header-photo

ஓரின சேர்க்கை ..குற்றமா? அறியாமையா? .............

சமீபத்தில் பெங்ளூரை சேர்ந்த இளைஞர் அவர் மனைவியின் குற்றச்சாட்டால் 377 சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஓரின சேர்க்கை ஆர்வலர்களின் கோபத்தை எழுப்பி விட்டது. இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.

சமீப காலமாக எந்த ஒரு  செயலுக்கும் ஆதரவு அல்லது வக்காலத்து வாங்கும் விதமாக குற்றவாளியுடன் சில ஆர்வலர்களும் பொது தளத்தில் வருவது சகஜம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண்ணை - அவர் குடும்பத்தை ‘திருமணம்’ என்ற பெயரில் ஏமாற்றிய அந்த இளைஞனின் குற்ற செயலை பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது.  சிறுபான்மையினர் என்பதால் மற்றொருவரை ஏமாற்ற உரிமை உள்ளதா? ஓரின பாலினரால் பாதிப்படைந்த அப்பெண்ணின் வாழ்க்கை இனி பழைய நிலைக்கு வர பல வருடங்கள் ஆகலாம். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருப்பின் சமூகத்தில் பொதுவான சட்டங்களுக்கு உள்பட்டு வாழும் ஒரு பெண்ணை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி மேலும் தான் ஒரு சராசரி மனிதன் தான் என்று சமூகத்தை ஏமாற்ற நினைத்தது மன்னிக்க இயலாத குற்றமாகும்.  ஓரின பால் விருப்பம் கொண்டவராயிருப்பின் ஏன் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவ்விளைஞன் சிந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய உரிமையை காப்பாற்ற அவருக்கு உரிமை இருப்பது போல் இன்னொரு நபரின் அதும் ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதும் எவ்வகையிலும் நியாயமில்லை.                               
ஒரு நபர் ஏன் ஓரின பாலின ஆர்வம் கொள்கிறார் என்பது இயற்கையானதா அல்லது  மரபணு சார்ந்த குரொமசோம் குறைபாடா அல்லது சில செயற்கையான பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியா என இன்னும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளுக்கு எட்டவில்லை. 50% ஓரினசேர்க்கையாளர்கள்  உள்ளடங்கிய அமெரிக்காவில் கூட ஆராய்ச்சி விடையாமாகவே  இருந்து வருகின்றது. அரசியலற்ற ஒரு முடிவை அவர்களாலும் எடுக்க இயலவில்லை. 

பழைய தலைமுறையில் பருவ வயது வரும் அல்லது வரும் முன்னே திருமணம் அரங்கேறுவதால் அவர்கள் பாலின வேட்கைக்கு வடிகால் தேட வீட்டிற்குள்ளே அருகிலே வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதோ அனைவருக்கும் கல்வி அதுவும் பல வருடங்களாக கல்வி கற்க வேண்டும், வேலையில் சேர வேண்டும் வேலையில் சேர்ந்தாலும் நிறைய சம்பாதித்த பின்பு திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஓரின சேர்க்கை என்பது பாலின வேட்கையின் வடிகாலாக மாறுகின்றது.இதே போன்று தான் இராணுவத்தில் பல நாட்கள் மனைவியை பிரிந்திருப்போர் ஜெயிலில் உள்ளோரும் இப்பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை விடுதியில் தங்க வைக்க தயங்குவதில்லை. வெறும் 12-14 வய்தில் விடுதி வாழ்க்கையில் சிக்குறும் பல குழந்தைகள் சூழல் அச்சுறுத்தலில் தனிமையில் சில உறவில்  பணிந்து பின்பு அதை பழக்கமாகவும் மாக மாற்றி கொள்கின்றனர்.                                                                     
அதே போன்று பழம் கால மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் ஒரு கூட்டு சமூகத்திற்குள்ளே உழறான். பாலின தேவை என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்து புரிதல் இருந்தது. தற்போதைய சமூக சூழலில் மனிதன் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டு பின்பு அந்த குடும்பங்களும் பிரிந்து தனி நபர் சமூகமாக மாறி விட்டது. ஒருவன் தன் குடும்பத்தை அமைத்து கொள்ள சம்பாதிக்க சில காலம் வேண்டி வருகின்றது. இதில் சில பெற்றோர்கள் உழைப்பாளியான  மகன் என்றால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே போகின்றனர். இதனால் ஆண் பெண்கள் இருவருமே நெடிய நாள் தன் பருவ வயதை கடந்த பின்பு திருமண அல்லது பாலிய உறவுக்கு என காத்திருக்க வேண்டி வருகின்றது. இந்த இடைப்பட்ட காலயளவில் தன்னுடன் நெருங்கி பழகும் தங்கியிருக்கும் தன் பாலினத்தவருடன் நெருங்கிய மன உறவு பேணுவது போல் உடல் சார்ந்த பாலின உறவும் பேண உந்தப்படுகின்றனர். இதை இயற்கை என கூறியும் வருகின்றனர்.                                                        
பல விடுதிகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இப் பழக்கத்தை விளையாட்டாக துவங்கி சிலர் இந்த உறவை மறக்காத படி அடிமையாகி விடுகின்றனர். சிலரோ திருமணம் போன்ற உறவுகளை ஏற்படுத்திய பின் இது போன்ற உறவுகளை தவிற்கின்றனர். சிலர் மேலும் தொடர்கின்றனர். ஒரு முறை ஒரு அனாத விடுதியில் இது போன்ற ஒரு சிறுவனை சந்திக்க நேர்ந்தது. அவன் தன் குழந்தைப்பருவத்தில் தன் கிராமத்தில் ஒரு கொடூரனால் காம வேட்கைக்கு பலியாடாகியுள்ளான். ஒரு பக்கம் வறுமை தாய் வேலைக்கு போக வேண்டும் தகப்பன் ஒடி போய் விட்டான் என்ற சூழல் இச்சிறுவனை அனாதை ஆசிரமத்தில் விட்டிருந்தனர். ஒரு வேளை இது போன்ற சிறுவர்களுக்கு சிறு வயதிலே சிகித்சை கவுன்சிலிங் கொடுத்தால் மாறி விடக்கூடிய பழக்கமே. ஆனால் அவனை தனிமைப்படுத்தி வைத்திருந்தது வேதனையை தான் கொடுத்தது.

ஓரின சேக்கையில் பல வசதிகள் உண்டு. தன் பால் இனத்தவரை கிடைப்பது அவர்களுடன் செலவழிப்பது என்பது மிகவும் எளிது. சமூக கலாச்சார பண்பாட்டு சட்டவரைகள் பின் தொடர்வது இல்லை. தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு தாங்கள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் அவர்களை வளர்க்க வேண்டும் போன்ற பொறுப்புகள் கழுத்தை நெருக்குவதும் இல்லை. ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருகளிடம் தாவுவதிலும் எளிதாக இருக்கின்றது. ஓரினசேர்க்கையை ஒரு குற்றமாக கருதுவதை விட அறியாமையாக எடுத்துகொள்ளலாம். இந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமூக சூழல் மாற வேண்டும்.சரியான வயதில் பாலின உறவு ஏற்படுத்துவதை உற்சாகப்படுத்த வேண்டும். பருவ வயதிலிருந்து 10 வருடத்திற்குள்ளாக திருமண உறவை ஏற்படுத்த தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். எதிர் பாலினத்தாரை மதிக்கவும் நட்புறவோடு பழகவும் தகுந்த சூழல் இருக்க வேண்டும். 

அரசியல் காரணங்களுக்காக ஓரின சேக்கைக்கு சட்டஒப்புதல் அளித்த அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் நிலை பற்றியும், சமூக தாக்கம் என்ன என்பதை பற்றியும் அறிய வேண்டி உள்ளது.  இது போன்ற பழக்க வழக்கங்களால் குடும்பம் என்ற அமைப்புக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.                                                                               மூன்றாம் பாலினத்தாருக்கு கொடுக்கும் அங்கீகாரம் சமரசம் ஓரின சேர்க்கையாளர்களும் தேவையா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

இன்னும் தெரிய வேண்டிய செய்தி ஓரின சேர்க்கை என்பது பெங்ளூரு ர் மற்றும் அமெரிக்கா போன்ற தொழிநுட்ப இடங்களில் மட்டுமல்ல பட்டி தொட்டிகளிலும் இப்பழக்கம் உள்ளது. ஆற்வ கோளாறு துணைவர்களின் அனுசரிப்பற்ற வாழ்க்கை, தகாத உறவுகள்,  சரியான புரிதல் இல்லா திருமண உறவு, தன்னலமான வாழ்க்கை நெறி என பல காரணங்கள் இதன் பின்னில் உண்டு. சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தன் மனைவியை எதிர் விட்டு பெண்ணிடன் உறவு பேண வைத்து அப்பெண்ணிடம் பல ஆயிரங்கள் விலையாக பெற்ற நம் தமிழக கணவன் மனநிலையும் காண வேண்டும்.


தமிழகத்தை பொறுத்த மட்டில் பிள்ளை பெற்று கொள்ள மட்டுமே சில தம்பதிகள் உடல் உறவை பேணுவதையும் பின்பு  பாலியல் உறவே குற்ற செயல் போல் கருதும் பெண்கள் ஒரீன உறவுகளில் சிக்குவதையும் காணலாம்.                                                                          இது போன்ற பிரச்சினைகளை  காரண காரியத்துடன் அணுகி விழிப்புணர்வு கொடுத்தால் வரும் தலைமுறையாவது  நல்ல ஆளுமையில் வழி நடத்தி கொண்டு வரலாம். விழிப்புணர்வு என்பது இதே நிலையில் வாழ்ந்து தற்போது வாழ்க்கையில் புதிய வழியை தேடியவர்களை  ஆலோசகர்களாக நியமித்து விழிப்புணர்வு கொடுத்து வந்தால் தீர்வை எட்டலாம். தமிழகம் பொறுத்தவரை குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் ஆதீத ஆசையில் பெண் குழந்தையை ஆணாக பாவிப்பதும் ஆண் குழந்தையை பெண்ணாக நினைப்பதும் அவர்கள் பிறந்த போது இதே தாக்கத்தில் வளர்ப்பதும் சில காரணங்களே. 

4 comments:

Avargal Unmaigal said...

யாருமே தொடாத சப்ஜெக்ட்டை எடுத்து அருமையாக விமர்சித்து ஒரு பதிவை பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of Madras said...

பாலின உணர்ச்சி மனம் சார்ந்தது.சமூக,குடும்ப கட்டமைப்புகள் இந்த பாலின உணர்ச்சியை ஓரு வரைமுறைக்குள் வைக்க ஏறபடுத்த பட்டவை.ஆதிக்க ரோமானிய சமுதாயத்தில் ஒரே பாலருடன் உறவு ஓரு பெருமையான விசயமாக கருதபட்ட்து.ஆண், பெண் இருபாலரும் அங்கீகரிக்க பட்ட மற்றும் அங்கீகரிக்க படாத பாலின வேட்கைகளை வாழ்க்கையில் பல முறை கடந்துதான் வர வேண்டி உள்ளது.இதில் மிக முக்கியம் ஒருவர் நடவடிக்கையால் மற்றவர் பாதிப்பு அடைவதை தவிர்ப்பதுதான்.

Kaveri Jenitha said...

R எங்கள் சமுகத்தில் இது ஒரு பாரிய குற்றமாக பார்க்கபடுவது தான் காரணம் .... இது பண்டைகாளங்களிலும் உண்டு ...

பெற்றேர் பிள்ளைகளை வற்புறுத்தி திருமண பந்த்ததில் இணைய வைப்பதே இந்த மாதிரி பொய்யாக வாழ்வதுக்கு காரணம்.

நான் சிறு பெண்ணாக இருக்கும் பொழுது இப்படி பட்ட ஆண்களை பார்த்து உண்டு... இவர்கள் அக்கம் பக்கத்தாரிடம் கேலியாகி மனைவியிடம் திட்டு வாங்கி வாழ்வதை பார்த்திருக்கிரேன்..

நாம் எப்படி மற்றவர்கள் எங்களை அங்கிகறிக்க வேண்டும் என்று எண்னுகிறேம் அப்படி தான் இவர்களும்.. இவர்களுக்கு சரியான அங்கிகாறம் வேண்டும். . நான் வாழும் நாட்டில் இது சாதணம் என்றாலும் இங்கும் ஒரு சில எதிர்ப்பாலர்கள் உண்டு. .

ஒரு தாயக நாளை என் குழந்தை இப்படி ஒரு வாழ்க்கை தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் இதை வரவேற்பன் ஒழிய என் குழந்தையை ஒதுக்கி வைக்க மாட்டேன்.. சமுகம் இரண்டாம் பட்சம் .. இதை ஒவ்வேருத்தரும் ஒற்று கொள்ள வேண்டும் ..

ஆணும் பெணும் போல் ..ஆண் ஆண் பெண் பெண் சேர்வதையும் ஏற்று கொள்ள வேண்டும்.

இப்படி ஒர் இனக்கை சேர்க்கை தவரு இல்லை..அது இயற்கையின் நியதி...

வேகநரி said...

நீங்க சொன்னது சரி. இவர்களால் மற்றவங்களும் தொல்லைக்கு உள்ளாகுறாங்க.

Post Comment

Post a Comment