6 Dec 2013

திருமணம் என்ற பிச்சைத்தொழில் !

இன்று ஒரு திருமண விருந்துக்கு சென்று வந்தோம். மிகவும் தெரிந்த குடும்பம். பெண் பார்த்த படலம் முடிந்த அன்றிலிருந்து  பெண்ணுக்கு பிடித்த துணி மணிகள் நகைநட்டு என எடுக்க ஆரம்பித்து விட்டனர் பெண் வீட்டினர். பெண்க்கும் ஆசை கொஞ்சம் நஞ்சமல்ல சுடிதார் கயிறு வைத்து தைத்தது, கட்ட சுடி, நெட்டை பைஜாமா, என்று 20 க்கு மேல் கறந்து  விட்டது. இனி விருந்து பட்டு முகூர்த்த பட்டு, சாந்தி முகூர்த்த பட்டு என ஐந்துக்கும் மேல் பட்டு சேலைகள்! 50 பவனுக்கும் மேல் நகை!

மாப்பிள்ளை வீட்டார் முகத்தில் இன்று காலையோ எந்த தெளிவும் இல்லை. பலகாரம் கொண்டு வந்த கூடை பத்தவில்லை என்கின்றனர், பெண் போட்டு இருக்கும் மாலை ஒல்லியாக இருக்கின்றதாம், கம்மல் எடுப்பில்லையாம். முக்கியமாக பெண் வீட்டாரை அன்னியர் போல் நிறுத்தி வைத்திருந்தனர்.

எவ்வளவு கேவலமான மனநிலை! வாங்குவது வரதட்சணை என்ற பெயரில் பிச்சை. இந்த தலைக்கனம் தேவையா? மற்று இனமக்களில் இல்லாத கொடிய மனம் நம்மிடம் காணப்படுகின்றது. மனிதனை மனிதனாக மதிக்காத அகராதி குணம். கேரளாவில் திருமணம் பெண் வீட்டில் என்றால், நிச்சயம் ஆண் வீடு என்றதாக தான் இருக்கும். திருமணம் அன்று பெண்- மாப்பிள்ளை தான் நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். ஆனால் இங்கு காணும் திருமணங்களில் ஆண் வீட்டாரில்  பல்லு போன கொள்ளு தாத்தா வரை கேள்வி கேட்டு கொண்டு, பெண் வீட்டை கேவலப்படுத்தி கொண்டு வலம் வருவார். மாப்பிள்ளை ஒன்றும் தெரியாதை பிள்ளை போன்று மணபந்தலில் வீற்றிருப்பார். பல பிரச்சினை கஷ்டங்கள் மத்தியில் பணம் புரட்டி பெண்ணை மண பந்தலில் எட்ட வைக்கும் தகப்பன், உடன் பிறந்த சகோதரரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு நடந்து கொள்ளும் நாளாக திருமண நாளை மாற்றி விடுவார்கள். பெண் முதல் பிரசம் முடித்து போகும் வரையிலுள்ள  எல்லா பண்டிகையும் இனி பணம் புரட்டும் திருவிழாவாகத்தான் இருக்கும் ஆண் வீட்டாருக்கு!

மணப்பெண் கொண்டு வரும் பணம் அவர்கள் வாழ்க்கைக்கான முதல்!. வயதானவர்களுக்கு இதில் என்ன உள்ளது. இளைஞர்கள் என்று, தங்கள் திருமண வைபவத்திற்கு தங்கள் பெற்றோர்களை விருந்தினர் இடத்தில் நிறுத்தி  சுயசார்பு நிலையில் திருமணம் முடிக்கின்றனரோ அன்றே இத்தகைய கேவலமான வியாபாரம் ஒழியும். இன்று நாகர்கோயில் போன்ற இடங்களில் பெண் எடுக்க பலர் முந்தி கொண்டு ஓடுவதும் தேடுவதும் கோடி கிடைக்கும் என்ற கேடி ஆசையில் தான்!  பெற்றோர்கள் பல வகைகளில் கடன்கள் வாங்கி திருமணம் முடித்து கொடுத்து விட்டு மீதி வாழ்நாளில் கடன்காரர்களாகவே உழலுகின்றனர். பெண்களும் தங்கள் நகை, உடை பேராசையை களைந்து தகப்பன் வீட்டில் இருந்து கொண்டு போகும் வரதட்சிணையை வங்கி மூலதனமாக கொண்டு போங்கள். இதுவே உங்கள் அடுத்த சந்ததியினருக்கும் பாதுகாப்பும் நலனாகவும் இருக்கும். நகை உடை ஆசையை காட்டி பெண்களை அடிமையாக்குவதும் இல்லாமல்; பெண்ணை பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் கேவலப்படுத்துவதற்கு பெண்களே காரணம் ஆகக்கூடாது. வாழ்க்கையில் ஒரு இக்கட்டான சூழல் வரும் போது இந்த முறை கூறி பணம் பறிப்பவர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். தங்களுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி கணக்காக மாற்றி விட்டால் சாஸ்த்திரம் சம்பிரதாயம்,முறை என்ற பெயரில் அனாவசியமாக செலவழியும் பண விரளத்தை தடுக்க்லாம். ஒரு தகப்பனார் திருமணம் முடிந்து நிகழும் இரவு "சுருள்" நிகழ்ச்சியில் இனி என்னிடம் ஒன்று மில்லை என உடுத்தியிருந்து வேட்டியை உருவி கட்டியது இன்றும் கண்ணில் தண்ணீர் வர வைக்கின்றது.

ஒரு மணிநேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணை பிரச்சினையால் மரணிக்கின்றனர். வரதட்சணை தடைச்சட்டம் 1961 லும் எந்த பிரயோசனவும் இல்லை. ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்று பலர் நினைப்பதால்  பெண் குழந்தைகளை கருவிலே அழிக்கும் வழக்கவும் இங்கு நிகழ்வாக மாறி விட்டது. இந்தியாவில் மட்டுமே 40 மிலியன் பெண் குழந்தைகள் கருவிலே கொல்லப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.  



 
திருமணம் என்பது சொர்கத்தில் என்பதை விட பணத்தில் என்பது தான் உண்மையாகி வருகின்றது. இன்று பல பெற்றோர்கள் திருமணம் என்ற பந்தம் ஊடாக பெற்ற/கொடுத்த பணத்தை பெருமையாக சொல்லி கொள்கின்றனர். ஒரு மகனை வளர்த்து அவன் கட்டும் தாலியில்  இருந்து கல்யாணச் செலவு வரை பெண் வீட்டில் வசூல் செய்யும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே உங்களுக்கு என்ன மரியாதை உண்டு உங்கள் மருமகள் பார்வையில்?

9 comments:

  1. unmai sako...!

    pichaikaara naaynga....

    ReplyDelete
  2. தலைப்பும் சொல்லிப் போனவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Subi Narendran ·December 07, 2013 7:56 am


    அருமையான பகிர்வு ஜோ. ஒரு பெண்ணின் திருமணத்தால் அவளுடைய தாய் தந்தையர் படும் பாடும், வரதட்சணை என்ற பெயரில் பிச்சை எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் காட்டும் பந்தாவுமென்று பலவிடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நம் தமிழர் திருமண மரபுகள் மட்டும் இன்று வரைக்கும் எந்த வித மாற்றமும் இல்லாமல் நடந்து கொண்டே இருக்கிறேது. இனிவரும் தலை முறையினராவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று எதிர் பார்ப்போம். நன்றி ஜோ.

    ReplyDelete
  4. கருத்து பகிர்ந்த நண்பர்களுக்கு பாசமிகு அக்காவிற்கும் என் நன்றி வணக்கங்கள்.

    ReplyDelete
  5. ஜோசபின்:
    [[திருமணம் என்பது சொர்கத்தில் என்பதை விட பணத்தில் என்பது தான் உண்மையாகி வருகின்றது.]]

    இது பிச்சைத் தொழில் என்று சொல்வதை விட---பிச்சைக்காரத் தொழில் என்று சொல்வதே சரி!

    பொய்யே உன் பெயர தான் தமிழ்நாடா?
    பிளஸ் +1

    ReplyDelete
  6. ஆமா நன்பா...சரியா சொன்னீங்க...இங்க கூட பாருங்க, நிச்சயதன்னிக்கி பொன்னு வீட்டுல ஒரு எளவு வுழுந்திருச்சின்னு ஒரு பாடு கம்மனாட்டி பயலும் அவன் அம்மா மூதெவியும் ஒரு கல்யானத்த நிருத்திட்டாங்க...வீட்டுல எளவு விழுந்தா பொன்னு என்ன பாஸ் செய்யும்? அந்த நாதாரிப் பயலுக்கு 37 வயசு ஆச்சி...இனி அவனுக்கு எப்டி கல்யானம் ஆகுதுன்னு நானும் பாத்திர்ரென்...

    ReplyDelete
  7. என்ன செய்வது ..?எல்லாம் நம் கலாச்சாரம் கற்றுக் கொடுதத்தது. என்று மாறுமோ..? த.ம 3

    ReplyDelete
  8. //வாங்குவது வரதட்சணை என்ற பெயரில் பிச்சை.
    எவ்வளவு கேவலமான மனநிலை!//
    உங்க இந்த கருத்தை முழுமையா ஏற்றுக்கிறேன்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு...புள்ளி விபரங்களை கடைசியில் படித்ததும் சற்று வேதனையும் கூட.திருந்த வேண்டும் சமுதாயம்...

    ReplyDelete