header-photo

மனிதம் மரிக்கின்றது!

பாடசாலையின் முதல்வரான 72 வயது அருட் சகோதரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கொடூரமான நிகழ்வு. பாலியல் வல்லுறவு என்பது எந்த பெண்ணாலும் ஏற்று கொள்ள இயலாதது. ஆனால் முதி வயதில் இருக்கும் ஒரு பெண்ணை அவரின் அடையாளத்தை மதிப்பை சிதைக்கும் நோக்குடன் நடந்தேறியுள்ளது. 
 இந்தியாவில்  இச்சம்பவம் நடைபெற்றதை பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைஉலகில் மிகவும் ஆபத்தான   டெல்லி நகரை தலைநகரமாக  கொண்டவர்கள்.  தென் ஆப்பிரிக்கா அமெரிக்காவிற்கு அடுத்த படியாக பாலியல் வல்லுறவு நடக்கும் மிகவும் மோசமான நாடுகளில் மூன்றாவது இடத்தை  சேர்ந்தவர்கள். நிமிடத்திற்கு 20 பேர் பாதிப்பிற்கு உள்ளாகுவதாக தரவுகள் தெரிவிக்கின்றது.

 ஆனால் பொதுவாக பெண்கள் தாக்கப்படும்  காரணமாக சொல்லப்பட்டது பெண்கள் அறைகுறை ஆடையுடன் நடந்து தங்கள் இச்சயை தூண்டி விடுவதால் தான், வீட்டில் இருக்க வேண்டிய பெண்கள்  இரவில் தெருவில் நடைமாடுவதால் என பல கருத்துக்களை மழை போல் சொரியும் வேளையில் துறவி உடையில் இருந்த வயதான பெண்மணியை தாக்குவதற்கு எந்த உணர்வு இவர்களை தூண்டியது என நாம் அறிய வேண்டியுள்ளது.

 இளம் வயது கல்லூரி மாணவியை தாக்கியவர்கள் இந்தியாவின் உலகமயமாக்கலின் விளைவாக உருவான புரக்கணிக்கப்பட்ட சேரி போன்ற இடங்களில் குடி இருந்தவர்கள், கல்வியறிவு அற்றவர்கள், குடிகாரர்கள் வேலைக்க்காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு , சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்து அடையாளமற்ற  உள்ளூர் அகதிகள் என பல அடையாளங்கள் இருந்தன.

 ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் கூப்பாடு போட்டு அடங்கி விடாது இந்த சமூகத்தை பிடித்துள்ள நோயை பற்றி ஆழமாக துருவ வேண்டியுள்ளது.   துறவி சகோதரி, ஒரு ஆசிரியையாக பணியாற்றுபவர் முதிய வயதில் இருந்தவர் என எந்த காரணவும் குற்றவாளிகளை பின் செல்ல வைக்கவில்லை. ஏற்கனவே உடன் படித்த மாணவிகளிடம்  தவறாக நடந்த மாணவருக்கு தண்டனை கொடுத்த காரணம் கொண்டு இவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது . பள்ளிக்கு வெளியில் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டியிருந்துள்ளனர்.  இவர் காவல்நிலையத்திற்கும் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கு வேலை பார்த்த காவலாளிகளை வேலையை விட்டு நிறுத்தியதிலும் பிரச்சினை இருந்துள்ளது.

பெண்களை தண்டிக்க பாலியல் வல்லுறவு என்ற ஆயுதம் இந்திய கலாச்சாரத்தில்  புதிது அல்ல. சமீபத்தில் சார்கண்டு மாநிலத்தில் திருமணமான பெண்ணிடம் தவறான நடந்த ஆணின் தங்கையை; அப்பெண்ணின் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளக்கப்படும் தண்டனை கிராம தலைமையயால் கொடுக்கப்பட்டது  நாம் தெரிந்ததே.  பழம் காலங்களிலும் போரில் தோற்ற அல்லது நாட்டில் கிளர்ச்சி செய்து தோற்றவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வேற்று இனத்தவர்களுக்கு கொடுத்து  அந்த பெண்களின் தந்தை சகோதரர்கள், கணவனை அவமதிக்கும் வழக்கம் இருந்துள்ளதை வரலாற்றில் படித்துள்ளோம். ஆனால் இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் என்பவர் இந்த சமூக வளர்ச்சிக்காக பொது நலனுக்காக தன் குடும்பத்தை தனக்கான உறவுகளை துறந்து துறவியாக வாழ்ந்து வந்தவர். குற்றவாளிகள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்றாலும் எந்த இனத்தை சேர்ந்தவர் என்றாலும் ஒரு முதிர் வயது பெண்ணிடம்  நடந்து கொண்ட இக்கொடும் செயல்  . வருந்ததக்கது.

தொடர்ந்து சம்பவிக்கும் நிகழ்ச்சிகளை அவதானிக்கும் போது  இந்திய ஆண்களுக்கு ஏதோ ஒரு மரபணு மாற்றம் நிகழ்ந்து வருவதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாறி வரும் சமூக அமைப்பா அல்லது புரக்கணிக்கப்படும் மக்களின் எதிர் வினையா அல்லது உணவு பழக்க முறையால் ஏற்படும் ஆண்மைக்குறை சிக்கலா என்றும் நோக்க வேண்டியுள்ளது.

ஒரு காட்டமான கருத்தை பகிர்வதாலோ தண்டனை கொடுப்பதாலோ இது போன்ற நிகழ்ச்சிகளை தடுக்க இயலுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற குற்றவாளிகளில் குடும்ப பிண்ணனி மன உளவியல் நிலையை பற்றி ஆராய்ந்து தகுந்த முன் எச்சரிக்கையில் இறங்காவிடில் பெறும் ஆபத்தை தடுக்க இயலாது.


பல நினைப்பது போல பெண்- ஆண்கள் கல்வி பெறுவதாலோ விழிப்புணர்வு பெறுவதாலோ எந்த முன்னேற்றவும் ஏற்பட போவதில்லை. அடிப்படையாக சமூக அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை புரிதல் வர வேண்டியுள்ளது. மேலும் குற்றத்தை சில குற்றவாளிகளில் மட்டும் ஒதுக்காது இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்ற ஆராய்ந்து அறிவது மூலம் உணவு முறையில், வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவது மூலம் மடுமே தீர்வு காண இயலும். பெண்ணியம் சார்ந்த பெண்ணியல் கருத்தியல் போன்றவை இது போன்ற சிக்கலான ஆண்களை தடுத்த நிறுத்த உதவாது.

குடும்பம் என்ற அடிப்படை சமூகம் மேம்படுத்த வேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் வன்முறை, நம்பிக்கை இன்மை, தன்நலம்,  மலிந்து கிடக்கின்றது.  அன்பு என்ற உயரிய நிலை குடுமபத்தில் கூட இல்லாத  சூழல் தான் உள்ளது. இவையும் கயவர்கள் உருவாக காரணமாகின்றது.  அடிப்படையில் வன்முறையை அனுபவித்த, வன்முறையால் வளர்க்கப்பட்ட  நபர்களால் திரும்ப இச்சமூகம் இதே வன்முறையால் பாதிக்கப்படும் போது அது ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருமாறுகின்றது. இந்தியாவில் விவசாயத்தின் அழிவு குடும்பம் என்ற அமைப்பின் உடைவுக்கு காரணமாகினது. குடும்பம் என்ற அமைப்பு சிதறியது பல தனி நபர்களின் மனம் உடைய காரணமாகியுள்ளது. தனி நபர்களின் நிலை இது போன்ற சம்பவங்களில் பிரதிபலிக்கும் போது அது சமூகத்திற்கு  ஒரு பெரும் பாதிப்பாக உருவாகின்றது.                                                இனியும் குற்றவாளிகள் நீதிபீடத்தின் முன் கொண்டு செல்லவில்லை. இந்த மாநிலத்தை ஆட்சி புரிவது ஒரு பெண் தான். இச்சூழலில் இந்த சம்பவத்தை கிருஸ்தவ கன்னியக மடம் மன்னிப்பு, பிரார்த்தனை என்று மட்டும் பார்க்காது தங்கள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. உலகின் மாற்றத்தை இன்னும் புரிந்து கொள்ளாது 30 வருட காலசக்கிரத்தின் பின் நின்று நோக்காது தங்கள் சேவையை பாதுகாப்புடன் முன் நடத்த முன்வர வேண்டும். . இச்சம்பவம் அரசியலாக, உரிம மீறலாக ஒரு மதத்திற்கு நேரான தாக்குதல் என்பதையும் மீறி மனிதம் மரிக்கின்றதா என சீர் தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

Beatiful-அழகானது

சமீபத்தில் கண்டு ரசித்த மலையாளப்படம் பியூட்டிபுஃல்.

அனூப் மேனோன், ஜெயசூரியா மேஹ்னா ராஜ் போன்றவர்கள் நடித்த கவித்துவமான அழகியல் சார்ந்து எடுக்கப்பட்டப்  படமிது.    

  சினிமா என்ற ஊடகத்தை ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டுமல்லாது ஒரு மாற்றத்தின், சராசரி மனிதனின் சிந்தனையை உலுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது.

 ஸ்டீபன் (ஜெயசூரியா)  ஒரு கோடிஸ்வரன் ஆனால் கழுத்திற்கு கீழ் எந்த இயக்கவும் அற்றவர். இவர் வாழ்க்கையை அலுப்பாக நோக்காது அதன் நல்ல பக்கங்களை மட்டும் உள்கொண்டு வாழ்ந்து வருகின்றார்.       இந்நிலையில் பாடகரான ஜோனை(அனூப் மேனோனை)       சந்திக்கின்றார்.  அவரை தான் கேட்க விருப்பும்  பாடல்கள்  பாடும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

ஜோன்  பணத்தின் பற்றாக்குறையுடம் மல்லிட்டு வாழ்பவர். ஆனால் தன் நட்பை பயண்படுத்தி ஸ்டீபனிடம் இருந்து  பண உதவி பெற விரும்பாதவர். இந்நிலையில் ஸ்டீபனை கவனிக்க ஒரு பெண் வருகின்றார். இவர் தன்னுடைய எளிமையான பாசமான அணுகு முறையால் இந்த இரு ஆண்ளள்ளையும் தன்  காதல் பார்வைக்குள்  உள்ளாக்குகின்றார்.  இவர்களில் யாரை உண்மையாக காதலிக்கின்றார், யாரை திருமணம் முடிக்கப்போகின்றார் என காண்பவர்கள் குழம்பும் வேளையில் இந்த பெண்  இன்னொருவனின் கள்ளக்காதலி; மேலும் ஸ்டீபனை கொலை செய்ய அமர்த்தப்பட்ட கொலையாளி என தெரிய வருகின்றது.

மறுபடியும் இந்த நண்பர்கள் வாழ்க்கை எந்த எதிர்பார்ப்பும் அற்ற  பாச- நேச உணர்வு கொண்ட  நட்பில்  கலந்து செல்கின்றது.  அனூப் மேனோனின் திரைக்கதையை பாராட்டாது இருக்க இயலாது. அவ்வளவு கச்சிதமாக வடிவமைத்துள்ளார்.

 மனித வாழ்க்கையில்  நிகழும்   , பாலியல் சிந்தனை, வேட்கை,        குற்ற மனநிலை போன்ற இயல்பான விடையங்களை இணைத்து அருமையான திரைப்படமாக கொடுத்துள்ளனர்.

அலட்டாத நடிப்பு தேவையற்ற உணர்வு போராட்டத்திற்கு,  காண்பவர்களின் உணர்வு சுரண்டலுக்கு இடம் கொடுக்காது, வாழ்க்கையின் நல்ல பார்வையுடன் செல்லும்  இத்திரைப்படம் எல்லோரும் பார்க்க வேண்டியது.

 மழைப் பாடல் 

தன் வசம் உள்ளதை நினைக்காது இல்லாததை பற்றியே சிந்தித்து வாழ்க்கையை வீணாக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியின் இருப்பிடம் எது என உணர்த்தும் திரைப்படம் இது.  காதல் சமூகம் என பெரிய பெரிய கருத்துக்களுடன் வரும் படங்கள் மத்தியில் மனித உலகின் அடிப்படையான மனிதனின் நுண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கை முழுதும் படுக்கையில் கிடக்க  நிர்பந்திக்கப்பட்டிருக்கும் கதாநாயகனின் கதையை நம்பி வெளிவந்த அழகான படம் தான் 'பியூட்டிபுஃல்'.     வாழ்க்கை அழகானது அழகான மனிதர்களின் மனதினால் என்று உணர்த்திய படமிது.                                        

பெண் என்றால் என்ன பொருள் என்ன?

இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் துவங்கிய ஆவணப்படம் ஒவ்வொரு நிமிடம் 22 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகுவதாக கூறுகின்றது. இந்த ஆவணப்படம் இந்திய பொதுபுத்திக்கு பண்பாட்டு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் மனநிலைக்கு கொடுக்கும் சம்மட்டி அடி!                  
குற்றவாளி தன் நண்பர்களை இவ்வாறாக அறிமுகப்படுத்துகின்றார். ராம் சிங் தன் அண்ணான் குடிகாரன் அன்றும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தான். பள்ளி வாகனத்தில் பணிபுரியும் இவனுடைய பொழுது போக்கு மற்றவர்களிடம் வம்பு இழுப்பது, அடிதடியில் கலந்து கொள்வது அளவுக்கு அதிகமாக குடிப்பது தான்.                                                                                                                       அடுத்த குற்றவாளி வினய். இவன் ஒரு உடல் பயிற்சி மையத்தில் பணிபுரிகின்றான். அவன் தன் உடல் ஆற்றலை வலுப்படுத்த ஊசிகளை தொடர்ந்து எடுத்து கொள்கின்றவன். தினம் ஒரு ஊசி போட்டு கொள்கின்றவன் இரு ஊசிகள் போட்டு கொண்டால் அவனை அவனுக்கே கட்டுப்படுத்த இயலாது பெண்களை துரத்துவது அவர்களை கேலி செய்வதுமே தன் பொழுது போக்காக கொண்டு வாழ்கின்றான்.                                                                                                  பவன் ஒரு பழக்கடை வியாபாரி. இவனும் இவர்களுடன் அரட்டையடிக்க பல பொழுதுகளில் சேர்ந்து கொள்வது உண்டு. அடுத்த குற்றவாளி அக்ஷ்ய தாக்கூர். குழந்தையும் மனைவியும் உள்ள இவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்.  அடுத்தது தந்திரமாக பயணிகளை பேருந்துக்குள் ஏற்றும்  18 வயது நிரம்பாத அந்த பொடியன். அவன் தான் ராம்குமாருடன் சேர்ந்த அந்த பெண்ணை மிகவும் கொடுமையாக நடத்தினவன். வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி "தான் குற்றத்தில் நேரடியாக தொடர்புடையவன் அல்ல பேருந்தை நிறுத்தாது ஓட்டியது மட்டுமே தன் பணியாக இருந்தது என தன் நிலைப்பாடை கூறுகின்றான். இந்த குற்றவாளியின் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லை, பயவும்  இல்லை. இது என்ன பெரிய குற்றம்! பண்பான பெண்கள் இரவில் ரோட்டில் நடமாட மாட்டார்கள், இது போன்ற நிகழ்வுகளுக்கு பெண்களே ஆண்களை விட பொறுப்பாகுகின்றனர். ஆண்களும் பெண்களும் சமமல்ல, மோசமான உடையணிவதே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம். மேலும் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள் என தன்  மனநிலையை அடுக்கி கொண்டே போகின்றான்.  அந்த பெண் எதிர்க்காது இருந்திருந்தால் நாங்கள் இது போன்று கொடூரமாக நடந்திருக்க மாட்டோம். இது போன்ற நிலையில் பெண்கள் அமைதியாக தாங்கி கொள்வதே சிறந்தது என மிகவும் நிதானமாக கண்ணில் எந்த சலனவும் இல்லாது உபதேசிக்கின்றான். மேலும் தன்னை போன்ற குற்றவாளிகளை தண்டிப்பதால் குற்றம் குறையாது மேலும்  பாதிக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதற்கே வாய்ப்பு உண்டு என தன் சட்ட நியாயத்தையும் விளக்குகின்றான்.

இவன் இவனுடைய கூட்டாளிகளின் குடியிருப்பை காட்டுகின்றனர். மனிதர்கள் மாக்களை போன்று திங்கி வசிக்கும்  ஒரு அழுக்கு படிந்த காலனி.  சமூகத்தின் எந்த கட்டுப்பாடு மற்ற எதிர் நோக்கும் இல்லாது வாழும் சூழல். இந்தியாவின் குடிசை மாற்று கட்டிடங்கள் இது போன்ற காலனிகளை நகரமெங்கும் உருவாக்குகின்றது என்ற உண்மை ஒருபுறம் இருக்க  தூக்கு கயற்றில் இருந்து தப்பிக்க இவன் உளறுகின்றானா அல்லது ஜெயில் சாப்பாடு ஊக்கம் அளித்து விட்டதா என நாம் சிந்திக்கும் வேளையின் உண்மையான குற்றவாளிகள் அது தான் இந்த குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் காட்சிக்குள்  வருகின்றனர்.  

இவர்களை போன்றவர்கள் கல்வியறிவு பெற்று என்ன பலன் உண்மையான குற்றவாளிகள் அந்த 6 பேர் அல்ல இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் இந்த வழக்காளர்களே என்று நோக்கும் போது நம் உள்ளம் வருத்ததால் பிளர்கின்றது. இந்திய பண்பாடு, உடை, சமூகம் என என்னவெல்லாமோ ஆணித்தரமாக சொல்கின்றனர்.  குற்றவாளிகள் தாங்கள் செய்யும் குற்றத்தை உணராது புலம்பும் போது அந்த குற்றத்திற்கான மிகத் தெளிவான மிகவும் ஆணவமான சமூக அக்கறை அற்ற  பதில்களை இந்த வழக்காளர்களிடம் இருந்து பெறலாம்.

 பெண் என்பவர்கள் பூ போன்று மென்மையானவர்கள் அவர்கள் தங்கள் ஆசைக்கானவர்கர்கள். ஆலயத்தில் இருக்கும் பூக்கள் மட்டுமே வணங்க தகுந்தது.  தெருவில் கிடந்தால் மிதிக்க தான் செய்வார்கள் . அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.  பெண்கள் வைரம் போன்றவர்களாம் பாதுக்காக்காது தெருவில் கிடந்தால் நாய்கள் எடுத்து கொள்வதாகவும் ஆண்களோ வலிமையானர்கள் அவர்கள் கல் போன்றவர்கள் பெண்கள் என்பவர்களை  செக்ஸ் சிந்தனையோடு தான் ஆண்கள் முதலில் பார்ப்பதாகவும், பெண்களுக்கு நமது சமூக அமைப்பில் இடம் இல்லை என்ற அரிய கருத்தை ஏ.பி சிங் என்ற சட்ட வல்லுனர் கூறுகின்றார்.                                                                                                                                      எம் எல் ஷர்மா என்ற வழக்கறிஞரோ மேலே ஒருபடி சென்று  இந்திய கலாச்சாரத்தை கைவிட்டதே இது போன்ற நிகழ்வுகளுகு காரணமாக சொல்கின்றார். இரவில் பொது வேதிக்கு ஒரு பெண் ஏன் அன்னிய ஆணுடன் வர வேண்டும் என கேள்வி எழுப்பும் அவர் தன் வீட்டில் இருக்கும் பெண்கள் வழி தவறினால் பெட்ரோல் ஊற்றி கொளுத்துவதாக சூளுரைக்கின்றார்.

 ஜோதி சிங் என்ற பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் துக்கத்தை தங்கள்  மகளின் கனவை பற்றி விவரிக்கின்றனர். அவர்கள் துக்கம் தாங்க இயலா மாபெரும் துயர். ஜோதியின் அம்மா கூறுகின்றார் என் மகள் எங்களுக்கு ஒளியாக வந்தவள் என்ற அர்த்ததில் ஜோதி என்ற பெயரை சூட்டினோம். அவர் அப்பா இப்படியாக முடிக்கின்றார் என் மகள் விழிப்புணர்வு கொடுத்து கொண்டு இந்த உலகை விட்டு ஜோதியாக சென்றுள்ளார். ஆனால் என் மகள் இந்த சமூகத்திடம் விட்டு செல்லும் கேள்வி பெண் என்பவளின் பொருள் என்ன என்பதாகும்.

ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஜோதிக்கு படிக்க வேண்டும் மருத்துவராக வேண்டும். தன் கிராம மக்களுக்கு  சேவை புரிய வேண்டும் என்ற ஆசை. தன் மகளின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டி தன் குடும்ப சொத்தை எல்லாம் விற்று தன் மகளின் கல்விக்கு என  செலவழித்து கல்வியால் தங்கள் வாழ்க்கை செழிக்கும் என்று எண்ணிய பெற்றோருக்கு; இந்த சமூகத்தின் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு; கிடைத்த பதில் இந்த கொடிய முடிவு.                                                                 
ஜோதியின் ஆசிரியர் கூறுகின்றார் தன் கல்விச் செலவுக்கு என பகுதி நேரவேலை பார்த்து படித்து வந்த ஜோதி தினம்  4-5 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றார். பெண்களால் எல்லாம்  முடியும் என்று நம்பிய ஜோதி இனியும் 6 மாதம் பயிற்சிக்காலம் கடந்தால் ஒரு மருத்துவர். அந்த பெண் சமூக அக்கறையுள்ளவர். தன் பணப்பையை திருடிய சிறுவனுக்கும் அவன் விரும்பிய பொருட்கள் வாங்கி கொடுக்கும் நல்லுள்ளம் படித்த பெண்மணி.  

ஜோதியின் தவறென இந்த இந்திய சமூகம் சொல்லும் ஒரே குற்றம் ஆண் நண்பருடன் ஏன் சினிமாக்கு சென்றார் என்று தான். ஆனால் இன்றைய சூழலில் 8.0 என்பது நகர வாழ்க்கைக்கு இரவா?

சினிமா முடிந்து பேருந்துக்கான காத்து நிற்கின்றனர். ஆட்டொக்களை கைகாட்டியும் நிற்கவில்லை. அப்போது காலனை போன்று வெள்ளை நிறமான பேருந்து வந்து அருகில் நிற்கின்றது. சின்ன பொடியன் "வாங்க அக்கா" என கூறி பேருந்தில் ஏற்றுகின்றான். இருவரும் 20 ரூபாய் கொடுத்து தங்கள் பேருந்து கட்டணத்தை செலுத்து விட்டு இருக்கையில் அமரகின்றனர். குடி வெறியில் இருந்த ராம் என்பவன் இந்த நேரம் ஏன் இந்த பெண்ணுடன் பயணிக்கின்றாய் என கேள்வி கேட்கின்றார். ஆண் நண்பனோ ராமின் கன்னத்தில் அறைகின்றான். மேலும் இது உண்ணுடைய பணியல்ல என்று எச்சரிக்கின்றார்.  கோபத்தில் வெகுண்டு எழுந்த கும்பல் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நண்பனை அடித்து காலை ஒடித்து விட்டு பெண்ணை கூட்ட வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றனர். அக்கா என்று அழைத்த சிறுவன் தான் பின்பு அப்பெண்ணின் மரணத்திற்கும் காரணமாகின்றான்.

பேருந்தில் இருந்து இரும்பு கம்பியால் பெண்ணுறுப்புக்குள் குத்தியதில் சிறுகுடல் சிதந்து பெண் மரணப்பட்டாள் என்று பொலிஸ் கேஸ் இருக்க கை இட்டே குத்தினர் என்று வக்கீலும் குற்றவாளியும் கூறுகின்றனர். வக்கீல் மிகவும் சாதாரணமாக கையிட்டதை கூறியுள்ளான்.

இந்த ஆவணப்படத்தில் போலிஸ் வந்து பார்த்ததாகவும் உடன் மருத்துவ மனைக்கு சென்றதாகவும் கூறுகின்றனர். போலிஸ்காரர் கூட பிரசவமான பசுவின் கண் போல் பாதிக்கப்பட்ட பெண் பார்வை இருந்ததாக குறிப்பிடுகின்றார். அங்கு கூட ஒரு மிருகம் தான் துணையாகுகின்றது.


கல்வியறிவே தீர்வு என திருமதி சேத் கூறினாலும் வக்கீல்கள் பேச்சை வைத்து பார்க்கும் போது அதும் நம் நற்பாசை தான். படிக்காதவர் தவறா சரியா என தெளிவில்லாது பேசும் போது படித்தவன் தவறை சரி என காரணம் காட்டி வாதிடுவது கல்வி சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் எந்த பிரயோசனவும் இல்லை என்றே விளங்குகின்றது.  பாலியல் குற்றவாளி கூறும் அரிய செய்தி இந்தியாவின் பண்பாட்டுப்படி முத்தம் கொடுப்பது தவறாம் ..........                                                                                                                                                       இந்த வழக்கை பொறுத்த மட்டில் 17 நாட்களுக்குள் போலிஸ் தங்கள் வழக்கை விசாரித்து நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து விட்டனர். கடந்த இரு வருடமாக இந்த வழக்கை விசாரணக்கு உட்படுத்தாது நிலுவையில் வைத்துள்ளனராம். இது போன்ற நிகழ்வுகளுக்கு பெண் சிசுக்கொலை, கல்வி என பல காரணங்களை சமூக ஆவலர்கள் கூறுகின்றனர். ஆனால் சம்பவத்தை நிதானமாக அவதானிக்கும் போது நாட்டிலுள்ள ஏதோ ஒரு குடியிருப்பில் இருக்கும் கண்ணியமற்ற குடிகாரர்களான  4 ஆண்கள் நினைத்தால் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கான காரணத்தை வழக்காளர்கள் வாதிட்டு கொள்வர்கள்.                                                                                                                                                                                    பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த வேதனையை புரிந்து கொள்ள பெண்களால் மட்டுமே இயலும். ஆனால் குற்ற வாளிகளை ஏற்று கொள்ள பெற்றோர்கள் மனைவியர் காத்திருக்கின்றனர். மகளை இழந்த பெற்றோருக்கு எந்த நிம்மதியும் இல்லை நீதியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதுப்பெயர் சூட்டுவது  வழியாக அரசு தப்பிக்க பார்க்கின்றது.                                                                                                                                        இந்த வாக்குமூலத்தை மிகவும் ஆழமாக பரிசோதித்தால் இந்திய சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் மிகப்பெரிய ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. 50% மேல் மக்கள் வறுமையில் வாழ்வது அவர்கள் தலைமுறையில் இது போன்ற தலை திரிவான பைத்திய மகன்கள் உருவாகத்தான் போகின்றார்கள். இன்னும் ஒரு ஆபத்தான ஆய்வு அறிக்கையை குறிப்பிடுகின்றனர் இந்திய பார்லிமென்றில் இது போன்ற குற்றவாளிகள் 250 பேர் இருப்பதாகவும் இவர்கள் போன்ற ஏழைகள் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாகுவதாகவும் கேள்வி எழுப்புகின்றனர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 200 ல் 12 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வழக்கியுள்ளனர்.     அரசியல் காரணங்களுக்கு என மக்களை பிரிக்க அவர்களை சேரிகள் என வேற்திரிவாக குறிப்பிட்ட இடங்களின் காலனி என்ற பெயாரில் தங்க வைக்க     அளவுக்கு அதிகமான சுதந்திரம் கூட்டு வாழ்க்கை வறும்சி இது போன்ற குற்றங்களூக்கு காரணமாகின்றது என்றால் மறுக்க இயலாது. பல கோடி மக்கள் வேலை வாழ்வாதாரம் என சொந்த ஊர்களை விட்டு நகரங்களில் குடிபெயர்வதும் அவர்கள் குடுபம் என்ற அமைப்பு சிதைவதும் ஒரு காரணம் தான்.                                                                                                                                                                       இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் லெஸ்லீ எட்வின் ஆனார். இவரும் தனது 19 வயதில் பாலிய வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆவணப்படம் உலகம் ஒட்டுமுள்ள சில ஆண்கள் மனநிலையை புரிந்து கொள்ள பெண்களுக்கான வழிக்காட்டியாகும். பெண்கள் இன்னும் மன வலிமை பெற வேண்டியுள்ளது. இதை எழுதி முடிக்கும் போதும் என் மனதிலும் அதே கேள்வி தான் எழுகின்றது  ஆண்கள் பார்வையில். "பெண் என்றால் அதன் பொருள் என்ன ? பூ வைரம் என்ற பஞ்சாங்கத்தை பாடி ஏமாற்றாது பெண்ணை ஒரு மனிதையாக ஏற்றுகொண்டாலே போதும். இந்த ஆவணப்படம் ஒரு சராசரி  இந்திய ஆணின் மனநிலையை சரியாக வெளிச்சம் காட்டியுள்ளது.                                                                                     இந்த ஆவணப்படம் ஒரு உண்மை சம்பவத்தை நுணுக்கமாக ஆராய்ச்சியுடன்  மிகவும் நேர்த்தியாக தந்துள்ளது. இருப்பினும் ஜோதியின் ஆண் நண்பரின் தகவல்களையும் எதையும் சேர்க்க இயலவில்லை என்பது பெரும் குறையே. உத்தரபிரேதசத்தை சேர்ந்த மின்பொறியாளரான இளைஞர் இன்னும் அந்த அதிற்ச்சியில் இருந்து மீள இயலாமல் பெண்கள் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய வார்த்தைகள் மிகவும் தேவையும் பொருள் உள்ளதுமாக இருந்து இருக்க கூடியது. ஏன் புரக்கணிக்கப்பட்டார் என்று தான் தெரியவில்லை. அவர் கொடுத்த தகவல்படி பொதுமக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தாலும் உதவ முன்வரவில்லை என்பதாகும். வெறி பிடித்த ஆண் மனம் மட்டுமல்ல இந்த சமூகத்தின் மனவும் தூய்மையாக வேண்டியுள்ளது.