3 Sept 2015

ஆறாத சோகங்கள் கொண்ட சில மரணங்கள்!

என் மாணவர் மனம் குமுறி அழுதது இன்று மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது. அந்நேரம் அவரை ஆறுதல்ப்படுத்தி அவர் கவலையை துலைப்பதை தடுப்பதை  விட அவர்  அழுது தீர்க்கட்டும் என விட்டு விட்டேன். பார்க்க தெனாவட்டாக எதையும் சந்திக்கும் துணிவுள்ளவர்கள் போல் காட்டி கொள்ளும் இளம் குழந்தைகள் மனதில் கிடக்கும் துக்கங்கள் என்னை ஆச்சரியத்தில்,ஆழ்த்தியது, மறுபுறம் சிந்திக்க வைத்தது. .

அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வேளையில் ஓர் புது தோழன் கிடைத்துள்ளான். ஏதோ சில காரணங்களுக்காக அவர் நண்பரிடம் சில நாட்களாக பேசவில்லை. நண்பன் பேருந்து பயணத்தின் போது பேச முயன்றுள்ளார்.  இவரோ தவிர்த்து விட்டார்.   ஏமாற்றமடைந்த நண்பன் பேருந்து படிக்கட்டில் நின்று  பயணிக்க நினைக்க, தவறுதலாக கீழை விழுந்து இறந்து விட்டார்.  நண்பனின் தாய் அழுதது, நண்பன் இறந்து கிடந்த கோர  காட்சி மறக்க இயலாது என் மாணவனை ஆறுதல் கொள்ளாத வண்ணம் கவலையில் ஆழ்த்தி விட்டது.   ஒரு வேளை நண்பனிடம் தான் பேசியிருந்தால் நண்பன் தன் அருகில் நின்றிருப்பானோ, விபத்து நடந்திருக்காதோ என்ற சிந்தனை அவர் மனதை குத்தி நோகடிக்கின்றது. அவர் குமுறி அழுத போது வகுப்பு தோழர்கள் இனி பேச வேண்டாம் என தடுத்தும் அவர் தன் சோகத்தை கொட்டி தீர்த்து விட்டு சென்றாலும் தன் இருக்கையில் சென்றும் அழுது கொண்டிருந்தார்.

அவர் நண்பர் இறந்தது  நண்பனின் கவனக்குறைவான பயண முறையால் மட்டுமே. ஆனால் பேசக்கூடாது என்ற தன் பிடிவாதம் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாகி விட்டது என்று எண்ணி இப்போதும் அழுது புலம்புவது மனதை கனக்க செய்வதாகத்தான் இருந்தது.

என் மாணவனின் நிலைவிட்ட அழுகை என் 20 வருடங்களுக்கு முன் என்னுடன் படித்த  தோழிகளை நினைவுப்படுத்தியது. ஒல்லியான அழகானவள் என் தோழி. அவள் பெயர் 'ரஞ்சனி' என்றிருந்தது . எப்போது சிரித்து கொண்டிருக்கும் போலுள்ள அவள் முகம் இன்று நினைவில் உள்ளது. அவள் சுருண்ட முடிகள் சுருளுகளாக அவள் கழுத்தை ஒட்டிய வண்ணமே இருக்கும். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள சுற்று மதிலற்ற குணற்றில் கால் வழுதி இறந்து கிடந்தாள் என அறிந்தோம்.   இனி அவள் வர மாட்டாள் என்ற உண்மையை புரிந்து கொள்ள  மிகவும் கடிமனபட்டோம். 

ஜெயாவை நினைத்தால் இன்றும் ஆச்சரியம். அவள் ஆண்களை போன்று தைரியமான பெண்.  நடப்பதில், பேசுவதில், அவள் செயல்களில் ஒரு வீரம் இருக்கும். உயரம் குறைந்து இருந்தாலும் ரவுடி பசங்களை அடித்து விடுவாள். செம்பட்டை  நிறத்திலுள்ள கூந்தலை குத்தலாக கட்டியிருப்பாள். அவள் சகோதரி ஒரு சம்மனசு போல் தோற்றம் கொள்ளும் முகம். நீளமான கால் எட்டும் வரையுள்ள முடி கொண்ட பெண். அவள் என் சகோதரர் வகுப்பு தோழி என்பதால் சிரித்து கொண்டே செல்லும் முகம் நிதம் கண்டுள்ளேன்.  .அவர்கள் சகோதரர்கள் பள்ளிக்கு வருவதே ஓர் அழகு. அவளுடைய இளைய  தம்பி புத்தககட்டை இவளே சுமந்து வருவாள்.  அவர்கள் பள்ளிக்கு சேர்ந்தே வருவார்கள். தம்பியும் தங்கையும் ஆங்கில பள்ளியில் படித்தனர். இவள் அரசு பள்ளியிலும் எங்களுடன் படித்தாள். அவளும் அவள் சகோதரிகள் மூன்று பெயரும் ஒரே நாள் தற்கொலை செய்து இறந்தது  இன்றும் நடுக்கும் நினைவுகளாகவே உள்ளது.  ஒரு தாயிமன் மேலுள்ள கோபம் இந்த நிலைக்கு இவர்கள் நாலு பேரையும் எட்ட வைத்தது  மகா துயரே!

அந்த எஸ்டேற்றில் இருந்த பாசனவசதிக்கான குளத்தில் சாடும் முன் அவர்கள் உடைகள் விலகாத வண்ணம் செப்டி பின்னால்(ஊக்கால்) உடையை சரி செய்து வைத்திருந்தனர்.  இருந்தும் அவர்கள் இறந்த போது அவர்களை கரையில் கொண்டு இட்டு பரிசோதித்ததும் அவர்கள் அணிந்த உடைகள் பற்றி பின்பு சிலர் கதைத்த கேட்டு அவர்கள் மரணப்பட்டதை விட வருந்தினேன். பல காரணங்கள் கொண்ட பல மரணங்கள் நம் வாழ்க்கையில் கண்டிருந்தாலும் நம் பள்ளிப் பருவத்திலுள்ள சில மரணங்கள் அழுத்தமான சில நினைவுகளை நமக்கு தந்து தான் செல்கின்றது.  நினைவுகளுடன் சில குற்ற உணர்ச்சியும் சேர்ந்து தத்தளிக்கும் என் மாணவரை தேற்ற வழியற்று நானும் துன்புறுகின்றேன்  இன்று !

5 comments:

  1. உண்மைதான் சகோ...

    ReplyDelete
  2. மரணம் ஓரு நிலை மாற்றமே!எப்படி பிறப்பு தானாக அமைகின்றதோ மரணமும் தானாக அமைய வேண்டும்.ஆனால் தேடியும் கவன குறைவாகவும் அதை தழுவுவது கொடுமை,தவறும் கூட.மரணத்தை தன் வழியில் பூரணமாகி சந்திகின்றவன் தான் நிறை மனிதன்

    ReplyDelete
  3. https://www.facebook.com/lawrence.joseph.967September 04, 2015 8:38 am

    who can determine one's destiny..? Everything is in His hands......It was his time to go......although very painful for us now........but he need not feel guilty about it.....it has happened not because of him nor because of the carelessness of his friend......it has happened because it had to happen.....painful events are part of life although hard to accept.....Let your student continue his life with new vision, enlightening the lives of many other friends who long for love, care and concern...Let his friend live in him....through his kind gestures..

    ReplyDelete
  4. நமக்கு தெரிந்தவர்களின் மரணம் வாழ்வில் பெரும் மாற்றத்தை தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது, மரணம் மட்டுமல்ல மரணம் பற்றிய உங்கள் பதிவும் மனத்தை கணக்க வைத்துவிட்டது....

    ReplyDelete