடாதா? நான் அவர் முகத்தை பார்த்து கொண்டே வாழ்ந்திருப்பேனே. என் சந்தோஷம், என் நிம்மதி, என் அமைதி எல்லாம் உங்களுடன் வந்து விட்டது. அத்தான் நான் செய்த குற்றம் என்ன? என்னை விட்டு இவ்வளவு விரைவாக சென்று விட்டீர்கள்.  நீங்கள் எனக்கு வேண்டும். எனக்கு உங்களிடம் நிறைய பேச உள்ளது. என் நம்பிக்கை, என் ஆதரவு, என் ஆசை, அன்பு எல்லாமே நீங்க தான். எல்லாம் வெறுமையாக உள்ளது. என் முன் தெரிவது எல்லாம் பெரும் சூனியம் தான்! .நம் வாரப் பயணம் இனி இல்லை தானே? 


இன்று நான் என் கனவை, என் அன்பை, என் நம்பிக்கையை உங்கள் மகன்கள் மேல் திருப்பி கொண்டிருக்குன்றேன்.   அத்தான் உங்களை காண வேண்டும். நீங்கள் இறைவன் அருகில் இருப்பதாக சொல்கின்றார்கள். நான் என்று உங்களை சந்திப்பேன் அத்தான். 

11 comments:

is said...

God's hand with you. Don't have no other words to say.

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பர் மதுரைத்தமிழன் அவர்களின் வலை மூலம் தங்களைப் பற்றி அறிந்து தங்களின் வலைக்கு வந்துள்ளேன் சகோதரியாரே.
தங்களின்இழப்பு ஈடு செய்ய இயலாதது சகோதரியாரே
தங்களவர் வேறு தாங்கள் வேறு அல்ல,இருவரும் ஒன்றாகிவிட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன்.
தங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை
மகன்களைப் பாருங்கள்,
பிள்ளைகளின் எதிர்காலம்தானே
ஒவ்வொரு பெற்றோருக்கும் எதிர்காலம்

Christopher Raja Kumar · St.Xavier's College Palayamkottai said...


Silanerangalil sila manithargal ! Erigiraveetil pidinginathu Labam! Dont loose heart. Be brave .Kadavul ungalai kaividamattar

Thulasidharan V Thillaiakathu said...

சகோதரன்/நண்பர் மதுரைத்தமிழன் மூலம் தங்களை அறிந்தோம் சகோ! ஆறுதல் என்று சொல்லி வார்த்தைகளைச் சொல்ல முடியாது. தங்களுக்கு நேர்ந்த சோகத்திற்கு ஈடு இல்லைதான். இழப்பிலிருந்து மீள தங்கள் மகன்களின் எதிர்காலத்தில் மனதை நிலை நிறுத்திடுங்கள் தங்கள் கணவர் தங்களுடன் இருந்து குழந்தைகளை ஆசீர்வதிப்பார். தொடர்கின்றோம்..

புனிதா கணேசன் said...

பிள்ளைகளின் எதிர் காலத்தில் கவனம் செலுத்துங்கள்; ஆண்டவன் துணையிருப்பான்

Valan Arul · Input Editor at Vendhar Tv said...


மனிதர்களில் பலரும் கயமைத்தனத்துடனே இருப்பது தவிர்க்க முடியாததுதான்.... பிறரது இழப்பிலும் சம்பாதிக்க நினைப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள்... லேசாகட்டும் தங்கள் மனம் இலவம் பஞ்சுபோல்... கரம் குவிக்கிறேன் எல்லாம் வல்லவனிடம்.....

சிவ மேனகை · University of Jaffna said...


உங்கள் விழிகள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்குள்ளும் வலிகளும் வலிமையும் இருக்கும் ,,,பழிகளையும் மற்றவர்கள் செய்த பாவங்களையும் கர்த்தர் பார்த்துக்கொள்ளட்டும் ,,,,,,,பாபாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் ,,,,ஓம்சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,

வேகநரி said...

//நம் பிள்ளைகளின் பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், மகன்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது அவர்கள் மனைவியர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். நாம் வயதான காலம் யாருக்கும் தொல்லை கொடுக்காது அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும்.//
நீங்க இருவரும் கிரேட் தம்பதிகள்.தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டிய பெற்றோர்களில் ஒருவர்கள்.

நீங்க போட்ட உங்க ஹீரோவின் படங்கள் எல்லாமே அருமையாக இருந்திச்சு.அவற்றில் என்னை கவர்ந்த நம்ப ஒன் படம் இந்த பதிவில் வரும் இரண்டாவது படம்.

J P Josephine Baba said...

என் வேதனையான தருணத்தில் என் துக்கத்தில் பங்கு கொண்ட அருமை உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் வணக்கங்கள்.

J P Josephine Baba said...

Thank you much

J P Josephine Baba said...

Thank you much

Post Comment

Post a Comment