30 Aug 2014

எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் என் புத்தகம் பற்றிய கருத்துரை!

ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை உண்மையாக மாற்றினது முகநூல் நண்பர்களூம் என் வலைப்பதிவு நண்பர்களுமே. வெளியிடும் பொறுப்பை லண்டனில் உள்ள உடன்பிறவா சகோதரி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆலோசனைகள் ஶ்ரீ அண்ணா வழங்கியிருந்தார்கள். பத்மர் அண்ணா வெளியிடும் நாளை விழாவாக மாற்றினார். இப்படியாக இந்த புத்தகம் ஒரு கூட்டு முயற்ச்சியாக வெளிவந்தது.

எழுத்தாளர் சகோதரர் கூறினது போல் விற்பனை தளத்தில் என்னால் வெற்றி பெற இயலவில்லை. பதிப்பாசிரியர் சில நிபந்தனைகளுடன் தன் கடமையை முடித்து கொண்டார்.


இருப்பினும் ஒரு காலத்தை இட சூழலை அதில் வாழ்ந்த சில மனிதர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறினது. மறையும் காலவும் மனிதர்களும் தடுக்க இயலாததது. இருப்பினும் ஒரு புத்தகத்தின் ஊடாக பதிந்துள்ளேன் என்ற மன ஆறுதல் உண்டு.

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உள்நாட்டு அகதிகளாக  வெளிமாநிலைங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். வலிந்து மாற்று மொழி கலாச்சாரம் என சமூக சூழலில் சிக்கி கொண்ட பல லட்சம் மக்களில் உள்ள நெருடல்கள் ஏக்கங்கள் பதிய நினைத்தேன். ஒரு வகையில் எனக்கான அடையாளத்தை உருவாக்கினாலும் அடிப்படைவாதிகளால் பல சிக்கல்கள் சந்திக்க வேண்டி வந்தது.






கதாசிரியர் முத்தாலக்குறிச்சி காமராசுவின் பாளை சமீந்தார்களின் வரலாறு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கின புத்தகம். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் தரவுகள் சேகரித்து எழுதினதை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளேன். என்னுடைய முதலாம் ஆண்டு மாணவரின் தந்தை என்று தற்செயலாக அறிந்த போது என் புத்தகம் ஒன்றை கொடுத்து அனுப்பியிருந்தேன்.

தன் வேலை மத்தியிலும் என் புத்தகத்தை வாசித்து  விளாவரியான யதார்த்தமான ஒரு விமர்சனம் பெற்றதல் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.இனியும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற உந்துதலை கதாசிரியரின் விமர்சனம் தருகிறது. கதாசிரிய  சகோதருக்கும் என் நெஞ்சர்ந்த நன்றி வணக்கங்கள்.  உங்களை போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தான் எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு வெளிச்சமாக வருகின்றீர்கள்.