header-photo

மரண விதி!
 இன்னும் என்னால் ஏற்று கொள்ள இயலாதது அத்தானின் உங்கள் பிரிவு தான்.  ஏன் எதற்கு என்ற கேள்வியில்அர்த்தம் இல்லை, விடை கிடைக்க போவதும் இல்லை. ஆனால் என் நம்பிகை, என் அன்பு,  என் பாசம், என் காதல்,  என் தஞ்சம், என் மகிழ்ச்சி   என எல்லாமாக இருந்தவர்.  கண்ணே கலைமானே என்று தினம் தினம் தாலாட்டு பாடி தூங்க வைத்தவர். https://www.youtube.com/watch?v=oCkg3S1uTFQ இன்றய மனநிலை பைத்தியம் பிடித்து அலைவது போல் தான் உள்ளது.  கருணை உள்ளம் கொண்ட அன்பு மயமான இறைவன் ஏன் இப்படி செய்தார் என ஆராய்வதில் பொருள் இல்லை என தெரியும். கடந்த நாட்களாக அத்தானை தேடி கொண்டு இருக்கின்றேன். உணவருந்தும் போது என்னை அழவைக்கின்றார், அல்வா கடையில் அத்தான் நிற்கின்றார், சென்னை சில்க்ஸில் படியேறூம் போது அத்தான் என்னை பின் நோக்கி கொண்டே என் முன்னே செல்கின்றார், பட்டு சேலை நோக்கும் போது என்னருகில் வந்து நின்று நோக்குகின்றார்.  என் மனபிராந்தி என்று  ஓயும்  எனக்கு தெரியாது. அத்தான் நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும் கொடியதாக உள்ளது. 


வாழ்க்கையை பற்றிய எல்லா நம்பிக்கையும் ஆசையும் உங்களுடனே வந்து விட்டது.  யாரிடமும் சமரசப்படவும் விரும்பவில்லை  ஒரு போதும் எண்ணாத சம்பவங்கள் நடந்து விட்டது.  இனி  இதற்கு மேல் ஆகப்போவதற்கு ஒன்றும் இல்லை. கடந்த நாலு மாதமாக நான் கூறினதை  நீங்கள் ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை. உங்கள் அக்காவிடம் கூறியது போல் நான் குழந்தை கிணற்குள் இருந்து கத்தும் தவளை!   நீங்கள் கடைசியாக என்னை நோக்கியது கருணைப் பார்வை தான். உங்களை மாலையில் கொண்டு வந்த போது உங்கள் கண்ணை  திறந்து நான் நோக்கின போதும் அந்த கருணையை உங்கள் கண்ணில்  கண்டேன். 

சுபி அக்கா வானத்தில் தனியாக மின்னிய ஒரு நட்சத்திரத்தை காட்டி தந்தார். அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். கடந்த மூன்று நாட்கள் மகிழ்ச்சியான நாட்கள். சுபி அக்காவிடம் மனம் விட்டு கதைத்துள்ளேன் அழுதுள்ளேன். அழுகையே வராத எனக்கு இனி கண்ணீரின் நாட்கள் தான். தூக்கம் வரும் போது உங்கள் கழுத்தை பற்றினால் புழுக்கமாக உள்ளது என்று கூறீனீர்கள் என்றால் உங்கள் லுங்கியை பற்றி கொண்டு தான் தூங்கியுள்ளேன்.  எல்லா அன்பையும் பாசத்தையும் நீங்கள் விரைவாக தீர்த்து விட்டீர்கள் பாபா அத்தான். 

உங்கள் பிரிவு இன்னும் நம்பும் படியாக இல்லை. அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் நான் எதிர்பார்த்தது தான். அந்த குறிப்பிட்ட நபரை வேலையில் வைக்காதீர்கள் என்றேன். ஆனால் அந்த நபருக்கு தான் உங்கள் அலுவலகத்தை  கொடுத்துள்ளீர்கள். அந்த நபரோ நீங்கள் இல்லை என்றதும் உங்கள் அலுவலகத்தையும் கைகழுகி விட்டுள்ளார். இன்னும் ஒருவனை நம்பாதீர்கள் என்றேன். அவனையும் வலது கையாக வைத்துள்ளீர்கள். பெரும் ஏமாற்றம்! நோக்கம் நன்றாகவே தான் உள்ளது. தேர்ந்தெடுத்த வழிகள் நம்மை பிரித்து விட்டது. 

உங்களை நேசித்த உங்களை மனதார நேசித்த எங்களை விட உங்களை கட்டுபடுத்தினது அந்த நயவஞ்சகர்கள், சூது பிடித்தவர்கள் என்று அறியும் போதும் மனம் கொந்தளிக்கின்றது. நீங்கள் பணப்பையில் வைத்திருந்த அந்த போட்டைவை 15 வருடங்களூக்கு முன்பு நீங்களே தீயிட்டு எரித்தீர்கள், பின்பு மறுபடியும் இந்த போட்டோ எப்படி  உங்கள் பையை வந்து அடைந்தது என எனக்கு தெரியாது. 

எப்படி எல்லாம் வாழ வேண்டும் நினைத்தீர்களோ அப்படியே வாழ்ந்து விட்டோம். எங்கு எல்லாம் போக வேண்டும் என நினைத்தீர்களோ போய் வந்து விட்டீர்கள். இலங்கை செல்ல ஆசைப்பட்டது பாக்கி உள்ளது. இவ்வளவு பணத்தை நீங்கள் அந்த பண்ணாடைக்கு கொடுத்து மகிழ்ந்தற்கு சில உலக நாடுகள் சுற்றியிருக்கலாம். 

உங்கள் மூச்சு காற்றோடும், உடல் மண்ணோடும் கலந்துள்ளதாக வைரமுத்து எழுதியுள்ளார். https://www.youtube.com/watch?v=uUPFuJIa9qY மரணம் சாபத்தாலா விதியா என தெரியாது ஆனால் உங்கள் புண்ணீயம் எங்களை சேர உள்ளது.  எல்லோரிடமும் அன்பு வைத்தீர்கள், யாரிடமும் பகை இல்லை. பண ஆசைப்பிடித்த குலதெய்வதிற்கு பணமாக கொடுத்து விட்டீர்கள், வஞ்சகம் பிடித்த தம்பிக்கு நீங்கள் தெரிந்தே இரையாகி விட்டீர்கள். நான் விரும்பினது உங்கள் அன்பை மட்டும் தான். எனக்கு ஏக்கவும் அழுகையும் தந்து சென்று உள்ளீர்கள். எத்தனை வருடங்கள் உங்களை எண்ணி அழவேண்டும் எனக்கு தெரியாது. அத்தான் இந்த தண்டனை எனக்கு தேவையில்லை தானே? இப்போது என் பூர்வ ஜென்மங்கள் மேல் எனக்கு நம்பிக்கை வருகின்றது. மருமகளை கொன்ற பாவியாக இருந்திருப்பேனோ//? கணவனை மதிக்காத கொலைகாரியாக இருந்திருப்பேனோ? பெற்ற குழந்தைகளை கொன்ற இவ்விரக்கம் இல்லாத தாயாக இருந்திருப்பேனோ அல்லது வயதானவர்களை பட்டிணிக்கிட்டு கொன்ற  கல் நெஞ்சக்காரியாக இருந்திருப்பேனோ/?


அத்தான் இந்த தண்டனை எனக்கு கொடியது. எனக்கு தாங்க இயலாத சோதனை!  அத்தான் இந்த கொடிய சூழல் எனக்கு வேண்டியிருக்க தேவையில்லை.  . உங்கள் அம்மாவை மருத்துவ மனையில் வைத்திருந்த போது ஒரு நாள் முழுதும் தீவிர சிகித்சைப்பிரிவின் முன் காத்திருக்காமல் இருந்திருக்கலாம். உங்கள் விருப்பத்திற்கு இணங்க  நம்ம வீட்டில் வைத்து 15 நாட்கள் கவணிக்காது இருந்திருப்பேன். இப்படி எல்லாம் வரும் என்று தெரிந்திருந்தால் என்னை மதிக்காத உங்கள் அப்பா மரணக்கிரியைக்கு நான் வராது இருந்திருக்கலாம். அத்தான் நீங்கள் பரலோகம் சேர்ந்து விட்டீர்களாம்.  நீங்கள் யாரிடமும் தோற்கவில்லை. வாழ்க்கையின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த போது ஒரு மின்னலாக மறைந்து விட்டீர்கள். நான் தான் மரணத்தை பற்றி உங்களிடம் கதைத்துள்ளேன். நீங்கள் மரணத்தை பற்றி நினைத்ததே இல்லை. விபத்து மரணம் என்பது சில பின்புலன்கள், குடும்ப சாபத்தின் நீட்சி என்று கருத்து உடையவர் நீங்கள்.  உங்களுக்கு விபத்து வரப்போவதில்லை என தீர்க்கமாக நம்பியவர். அதுவே நான் பைத்தியமாக இப்போதும் புலம்புகின்றேன் . 

 

5 comments:

Swathi Swamy said...

நேசத்துக்குரியவர்களின் இழப்பில் ஆறுதல் சொல்லவியலாத கையறு நிலையைக் கொடுத்த இறைவனை சபிப்பதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை சகோதரி. :(

Bama Ithayakumar · Vancouver, British Columbia said...


உங்கள் சோகம் தீரப் போவது இல்லை, அதை காலதேவன் தான் தீர்த்து வைக்க வேண்டும். நீங்கள் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்

Subbiah Ravi said...

தத்துவம் பேசுவது எளிது,ஆனால் சாத்தியபடுதுவது கடினம்.உலகில் உள்ள நீதி/மத நூட்கள் அனைத்தும் ஒரு வகையில் தத்துவ நூட்களே!பல நேரத்தில் தனி மனித எதார்த்தத்திற்கு ஈடு கொடுபதில்லை.வேண்டியவர்களை பிரிவதும் இத்தகையதே!எந்த தத்துவமும் ஈடு செய்ய இயலாது.கால தேவன் இதற்குதான் மறதி என்ற அரு மருந்தை படைத்தானோ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உயிரானவரின் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது. விதி வலிது.ஆறுதல் அடையுங்கள் காலம் கொஞ்சம் காயங்களை ஆற்றும்

J P Josephine Baba said...

பின்னூட்டம் ஊடாக என்னை ஆறுதல்படுத்திய நண்பர்களுக்கு வனக்கம் நன்றிகள்

Post Comment

Post a Comment