9 Jan 2015

உடை ஆளுமை!

பெண்கள் உடை அணிவது பற்றி பல கருத்துக்கள் நிலவும் வேளையில் பெண்களின் பெரும்வாரியான உடைகளின் வடிவமைப்பாளர்கள் ஆண்கள் தான் என்பதும் அறிய வேண்டியுள்ளது.  பெண்கள் அழகாக உடையணிய வேண்டியதின் முக்கியம் அவர்கள் ஆளுமையிலும் உள்ளடங்கியிருப்பதால் சில கருத்துக்களை பகிரலாம் என்று தோன்றியது.
 

உடை என்றதும் தற்காலம் பல பெண்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது சீரியல் மற்றும் திரைப்பட நடிகைகள் அணியும்  உடைகள் தான். யாரையும் கண்மூடித்தனமாக பின் பற்றாது தனக்கு சரியான உடை தேர்ந்து எடுக்க வேண்டியது தன் உடலுக்கு பொருத்தம் தானா என்று முடிவெடுக்க வேண்டியதும் ஒவ்வொரு பெண்ணின் கடமையாக மாறுகின்றது.

உடை தேர்வு செய்வதில் பெண்ணின் புத்தி சாதுரியம், அழகியல் உணர்வு தன் ஆளுமையை பற்றிய சரியான புரிதல் மிக முக்கியமாக உள்ளது.. அறைகுறையாக உடை அணியும் பெண்களை அவதானித்தால் அவர்களுக்கு தன் உருவத் தோற்றம் மேல் தாழ்வு மனபான்மை உள்ளதாகவே காணலாம்..

உடை விடையத்தில் எது சிறப்பான உடை என்று எடுத்து கொண்டால் அதன் விலை மற்றும் ,  குறிப்பிட்ட மாடல் உடையை விட அதை அணியும் முறையை பொறுத்து தான் உள்ளது. இந்திய பெண்களின் கலாச்சார உடையான சேலையை கண்ணியமாகவும் உடுத்தலாம் போர்வை போன்றும் போத்தலாம். மிகவும் அச்சுறுத்தும் விதமாகவும்  அணியலாம் என்பதை கண்ணுள்ளோம்.

சேலை தேர்வு செய்யும் போது பருமனான பெண்கள் மிகவும் மெல்லிதான துணிவகைகளை தேர்வு செய்யாது இருப்பதே நல்லது.  குள்ளமான பெண்கள் வீதியான கரை வைத்த சேலை விட சிறிய கரை கொண்ட சேலை தேர்வு செய்யலாம். இளம் நிறம் கொண்ட சேலைகள் எப்போதும் இதமான  உணர்வை கொடுக்க கூடியது. சேலையை எந்த கலாச்சார சூழலில் வாழ்கிறோமோ அந்த சூழலிக்கு ஏற்ப , தங்கள் ஏற்பட்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப உடுத்த வேண்டியதும் அவசியமாகும்.  ஒரு வாடிக்கையாளர் அதிகாரியான பெண் தேர்வு செய்யும் அதே வகை சேலைகளை ஒரு ஆசிரியை தேர்வு செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது.

சில பெண்கள் மஞ்சள் கலர் சேலைக்கு கறுப்பு நிற பாவாடை அணிந்து செல்வதும் மிகவும் அபத்தமாகவும் அசிங்கமாகவும் தெரியும். சேலைக்கு ஏற்ற பிளவுஸ் உள்ளாடைகள் அணிவது அவசியமாகும். சேலையை தேவைக்கு அதிகமாக இறக்கி கட்டுவதும், கணங்காலுக்கு மேலாக கட்டுவதும் ஏற்க தகுந்தது, உகுந்தது அல்ல.

பெண்களை கவரும் விதம் விதவிதமான பிளவுஸுகள் (சட்டைகள்) மார்கட்டில் வந்துள்ளது. பெண்களின் பெண்மைக்கு மென்மைக்கு என்ன விலை? என்பது போன்று விற்கின்றனர்; சில வகையார் பிளவுஸ் சட்டைகளை. இது போன்ற உடைகள் அணியாது இருப்பது தான் நம் கண்ணியத்திற்கு அழகு. பிளவுஸ் என்பது மறைக்க வேளணியது மறைப்பதை விடுத்து கட்டம் போட்டு காட்டும் படியாக விற்கப்படுவதை பெண்களே உற்சாகப்படுத்துவது நல்லது அல்ல.  சில மணித்துளி நிகழ்ச்சிகளுக்கு தோன்றும்  தன்  ஆண் பாதுகாவர்களுடன் தீபிகா படுகோன் போன்ற மாடல் அழகிகளை பின்பற்றுவது சாதாரண குடும்ப சூழலில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு ஆனது அல்ல. 

சேலைக் கதையை விடுத்து அப்படியே வடக்கத்திய சுடிதார் பக்கம் வருவோம்.  தற்போது சேலையை விட பெண்கள் விரும்புவது சுடிதார்-பைஜாமா போன்ற உடைகள் தான். பல சூழலில் மிகவும் பாதுகாப்பானதும் சவுகரியமானதுமான உடைகள் இவையே. இந்த உடையை தேர்வு செய்யும் போது நமது வயதையும் மனதில் வைத்து தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். 35-40 வயதிற்கு மேலுள்ள பெண்களுக்கு தகுந்த சுடிதார் கிடைப்பதே அரிதாகி விட்ட நிலையில் சரியான அளவு பொருத்தமான மாடல் கிடைக்கவில்லை என்றால் ஏற்றபடி தைத்து கொள்வதே சிறந்தது.

லெக்கின்ஸ் போன்ற மாடல் எல்லா வயதினரையும் ஆக்கிரமித்த ஒரு மாடல் ஆகும். லெக்கின்ஸ் அணியும் போது இரு பக்கவும் வெட்டப்பட்ட மாடல் சுடிதாரை விட விரிவான வெட்டப்படாத ஆனார்க்கி மாடல் போன்ற சுடிதார் அணிபவதே உகுந்தது ஆகும். வெண்மை நிற லெக்கின்ஸ் தேர்வு செய்யும் போது தங்கள் வீட்டு கண்ணாடியில் ஒரு முறை பார்த்து விட்டு வெளியில் நடமாடுவதே நல்லது. பல போது அம்மாக்கள் கூட தங்கள் பதின்ம வயது பெண்களுக்கு மிகவும் கவர்ச்சியான உடை அணிவித்து நடப்பதை மிகவும் வருத்தத்துடன் கண்டு சகிக்க வேண்டியுள்ளது. பொதுவாக நம் தமிழக பெண்கள் உடல் அமைப்பு பருமனாகவே உள்ளதால் இவ்வித உடைகள் அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. 

சுடிதார் ஜீன்ஸ் போன்ற நவநாகரீக உடைகள் அணியும் போது உள்ளாடைகள் அணிய மறக்கலாகாது. உடலை கச்சிதமாக காட்ட பொருத்தமன  உள்ளாடைகள் மிகவும் அவசியம். பல பெண்கள் பெட்டிகோட் போன்ற உள்ளாடகள் அணியாது சுடிதார் போன்ற உடைகள் அணிவது அவர்கள் அழகை குறைத்து  காட்டும்  என்று மட்டுமல்ல அசிங்கமாகவும் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஜீன்ஸ் அணியும் போது இடுப்பு அளவு குர்த்தா போன்ற உடைகள் தான் பொருந்தி போகும். பல வயதான பெண்கள் தங்களுக்கு அணிய இயலவில்லை என்ற ஆதங்கத்தில் தங்கள் பதின்ம வயது குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதம் உடையணிவித்து பொது இடங்களில் நடமாட அனுமதிக்கின்றனர்.


கடைசியாக சொல்ல வருவது அனைவரும் செல்லமாக  அழைக்கும் இரவு உடையான  நைற்றியை பற்றி தான்.  நைற்றி என்பது இரவு உடை என்பது போய் சர்வ நேர உடையாக மாறி விட்டது.  காய் கறி சந்தையில் இருந்து நடை பாதை, பள்ளி வளாகம், ஆலையம், சுற்றுலாத் தலம் என நைற்றி புகிராத இடைமே இல்லை என்றாகி விட்டது. நைற்றி அணிவது தங்கள் வீட்டிற்குள் என ஒதுக்கி கொள்வதே சிறந்தது. 

4 comments:

  1. //பல மத்திய வயது பெண்கள் பெட்டிகோட் போன்ற உள்ளாடகள் அணியாது சுடிதார் போன்ற உடைகள் அணிவது அவர்கள் அழகை குறைத்து காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. //

    சுடிதாருக்கு எப்படி பெட்டிக்கோட் அணிய முடியும்? புரியலையே:(

    அப்புறம் நீங்க சொல்லும் நைட்டி என்பது பஸிஃபிக் தீவுகளிலும், இன்னும் பல வெள்ளையர் நாடுகளிலும் லாங் ட்ரெஸ் என்பதே.



    இதைத்தான் இந்தியாவில் நைட்டியாப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க.

    இங்கெல்லாம் ( நியூஸிலாந்து) நைட்டி என்பது வேறு மாதிரி.

    புடவையையே படு கேவலமாகக் கட்டுவதை இந்தியத் தொலைக்காட்சிகளில் பார்த்து நொந்து போயிருக்கேன்:(

    ReplyDelete
  2. சுடிதாருக்கு எப்படி பெட்டிக்கோட் அணிய முடியும்? புரியலையே:(துளசி கோபால் ஐயா உங்கள் சந்தேகத்திற்கு பதில் அளித்துள்ளேன். தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. பெண்கள் உடை விஷயத்தில் நவீனத்தை மட்டுமே பார்க்கிறார்கள்...
    உங்களின் அறிவுரையை ஒருத்தராவது கடைபிடித்தாலே ஆச்சர்யம் அக்கா...

    ReplyDelete