header-photo

அமிலத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்!


ஸ்நேகா 
அமில வீச்சால் காரைக்கால் சேர்ந்த வினோதினி என்ற இளம் பெண் இன்று பலியாகியுள்ளது மிகவும் வருத்தம் தருவது மட்டுமல்ல வெட்கத்திற்குரியது.  உலக அளவில், வருடம்  1500 க்கும்மேல் அமில-தாக்குதல் நடக்கின்றது என்கிறது கிடைக்கும் தகவல்கள். இந்த பாதகச்செயலுக்கு  பெண்கள் 47%, ஆண்கள் 26% குழந்தைகள் 27% என்ற விகிதத்தில்  இலக்காகுகின்றனர்.  அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் நாடுகளாக  கம்போடியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவை எடுத்து கொண்டால் வருடம் 150க்கு மேல் நபர்கள் அமில வீச்சால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவகல்கள் தருகின்றன. பாதிக்கப்படும் நபர்களில் 80% பெண்கள் என்பது மிகவும் கவலைக்குறிய தகவல். பல பொழுதும் தங்கள் பாலிய ஆசைக்கு இணைக்காது இருப்பது, திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காது இருத்தல் காரணமாகினாலும், குடும்பப்பகையும் ஒரு காரணமாகத் தான் அமைகின்றது. இந்தியாவில் முதன் முதலாக அமில வீச்சால் ஒரு இளம் பெண்  பாதிப்பிற்கு உள்ளாகியது 1967 ல் பதிவாகியுள்ளது. தான் விரும்பிய பெண்ணை அப்பெண்ணின் தாய் திருமணம் செய்து தர சம்மதிக்க வில்லை என்ற காரணத்தால் ஒருவனால் அமிலம் வீசப்பட்டது.

இளம் மங்கைகள் மட்டுமல்ல திருமணம் ஆகிய பெண்களும் தங்கள் கணவர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர். அதில் ஒருவரே மும்பையை சேர்ந்த ஷீரின் என்ற பெண். இவர்  இன்று இவ்வகையில் பாதிக்கப்படும் பெண்களை உதவ வேண்டும் என்ற நோக்கில் சமூக நல அமைப்பு (Palash) நடத்தி வருகின்றார்.  காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும் ஏற்பட்ட தழும்புகளால் தற்போதும் மக்கள் தங்கள் அருகில் இருந்து பயணம் செய்யப் பயப்படுகின்றனர், சிலர் கேலி செய்கின்றனர் என்று தன் கவலையை பகிர்கின்றார்.

ஸ்நேகா ஜகவெய்லி என்ற இளம் குடும்பத் தலைவியின் அனுபவமோ இன்னும் கொடியது. இவருடைய கணவர் சீதனம் வாங்கி வர நிற்பந்திக்க இவர்களுக்குளான சண்டை வலுக்கின்றது. தன் பெற்றோர் வீட்டில் அழைத்து வரப்பட்ட நிலையில் தன் கணவரால் அமில வீச்சுக்கு உள்ளாகின்றார். காவல்த்துறை- சட்டத்திடம் தன்னை காட்டி கொடுக்ககூடாது என்று கணவர் காலில் விழ இவர் மறுபடியும் கணவர் வீட்டில் வாழ முன் வருகின்றார். அங்கு மறுபடியும் பெரும் துன்பத்தில் கடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.கணவர் விட்டில் தனிமைப்படுத்தபடுகின்றார். வீட்டு அடுக்களை,படுக்கையறைக்குள் செல்ல தடை விதிக்கின்றனர்.  மூன்றரை வயதான தன் சொந்த மகனையும் அவரில் இருந்து பிரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே துரத்துகின்றனர். பெற்றோர் மறுபடி ஏற்க மறுத்த நிலையில் இன்று மராத்தி திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதுபவராக தன் வாழ்கையை கொண்டு செல்கின்றார்.

 மருத்துவர் எஸ். ஆர் விஜயலக்ஷ்மி  அமிலம் வீச்சால் பாதிப்படைந்தது அவர்  மருத்துமனை நடத்தி வந்த கட்டிட உரிமையாளராலே. முன் பணமாக வாங்கிய பணம் திரும்பித் தர மறுக்க காவத்துறை உதவியை நாடுகின்றார் மருத்துவர். கோபம் கொண்ட கட்டிட உரிமையாளர் அமிலத்தை தன் ஆயுதமாக பாவிக்கின்றார். இவர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் பணிசெய்து அமிலத்தால் பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டியுமாக திகழ்ந்தவர்.

இப்படியாக மண்ணெண்ணைக்கு பதிலாக அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்க ஆரம்பித்தது வேதனைக்கு உரியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை அணுகினாலும் சட்ட பிரிவை கூறி உடன் வழக்கு பதிவது இல்லை. இன்று மரித்து போன காரைக்கால் வினோதினி சம்பவத்திலும் குற்றசெயலில் ஏற்பட்டிருந்த ஒருவரை மட்டுமே ஜெயிலில் அடைத்துள்ளனர். குற்ற செயலுக்கு துணையும் பக்க பலமாக இருந்த மற்று பலரை கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் நடந்ததும் வினோதனி பக்கம் ஏதேனும் தவறு உண்டா என தேடவே ஒரு வகை சமூகம்  துணிந்துள்ளது.

அமிலவீச்சால் பாதிப்படைந்த  சோனாலி வாழும் உரிமை மறுக்கப்பட்ட தனக்கு இறக்வாவது உரிமை தரக்கோரி நீதிமன்றம் அணுகியிருந்தார். அவர் தேவையான மருத்துவ வசதி கிடைக்காது அரசு உதவியும் கிடைக்காது 7 வருடமாக தவிக்கும் போது 9 வருடம் கடும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மூன்றே வருடத்தில் ஜாமியனில் வெளிவந்து விட்டனர். இதுவே நம் சட்டத்தின் நீதியின் போக்கு! பாதிக்கபப்ட்ட நபருக்கு அரசு உதவ வேண்டும் அல்லது யாரால் பாதிப்படைந்தாரோ அவரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர  வேண்டும். ஆனால் இது ஒன்றும் நடைபெறாது ஒரு இளம் பெண் தன்மானத்துடன் வாழும் உரிமையை பறித்ததும் இல்லாது பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தடையாக செயல்படுகின்றனர். இந்தியாவில் விலையில்லா பொருட்களாக மனிதர்கள்-பெண்கள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதையே இது குறிக்கின்றது. வாழவும் வழியற்று தங்கள் அடையாளவும் இழந்து மிகவும் மனசிக்கலாக சூழலில் பெண்கள் உயிர் வாழ தள்ளப்படுவது மிகவும் வருத்தம் தரக்கூடியதே.

தன் உருவத்தை மட்டுமல்ல சுயமரியாதையாக வாழும் உரிமையும் இழக்கின்றனர். சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர், அல்லது பாதிக்கப்படவர்கள் ஒதுங்கி வாழும் சூழலுக்கு தள்ளபப்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1099ஒன்பது வருடம் ஜெயிலும் 10 லட்சம் நஷ்ட ஈடு என்பது சட்டத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை என்றாலும் குற்றம் நிகழ்த்தும் அனைத்து நபர்களும் சரியாக விசாரிக்கப்படுவதோ தண்டனை பெறப்படுவதோ இல்லை. குற்றவாளியின் அரசியல் செல்வாக்கும் பணபலவுமே இவை எல்லாம் தீற்மானிக்கின்றது. இப்படியே இந்தியா செல்லுமாகின் பெண்கள் தங்கள் வாழும் உரிமையையே  இழந்து விடும் அபாயம் மிகவும் சமீபம்  வந்துள்ளதை காண்பார்கள்.                                                                                                                      
அமிலம் எளிதாக வாங்கும் சூழல் மக்களுக்கு வாய்ப்பதை தடைசெய்யவேண்டும். வீடுகளில் கழிவறை மற்றும் சுத்தப்படுத்த அமிலம் உபயோகிப்பதால், இன்று எல்லா மளிகை கடைகளிலும் 50 ரூபாய் கொடுத்தால் உடன் கிடைக்கும் மலிவு ஆயுதமாக அமிலம் மாறி உள்ளது.

என்னதான் ஆயுதம் கிடைத்தாலும் அதை கொண்டு இன்னொரு மனிதன் மேல் கொடிய தாக்குதல் நடத்த  இரக்கமற்றவர்கள்,மனநிலையில் கோளாறு அல்லது உளைவியல் நோய் தாக்கியுள்ளவர்களாலே இயலும். ஈரமான, இரக்கமான மனநிலையில் வாழும் மக்களை உருவாக்க அரசும் ஊடகங்களும் முன் வர வேண்டும்.  மரணம் கண்டு உணர்ச்சிவசப்படும் சமூகம் நிதானமாக சிந்தித்து இதன் ஆணி வேரை களைய முன் வரவேண்டும். பரபரப்புக்கு என்று எடுத்ததும் ‘மரண தண்டனை’ என்று கூக்குரல் இடாது வளரும் சமூகம் இது போன்ற குற்ற செயலில் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும், இதனால் அனுபவிக்கும் பாதிப்பை புரியவைக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் பெற்றொர் பங்கு நிறையவே அடங்கியுள்ளது. கிடத்தே தீரவேண்டும் எனக்கில்லாதது யாருக்கும் வேண்டாம் என்ற மனநிலை யாவும் வளர்ப்பால் தொட்டில் தொட்டு பின் தொடர்வது. சரியான அணுகு முறையில் இவர்களை திருத்த அல்லது இவர்களை தனிமைப்படுத்துவதே சக மனிதர்களின் பாதுகாப்பிற்கு உகுந்தது. 

அரசும் முக்கிலும் மூலையிலுமுள்ள சாராய கடைகளை மூடி பண்பான மக்கள் வாழ்கைக்கு துணை செய்யவேண்டும்.  குடித்து வெறி கொண்டு அவன் அழிவதும் மட்டுமல்லாது சக மனிதர்களை அழிக்கும் அசுரர்களாக உருவாகுவதையும் நான் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஊடகம் பரபரப்பு செய்தி தயார் செய்யாது உண்மையான, ஆக்கபூர்வமான,ஆழமான செய்தியை கொடுக்க முன் வரவேண்டும். இந்த குற்றத்தில் ஏற்பட்டிருக்கும் நபர் கட்டிட தொழிலாளி என்கின்றனர், கடை வைத்திருப்பதாக செய்தி வருகின்றது , பாதிக்கப்பட்ட நபர் படித்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்றும் கூறுகின்றனர். வினோதினிக்கு இவ்விடையத்தில் துளியும் பங்கு இல்லாவிடிலும் இளம் அறிவான, அழகான பெண்ணின் தகப்பனான தந்தைக்கு இதில் பங்கு இல்லையா என்பதை ஒவ்வொரு தகப்பனும் கேட்க வேண்டியுள்ளது. இவனை போன்ற இளைஞ்சனிடம் ஏன் தொடர்பு வைத்திருந்தார், பணக்கணக்கு பேணினர், வீடுவரை நட்பை எதற்காக பேணினார் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. 

பழிக்கு பழி என்ற சிந்தனை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களை கண்டிக்க வேண்டியுள்ளது இத்தருணத்தில். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் தந்தையிடம், சீமானிடம், மக்களிடம் கேட்பது வழியாக ஒரு பாசிச போக்கை தான் தெரிந்தோ தெரியாமலோ மறைமுகமாகவோ உருவாக்குகின்றனர். விசாரணை, நீதிமன்றம், நீதியரசர்கள் எல்லாம் சட்டத்தால் நியமிக்கபட்டிருக்கும் போது தன் ஒரே மகளை இழந்து தவிக்கும் தந்தையின் மன உணர்வை தூண்டி விட்டு திரைப்பட வன்முறையை விட பெறும் கலவரத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவது ஊடக தற்மம் அல்ல, அழகல்ல. ஊடகம் என்பது மனிதனை சிந்திக்கவைப்பதற்கே அன்றி முரடர்களாகவும், மூடர்களாகவும் வெறியர்களாகவும் மாற்றுவதற்கு அல்ல என்பதை புரிந்து கொள்வார்களா?  இதுவே தமிழகத்தில் நடந்த கடைசி கொடிய துன்ப நிகழ்வாக இருக்கட்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற  எண்ணங்களுடன் முடிக்கின்றேன்.

6 comments:

enjoyalways said...

hmmm.....

Seeni said...

nalla alasal sako....

Anonymous said...

மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.

பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.

பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

இன்று மேலும் ஒருவர் பலி.. வித்யா என்கிற பெயரைக்கொண்ட தமிழ்நாட்டுப்பெண். வேதனை தோழி.

நம்பள்கி said...

சில படங்களை தவிர்க்கலாம்; என்னாலேயே பார்க்க முடியவில்லையே? மனது வலிக்கிறது. ஒரு பெண்ணுக்கு தந்தை என்பதாலோ?
வலிப்பதற்கு காரணம் பெண்ணின் முகம் மட்டும் ஒரு காரணம் இல்லை; ஒரு அற்ப காரணத்ரிக்காக உரிமையிள்ளதா ஒரு பொருளை எப்படி சிதைக்கலாம் என்பதனால். தாலிகட்டிய கணவனுக்கும் அந்த உரிமை கிடையாது.

Anonymous said...

நிறைய சொல்ல முற்பட்டு கடைசியில் ஊடகத்தின் கடமையில் போய் முடித்து இனியும் நடக்காது என நம்புவோமென நீங்கள் எழுதியதை நான் வாசிப்பதற்கு முன்பே இன்னொரு பெண் அமிலவீச்சுக்கிறையாகி விட்டாள்.

ஊடகங்கள் என்ன செய்யும்? உணர்ச்சிகரமான ஒரு செய்தியைப்படிப்பவர் பழிக்குப்பழி என்றுதான் சொல்வர். கோவை இரு குழந்தைகள் கொலையில் தினமலரில் எழுதியவர்கள் 99.9 விகிதம் பழிக்குப்பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்றுதான் கேட்டனர். உணர்ச்சிகரமான சூழலில் சிந்தனைக்கிடமேதுமில்லை. ஊடகங்கள் என்ன செய்ய முடியும்?

அனைத்து அமில வீச்சுக்களையும் ஒருசேரப்பார்க்க முடியாது. குடும்பப்பெண்கள் வரதட்சிணைக்கொடுமைக்குள்ளாகி தன் கணவன்களால் அமிலம் வீசப்படுவதும் விநோதினியின் மேல் நடந்த தாக்குதலையும் ஒன்றாகப்பார்த்தால் விடைகள் தவறாகிவிடும்.

விநோதினிக்கு நடந்தது நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, 'தனக்கு வரவேண்டியது வராமல் போனால் சரி; ஆனால் இன்னொருவனுக்கு போய்ச்சேர நான் பார்ப்பதா? " என்ற மனநிலை. ஆனால் குடும்பப்பெண்ணின் மீது வீசிய கணவனின் மனநிலை: 'இவள குடும்பத்தாரால் கொடுக்க முடியும். ஆனால் இவள் தடையாக இருக்கிறாள். அல்லது வேண்டுமென்றே முயற்சிக்கவில்லை' இவளோடு ஏன் வாழ? ஒழிந்து போகட்டும்!' என்ற மனநிலை.

பின் சொன்ன மனநிலை நிதானமாக எடுத்த முடிவு. முன் சொல்லப்பட்டது ஒரு உணர்ச்சிப்பிரவாஹத்தில் எடுத்த முடிபு.

எல்லாவற்றையும் சரியென்று நியாயப்படுத்துவதாக நினைக்காமல், நாமெல்லாரும் தினமலரின் எழுதிய பழிக்குப்பழி ஆசாமிகளில்லாமல் ஏன்/எதற்காக? எப்படி தடுப்பது? என்ற் கேள்விகளை ஆராய்பவர்களாகப்பார்ப்பவர்கள் என நினைக்க‌.

விநோதினியின் சம்பவம் தடுக்கப்பட்டிருந்திருக்க முடியும். அவள் அவனின் மனநிலையை முன்பே அறியும் சக்தி; அல்லது கல்வி பெற்றவளாக இருந்திருந்தால். அதே போல வித்யாவும். இருவருக்கும் அக்கல்வியும் சுயசிந்தனையும் இல்லாத காரணத்தால் தங்களைக்காத்துக்கொள்ளத்தெரியாமல் அழிந்தார்கள்.

ஜோசப்பின்! நீங்கள் டீச்சர்தானே? அப்படியென்றால், இன்றைய செய்தித்தாளின்படி, கல்வியாளரக்கிடையே ஒரு சிந்தனை இப்போது பிறந்திருக்கிறது. இப்படிப்பட்ட சுய சிந்தனை இல்லாக்காரணம் படிப்பு வாழ்க்கையைப் புரியாதபடி இருக்கிறது. எனவே சோஷியல் சயன்ஸின் சில அடிப்படைப்பாடங்களை எல்லாமாணாக்கருக்கும் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சோஷியல் சயன்ஸ் என்றால், சமூகம், சமூக மாந்தர்கள், சமூக இயக்கங்கள், சமூகத்தில் பொது உணர்வுகள். தனிமனிதர்களின் இயல்புகள், சமூகத்தில் பொது இயல்புகள் எவ்வாறு உருவாகின்றன; அது கேடாக இருக்கும்பட்சத்தில் ஒரு இளைஞனோ இளைஞியோ தன்னை எப்படிக்காத்துக்கொள்வது; ஆண்-பெண் உறவு எப்படியிருக்கவேண்டும். எஃதெல்லை? இன்னும் பலபல‌.

இக்கல்வி விநோதினிக்குச் சொல்லியிருக்கும் - ஒரு இளைஞன் வீட்டுக்கு வந்து போவது ஆபத்து; பெற்றோர் செய்தாலும் அவர்களுக்கு போதனை செய்து தடுத்திருக்க வேண்டும்; இன்னும் நிறைய சொல்லியிருக்கும்.

அவன் கட்டடத்தொழிலாளிதான். அப்படித்தான் தமிழ், ஆங்கிலப்பத்திரிக்கைகள் வெளியிட்டன.

Post Comment

Post a Comment