header-photo

அத்தான் என் கடவுளே ........................நிம்மதியை தாருங்கள்.

பல சூழல்களில் இந்த வீட்டில் வந்து மாட்டி கொண்டோமே என்று கவலை கொண்டாலும் அத்தான், நீங்க அந்த வீட்டில் ஓர் மாணிக்கமாக இருந்தீங்க. மற்றவர்களை தூற்றுவது குறைபடுவது எகத்தாளம் கொள்வது என்று இருக்கும் வீட்டில் உங்களுக்கு  யாரையும் குறைபடுவதையோ அடுத்த வீட்டு கதை பேசுவதோ  ஒரு போதும் விரும்பாதவர் நீங்கள். 

உங்க தாரக மந்திரமே மகிழ்ச்சியாக இருப்பது என்பதாகவே இருந்தது. உங்களுடன் நிறைய இடம் பயணப்படுவேன் என்றிருந்த எனக்கு  உங்களுடன் இருந்த பாணவர்மேடு ஓர் சொர்கமாகத்தான் இருந்தது.   பாண்டவர்மேடு ஓர் அழகான இடம். ஊட்டி போன்ற காலநிலை. காலை பத்து மணி வரை பனி நகராது.  காட்டு பற்றிகளை காணலாம். வண்ண மயமான பட்டத்தி பூச்சுகள் சுற்றும் இடம். காணும் இடம் யாவும் உயர்ந்த அடந்த மரங்கள். அந்த மரத்தின் பழங்களை பறித்து தின்ன வரும் அழகான வெள்ளை வெளீர் குரங்குகள் . பாம்புகள் அணிவகுப்பு தான் கொஞ்சம் பயப்படுத்தியது.

நீங்கள் அலுவல் முடித்து விட்டு வரும் ஐந்து மணிக்கு சாயா  குடித்து விட்டு நடைபயணம் கிளம்பி விடுவோம். உங்கள்  கையை பிடித்து கொண்டு காட்டு வழியாக நடந்து நாம் வீடு வந்து சேருவோம்.  அந்த நடையில் உங்கள் பெற்றோர் பேச்சு எடுத்தால் பிடித்த கையை விலக்கி கலவரமாகத்தான் வீடு வந்து சேருவோம். நமக்காக நமக்கு வாழத்தெரியவில்லை அந்த முதன்மை நாட்களில். நீங்கள் உங்க பெற்றோருக்கு வக்கீலாகவும் நான் என் பெற்றோருக்கான வக்கீலாகவும் வழக்காடி கொண்டிருந்த காலமாக இருந்தது. 

வார நாட்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருந்து விட்டு அந்த வார இறுதியில் நாம் தாமே நம் செலவில் சூனியம் வைப்பது போல் உங்கள் வீட்டு சிறைச்சாலையில் வந்து அடைவோம். அந்த ஐந்து நாள் மகிழ்ச்சியையும் கெடுப்பது போல் உங்க தாயார் இரண்டு நாட்களில் நமது முதுகில் வருத்ததின் அவமானத்தின் மூட்டையை ஏற்றி அனுப்பி விடுவார்.  அத்தான் எல்லாம் அவமானங்களையும் சுமந்து பழகிய உங்களுக்கு இது பெரிய விடையாமாக் தெரியவில்லை என்றிருக்கலாம். ஆனால் என் சமநிலையை தவற செய்த காலமாக இருந்தது.

என்னவெல்லாம் பிரச்சினகளை நம் வாழ்க்கையில் சந்தித்தோம். ஒரு பிள்ளையை பெற்று எடுக்க ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும் என்ற கட்டளையை மீறித்தான் நம் மகனுக்கு பிறவி கொடுக்க இயன்றது. உங்க அம்மா அனுமதி பெறாது என் நகைக்ளைக்கூட அணிய இயலவில்லை.. வாராவாரம் வந்து நம்மை இம்சிப்பதற்கு என்றே உங்க சகோதரனும் வந்து விடுவான். அவனுக்கு அன்றிருந்தே நாம் இருவரும் மகிழ்ச்சியாக சேர்ந்து இருந்தால் பிடிக்காது.  நீங்க போகும் நான்கு மாதம் முன்பு கூட எனக்கு உங்களிடம் சந்தேகம் என்று சண்டை மூட்டி விட முயன்றான் தானே அத்தான்.அத்தான் உங்களை வைத்து அப்பாவிடம் பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டனர். என்னையும் ஒரு கருவியாக பயண்படுத்த பார்த்தனர். நாம் உதவவில்லை என்றதும்  நாம் இருவரையும் துரத்தி அடித்து விரட்டினர். நம் திருமணம் முடிந்து ஆறுமாதத்திலே உங்களையும் என்னையும் சந்திக்க விடாது என்னை என் வீட்டில் கொண்டு விட்டவர்கள் தானே உங்க பெற்றோர்.

அத்தான் அவர்கள் தடையும் மீறி ஒரு நாள் அரைக்கிலோ திராட்சைப்பழம் கொண்டு தந்து விட்டு ஓடினீர்கள். ஆகா அத்தானுக்கு நம்மிடம் பாசம் உண்டு என தெரிந்து நானே என் பெட்டியை எடுத்து கொண்டு உங்களை தேடி உங்க வீடு வந்து சேர்ந்தேன். அப்போதும் என்னை கட்டியணைத்து வரவேற்ற நீங்கள் பின்பு தள்ளி விட்டு எங்க அப்பா அம்மாவை உங்க வீட்டினர் அவமதித்தனரோ எனக்கூறி சண்டை போடவும் தவறவில்லை நீங்கள்.


நம் மகன் வயிற்றில் வளர வளரத்தான் நமக்காக நாம் வாழ கற்று வந்தோம்.. இன்று நீங்கள் போன பின்பும் நம் மகன் தான் உங்க இழப்பீட்டிற்கான வேலை எல்லாம் தன் வயதையும் மீறி செய்து வருகின்றான்.  அத்தான் ஒரு பக்கம் என்னை நன்றாக கவனித்து கொண்டே உங்க பெற்றோரிடம் மாட்டி விடுவது போல் தான் போகும் போதும் கண்ணே மணியே எனக்கூறி கொண்டு உங்க உழைப்பை எல்லாம் உங்க வீட்டில் இறக்கி வைத்து விட்டு சென்றுள்ளீர்கள். ஆனால் பிரயோசனம் இல்லையே அத்தான். உங்க பிள்ளைகளிடம் கூடவா  பேசக்கூடாது.  நீங்க அவர்களுக்காகத்தானே கடந்த எட்டு மாதமாக வாழ்ந்துள்ளீர்கள். ஆனால் நீங்க இறந்த அன்றே கையை உதறி விட்டு பறந்து சென்று விட்டனர் அத்தான். நீங்க கடல்  கரையில் வீடு கட்ட நினைத்தது தான் என்னால் பொறுக்க இயலவில்லை. பரவாயில்லை அத்தான். நீங்க ஏமாறவில்லை. உங்க மூத்த மகன் என்ற கடமையை திறம்பட செய்து முடித்து சென்று விட்டீர்கள்.

எங்களால் தான் நீங்க இல்லாத வீட்டில், நீங்க இல்லாத சாப்பாடு மேஜையில், நீங்க இல்லாத அறையில், வாழ முடியவில்லை. அத்தான் என்ன நேர்ந்தாலும் உங்க பிரிவு என்பது நடந்திருக்கக்கூடாது. இது தண்டனையா சோதனையா எனக்கு தெரியாது. ஆனால் எங்களை நட்டாத்தில் கொண்டு விட்ட மர்மம் தான் விளங்கவில்லை . 

அத்தான் நீங்க 40 வருடம் என்னை இருந்து கவனிக்க வேண்டியது 19 வருடத்தில் முடித்து போய் விட்டீர்கள். உங்களுடன் வாழ்ந்த அந்த அழகிய நாட்கள் என் வாழ்நாள் மொத்தம் போதுமானது. என்னால் இன்னும் தாங்க முடியவில்லை அத்தான். ஏன் என்னை விட்டு போனீர்கள். அது ஆண்வன் வகுத்ததா? நம் வாழ்க்கையில் முதல் பகுதியில் விட்ட தவறுகள் எல்லாம் சரிகட்ட இப்போது தானே முயன்று வந்தோம். அதனால் தான் கடந்த இரு மாதமாக உங்களை ஒரு கேள்வி கூட நான் கேட்கவில்லை.அத்தான் உங்க உயிர் மட்டும் இருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். உங்கள் முகத்தை பார்த்தே நான் சந்தோஷமாக இருந்து இருப்பேன். உங்களை என்னை விட்டு பிரித்தது தான் என்னால் தாங்க இயலவில்லை.

அத்தான் நீங்க எங்கும் போகக்கூடாது. உங்க அரவணப்பு, உங்க கருணை, உங்க அன்பு மட்டும் எனக்கு போதும். உங்களிடம் பேசாத கதைகளே இல்லை. உறக்கத்திலும் பாபா அத்தான், பாபா அத்தான் என்று ஏன் அழைக்கின்றாய் என்றீர்கள். அத்தான் இப்போதும் அத்தான் ஏன் இப்படி செய்தீர்கள் ஏன் என்னை விட்டு போனீர்கள் கடவுளே,  என் தெய்வமே, என்று உங்களை தான் அழைத்து கொண்டு இருக்கின்றேன், என்னை விட்டு பிரிந்து போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது. அத்தான் என் கடவுளே ........................நிம்மதியை தாருங்கள். 

1 comments:

மீரா செல்வக்குமார் said...

என்ன சோகம்?
வார்த்தைகளில் சில எழுத்துகள் காணாமல் போயிருந்த வருத்தத்தில் வாசித்துமுடித்தேன்..வாழ்க்கையையே தொலைத்திருக்கின்றீர்கள்..
வருந்துகிறேன் அம்மா..
ஆனால் எல்லாம் காலம் சரிசெய்யும் ..உங்கள் எழுத்தில் எந்த அலங்காரமும் இல்லை..ஆன்மா இருக்கிறது..எழுதுங்கள்..எழுங்கள்..

Post Comment

Post a Comment