header-photo

தேஜ் தருண்பாலின் ஊடகவியலும் பாலியல் வன்முறையும்!
இந்தியாவில் வளர்ச்சி வறுமையில் வாடும் மக்கள் வழியோர பிச்சைக்காரர்கள் படும் துன்பம், கல்வி பெற இயலாத மக்கள் என எந்த செய்தியிலும் இல்லாத முக்கியத்துவம் பாலியல் கதைகளுக்கு கொடுத்து வருவது  பாலியல் சிந்தனையிலுள்ள வறச்சி, கேடு கெட்ட மனித சிந்தனையை காட்டுகிறது. தற்போது தெஹல்கா பத்திரிக்கையின் உரிமையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையும் இதை சார்ந்தது தான்.  


தேஜ் தருண் கற்பழித்தாரா அல்லது பாலியல் வன்முறையில் ஏற்பட்டாரா அல்லது இரு நபர் விருப்பத்துடன் நடந்ததா என்பது இன்னும் வெளிவரவில்லை. கற்பழிப்பு என்ற வார்த்தையில் நின்ற பெண் என் உடலை அவமதித்துள்ளார் என்று மொழி மாற்றியுள்ளார். பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்ட் தலைவி என பலர் குரல் எழுப்பியுள்ளனர். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது போலும்; தருண் தான் முதல் குற்றவாளி போல் சித்தரிகரிப்பது தான் கேலியான விடையம். குஸ்வந்த் சிங் தன் பத்திர்க்கை அனுபவத்தில் பெண்களுடன் இருந்த தொடர்பை பற்றி புத்தகமாகவே வெளியிட்டுள்ளார். Kushwanth Singh ஊடக உலகில் பத்திரிக்கை என்றில்லை  தொலைக்காட்சி, சினிமா, கல்வி நிறுவனங்கள் அரசு தனியார் நிறுவங்கள் என செக்ஸ் குற்றங்கள், எல்லை மீறல்கள் மலிந்து கிடக்கின்றது. 

இதில் ஆண்களை மட்டும் குற்றம் சாரவும் இயலாது. பெண்களும் விரும்பி செல்வதையும் கண்டு வருகின்றோம். கற்பழிப்பு, பெண் உடலை கேவலப்படுத்துவது என்பது காலம் காலமாக கடந்து வரும்  நிகழ்ச்சியாக தான் உள்ளது. இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் வேலை பார்க்கின்றனர். பாலியல் சீண்டாடுதல், வன்முறையை  எதிர் கொள்ளாத பெண்களே இல்லை என்ற நிலை தான் இன்று உள்ளது. ஒரே ஒரு நாள் திடீர் என யாரும் கடத்தி கொண்டு போய் கற்பழிப்பதில்லை. செக்ஸ் பேச்சு, ஊர் சுற்றல் பரிசு பொருட்கள் கொடுக்கல் வாங்கல் என, பல நிலைகளை கடந்து பெண்களை வசியப்படுத்தி தங்கள் பிடியில் கொண்டு வர முயல்கின்றனர். ஆணின் முதல் முயற்சியை தடுக்கும் பெண்ணால்; தன்னை அடிமைப்படாது காத்து கொள்ள இயல்கின்றது. ஆனால், அத்தகய பெண்கள் சந்திக்க வேண்டிய பல சவால்கள்  உள்ளன. தவறு செய்யாதே பல குற்றங்களை கூறி அச்சுறுத்த முயல்வர். வேலைப்பழுவை அதிகரிக்க செய்வார்கள், அவதூறு கதைகள் பரப்பி விடுவார்கள். இந்த சவால்களை யாவும்  எதிர்கொள்ள பல பெண்கள் மெனக்கெடுவதில்லை. “கொஞ்சம் அனுசரித்து போவது” வழியாக தங்கள் நிலையை சமரசப்படுத்தி கொள்கின்றனர். ஒரு அலுவலகத்தில் தன் மேல் அதிகாரிக்கு நெருங்கிய தோழியாக கள்ள காதலியாகவோ மாறுவது வழியாக பல பெண்கள், தாங்கள் வேலை செய்யாது உயர் பதவியில் எட்டவும் உடன் பணிசெய்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர். தாங்கள் நினைத்த பணி உயர்வும், ஊதியம்,அல்லது பல அனுகூல வசதிகள் பெற்று சுகமாக வாழ்கின்றனர். பல பெண்கள் தங்கள் அதிகாரிக்கு நெருங்கியவராக இருப்பதில் பெருமை கொள்கின்றனர். இதில் எழுத்தாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் நபர்களுடன் நெருக்கம் வைப்பதில் போட்டியே நடக்கின்றது. இந்த நிலை எல்லா வேலையிடங்களிலும் காணலாம்.  ஆனால் தன்னை  போல் இன்னொரு பெண் போட்டிக்கு வந்து சேரும் போது வருத்ததிற்குள்ளாகுகின்றனர் தங்களுக்கு கிடைக்கும் வசதிகள் குறைக்கப்படும் போது கொந்தளித்து நீதி சிந்தனையில் நியாயம் தேடி சமூகத்தை அணுகுகின்றனர். 


ஆனால் உண்மையாக பாதிக்கப்படும் பெண்கள் ஒரு போது வெளியில் வராத வண்ணம் அவர்கள் அபிமான உள்ளம் அவர்களை வதைக்கின்றது. அப்படியாக நீதி கேட்டு வந்த பெண்கள் நீதி கிடைத்து போனதாகவும் சரித்திரம் இல்லை. அவ்வகையில் 30 வருடத்திற்கு மேலாக  மரண படுக்கையில்  கிடைக்கும் அருணா Aruna என்ற செவியிலருக்கு கிடைத்த நியாயம் நாம் கண்டதே. "கற்பழிப்பை தடுக்க இயலாவிடில் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள வேண்டும்" என்ற சொன்ன நீதிபதிகள் வாழும் நாடல்லவா நம்முடையது. rape victim  பெண்கள் விடையத்தில் பல தலைவர்கள்  நடந்து கொண்ட விதம் அறிந்ததே. Gang-rape-victim-suzette-jordanசூப்பர் டூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரிந்த பல நடிகர்கள் பெண்கள் விடையத்தில் வில்லன்களாகத்தான் இருந்துள்ளனர்.

பெருவாரியான பெண்கள் எளிதாக அடிமையாக மாறுவதால் பெண்கள் என்றாலே தான் நினைக்கும் எதையும் செய்து விடலாம் என பல ஆண்கள் கணக்கு போட்டு விடுகின்றனர். பெரும்வாரியான கார்ப்பரேற்றுகள், கல்வி இடங்களில் இப்பிரச்சினை தலை விரித்து ஆடுகின்றது. இன்று “நான் உனக்கு வேலை தந்தால் எனக்கு நீ என்ன தருவாய்” என்று துணிவாக கேட்கும் பல ஆண்களையும் கண்கூடா கண்டு வருகின்றோம்.


வேலையிடங்களில் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்த தவறி விடுகின்றனர். உடன் வேலை செய்யும் ஆணை முதலில் புகழ்வது, எப்போதும் அருகில் இருந்து அரட்டையடிப்பது, இரட்டை அர்த்ததில் பேசுவது, தங்கள் வீட்டு படுக்கை அறைக்குள்ளும் அழைத்து மரியாதை செலுத்துவது, அவர்கள் பணத்தில் சாப்பிடுவது என ராஜபோகமாக இருந்து விட்டு திடீர் என்று கெடுக்க வருகிறான் என்றால் என்ன சொல்வது? வேலையிடவும், தனி நபர் வாழ்க்கையும் இரு தளங்களாக இருக்க வேண்டும். உடன் பணி செய்யும் ஆணோ பெண்ணோ தேவைக்கு அதிகமாக சகவாசம் வைத்து எல்லா விடையங்களும் பகிர்வது/பேசுவது தங்கள் கன்னியமான வாழ்க்கைக்கு பங்கம் வரவைக்கவே செய்யும். இன்று பல பெண்கள் வேலை உத்தரவாதம் பாதுகாப்பு சுயநலம் கருதி ஆண்களுக்கு எடுபிடியாக இருக்க தயங்குவதில்லை. பிரச்சினை என்று வரும் போது தங்களை பாதுகாத்து கொண்டு தப்பிக்க துணிகின்றனர்.

gender equality cartoons, gender equality cartoon, funny, gender equality picture, gender equality pictures, gender equality image, gender equality images, gender equality illustration, gender equality illustrations  பத்திரிக்கைத்துறை என்றில்லை காவல், கல்வி, அரசு அலுவலகம் என குடும்பங்களுக்கு வெளியிலுள்ள உறவுகள் மலிந்து கிடக்கின்றது. இதன் தாக்கம் அவர்கள் குடும்பம் தனி நபர் வாழ்க்கை சார்ந்தது. அதை நிர்ணயம் செய்யவேண்டியது இத்தகைய நபர்களும் அவர்கள் குடும்ப உறவுகளுமே. தருண் என்ற பத்திரிக்கையாளருக்கும் அவர் உதவியாளருக்கும் பாலியல் பேச்சு இருந்துள்ளது, உறவு இருந்தாலும் இது எந்த வகையிலும் அவர் மேற்கொண்ட பத்திரிக்கை தொழிலுடன் இணைத்து அவர் குடும்பம் அவர் நிறுவனம் என எல்லாம் நடுத்தெருவில் கொண்டு வருவது எவ்வகையில் நியாயமாகும். இளம் பத்திரிக்கையாளரை கடத்தி கொண்டு போனதாகவோ தெரியவில்லை. இந்த இளம் பத்திரிக்கையாளர் இனியுள்ள வாழ்க்கையில் வேலையில் ஜொலிக்கவோ அல்லது அவருக்கு என ஒரு வாழ்க்கை அமைத்து கொள்வது பெரும் சவாலாக இருக்கும். பல பத்திரிக்கையாளர்களின் பலவீனம் கண்டு அவர்களை எலியை பொறிவைத்து சிக்குள்ள வைத்து பத்திரிக்கையின் ஜனநாயக நாட்டிலுள்ள உரிமையை கேலிக்குள்ளாக்குவது வருத்தற்குரியது.


தருண் என்ற பத்திரிக்கையாளர்அரசியலில் நடந்த பல ஊழல்களை தன்னுடைய  எழுத்தால் வெளி கொண்டு வந்துள்ளார். ராணுவம், குஜராத்தில் நடந்த கலவரம், என  பல பிரச்சினைகளை சட்டத்தின் முன் கொண்டு வந்துள்ளார் என்ற காரணத்தால் அவர் தனிப்பட்ட உறவை வெளிச்சம் போட்டு காட்டி அவமதிப்பதில் எந்த சமூக நல்லெண்ணவும் இருக்க இயலாது.

பெண்களுக்கு பாதுகாப்பு  அரசு, காவல், நிறுவனகளால் தர இயலாது. தங்களை முதலில் பெண்கள் நம்ப வேண்டும், தங்களை சிறப்பாக தங்களை மதிக்க வேண்டும். இதற்க்கு தேவை சுய நம்பிக்கை, உண்மை,கவுரவம்!

4 comments:

Avargal Unmaigal said...

உங்களின் எழுத்தும் சிந்தனையும் என்னை வியக்க வைக்கிறது. பிரபல நாளிதழ்களில் கூட இந்த மாதிரி உண்மையை எடுத்துரைக்கும் கட்டுரைகளை படிக்க இயலவில்லை. உங்களின் பதிவுகளை படிக்கும் போது எனக்கு வெட்கம் வருகிறது காரணம் நானும் எழுதுகிறேன் பதிவிடுகிறேன் என்று ஏதையோ கிறுக்கி கொண்டு இருக்கிறேன். அதே நேர்த்தில் உங்களின் பதிவுகள் அத்திப் பூ பூத்தார் போல வந்தாலும் மிக மணம் வீசிக் கொண்டிருக்கிறது சகோ...

மீண்டும் சொல்லுகிறேன் நீங்கள் பத்திரிக்கை துறையில் நுழைந்தால் மிக புகழ் பெற வாய்ப்பு இருக்கிறது.

பாராட்டுக்கள் தோழி

திண்டுக்கல் தனபாலன் said...

/// முதலில் பெண்கள் நம்ப வேண்டும் ///

உண்மை... பெண்கள் பெண்களை...


கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

Anonymous said...

மிகவும் வித்தியாசமான பார்வை. ஆண்கள், பெண்கள் ஒருவரை ஒருவர் பாலியல் ஈர்ப்புடைய படைப்பு. இயற்கையை தாண்டி மனித சமூகம் சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா போன்ற பழமையும் புதுமையும் கூடிக் கலக்கும் தேசத்தில் பாலியல் நெறிமுறைகள் குறித்த பகுத்தறிவு இல்லாமல் இருக்கின்றனர். காரணம் பழமைகளில் மறைக்கப்பட்டு, தடுக்கப்பட்டு வந்த, வருகின்ற பாலியல் வெளி புதுமையில் நீங்கியும், சுருங்கியும் வருவதன் வினையே. பணியிடங்களில் தனி மனித உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் பாலியல் நெறிமுறைகள் குறித்து பெண்கள், ஆண்கள் போதிய சிந்திக்கும் திறன் பெற வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் (சில பெண்கள்) தமக்கு கீழ் உள்ள பெண்களை (சில ஆண்களை) உடல் மற்றும் உள றீதியில் வன்முறை செய்வதாலும், கீழுள்ள சிலர் தம் உடலை அடகு வைத்து அதிகாரங்களை வளைக்க முனைவதும் கேடானது, அது பிசகும் தருணங்களில், எல்லை மீறும் போது அது அவரது கேரியர், தொழில், பணி, குடும்பம், தனி மனித வெளி, மானம், எதிர்காலம் என அனைத்தையும் நசுக்கிப் போட்டுவிடும். தேஜ்பாலின் விவகாரமே இதற்கு சிறந்த பாடமாகும்.

Seeni said...

nalla pakirvu sako..!

Post Comment

Post a Comment