header-photo

விஜயகாந்து கூறினதில் எந்த தப்பும் இல்லை!...............


 

ஊடகங்கள் செயலை  கண்டு சிலர் காறி துப்புகின்றனர் திட்டுகின்றனர். சமீபத்தில் சென்னையில் மக்கள் வெள்ளப்பேரிடரால் துயருற்று இருந்த போது காட்சி ஊடகங்களில் செயல்கள் பல மக்களை அச்சத்தில் உள்ளாக்கியது வெறுப்புறச் செய்தது. நாங்கள் பொதிகைச்சானலை பார்த்து கொள்கின்றோம், உங்கள் சேவை எங்களுக்கு தேவை இல்லை என சொல்லும் அளவுக்கு தொலைக்காட்சிகள்  மக்களை துன்புறுத்தினர். 


வெள்ளப்பெருக்கு சமயங்களில் புதிய பல செய்தி சானலுகள் களத்தில் நின்று பணியாற்றிய போது நாம் காணும் பல பெயர் போன ஊடகவியாளர்களை களத்தில் காண இயலவில்லை. மழையில் காமிரா பழுதாகி விடுமோ, தாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோமோ என்று பயந்து எங்கோ ஒளிந்து கொண்டனர். வெள்ளத்துயரில் களத்தில் பணியாற்றிய சித்தார்த்,  ஆர் ஜெ பாலாஜி போன்றோரின் நிலத்தகவலை மறைத்து, களத்தில் பணியாற்றிய இளைய ராஜா போன்ற நல்லவர்களை பழித்து செய்தி பரப்புவதிலே உன்னிப்பாக இருக்கின்றனர். பல கோடிகள் சம்பாதித்த பல முன்னனி நடிகர்கள் தங்கள் வீட்டு சன்னலில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போதும் பல கோடி கொள்ளயடித்த சில நடிகர்கள் பத்து லட்சம் எறிந்து விட்டு ஒதுங்கி  போது  தன்னுடய  இயலாமையும் தாண்டி மக்களை நேரில் சந்தித்ததும் இல்லாது, ஒரு லட்சம் போர்வைகள் கொடுத்து உதவினவர் இசைஞானி இளைய ராஜா. வெள்ளத்தில் உதவின தன்னார்வர்களை பாராட்ட போனவரை தேவையற்ற கேள்வியால் கோபத்திற்கு உள்ளாக்கியது மட்டுமல்லாது,,  செய்தியாளர்,  அவர் வயதையும் மதிக்காது எரிச்சல் ஊட்டும் கேள்வியுமாக மறுபடியும் மறுபடியும் அவரை எரிச்சல் கொள்ள வைப்பதை நாம் கண்டோம். செய்தியாளர்களின் கண்டிக்க தக்க இச்செயலை எந்த ஊடக கல்வியல் புலத்தில் இருந்து கற்று வந்தனர்.  அடிப்படையாக ஒரு ஊடகவியாளர் சிறந்த மனித நேயனாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம்  மனித பண்பு கொண்டவராக இருக்க வேண்டும்.

எந்த செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற வகை தெரிவு இல்லாது செய்தி கொடுத்து கொண்டிருக்கின்றனர். பரபரப்பு செய்தி என்பது மட்டுமே தாரகமந்திரமாக இருந்தது. பேரிடரில் இருந்து தப்பிப்பது தற்காத்து கொள்வது போன்ற தகவல்கள் இல்லாது வெறும் வெற்று தகவல்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கும்  தகவல்கள்  கொடுப்பதில் போட்டி போட்டு கொண்டிருந்தனர்!  அங்கு வேடிக்கை பார்க்க வந்த அமைச்சர்களை காமிராவை வைத்து பூச்சாண்டி காட்டுவது என ஊடகத்தின் எல்லா அசிங்கமாக அராஜகமான கேவலமான பக்கங்களை காட்டிய ஊடகத்தை விஜயகாந்த் போன்றவர்கள், மக்கள் பக்கம் இருந்து துப்பியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
 
செய்தித்தாள்களை திறந்தாலும் வெள்ளப்பெருக்கு வேளையில் ஆபத்தில் இருந்த மக்களுக்கு உருதுணையாக இருந்த தன்னார்வு தொண்டர்களின் செயல்களை வெளிக்கொணராது பத்திரிக்கை நிறுவனங்கள் வழியாக செய்த உதவிகளை விளம்பரப்படுத்துவதிலே உன்னிப்பாக இருந்தனர். பொதுமக்கள் தன்னாவர்கள் வழி மக்களுக்கு சேர்த்த பொருட்களை கூட மக்களிடம் கொண்டு சேர்க்காது தடைகள் உருவாக்கின அரசியல் கட்சிகள் முகத்திரையை கிளிக்காது வெள்ளப்பெருக்கு வேளையில் திறம்பட செயலாற்றி மக்களுக்கு சேவை புரிந்த சிம்பு போன்ற நடிகர்களை தேவையற்ற ஊடகச்செய்திகள் ஊடாக அச்சமுறச் செய்யும் பணியையே ஊடகம் செய்து வந்துள்ளது.

 
ஊடகம் யாரை பிரதிபலிக்க வேண்டியது? சாதாரண மக்களை சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களை. ஆனால் இன்றைய ஊடக முதலாளிகள், அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்று ஆகி விட்ட நிலையில் ஊடகத்தின் செயல் பாடுகள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டனர். 

சென்னை வெள்ளபேரிடரில் மரணமடைந்த மக்கள் செய்தி முழுதும் வெளிவரவில்லை. பல பொய்களை பரவ விட்டு  உண்மையை மறைக்கும் பணியைத்தான் ஊடகம் செய்து வருகின்றது. ஊடகம் தான் நினைத்தால், சிலரை நல்லவராகவும் அதிகாரத்தில் கொண்டுவரலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது. இதுவரை அரசு பேரிடரில் இருந்து மக்கள் மீட்புக்கு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்து வருகிறது என்ற செய்திகளை தர இயலவில்லை. அரசுக்கு ஓர் நெருக்கடி கூட ஊடகங்களால் கொடுக்க இயலவில்லை. அரசு என்றதும் ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்ல இதுவரையிலும் ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் இந்த பேரிடருக்கு காரணமாகினர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர், அரசியல் கட்சிகள் பார்வைக்கு தான் தெரியவில்லை என்றாலும் ஊடகம் என்ன செய்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கி கிடந்த இடங்களிலுள்ள குடியிருப்புகளுக்கு விற்பனை விளம்பர கர்த்தாக்களாக செயல்பட்டு கொண்டிருந்தனர்!
 
பொதுமக்கள் ஊடகத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை விஜயகாந்து கேட்டு உள்ளார். துப்புவதாக செய்கை காட்டினாரா காறிதுப்பினாரா என்று காணொளியை பார்ப்பவர்கள்  விளக்கி கொள்ளட்டும். ஊடகம் இருக்கும் நிலையை உணர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் காறி துப்பும் சூழல் எழுந்திருக்காது. 

இந்த அரசு நிவாரண பணியை எவ்வாறு செய்து கொண்டிருக்கின்றது, தற்போது மக்கள் நிலை என்ன? அவர்கள் மறுவாழ்வுக்கு  ஊடகம் எவ்வாறு உதவலாம், கையகப்படுத்தியுள்ள நீர் நிலைகளை மீட்டு  வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய பேரிடர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று இல்லாது; சிம்பு கெட்ட பாட்டு பாடினார், விஜயகாந்து துப்பினார், இளைய ராஜா திட்டினார் என்று கூப்பாடு போடும் ஊடகத்தை பார்த்தாலே கேவலமாக உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகம் ஆளும் வர்கத்தின் அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி வெகு நாளாகி விட்டது என மக்களும் புரிந்து விட்டனர். ஆதலால் ஊடகம், வரும் காலங்களில் துப்புவதை மட்டுமல்ல பல எதிர்வினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பேரிடரில் வாட்ஸ் ஆப் முகநூல் போல் சமூகத்தளங்கள் ஆற்றிய பங்கில் ஒரு சதவீதம் கூட ஊடகம் செயலாற்றவில்லை என்று அறிந்தால் நல்லம்!

திருமணங்களை அலங்கோலப்படுத்தும் அம்மாக்கள்!


இன்றைய பல திருமணங்கள் சொர்கத்திலா அல்லது பணத்திலா நிர்ணயிக்கப்படுகின்றது என்ற விவாதங்களுக்குள் செல்லவில்லை.  ஆனால் பல லட்சம் செலவில் நடத்தப்படுகின்றது. "பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம்" என்ற நியதிக்கு இணங்க  பணம் இருப்பவர் செலவழிக்கின்றனர் என்று  சாப்பிட்டோமா பரிசை கொடுத்தோமா மணமக்களை வாழ்த்தினோமா  நாலு சொந்தக்காரங்களை பார்த்து பேசினோமா  என்று வந்து விட வேண்டும் 

பல திருமண வீடுகளில் ஆளுயர போஸ்டர், புகைப்பட-வீடியோ கவரேஜ், வெடி இடுதல், அருச்சுவை உணவு, திண் பண்டம் பரிமாறுதல் என தேவைக்கும் தேவைக்கு அதிகமாகவும் பல லட்சம் செலவிடுகின்றனர்.

சினிமா தொலைக்காட்சி தாக்கம் நிறையவே உள்ள இளம் தலைமுறையினர் தங்கள் திருமணத்தை சிலுமா காட்சி போன்றே நடத்த ஆர்வம் கொள்ளுகின்ரனர். இது போன்ர தலைமுறைக்கு என்றே ஆயிரங்கள் துவங்கி பல லட்சம் கட்டணம் செலுத்தி  திட்டமிட்டு திருமணத்தை நடத்தி தரவும் ஏஜன்சிகள் உள்ளனர்.  மணப்பெண் மட்டுமல்ல மணமகனுக்கும் மேக்கபிற்கு பல ஆயிரங்கள் தயங்காது செலவிடுகின்றனர். ஒரு  தாய் பெருமையாக கூறினார் அவர் மகளுக்கு  விளம்பரத்தில் வரும் பட்டு உடை உடுத்த வேண்டும் என்று  ஆசைப்பட்டதால் 50 ஆயிரம் விலை உள்ள சேலையை தயங்காது வாங்கி கொடுத்துள்ளனர். பெண்ணுக்கு அத்துடன் ஆங்ல மணப்பெண் அணியும் கவுண் அணிய வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. அதையும் பல ஆயிரங்கள் கொடுத்து  வாங்கி அணிவித்துள்ளனர்.  எதற்கு இந்த ஆடம்பரம் என்று கேட்கும் நிலையில் பெற்றோரும் இல்லை, அநாவசிய செலவுகள் வேண்டாம் என்ற மனநிலையில் இளம் தலைமுறையும் இல்லை.  இன்றைய நிலையில் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையே ஓங்கி நிற்கின்றது.

விளம்பரத்தில் நடிகர்- நடிகைகள் போன்று அவர்கள்  தோற்றத்திற்கும்  ஆடம்பரங்களுக்கு முக்கியத்தும் கொடுத்தே திருமணம் என்ற வைபவத்தை காண்கின்றனர். 

ஆனால் இவ்வளவு செலவழித்து செய்யும் திருமணங்கள் மணமக்களின் தாயார்களால் நாசமாவதை காணும் போது வருத்தம் அளிக்கின்றது. 

ஆத்தாவுக்கு, தான் பெற்ற மகள், மகன் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா அல்லது மகள்/மகன் தன் ஆளுகை எல்கையை விட்டு கடக்க போகிறார் என்ற சிந்தனையா என தெரியவில்லை. தாய்மார்கள்  மூக்கை சீந்தி சீந்தி அழுது கொண்டிருப்பார்.  தான் பெற்று வளர்த்தின அத்தனை கடமை பாச உணர்வையும் வியாபாரம் பார்க்க துணிந்து கொண்டிருப்பர்.  மன மேடையிலே மகல் தன் விருப்பம் சார்ந்து இயங்க வேன்டும் என்ற பிடிவாதத்தில் எடுக்கும் நடவடிக்கையை கண்டு உணரலாம்.  அவ்வப்போது முத்தம் கொடுப்பது போல் அருகில் சென்று மகளுக்கு தன் உபதேசத்தை அள்ளி வழங்கி கொண்டு இருப்பார்.   

ஒரு வேளை உணர்வு பெருக்கால் அழகை வருகிறது என்றால் தாய் தள்ளி மகள் பார்க்காது அழ வேண்டும்.  ஆனால் இன்றைய பல பெண்களை பெற்ற தாய்கள் ஆதிக்க மனநிலையுடன் அல்லாடுகின்றனர். கணவர், பிள்ளைகள் பின்பு மருமகன் என அனைவரும் தன்  அதிகார எல்கைக்குள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றர். இதர்கு இவர்கள் எடுக்கும் ஆயுதவும் அன்பு , பாசம் என்ற ஆயுதம் தான்.

பெற்றவர்கள் தங்களுக்காக முறைகளை செய்து விட்டு ப்ர்த்துபிள்ளைகல் மகிழ்ச்சியை அருகில் இருந்து கவனிப்பதும் மகிழ்வதும் தான் சிறந்தது.  . மண மேடைக்கு பெண்னை அழைத்து வருவது ஆலையத்திற்கு அழைத்து செல்வது என பெண்ணின் தாயை பெண்ணுக்கு அடுத்த படியாக நின்று வீடியோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  மாமா, சித்தி, பெரியாப்பா பிள்ளைகள் அத்தை சித்திகள் என எந்த உறவுகளும் திருமண மேடையில் காண்பதில்லை. பெண் பெற்றோரோ ஆண் பெற்றோரோ வருபவர்களை வரவேற்க மெனக்கெடுவதில்லை. வீடியோ பல லட்சம் செலவில் எடுப்பதால் எல்லா படங்களிலும் தாங்களும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் மேடையில்  பிடிவாதமாக நிலை கொண்டு விடுகின்றனர்.  


இந்த சூழலில் தான் அழகாக நடக்க வேண்டிய திருமண வைபவத்தை பெண் அம்மாக்கள் அழுகை கச்சேரியாகவும் மாற்றுகின்றனர்.  புதிய குடும்பத்திற்கு தனியாக செல்லும் மகளை தேற்றி அனுப்புவதை விடுத்து,  அழுது கொண்டிருக்கும் தாயாரை தேற்றும் அவருடைய சொந்த பந்தங்களை காண்கின்றோம்.

இது அம்மாக்களின் பாசத்தில் பிரதிபலிப்பு என்று நாம் தப்பாக எடை போட்டு விட இயலாது. தன் ஆளுகையை தன் கணவர் தன் பிள்ளைகள் என்ற நிலையில் இருந்து பெண் எடுக்கும் சம்பந்தக்காரர்கள் வீட்டையும் ஆளுகைக்கு உள்ளாக்கும் தந்திர செயலாகும்.  மகள் அம்மாவின் பாச அழுகையை கண்டு புகுந்த வீட்டில் இருக்க நிலை கொள்ளாது பிறந்த வீட்டிற்கு ஓட எத்தனித்து கொண்டிருப்பார்.  இந்த சூழலில் மாமியார் ஏதாவது கருத்து தெரிவிக்கவோ தன் உணர்வை வெளிப்படுத்தவோ நினைத்தால் பெண்ணை பெற்றோர் இது தான் தக்க நேரம் என்று மகளுடன் மருமகனையும் தன் வீட்டு முதலாக்கி விடுவார்கள். சில போது ஒத்து கொள்ளாத மருமகனிடம் இருந்து மகளை பிரிக்கவுக்ம் தயங்குவது இல்லை. 

இன்று பல திருமணங்கள் நடந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பிரிந்து விடுகிறதின் ஒரு முக்கிய காரணம் பெண்ணின் தாயாரின் தலையீடும் காரணமாகின்றது.  அம்மாக்கள் மகளிடன் இருந்து தொலைபேசி வழியாகவே தினச்செய்திகளை பெற்று விடுகின்றனர். பல மைலுக்கு அப்பாலிருந்தே மகளை கட்டுப்படுத்த,  மகளும் புகுந்த வீட்டு ஜனங்களை ஒரு வித எதிரி மனநிலையில் பார்க்க  கற்று கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  

இன்றைய அம்மாக்கள் மகள்களை சூழலை எதிர்கொள்ளும் விதமாகவோ ஆக்கபூர்வமாக சுயமாக சிந்தித்து செயல்படவோ அனுமதிப்பதில்லை. தங்கள் கணவருடனுள்ள பிணைப்புகளை மனதில் வைத்து தன்னால் தன் மாமியாருடன் சண்டையிட்டு ஜெயிக்க இயலவில்லை, மகள் துவக்கத்தில் இருந்தே யாருடன் ஒட்டாது  சுயநலத்துடன் வாழும் மனநிலையை வளர்த்து விடுகின்றனர். பல வீட்டில் மகள்களை சண்டைக்கோழிகளாக வளர்த்தே புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 


பெண் குழந்தைகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக  தன் கணவருடன் கணவர் ஆட்களுடன் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமே தாயின் கடமையாக இருக்க வேண்டும். 

தென் தமிழகத்தில் பல பெண்கள் வீட்டோடு மணம் முடித்து இருப்பதும், மணம் முடித்த பின்பு ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் திரும்பி வந்தவர்கள் பலர்.  இதன் மூல காரணம் பெண்ணை பெற்ற தாயாகத்தான் இருக்கும்

பல வீடுகளில்\ காலை பத்து மணிக்கு சென்றால் கூட அவர்கள் பெண் குழந்தைகள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள்.   தாய் அப்படியே பாசப்பெருக்கில் பொங்கி கொண்டு கூறுவார்கள் "போவுத வீட்டில் எப்படியோ நான் அப்படியே என் பொண்ணே தூங்க விட்டிருவேன். அவ நிம்மதியா இங்க தானே இருக்க இயலும்" . அதே போன்று கடைகளுக்கு அழைத்து வந்து பெண் குழைந்தைகளுக்கு தேவையானதும் தேவை இல்லாத பொருட்களாக வாங்கி கொடுத்து தான் பாசமான தாயாக பாவிப்பார்கள். இது போன்ற பெண் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை சூழலில் செலவழிக்க தெரியாது   திருப்தி அற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள். 


மேலும் போகும் இடத்தில் பேசவும் பழகவும் கற்று கொடுப்பதில்லை. " நான்  வந்த இடத்தில் 20 வருடமா என் மாமியாருக்கு அடிமையா கிடந்திட்டேன் என் மககிட்டே போகும் போதே நல்லா திட்டி மாமியாரை அடக்கணும் என்று சொல்லியுள்ளேன் என பெண்ணை பெற்ற அம்மாக்கள் சூளுரைப்பதையும் அவதானத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. 

இப்போது ஒரு பெண்ணை பெற்ற பெற்றோர் பத்து ஆண் மகனை பெற்றதிற்கு சமம் என்று கூறுவது கூட இதனால் தானோ?


சிதம்பர சிந்தனைகள்!

சமீபத்தில் வாசித்து நேரம் சிந்தனையில் ஆழ்த்திய புத்தகம் " சிதம்பர சிந்தனைகள்". மலையாள கதாசிரியர் கவிஞர் பாலசந்திர சுள்ளிக்காடுhttp://www.thehindu.com/news/cities/Kochi/im-the-poet-of-a-lost-and-failed-generation/article4967478.ece தன் வாழ்க்கை அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் இது.   நாட்க்குறிப்பு நடையில் கதை போன்ற அமைப்பில் 21  கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. 

முதல் கதையில் சிதம்பரனார் ஆலயத்தில் தான் சந்தித்த ஓர் வயதான தம்பதிகளை பற்றி கதைக்கின்றார். 
கல்லூரியில் செய்த குறுபுத்தனத்தை கேள்வியுற்று கேள்வி கேட்ட தந்தையிடம் பதில் கூறாது தன் சொந்த வீடு விட்டு வெளியேறுகின்றார் பாலசந்திரன். பின்பு அவர் தன் வீட்டு வாசல்ப்படியை மிதித்தது தன்னுடைய தகப்பனாரின் கடைசி கர்மங்கள்  செய்ய மட்டுமே. 

Image result for balachandran chullikkad blogஅடுத்த ஒரு பயணவேளையில் தன்னுடன் மேல்நிலை பள்ளி பள்ளியில் படித்த மாணவியை சந்திக்கின்றார். ஒரு சில சம்பவங்களால் அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் பாலசந்தருக்கும் சண்டை வருகின்றது. பால சந்தரன் கல்லூரி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுகின்றார். தன் வெறுப்பின் அவமானத்தின் பொறுட்டு  மாணவிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செய்த  அட்டூளியவும் பின்பு வருடங்களுக்கு பின்பு சந்தித்த போது மன்னிப்பு பெற்று கொண்ட நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். அந்தக்காலத்தில் மாணவராக இருந்த இவர் இப்படியுமா? என சிந்திக்கும் போதே வெளியில் பிச்சை எடுத்து வந்த தாயின் கதையை கேட்டதும் தன் தாயை நினைத்து , தன் பெற்றோர்களை பல காலங்களாக சந்திக்காது இருப்பதை நினைத்து பட்சாதபிக்கின்றார். உருகின்றார்.

Image result for balachandran chullikkad blogகாதல் தோல்வியால் பைத்தியக்காரனாக மாறி தெருவில் அலைந்த தன் நண்பனை சந்திக்கின்றார். நண்பனை குளிப்பித்து துணிமணி சாப்பாடு வாங்கி கொடுத்து மறுபடியும் தெருவிலே விட்டு விடுகின்றார். தன் மனநல மருத்துவரான நண்பரிடம் அழைத்து செல்லாது  நண்பனை மறுபடியும் தெருவில் விட்டதை நினைத்து வருந்துகின்றார்.

கல்லூரிப்பருவத்தில் காதல் கொண்டு தன்னுடன் ஓடி வந்த இவர் மனைவி யும் இவரும் வெவ்வேறு விடுதியில் இருந்து படிக்கின்றனர்.  இச்சூழலில் மனைவி கர்ப்பம் ஆகுவதும் தன் இயலாமையை எண்ணி தன் முதல் மகனை கருவை கலத்தைதயும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையில் நிறம் சிவப்பு என்ற நிலையிலுள்ள வாழ்க்கையில் சாப்பிட்டு விட்டு உணகத்தில் பில் கட்டாது வந்த போது, உணவக உரிமையாளர்  பிடித்து வைத்து  அடி கொடுத்து அரைமூட்டை வெங்காயத்தை உரிக்கி வைத்ததையும்; பசிக்கொடுமையால் இரத்ததை விற்று பிழைப்பு நடத்தியதையும் அங்கு தன் தங்கையின் சிகித்தசைக்காக இரத்தம் விற்ற இன்னொரு இளைஞனை பற்றியும் எழுதியுள்ளார்.

 ஒரு இக்கட்டான நிலையில்; ஒரு விபசார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததும்;  தன் மனைவியிடம் இப்பெண்னுக்கு பணம், உணவு கொடுக்க கூறின போது "நான் செய்யாத வேலைக்கு பணம் வாங்க மாட்டேன்" என்று விடை பெற்று சென்ற அப்பெண்ணை பற்றி மட்டுமல்ல தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த வசதியான இரண்டு பெண்கள் விபசாரிகளாக வாழ்ந்ததை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை ஓர் இளம் பெண் ஊறுகாய் விற்க வருகின்றார் இவர் வீட்டிற்கு. ஏதோ ஒரு சபலத்தில் அப்பெண்ணின் இடுப்பை கிள்ளுவதும் அப்பெண் இவருடை கன்னத்தில் அறைந்த நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையின் ஒரு நிலையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கவிஞராக வலம் வருவதும்; பலர் ஆராதனை கண்ணோடு அவரை நோக்குவதும், மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுடன் விருந்து உண்ணுவதும் இன்னொரு சூழலிலோ சாப்பிடக் கூட உணவு இல்லாது பிச்சைக்காரனை போன்று உணவை  இரந்து உண்டதை பற்றியும் விளக்கியுள்ளார். 

ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த எழுத்தாளரால் தன் வீட்டுடன் சமரசப்பட்டு போக இயலவில்லை.  கல்வி கற்கும் காலயளைவில் கேரளா நக்சல் புரச்சியில் ஆற்வம் கொண்ட கவிஞர் தன் பிறந்த வீட்டை நாட்டை பெற்றோர் அவர்கள் கொடுத்த கல்வியையும் தூக்கி எறிந்து பின்பு  ஒரு பிடி சோறுக்கான பசியில் போராட்டவும் இல்லை புரட்சியும்  என விளக்கியுள்ளார்https://en.wikipedia.org/wiki/Balachandran_Chullikkadu

Image result for balachandran chullikkad blogஇப்படியாக ஒரு மனிதனின் நல்ல பக்கங்கள் பெரிமைக்குறிய புகழ் கொண்ட பக்கங்கள் மட்டுமல்லாது அவன் அவஸ்தைக்கு உள்ளான, அவன் வறுமையிலும் பட்டிணியிலும் கிடந்த பிச்சைக்காரனாக அலைந்த நிலைகளிலுள்ள  வாழ்க்கையை பற்றியும் துணிவாக எழுதியுள்ளார். மாணவப்பருவட்த்தில் புரச்சி என்ற பெயரில் தங்கள் கல்வி சூழலை கிடைக்காமல் செய்யும் பல மாணவர்களுக்கு வழி காட்ட உள்ளது இப்புத்தகம். இது போன்று ஒரு முகமூடி அற்ற எழுத்து, ஆன்மாவை தட்டி எழுப்பிய இதயத்தை நொறுக்கிய  எழுத்து தமிழில் வந்திருக்க வாய்ப்பே  இல்லை. வேடங்களற்ற இலக்கியமே வாழ்க்கையை பேசும் என இவர் எழுத்து ஊடாக நிரூபித்துள்ளார். http://www.jeyamohan.in/42665#.VlnX1NIrJdg

இப்புத்தகம் மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயற்கப்பட்ட புத்தகம். வம்சி பவா செல்லத்துரையின் மனைவியும் பேராசிரியருமான       கெ.வி. ஷைலஜாவால் மொழிபெயற்கப்பட்டுள்ளது. மிகவும் சீரிய மொழிப்பெயர்பு. அன்னிய மொழியில் இருந்து மொழிபெயற்கப்பட்டது என்றே சுவடே தெரியாத வண்னம் சிறப்பான தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.http://balachandranchullikkad.blogspot.in/

மழை மழை....

மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை,  சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 


ஆறு மாதம் மழை, மூன்று மாதம் வெயில் மூன்று மாதம் பனி என்பது தான் காலநிலை. மூன்று மாத வெயில் தான் எங்களை மிகவும் துன்பப்படுத்தும் வாழ்க்கை நிலை. அப்போதும் குடையை விட்டு வைப்பதில்லை. கர்ணனுக்கு குண்டலம் என்பது போல் தான் எங்கள் பகுதி மக்களுக்கு குடை. இங்கு பீடி சுற்றும் தொழில் போன்றே பெண்கள் சுய உதவி குழுவுக்கு குடை செய்வது தான் ஓர் தொழில். குடை தைப்பவரும் தெருவுக்கு தெருவு இருப்பார். குடை கூட காலன் குடை, பாரின் குடை, நீளக்குடை என்று பல வகையில் இருந்தது. காலன் குடை என்பது கைபிடி வைத்து அதன் தலைப்பக்கம் மாட்டுக்கு கொம்பு என்பது போல் இருக்கும். பொதுவாக வயதான தாத்தாக்கள் பயண்படுத்துவது. மழைக்கு குடை என்றால் மழை இல்லாத போது நடை கம்பாகவும் பயண்படுத்தி கொள்வார்கள். சென்னையில்  சமீபத்திய கலாச்சாரமாக அழகிய இளம் கல்லூரி மாணவிகளும் இக்கொடையை பயண்படுத்துவதை கண்டேன். இந்த குடையை பிடித்து கொண்டு குதிரை போல உயரமுள்ள மாணவிகள் நடந்து போவதே ஓர் அழகு. .  அடுத்தது தான் பாரின் குடை! இது பல வண்ணங்களில் இரண்டாகவும் மூன்றாகவும் மடக்க தகுந்து. இந்தக் குடை காற்றுக்கு பலக்காது.  குடையும் சூடி அன்ன நடை நடந்து போகும்  பெண்களுக்கான குடை இது. 

 

பெரிய குடைகள் வகை தான் நாங்கள் பள்ளிக்கு கொண்டு செல்வது. 
சில நேரம் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளவும் பெரியவர்களுக்கு  நாயை, விரட்ட  ஆயுதமாக பயண்படுத்துவதும் இந்த குடையைதான். பல நேரங்களில் பூவாலன்(பெண்கள் பின்னால் நடக்கும் ஆண்களுக்கு பெயர்)பொடியன்களில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவதும் இந்த குடை தான். 


பள்ளிக்கு செல்லும் போதே மாற்று உடையும் எடுத்து கொள்வோம். எப்படியும் பள்ளி செல்லும் போது தொப்பு தொப்பாக நினைந்து விடுவோம். சில பிள்ளைகள் இதனால் தான் இந்த நவ நாகரிக குடையை சாராது பிளாஸ்டிக் கொங்காணிகளை பயண்படுத்தி கொள்வர்.  எங்கள் பள்ளிகள் ஒவ்வொரு மலை மேல் தான் இருக்கும். போகும் போது கஷ்டபட்டு ஏறி சென்றாலும் இறங்கும் போது கீழ் நோக்கி ஒரே ஓட்டம் தான் . அப்படி தான் எங்கள் தோழிகள் செல்லவேண்டிய பேருந்து தூரத்தில் ரோட்டில் வருவதை கண்டதுமே நாங்கள் மலை மேல் இருந்து சத்தமிட்டு ஓலமிட்டு கும்பலாக ஓடி வருவோம் . பேருந்துகாரன் பயந்து  என்னடா ஆச்சு என்று விசாரிக்கும் முன் மீன் மூட்டை போன்று அடைத்து வைத்துள்ள பேருந்தில் எங்கள் தோழிகளையும் ஏற்றி விடுவோம். இந்த பேருந்துக்காரனுகள் பள்ளி பிள்ளைகள் தொல்லை இருக்கக்கூடாது என்றே பள்ளி விடும் நேரம் முன் பாதையை கடந்து விடுவான். சில நேரங்களில் எங்கள் நேதாக்களுடன்(தலைவர்கள்)  சென்று வழி மறிக்கும் படலவும் உண்டு. 

அன்றைய  30 வருடம் முன் வண்டிப்பெரியாரில் மூன்று அரசு பள்ளி தான் இருந்தது.  அந்த பள்யை நம்பியை சுற்றுப்புறம் உள்ள எஸ்டேட் மாணவர்கள் இருந்தனர். 10 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு வர காலை 6 மணிக்கே நடக்க ஆரம்பிக்க வேண்டும். நடந்து பள்ளிக்கு வந்து திரும்பி வீடு போய் சேர  கிராம்பி, மவுண்டு போன்ற எஸ்டேட் மாணவர்களுக்கு  இரவு 7-8 ஆகி விடும். சில வசதியான மாணவர்கள் ஜீப்பில் வருவார்கள். ஜீப்பில் கம்பியில் தொங்கி மேல்ப்புறம் இருந்து என எங்கு எங்கெல்லாம் இடம் இருக்குமோ கடிமாக பயணப்பட்டு வருவார்கள்.  பின்பு சில காலம் கழிந்து எஸ் என் வி நாராயணன் முதல் பேருந்தை இறக்கினார். அத்துடன் பசுமலை போன்ற பகுதி மாணவர்களுக்கு வேறு ஒரு பேருந்து வந்து சேர்ந்தது.  பேருந்தை பிடிப்பது என்பது ஒலிபிக் ஓட்டத்தில் பங்கு பெறுவது போல் தான் இருந்தது. இவர்கள் தங்கள் எஸ்டேறில் இருந்து வண்டிப்பெரியார் டவுணை எட்ட; பின்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் பள்ளிகளை பிடிக்க மழையில் நடைந்தும் நடந்தும் ஓடியும் சென்று சேர்வோம்.  25-30 வருடம் ஆன பின்பும் தற்கால என் மாணவர்கள் கூட பேருந்து வசதியில் இதே வசதியின்மையை தான் எதிர் கொள்கின்றனர் என்பது பெரும் துயரே. அதை பற்றி ஓர் பதிவை தேவை வரும். திருநெல்வேலி கார்ப்பரேஷன் பகுதிக்குள்ளே சிறந்த பேருந்து வசதி இல்லை முனஞ்சிப்பட்டி தேவர்குளம் போன்ற பகுதிக்கும் செல்லும் மாணவர்கள் இதே சிக்கலிலே அல்லாடுகின்றனர் என்பதை பேருந்து நிலையத்தில் நாம் சிரிது நேரம் நின்றால் புலன்ப்படும்.
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும்   பெய்து கொண்டே இருக்கும்.  இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு  ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது. 

மக்கள் தண்ணீருக்குள் கிடந்தாலும் தாங்கள் புறம்போக்காக கையடக்கிய இடத்தை பற்றியோ, தங்கள் ஆக்கம் கெட்ட நிலம் கையடக்கல் செயலை பற்றியோ வருந்தாது மழையை திட்டி கொண்டே இருப்பார்கள்.  நாச காலமான மழை எப்போது தான் வெறிக்குமோ..? 

பெரியார் ஆற்றின் அழகை வர்ணிக்கவே இயலாது. அவ்வளவு அழகான ஆறு. அதன் நீளம் அகலம் அதன் ஓடும் அழகு இதை படம் பிடிக்கவே வெள்ளைக்காரர்கள் வந்து குமியுவார்கள் எங்கள் ஊருக்கு. அந்த பாலம் கட்டினதும் வெள்ளாக்காரன் தான். வண்டிகளை ஓடவைக்க கெட்டிய பாலம் என்பதால் வண்டிப்பெரியார் என்றே எங்கள் ஊருக்கு பெயர் வந்தது. வெயிலில் வரண்டு ஒடுங்கிய பாலம், மழை நேரம் கரை புரண்டு ஓடும். கரையில் மேல்ப்புறங்களில்  வீடுகட்டி குடியிருப்பவர்கள் ஒன்று இரண்டு என 30-40 படிகளை கட்டி கட்டி ஆற்றை ஒட்டியும் வீடு கட்டி விடுவார்கள். இந்த வீடுகளை வாடகைக்கும் கொடுப்பார்கள் சில நேரம் இவர்களும் தங்கி இருப்பார்கள். இயற்கையிடம் மோதுமின்றோம் என மறந்து தங்கள் பெரும் ஆசையால் தெரியாததால் கரைபுரண்டு ஓடும் தண்ணீரிடம் போரிட இயலாது சில நேரம் உடை , பொருள் என சகலவும்  தண்ணீரில் இழந்து அழுது புலம்புவார்கள். சில பொழுது எதிர்பாராத நேரம் இரவு நேரம் வரும் தண்ணீரால் குடும்பமே தண்ணீரில் அடித்து செல்லும் நிகழ்வும் நடந்து உள்ளது. 

இவர்களை மீட்டு எங்கள் பள்ளியில் தங்க வைப்பதால் 'எப்போ பள்ளி திறக்கும்' என்று ஏக்கம் கொள்ளும் மட்டும் பள்ளி நெடுநாள் விடுப்பு விட்டு விடுவார்கள். இது போன்ற பேராபத்து நேரங்களிலும் வலுவான சிலர், ஆற்றுக்கு மத்தியில் கயிர்கட்டி அல்லது, மரம் போன்றவையில் தட்டு தங்கி நிற்கும் கட்டில் மேஜை போன்ற பொருட்களும் எடுத்து செல்வதும் உண்டு. இது போன்று ஆற்றம்கரையில்  கட்டி வைத்துள்ள கான்வென்றும் நீரில் மூழ்கி விட்டது. காப்பாற்ற சென்றவர்கள் மிதித்த இடத்தில் பாம்புகள் நெளிந்து ஓடியதை இப்போதும் பயத்துடன் நினைவு கூர்வார்கள். இது போன்ற மழையில் ஆற்றம் கரையில் கட்டி வைத்துள்ள ஆசிரியர்கள் வீடுகளை மீட்கும் பொறுப்பான பணியில் எங்கள் மாணவர்கள் பங்கு சேர்வார்கள்.  இந்த நேரம் தான் எங்கள் ஓடைகைளில் ஆற்று  தண்ணீரும் கலந்து மீன்கள் நகரம் வழி பாயுவதும் அதை பிடிக்க துண்டும் தோர்த்துமாக எங்கள் வீட்டு பொடியர்கள் பாயுவதும் மீனைப்பிடித்து வந்து எனக்கு இவ்வளவு  உனக்கு இவ்வளவும் என பங்கிட்டு கொள்ளும்  அந்தக்கால மகிழ்ச்சியான நினைவுகளும் கூட. ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் காட்டு பூக்கள், பாயல் என போகும் அழகு தான் இப்போதும் நினைவில் உள்ளது.

இந்த மழைத்துயரில் எங்களை அச்சம் கொள்ள வைக்கும் டாம் புரளிகளும் கரை புரண்டு ஓடும். ஒவ்வொவு நாள் இரவில் தூங்க போகும் போதும் காலை நம் தலை மேல் தண்னீர் ஓடுமோ,  அப்படி டாம் உடைந்தால் நாம் எதிர் காணும் பழையகாடு பங்களா மொட்டையில் தப்பித்து விடலாமோ என அந்த சின்ன நாள் மனதுகளும் அங்கலாய்த்து கொள்ளும். இப்படியாக மழையுடன் சேர்ந்தும் இனிமையான  கேளிக்கையான விளையாட்டு நினைவுகளுடன் பயவும் வருத்தங்களும் சேர்ந்தே பயணிக்கின்றது. 

பெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்

படம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கியம் கொடுத்துள்ளமனர்.   இளைஞர்கள் மட்டுமல்ல இளமை கடந்து அனைவரும் தங்கள் இளமையை நினைக்க வைக்கும்  காதல் படம். எடுத்த விதம் கதை அமைப்பு தேர்ந்தெடுத்த இடம்(லொக்கேஷன்) இன்னும் அருமை. பாடல்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்பவை.

என்ன கவர்ந்த விடையம் என்றால் படத்தில் வரும் மூன்று பெண் கதாப்பாத்திரப் படைப்பு தான் . முதல் கதாப்பாத்திரம் பள்ளிக்கூட மாணவி. ஊரை திரண்டு காதலுக்குகாக அவள் பின்னே ஓடுகின்றது. அவருக்கு காவல் வேலையாக இருக்கும் புள்டாக் என்று பொடியன்கள் பயத்துடன் அழைக்கும் அவள் அப்பா. அவள் பின்னால் பல விடலைகள் சுற்றினாலும் அவள் அலட்டி கொள்ளவே இல்லை. தமிழ் படக் கதாநாயகி போல் பயந்து அழது சாகவுமில்லை போராளியாக வெடித்து சாடவுமில்லை. மிகவும் லாவகமாக தைரியமாக புத்திசாலித்தனமாக கையாளுகுன்றார் பசங்களை. 


அடுத்தது கல்லூரி பேராசிரியை அதுவும் கொடைக்கானலில் இருந்து வரும் இளம் பேராசிரியாக சாய் பல்லவி என்ற நடிக்க தெரிந்த ஒருவர் நடித்துள்ளார். அந்த பெண் கதாப்பாத்திரமும் இளம் துடிப்பான சவாலான மாணவனை மிகவும் சாதுரியமாக கையாளுகின்றார் சில இடங்களில் ஏமாற்றுகின்றாதீகொஞ்சம் நெருடலாக இருந்தால் கூட). மாணவனுக்கு காதல் ஆசிரியையிடம் ஏன் வருகின்றது என்று கேள்விக்கு நியாயம் கற்பிக்காது; ஆசிரியை, அந்த மாணவனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்து கொள்வது அருமை.

அடுத்து கதாநாயகன் கைபிடிக்கும் தனக்கு கணவராக வரப்போகும் மனிதனின் எல்லா பக்கங்களையும் அறிந்து தன் வாழ்க்கையின் எல்லா பக்கஙகளையும் பகிர்ந்து பக்குவமாக ஏற்று கொள்ளும் இளம் பெண். சில கயவர்களால் பெண்கள் வாழ்க்கையில் வரும்; பெற்றோரால் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூட கணவர்களால்  தீர்க்க வல்லது என்று ஒரு காட்சி ஊடாக சொல்கின்றது படம்.


இந்த மூன்று இயல்பான கதை அம்சம் கொண்ட கதாப்பாத்திரவும்  சாதாரண பெண்களை நினைவுப்படுத்துபவர்களாகவே இருந்தனர். சமீபத்தில் நான் பார்த்த "நானும் ரவுடி  தான் " படக்கதாநாயகி நயனும் மனதில் வந்து சென்றார். அணிவது எல்லாம் மாடன் உடை நடப்பது மாடேனாக; பேசுவது, செய்வது எல்லாம் முட்டாள் தனம் பைத்தியக்காரத்தம்! . 

இன்னும் ஒரு எடுத்து கூறவேண்டிய விடையம் மலையாளப்படத்தில் தமிழ் பெண் கதாப்பாத்திரம் என்றாலே பிச்சைக்காரி, வீட்டு வேலைக்காரி அல்லது வில்லனின் வைப்பாடி என்றபடியாகத்தான்  காட்டுவார்கள். இதில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியை; அவர் பின்னால் வழிந்து அலையும் ஒரு முரட்டு மாணவன் ஓர் வழிசல் பேராசிரியர். இவர்களை சிரித்த முகத்துடனே சமாளித்து, வாழ்க்கையில் தன் உறவினரை மணம் முடிக்கின்றார். அவர் தொழில் சார்ந்தும் திறமையானவர், எல்லா  மாணவர்களையும் ஒருங்கிணைத்து   முன்னேற செய்பவர்.  மொத்ததில் ஆளுமையான பெண் கதாப்பாத்திரம். ஒரு இடத்திலும் தமிழர்கள் மனதை புண் படுத்தும் படியான " ஒரு  வார்த்தையும் வரவில்லை.  80-90 மலையாளப்படங்களில் தமிழர்களை புண்படுத்தும் வார்த்தைகள் கருத்தாக்கங்கள் பரவி கிடந்துள்ளது கண்டுள்ளோம். அவ்வகையில் மலையாளிகள் தமிழர்கள் கலாச்சாரத்தை தனிதன்மையை மேலும் மதிக்க கற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. 

ரசிக்கும் படியான தமிழ் மல்லிகைப்பூ சென்றிமென்றில்   "நான் கோயிலுக்கு போடுவேன்" போன்ற தமிழ் உரையாடல்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் கொடுத்து சரி செய்திருக்கலாம்.  பொதுவாக தமிழ் படங்களில் கதாநாயகன் வாங்க நீங்க என பேசுவார் கதாநாயகி போடா வாடா என்பார். ஆனால் மலையாளப்பட தமிழ் நாயகி நீங்க வாங்க என கதைக்கின்றார் நாயகனோ ஆசிரியையாக இருந்தும் நீ ...உனக்கு என கதைக்கின்றார்.

என் மகன்,  படம் எப்படி இருக்கு என்று என்னிடம் கேட்டான். படம் எடுத்த விதம் நல்லா தான் இருக்கு ............ஆனால் காதலிக்க  ஆசிரியை தான் கிடைத்தாரா என்றேன். அவனும்  அவன் நண்பர்களிடம் என் கருத்தை கூறினானாம் அவர்கள் கூறினார்களாம் இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று. எது எப்படியோ கல்லூரி சாலை மாணவர் காதலில் ஆசிரியர்களையும் கதாபாத்திரமாக வர துவங்கினால் பெரிய அபாயக் குறி தான். மகாபாரத கதை தான் நினைவில் வருகின்றது. விராட மன்னரின் மகளுக்கு போர் புரிய  இரத ஓட்டியான அர்சுனனன் உதவியிருப்பார். போரில் வெற்றி கொண்ட போது மன்னர் தன் மகளை அர்சுனனுக்கு மணம் முடித்து கொடுக்க மகிழ்ச்சியுடன் முன் வருவார். ஆனால் அர்சுனனனோ நான் குரு இடத்தில் இருந்து வித்தையை கற்று கொடுத்தவன். ஒரு குரு மாணவியை மணம் முடிப்பது சாஸ்த்திரத்தால் ஆகாது உங்களுக்கு விருப்பம் எனின் என் மகனுக்கு மணம் முடித்து கொடுங்கள் என்பார். ஆனால் நியத்தில் பல ஆண் ஆசிரியர்கள் தங்களுடைய பல மாணவிகள் தற்கொலைக்கு காரணமானது கூட்டி கொண்டு ஓடி  தாலி கட்டினவர்கள் என பல வகையில் உண்டு. இது போன்ற ஈனச்செயல்களை கண்டு கொள்ளாத கலாச்சார உலகம் ஆசிரியைகளும் வேட்டையை ஆரம்பித்தத போது வெகுண்டு எழுந்தனர். 

ஆனால் படம் பார்க்க பார்க்க மனம் பதைபதைத்தது. ஆசிரியை பதவியின் மாண்பை  இந்த படம் காத்தது என்பதிலும் படக்குழுவுக்கு ஒரு வணக்கம்.  

மொத்தத்தில் எல்லோரையும் தங்கள் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து செல்லும் படம். கடைசியாக காதல் பற்றிய ஒரு தத்துவம் சொல்லுவார்கள்   எல்லார் வாழ்க்கையிலும் பட்டாம்பூச்சி போல் வரும் பைத்தியம் போன்றது காதல் என்று. காதல் ஒரு பைத்தியம் தான். அதை வாழ்க்கைக்கு உதவுவதாக மாற்றும் தன்மை, அறிவான மனிதர்களிடம் உள்ளது என்று சொலியுள்ளார்கள். ஆட்டோகிராப் திரைப்படத்தை  நினைவுப்படுத்திய மொத்தத்தில் ரசிக்கும் படியான படம் பிரேமம்!.

பட்டுமலை நினைவுகள்

35 வருடம் பின்னோக்கிய மனப்பயணம். ஆம் அதின் நிறைவே இந்த முறை பட்டுமலை- சூளப்பிரட்டு எஸ்டேடை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்ததின் காரணம்.  அந்த எஸ்டேட்டில் தான் பாட்டி அருமை நாயகம் கங்காணி மகளாக வளர்ந்தது தன் காதல் கணவரை தன் விருப்பத்துடன் மணந்தது  குடி புகுந்ததும் இரண்டு குழந்தைகளுடன் பின்பு வாழா வெட்டியாக போராடி வாழ்ந்ததும்.


அம்மா வசதியான வீட்டில் குடி புகுந்து நகை நட்டுடன்; அப்பா நாங்கள் 3 குழந்தைகள்  என குடியிருந்தது வண்டிப்பெரியார் என்ற குட்டி பட்டணத்தில். தான் வறுமையில் தேயிலை தோட்ட தொழிலாளியாக இருந்தாலும் தன் மகளுக்கு கல்வி கொடுத்தேன் மகள் தன்னை போல் ஓர் தொழிலாளியாக இருக்க வேண்டி வந்ததில்லை என்ற விடையத்தில் பாட்டிக்கு எப்போதும் அதீத பெருமை இருந்தது. பாட்டி ஊருக்கு செல்வது என்பது மாதம் ஒரு தரம் கிடைக்கும் வாய்ப்பு. பல போதும் அம்மா விம்மிய இதயத்துடன் பேருந்தில் அமைதியாக இருப்பது தான் வழக்கம். எல்லா பெண்களும் போல் ஒரு நொறுங்கிய இதயம் தான் பிறந்த வீட்டிற்கு வழி சொல்லும். ஆனால் பிள்ளைகள் எங்களுக்கு  அந்த பயணம் அப்படியானதல்ல. பாட்டி, மாமாவை காண வேண்டும் மாமா பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், மாமா தோட்டத்திற்கு போக வேண்டும் அத்துடன் பல சொந்தக்காரர்களை கண்டு விடலாம் என்ற ஆசை வேறு! அம்மா எங்கள் வீட்டை  விட்டு கிளம்புவது என்பது  அப்பாவுக்கு பிடிப்பது இல்லை. ஆனால் தன் தாய் வீட்டிற்கு செல்லும் ஆசைக்கு தடை நிற்பதும் கிடையாது. சில போது அப்பாவும் எங்களுடன் வருவார்கள்.

வண்டிப்பெரியார் விட ,மிகவும் குளிரான பிரதேசம் பட்டுமலை எஸ்டேட். இது தேக்கடியில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. பச்சைபட்டு உடுத்தியிருப்பது போல் இருப்பதால் பட்டு மலை என்று அழைக்கின்றனர்.  இன்று அவ்வழியிலுள்ள பயணம் பேருந்து வசதியால் பெரிய விடையமாக புதியத்தலை முறைக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் எங்கள் குழந்தைப் பருவத்தில் அங்கு சென்று வருவது என்றால் ஓர் சுற்றுலாப்பயணம் போல் தான் இருக்கும். எப்போதும் நான் பிடிப்பது சன்னல் அருகில் தான். நம் குரல் எழுப்பது போன்றே பேருந்து சத்தவும் எதிரொலிப்பதாக தோன்றும். அந்த குளிர் பறக்கும் பனியை நோக்கி கொண்டேயுள்ள பயணம் இனிமையானது. 

பட்டுமலை என்றதும் உலக பிரசித்தி பெற்ற பட்டுமலை வேளாங்கண்ணி மாதா கோவில் பிரான்ஸிக்கன் சகோதரர்கள் நடத்தும் குழந்தைகள் அனாத ஆசிரமம் தான் அனைவருக்கும் நினைவில் வரும்.  . மாதா கோயில் மதம் கடந்து அனைவரும் வந்து செல்லும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலமாக இப்போது நிலைகொள்கின்றது.  இந்த கோயில்  எளிய தோற்றம் கொண்டது. தற்போதுள்ள புதுக்கோயில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெ.பி பிரய்ட் என்பவர் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிரானைட் கல்லால்  கட்டப்பட்டுள்ளது  என்பதை சிறப்பாக கூறுகின்றனர்.  கன்யாகுமரி தமிழக சங்குமுகம் அடுத்துள்ள புத்தன்ந்த்துறையை சேர்ந்த ஆலையத்தின் சாயலில் கட்டியுள்ளனர்.  கேரளா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு  இந்த கோயிலின் மறைமுகமான பங்கு பெரிதும் உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எவ்விதம் உதவினர் என்பது இங்கு பயிலும் அனாத சிறுவர்கள் நலனை அறிந்து  தான் கண்டு கொள்ள இயலும். இங்குள்ள குரிசடி காணிக்கை பெட்டியை   திருடர்கள் உடைப்பது வழக்கமான செயலாகும்.உலகில் பல இடங்களில் நல்ல சிறந்த கல்விக்கு வழிசெய்யும் பிரான்சிக்கன் சகோதரகள் இந்த எஸ்டேட் மக்களுக்கு ஒரு கல்லூரி ஏன், ஓர் மழலைப்பளி கூட திறக்கவில்லை. ஏலக்காய் காயவைத்து பதப்படுத்துவதில் இங்குள்ள தோட்டக்காரர்களுக்கு உதவுகின்றனர். பொதுவாக மலைப்பகுதி  மக்கள் அமைதிவிரும்பிகள் ஆகவே இருப்பார்கள். இயற்கையுன் போராடி வாழ்பவர்கள் என்பதால் சிறிய சிறிய சந்தோஷங்களில் இறைவனை தேடி வாழ்ந்து வருபவர்கள்.

பட்டுமலை நிறுத்தம் வந்ததும் பாட்டி குடியிருக்கும் பகுதிக்கு ஒரு மைல் நடந்து செல்ல வேண்டும். ஓடி ஆடியும் செல்வோம். வழியில் எஸ்டேடு ஆஸ்பத்திரி கடந்து நடந்து சென்றால் அழகிய சவுக்கு மரம், தேயிலை தோட்ட அதிகாரிகள் வீடுகள் வரிசையாக அதனுள்ளில் இருந்து சில கண்கள் மட்டும் எட்டி பார்க்கும். அதே பாதையில்  தேயிலை தொழில்நிலையம்(டீ பாக்டரி) கடந்து சென்றால் பூஞ்சடி பாட்டி வீடு வரும். 

பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி  ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும்.  அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது  !  பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள்.  எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.

பின்பு சிறிய ஓர் அருவி-கானை கடந்து சூளப்பிரட்டு செல்ல வேண்டும். அந்த ஆற்றில் தான்  பாட்டி எல்லாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது துணி துவைப்பார்களாம்.    அந்த கானில் ஓர் பெண் முனி /பேய் உண்டு என பாட்டி கூறுவார்கள். திடீர் என அங்கு நடந்து செல்பவர்களை கீழை தள்ளி விடுமாம். முனிக்கதையை சற்று விரிவாக அறிந்து விடலாம் என்றால் என்னவர் உனக்கு ஏன் முனி மேல் அக்கறை என க்கூறி தடுத்து விட்டார்

ஒரு ஏற்றம் ஏறி சென்றால் பாட்டி வீடு வந்து விடும். வீட்டோடு சேர்ந்து கடையும் இருந்தது. வீட்டு முன் குடி நீர் குழாய் இருக்கும். அத்தை வெங்கலை பானைகளை கரி -சாம்பல் சேர்த்து விளக்குவது நினைவில் உள்ளது. பாட்டி வீட்டில் தண்ணீர் கேட்டால் மோந்து தருவதாக தான் கூறுவார்கள். எங்கள் வீட்டி தண்ணீரை கோரி தான் கொடுப்போம். பாட்டி வீட்டில் சில பசுக்களையும் வளர்ந்த்தனர். காலையில் கோழி கொக்கரிக்கும் குரல் இன்றும் நினைவில் உள்ளது. அம்மா வீட்டில் இருக்கும் காலம் வளர்த்த கன்று குட்டியை பற்றி கூறுவார்கள். கன்று குட்டியும் அவர்கள் படுக்கும் அறையில் தான் தூங்குமாம். கன்று குட்டி அம்மா, மாமாவிடம் அன்பாக இருந்ததும் பின்பு ஒரு நாள் அது மலையில் உருண்டு செத்த போது அனைவரும் வீட்டில் உணவு கூட எடுக்காது அழுது புலம்பினதை பற்றிய கதைகள்  கூறும் போது ஆச்சரியமாக இருக்கும். 


இப்படி பல பல சின்ன வயது கதைகள் மனதில் ஓட பட்டுமலை எஸேட்டின் வாயிற்கதவை வந்து அடைந்தோம். பெண்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பெண்கள் போராட்ட களத்தில் மழையில் குடையுடன் இருக்க வெள்ளைசட்டை போட்ட தலைவர்கள்  போராட்ட குழுவை உற்சாகப்படுத்தி பேசி கொண்டிருந்தனர்.  போராட்டம் நடைபெறுவதால் நாங்கள் சென்ற வாகனத்தை பாதையில் செல்ல அனுமதிக்க இயலாது எனக் கூறி ஒரு குறுகிய பாதை வழியாக செல்லும்படியாக கூறினர்.    நாங்கள்  குறுகிய பாதை வழியாக பயணித்து வண்டி சறுக்கி பள்ளத்தில் விழுமோ , டயர் உடைந்து விடுமோ என்ற பயத்தில்  செல்லவேண்டிய இடத்தை வந்தடைந்தோம்.  

அவசர கதியில் வண்டிய விட்டு  இறங்க, கீழை விழுந்து அணிந்திருந்த செருப்பும் பிய்ந்து விட்டது. செல்லும் போது இருந்த மனமகிழ்ச்சி ஒரே நொடியில் மறைந்து.   ஒரு வழியாக என் மாமா மகள் வீட்டிற்கு வந்தடைந்தோம். அங்கு ஒரு பெரியவர் வீட்டு முன் அழகான ஓர் வெள்ளை நிற ரோஜா பூத்து நின்றது. ரோஜாவை கண்டு ஆசைப்படுவதை கண்டதும் பெரியவர் பெரிய ஓர் ரோஜா கம்பை வெட்டி சிறிதாக நறுக்கி கட்டி தந்தார். ரோஸ் செடி கிடைத்ததும் விழுந்த வலியை மறந்து வீடு வந்து சேர்ந்தேன்.  

மதங்கள் போதிக்க வேண்டியது மனித நேயம் மட்டும் தான்!

சமீபத்தில் வீட்டிற்கு விருந்தாளியாக ஒரு பாட்டியம்மா வந்திருந்தார்கள்.  பாட்டி போகிற போக்கில் வீட்டில் செடி கொடிகள் பராமரிப்பதில் யாருக்கு விருப்பம், பராமரிப்பு இன்னும் சரியாக இருக்க வேண்டும் என கூறி சென்றார். அத்துடன் உங்களுக்காக  ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் மகனுக்காக பேசும் திறனிலுள்ள குறைபாட்டை பெரிய குறையாக கூறி ஜெபித்ததை எனக்கு எரிச்சலை வருவித்தாலும் மகன் மனதைக்கருதி நான் அதை ஒரு பொருட்டாக மதித்தாகவே காட்டி கொள்ளவில்லை. 

என் மகன் பல துறைகளில் சிறந்தவன். இருப்பினும்  சில குறைபாடுகள் என்பது, இயற்கையின் நியதி, நம் வளர்ப்பில் உள்ல குறைபாடு, சிறு குழந்தையாக இருக்கும் போதுள்ள தாக்கம், பரம்பரையான சில குறைபாடுகள் என பல காரணங்கள் உண்டு. இதற்கு என ஒரே காரணமாக இறைவன் கிருபை, சாபம், தயை என்ற பெயரில் கதையளப்பதை நான் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை.

இது ஒரு வகையான கிருஸ்தவ மனவியாதி. யாரை பார்த்தாலும் அவர்களில் குற்றம் கண்டு பிடிப்பது, அவர்கள் இயலாமையை சுட்டி காட்டுவது அவர்களுக்காக தான் ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் தேவையில்லாத குடும்ப விஷங்களில் தலை இடுவது.  இந்த வியாதி திருநெல்வேலி கிருஸ்தவர்களை பொறுத்து பெரிதாகவே தாக்கியுள்ளது. 

ஒரு முறை மகன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாட்டுடன் அவன் தலைமை ஆசிரியரை சந்தித்த போது பெற்றோர்கள் ஜெபியுங்கள் என்றதும் எனக்கு பள்ளி மேலுள்ள மதிப்பே அற்று போனது. இன்னும் சில பள்ளிகளில் குழந்தைகள் செய்யும் இயல்பான சேட்டைகளை குசும்புத்தனங்களை சாத்தானின் செயல் என்று சொல்வார்கள்.  


பேருந்தில் பயனிக்கும் போது இது போன்ற மனவியாதி பிடித்தவர்களை இனம் கண்டு ஒதுங்கி கொள்வது உண்டு. சிறிதாக சிரிப்பார்கள் நாமும் உறவினர்களோ, மறந்து போன  தெரிந்தவர்களோ என் திரும்ப சிரித்து விட்டால் நம்மை பற்றிய சிறு விசாரணைக்கு பின் அவர்கள் வல்லமையை கொட்ட ஆரம்பித்து விடுவார்கள். 


ஒரு முறை ஒரு உறவினர் வீட்டில் தங்கின போது அவர் ஒரு தினஏட்டை காட்டி தந்து "ஒவ்வொரு மாதவும் ஒரு குறிப்பிட்ட சிலருக்காக ஜெபித்தாகவும் இந்த மாதம் உன் பெயரை குறித்து ஜெபிக்கிறேன் நீ சபை மாறி ஜெபித்தால் நிறைய வசதியாகி விடலாம்" என கூறினார். பணக்காரர் ஆவது செல்வ செழிப்புடன் வாழ்வது என்பது ஒரு மனிதனின் லட்சியமாக மாறும் போதே அங்கு தீமைகளின் அணிவகுப்பு  ஆரம்பமாகி விடுகின்றது. எனது லட்சியம் என் ஆசைகள் எனக்கு தெரிவதால் அவர் பேசின பேச்சை ஒரு பொருட்டாக நான் எடுக்கவில்லை என்றதும் அவர் என்னை  மதித்து உறவினராக சேர்த்து கொள்வது இல்லை என புரிந்து கொண்டேன். இது போன்ற மனிதர்களை விட்டு விலகியிருப்பது எவ்வளவோ மேல். ஒரு மனிதனுக்கு தேவை, அமைதி அது பணத்தால் வசதியால் வராது என்பது தெள்ள தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

இன்னும் சில கிறிஸ்தவ விஞ்ஞானிகள்; உங்கள் குடும்பத்தில் ஒரு சாபம் உள்ளது, அது உங்கள் கொள்ளு தாத்தா செய்த பாவம் என்ற தோரணையில் கதை ஆரம்பித்து விடுவார்கள். 

இது போன்ற நடவடிக்கை எல்லாம் அவர்களில் வாழ்க்கையிலுள்ள ஏமாற்றத்தை வெறுப்பை மறைத்து அதே நிலைக்கு இன்னும் சில மனிதர்களை எட்ட வைக்கும் யுக்தியாகும். 

பலர் இன்று செல்வ செழிப்பு சமூக அந்தஸ்து என கருதுவது; ஒரு அரசு பதவியில் இருப்பது நோகாமல் நொங்கு எடுப்பது என்பது போல் எளிதாக் சம்பாதிப்பது என அர்த்தம் கொள்கின்றனர். ஆனால் இதே கொள்கையில் வாழ்ந்து இன்று 70 வயதை கடந்து வீட்டின் ஓரமாக உட்காந்து கடந்த வாழ்க்கையை எண்ணி நிராசையுடன் தவிக்கும் பல வயோதிகர்களை கண்டுள்ளேன் ..   

சமீபத்தில் ஒரு எழுத்தாளர் நண்பரை சந்தித்து பேசி கொண்டிருந்த போது; அவருடைய கிறிஸ்தவ உறவினர் இவர் எழுத்து விருப்பத்தை எடுத்து கூறி "நீங்கள் ஆண்டவரிடம் திரும்புங்கள் புகழ்ச்சிகாக அலையாதீர்கள்" என கூறி அவரை வார்த்தையால் துன்புறுத்தியதை கூறி வருத்த பட்டு கொண்டார். 

இன்று முகநூல் போன்ற பக்கங்களிலும் சில நண்பர்கள்; கிறிஸ்தவர்களை  விமர்சித்து வருகின்றனர். இது போன்ற செயலை மதத்துடன் பார்க்காது அவர்கள்  மனநலனுடன் பார்ப்பதே சிறந்தது. வாழ்க்கை மேலுள்ள ஒரு வகையான வெறுப்பு அடுத்தவர்களை காணும் போதுள்ள பொறாமை போன்றவற்றை வெளிப்படுத்த கடவுளை துணைக்கு சேர்த்து கொள்கின்றனர். 
 

நான் குறிப்பிட்ட சில பக்தி குழுவுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதில்லை. இவர்கள் ஆத்மீகம் என்பதை ஏதோ  வசதி வாய்ப்பு கிடைப்பதையும்' பதவி' வேலை' வீடு கிடைப்பதாகவுமே பார்க்கின்றனர். வருடம் ஒரு முறை வரும் கிறிஸ்துமஸ் குழுவைக் கூட நான் கடமைக்கு என்றே வரவேற்பது. ஒவ்வொரு முறை வரும் போது நம் பெயரை கேட்பது பார்க்கும் வேலையை கேட்பது' அதற்கு தகுந்தது போல் அறச்செயலுக்கு என பணம் கேட்பது எல்லாம் வெறுப்பையே தருகின்றது. 

வீடு என்றதும் அவர்கள் நினைப்பது பெரிய  பங்களா போன்ற வீடுகள் வீட்டிற்கு முன் கார் வசதி போன்றவையாகும். குடும்ப சொத்து போன்றவை இல்லாது நியாமாக சம்பாதிக்கும் ஒருவனால் சராசரி வாழ்க்கை தான் சாத்தியம். இதை கடவுள் அருள் கிருபை என முடிச்சு போடுவது அப்பட்ட ஏமாற்று தனவும் திமிறுமாகும். இது போன்ற மனநிலை பெருகி வருவதை விடுத்து குறைவாதாக தெரியவில்லை.  அரசு அதிகாரியாக இருந்து லஞ்சம் வாங்கி சேர்த்து அதில் தசம பாகம் கொடுப்பதையோ அல்லது சொந்த சகோதரனையை ஏமாற்றி சொத்து, சேர்த்து அதன் ஒரு பாகத்தை நாலுமாவடிக்கு கொடுத்தால் பாவ நிவர்த்தி ஆகி விடும் என்று நினைப்பதை எல்லாம் பக்தி, கடவுள் வணக்கம், என எடுத்து கொள்ள இயலாது.


பொதுவாக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் என்ற பொருள் தான் தகும். இதில் கொள்கை வழி பாட்டு முறை, மற்றும் அதிகார மோகத்தால் உருவாகினது பல ஆயிரம் சபைகள். இந்த சபைகள் எல்லாம் நிலை நிற்க வேண்டும் என்றால் மனவியாதி பிடித்த சில மக்களும் தேவை. 

பொதுவாக கிறிஸ்தவம் என்பது கத்தோலிக்க மதமாகத்தான் இருந்தது. இந்த சபை ஒரு தலைமை கட்டுபாட்டில் கோட்பாட்டுடன்  இயங்குவது ஆகும். ஒரு குறிப்பிட்ட நபரின் கருத்தை கிறிஸ்தவம் என்ற பெயரில் எடுத்து கொள்ள அனுமதிப்பது இல்லை.   ஒன்பது வருடம் துவங்கி பனிரெண்டு வருடங்கள் மட்டும் படித்தவர்களால் மட்டுமே மத நூலை பற்றி  போதிக்க இயலும். போதனையில் மாறுபாடு இருந்தாலும் கேள்வி கேட்க, தடுக்க வதளம் உண்டு, 

இன்று புற்றீசல் போல் பெருகிய பல தனி நபர் சபைகள் தங்கள் வாய்க்கு வந்ததை தங்கள் மனநிலைக்கு தங்கள்  ஆற்றல் அறிவின் அளவில் உபதேசிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் உபதேசிப்பது என்றால் மக்களை வசப்படுத்துவது அடிமைப்படுத்துவது அவர்கள் கருத்தை வலுகட்டாயமாக நிறுவது என்று மாற்றி விட்டனர். இவர்களை போன்றோரை முன்நிறுத்தி கிறிஸ்தவம் என்றாலே இது தான் கிறிஸ்தவர்கள் இவர்கள் தான் என முத்திரைகுத்தி குற்றம் சாட்டுவதையும் தவிற்க வேண்டும்.மதம் என்பது மனதை பண்படுத்த என்றில்லாமல் மற்ற மனிதர்களை குற்றம் சுமத்தை வழிப்படுத்த என்று விளைந்தால் அது ஆபத்தில் தான் முடியும். எல்லாம் மதங்களும் போதிக்க வேண்டியது மனித நேயவும் உலகின் மேலுள்ள கருதலும் தான். கடவுள் நம்பிக்கை நேசம் என்பது ஒரு வகையான கற்பனை உலகை கடந்து தங்களுடன் வாழும் மக்களை நேசிக்கும் மனநிலைக்கு எட்ட வைக்க வேண்டும்.  இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களில் அவர்களால் தங்கள் கணவரை அல்லது மனைவியை நேசிக்க இயலாது ஆனால் கடவுளை கடுமையாக வணங்குவார்கள். கடவுள் மேலுள்ள பிரியம் என்பது சிலருக்கு தங்களுடன் உள்ள மனிதர்களை வெறுக்க செய்கின்றது. ஒரு மனிதர் மணிக்கூர் கணக்காக தான் செய்த அற்புத கிரியையை பற்றி பேசி கொண்டிருந்தார். பேச்சின் மத்தியில் அவர் கடைசியாக சிரித்த படம் அவர் கல்யாண ஆல்பத்தில் இருப்பதாக கூறினார். கடவுளின் அரிய செயல்கள் என்று பேசுபவரால் தன்னுடன் வசிக்கும் மனைவியை பற்றி பெருமையாக எண்ண ஒன்றுமில்லை. ஆனால் இது நடிப்பு.  

இவர்களை பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தெரிந்ததால்  தான் யேசு நாதர் கூறினார் "நீ மற்றவர்களை விதிப்பது போல் நீ விதிக்கப்படுவாய்", "உன்னை போல் உன் அயலானே நேசி" , காணப்படும்  உன் சகோதரனை நேசிக்காது காணப்படாத இறைவனை எவ்வாறு நேசிக்க இயலும். மதவாதிகளால் தான் யேசு நாதர் கொல்லப்பட்டார் இப்போதும் மதவாதிகளால் தான் அவர் வார்த்தைகளும் நோக்கங்களும் மாற்றப்படுகின்றது.

போட்டி மனோபாவம் தோல்வியே

வெற்றி என்பது மகிழ்ச்சி, தன்ன்னம்பிக்கை கொடுப்பதை விடுத்து ஒரு மனிதனை தற் பெருமை, "தான்" என்ற அகம்பாவம் கொள்ளவைப்பது  அல்லது  "தான் மட்டுமே" சிறந்தவர் என்ற மனநிலைக்கு ஆட்படுத்தினால்  அது ஒரு மாபெரும் தோல்வி நிலை ஆகும்.

ஒரு மனித பிறப்பின் அடிப்படை கொள்கை , நோக்கம் என்பது அகத்தை தேடி அறத்தை எட்டுவதாகும்., இன்றைய பல போட்டிகள் மனிதர்களை வெற்றி களிப்பில் அறத்தை மறப்பவர்களாகவும்,  வெற்றி என்பதை மற்றவர்களை கேலிக்குள்ளாக்கும் செயலுக்கு ஆக்கமாக அமைக்கின்றனர்.  ஒரு ஆசிரியர் வகுப்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவனை புகழும் போது,  அவன் சராசரி மாணவர்கள் உலகில் இருந்து தனித்து பயணித்து மற்று மாணவர்களை கீழ்த்தரமாக நோக்கும் மனநிலையை அடைகின்றான். வெற்றியை தவற விட்டவனும் தனித்துவமான தன்னை எவ்வகையிலும் தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாத இன்னொருவனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து தாழ்வு மனநிலைக்கு  எட்டுகின்றான்.


வெற்றி என்பது தோல்வியை மூடி மறைக்கும் முயற்சி என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். வெற்றி என்பதை சாற்றோர்களால் தன்னை தானே அழித்து கொள்ளும் ஓர் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இன்று பல பரீட்சை, விளையாட்டு,கலை போட்டிகளில் வெற்றி களிப்பில் திளைத்தைவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் தோல்வியை தழுவியவர்களாகவும், மனநிலை பிளர்வு கொண்டவர்களாகவும் சில பொழுது தற்கொலை ஊடாக தன்னை மாய்த்து கொண்டவர்களாகவும்  இருக்கின்றார்கள். 

ஆனால் மற்று சிலரோ  இந்த வெற்றி-மாய உலகில் தன்னை விடுதல் ஆக்கி கொள்ளவே தனிமையை தேடும் மனநிலையையும் அடைகின்றனர்.  வெற்றிக்கான போட்டி பல மனிதர்களை அழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. பைபிள் கதை வழியாக  நாம் அறிவது  கடவுளிடம் போட்டி போட முதல் மனிதர்களாம் ஆதம் ஏவாள் துணிந்த போது பெரும் துயரை-தோல்வியை சந்தித்தனர்.  முதல் சகோதரன் காயேன் தன் சகோதரனிடம் போட்டி கொண்ட போது அவனை கொலை  செய்யவும் தயங்கவில்லை. ஜேக்கப் என்ற சகோதரன் ஏசா என்ற சகோதரனிடம் மோசமான வழியூடாக போட்டி போட்டு வெற்ற் கொள்ள முயன்ற போது பல  வருடங்கள்  அடிமையாக  தன் மாமனார் வீட்டில் அகப்படுகின்றான். 

 மகாபாரத கதையை எடுத்து கொண்டாலும் தன் சகோதர்களான பாண்டவர்களிடம் போட்டி இட்ட கவுரவர்கள் ஒரு போதும் நிம்மதியாக வாழவில்லை. போட்டி அழிவை எட்டுகின்றனர்.மற்றவர்களையும் அழிக்கின்றது.

Image result for trophy images ஒவ்வொரு ஆசிரியனும் தங்கள் மாணவர்களை போட்டியாளர்களாக உருவாக்குவதை விட வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டும். வெற்றி என்பது நிறைய பணம் ஈட்டுவது, அதிகாரம் பெறுவது என்ற உலக செல்வங்கள் என்பதை  விட அழியாத உள-உள்ள நலனுடன் மனத்தூய்மை கொண்டு  அமைதியுடன் வாழ்வதாகும் என்று உணர வைக்க வேண்டும். வாழ்க்கையின் க்‌ஷணத்தில் வாழாது பிற்கால- முற்காலத்தை எண்ணி எண்ணி வதைப்படாது வாழ  புதிய தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் நான் கண்ட சில காட்சிகள் என்னை இந்த புதிய தலைமுறையை பற்றி எண்ணி துண்புற செய்தது. இரண்டாம் இடத்தில் வரும் குழு தன்னால் முதல் இடத்தில் வர இயலவில்லை என்ற துயரில் தன் இரண்டாம் நிலையை எண்ணி மகிழ்ச்சி அடையாது நிராசையாக திரும்பியது.  மூன்றாம் நிலையை அடைந்தவர்களோ தீர்ப்பை மாற்றி எழுது என்ற பிடிவாதத்தில் தன்னை முழுதுமாக புரக்கணித்து  வெறுப்பு, கவலை,எதிர்ப்பு மனநிலையில் பிரிந்தனர். இந்த மூன்று நிலையிலும் எட்டாதவர்கள் தான் பங்கு பெற்றோம் தன்னால் இயன்ற அளவு போராடினோம் என்ற மனநிலையில் நிம்மதியாக  மகிழ்ச்சியாக  இருந்தனர்.

இந்த வாழ்க்கையை ஆழமாக நோக்கினால் எது வெற்றி எது தோல்வி? மகிழ்ச்சியாக நாம் இருப்பதே வெற்றி. வெற்றிக்காக சரியான வழியில் பயணித்து அந்த வெற்றியை சூடிக்கொள்வது தான் மாபெரும் வெற்றி. அசோக சக்கரவர்த்தி எதை வெற்றியாக கண்டான் தான் வெற்றி என நினைத்து பல மக்களை கொன்று அழித்து கைபற்றிய நாட்டை துறந்ததையே வெற்றியாக கண்டான். 

நம் புதிய தலைமுறையின் மனோபாவத்தை கெடுப்பதில் அவர்கள் கற்கும் கல்வி சூழல், பெற்றோர் வளர்ப்பு முறை இந்த சமூக நிலைபாடுகள் பெரிதும் காரணமாகின்றது. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கற்று வர அனுப்பதில்லை எல்லோரையும் மிஞ்சி முதல் இடத்தில் வரவேண்டும் என்ற வெறியையே ஊட்டி வளர்க்கின்றனர். ஒரு நிலையில் இந்த தலைமுறை தான் நினைத்தை அந்த இடத்தை எட்ட இயலாது வரும் போது பெரும் கட்டிடங்களின் முகப்பில் இருந்தும், ஓடும் இரயில் முன் பாய்ந்தும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றது. ஒரு தாய் பெருமிதத்துடன் கூறினார் "என் மக நினைத்ததை வெறியாக பின்தொடர்ந்து கண்டடைந்து விடுவாள்" என்று. ஆனால் மகள் பின் பற்றும் வழியை பற்றி தாய் பேதையாகவே இருந்தார். 

இன்றைய தலைமுறையின் சமூக வாழ்க்கை தனிநபர் வாழ்க்கை போட்டி என்ற மனநிலையின் பிடியில் சிக்குண்டு நிலைதடுமாறுகின்றது. வாழ்க்கை தன் நிலையில் தன் போக்கில் நிர்ணயிக்காது தான் வாழும் அடுத்தவர்  தரும் அளவுகோலில் அளந்து அதன் பிடியில் உழலுகின்றனர். 

தூய உள்ளத்தின் நிலையே படைப்பாற்றல்!   இன்றைய நிலையில் படைப்பாற்றல் பெரிதும் குறைந்து வருவதின் காரணமும் இது போன்ற  மனநிலை தான். 'தான் வெற்றி வாகை சூடவில்லை', என்றால் என்னை சுற்றியுள்ள மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டனர், இந்த இயக்கமே சரி இல்லை என்ற மனநிலையை விடுத்து; தான் எவ்வாறு அடுத்த நிலைக்கு எட்ட இயலும் என்ற நேர்மறை எண்ணத்தை விடுத்து ;தன்னை ஒடுக்கும் தன்னை அழிக்கும் மனநிலைக்கு எட்டுகின்றனர். இவர்களது இது போன்ற மனநிலைக்கு சில மனபிளர்வு கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலம்விரும்பிகள் காரணமாகின்றனர். தன்னை அறிந்து தன்னை சுயபரிசோதனை செய்து தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டும் வரை இன்றைய இளம் தலைமுறை அடிமைகள் தான்.