header-photo

மாதவிடாய்!-ஆவணப்படம்ஆவணப்படம் என்பது கற்பனை கலராது உண்மை நிகழ்வுகளை பதிவு செய்வதாகும்.  மாத விடாய் என்ற ஆவணப்படம் டிச: எட்டாம் நாள் 2012ல் வெளியாகியுள்ளது.  .  கீதா இளங்கோவன் இயக்கத்தில் உருவான இப்படம் அவருடைய  இரண்டு வருட உழைப்பின் பலன் என அறிகின்றோம்.  இந்த ஆவணப்படம் களஞ்சியம் பெண்கள் சுய உதவி இயக்கத்தின் தலைவியும், `ஸ்த்ரீ சக்தி' புரஸ்கார் விருது பெற்றவருமான திருமிகு சின்னப்பிள்ளை வெளியிட, எழுத்தாளர் திரு மாலன் முதல் குறுந்தட்டை பெற்றுக் கொண்டுள்ளார். இப்படம் ஊடாக  மாத விடாய் பற்றிய பல உண்மைகளை, சமூகசீர்கேடுகளை, அவலங்களை சாடியுள்ளனர்.

இப்படத்தில்  எழுத்தாளரும் கல்வியாளருமான  வா.கீதா, முனைவர் எஸ். சுபா, கிராம விரிவாக்க இயக்குனர் ரேவதி, பெண்ணிய செயற்பாட்டர் லூசி சேவியர், திலகவதி ஐபிஎஸ், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பால பாரதி, முனைவர் மார்கரட் சாந்தி போன்றோர் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


இதில் இடம் பெரும் நாட்டுப்புறப் பாடல் இந்த ஆவணப்படத்தில் கதைச்சுருக்கத்தை அழகாக அடிகோடிட்டு காட்டியுள்ளது.  தீட்டும், சடங்கும் வேண்டாம், கெட்ட பண்பாட்டு பழக்கங்களும் வேண்டாம் …. தாய்பால் போல் விலக்கு ரத்தத்தையும் கருத வேண்டும், கற்ப பையை புரிந்து கொண்டால் அடிமை வாழ்க்கை இல்லை என வலியுறுத்துகின்றது. இந்த கவிதையின் ஆசிரியை எங்கள் பலகலைகழக முன்னாள் மாணவி சோலை செல்வன் என்று அறிவது  மிகவும் பெருமையே.

மதுரை பக்கம், மாதவிலக்கு நாட்களில் பெண்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கழிவறை வசதி இல்லாத,  சுகாதாரம் அற்ற வீடுகளில் தங்க வைப்பதுடன் மாதவிடாய் காலங்களில் வெளியாகும் இரத்த பொட்டலங்களை மரத்தில் தொங்கவிடும் மூட வழக்கத்தை விவரிப்பதுடன் படம் துவங்குகின்றது.   மாத விடாய் என்பதை பெண்களுக்கு சந்தோஷமான நிகழ்வாக இருப்பது இல்லை.  இதை ஒரு தீட்டாக, அசிங்கமாக, அவமானமக பார்க்கின்றனர். இதனால் தங்கள் ஆளுமை சிதறடிக்கபாடுகின்றது என்று பெண் ஆவலர்கள் கருத்துக்கள் தெவிக்கின்றனர்.


  அசுத்தம் என்ற கருத்தே இதன் கொடிய அரசியல் என சொல்லிய ஒரு பேராசிரியர், மாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும்  சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும்,  என எடுத்துரைக்கின்றார்.

எல்லா மத வழக்கத்திலும் இந்த நாட்களை தீட்டாக பார்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசாம் மாநிலத்தில் இந்த ரத்தத்தை வழிபடுவதாகவும் எடுத்து சொல்கின்றனர்.   விலக்கு நாட்கள் வரும் இரத்தம் மருத்துவ உலகில் உபயோகப்படுத்துகின்றனர் என்ற தகவலையும் தருகின்றனர்.  கர்ப பையின் செயலாக்கம் பற்றி ஒரு சிறிய விளக்கம் இப்படவும் கண்டு தெளிவு  பெறலாம்.  

ஒரு தெருவோரம் வியாபாரம் நோக்கும் குறவ பெண் முதல் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண்கள், காவல்துறை, பொறியாளர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்களாக பணிபுரியும் பெண்கள் என பெண்களாக பிறந்த எல்லா பெண்களுக்கும் பொதுவான ஆனால் கணக்கில் எடுக்காத பிரச்சினையாக உள்ளது மாதவிலக்கு நாட்கள் தள்ளிவைப்பு என்பது. இதில் மாற்று திறனாளிகள் பிரச்சினை மிகவும் கவலையளிக்கின்றது.  மூளை வளர்ச்சியற்ற குழைந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கருதி கர்ப பையை நீக்கி விடுவதாகவும் சொல்கின்றது ஆவணப்படம்.

ஒரு பிரச்சினையை ஆராய்வது மட்டுமல்ல அதற்க்கு தீர்வு சொல்வதும் ஆவணப்படங்களின் பொறுப்பாக வருகின்றது. அவ்வகையில் சில சமூக தீர்வுகளும் பரிந்துரைத்துள்ளது இப்படம்.
1.    பள்ளி குழந்தைகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பதை எடுத்து கூறியுள்ளனர். இரண்டு ரூபாய் காயின் செலுத்தினால் ஒரு நாப்கின் பெறும் கருவி பொருத்துவது வழியாக இப்பிரச்சினைக்க்கு தீர்வு உண்டு என சொல்லியுள்ளனர். 60 ஆண்டு அரசியல் சாதனையாக குறிப்பிடப்படும் இந்த சாதனை எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும்  சென்றடைந்ததா என்ற தகவல் இல்லை. பல பள்ளிகளில் கழிவறை இல்லை இருப்பதும் சுத்தமாக பராமரிப்பது இல்லை, தனியார் பள்ளிகளில் கூட கழிவறை சுத்தம் பேணுவது அரிதே என்பது நாம் அறிந்ததே. ஏன் நிகழ்கால பல்கலைகழகங்களில் கூட கழிவறையை சுத்தமாக பராபரிப்பது இல்லை. ஒரு ஆசிரியை வாயிலாக பள்ளி ஆசிரியைகள் தாங்கள் பயண்படுத்திய நாப்கினை கழிவறையிலும் கழிவறை மூலையிலும் எறிந்து சொல்வதை கேட்கும் போது கல்வி கற்ற பெண்களும் பொறுபற்றே உள்ளனர் என்பதை அறிகின்றோம். அதே வேளையில் தகுந்த வசதிகள் பெண்களுக்கு பணிநோக்கும் இடங்களில் கிடைப்பது இல்லை; பெண்கள் திட்டமிட்டு இப்படி சுகாதாரக் கேடாக நடக்க வேண்டும் என எண்ணுவதில்லை என கல்லூரி பேராசிரியை சொல்வதையும் காது கொடுக்க வேண்டியுள்ளது. 

2.    பொது கழிவறை, பொது மருத்துவ மனை கழிவறை பற்றி விவரிக்கின்றார். கட்டமைப்பே பெண்களும் பயண்படுத்த தக்க விதம் கட்ட வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.  இதில் சட்ட மன்றத்தில் கூட பெண்களுக்கு தகுந்த விதமான கழிவறை கட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

3.    பெண்கள் நட்பு கழிவறை- Girl Friendly Toilet: அதாவது ஒரு பெண்கள் கழிவறை என்றால் அதற்கான கட்டமைப்பு மிகவும் அவசியம் என அறிவுறுத்துகின்றது இந்தாஆவணப்படம்.  பெண்கள் கழிவறைக்கு அருகிலே விலக்கு நாட்களில் பயண்படுத்தும் நாப்கினை அப்புறப்படுத்த கான்கிரிட்டில் அல்லது மின் கருவியிலான இடம்,  சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்காத விதம் எரிக்கும் தொழிநுட்ப கருவிகள், சுத்தப்படுத்த தண்ணீர் கைகழுவ சோப் என்பதும் சேர்த்து பரிந்துரைக்கின்றனர்.  சில நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் தற்போதே பயண்படுத்தும் போதும் பல இளம் மாணவிகள் கழிவறை வசதி இல்லாததால் சுள்ளி காட்டுக்கே போய் வருவதாக  குறிப்பிடுகின்றனர்.

4.    நாப்கின் பயண்படுத்தலின் தேவையை இங்கே குறிப்பிடும் வேளையில் கிராமப்புறங்களில் பயண்படுத்தும் துணிகள் மற்றும் நாப்கின் பயண்படுத்துவதால் வரும் தீமையும் விளக்குகின்றனர்.    ஆவணப்படத்தில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவிகளுக்கு பயண்படுத்தும் துணியை செய்ய பயிற்சி அளிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் 50 மிலி இருந்து 300 மிலி வெளியேரும் குருதிக்கு மூன்று முதல் ஐந்து நாப்கினுகள் தேவை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆவணப்படம் வழியாக பெண்கள் தேவையை புரிந்து கொள்ளாத அரசு மட்டுமல்ல மாத விலைக்கை பற்றி சரியான புரிதல் இல்லாத மூடபழக்கங்களும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஆனால் மூன்று நாட்களுக்கு ஒரு நாள் குளிக்கும் நாப்கினே பயண்படுத்தாத பெண்ணின் நேர்முகவும் காணும் போது பெண்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியுள்ளதையும் காணவேண்டியுள்ளது.
பெண்கள் ஆரோக்கிய நிலையில் கருதல் கொள்ள வேண்டும் என்பதும் வரும் சமுதாய வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக தலைமுறைக்கு தேவை என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம் ஆண்களும் பெண்களை பரிவாக நோக்க கூறியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில் காணும் குறை என்பது சமூகத்தில் மாதவிலக்கை பற்றி இருக்கும் மூடபழக்க வழக்கத்தை அழுத்தமாக  கூறிய இப்படம், பெண்கள் தங்கள் உடலை சிறப்பாக; பெண் உறுப்பை சுத்தம் சுகாதாரமாக வைக்க வேண்டிய அவசியம் இன்னும் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்.   அதே போன்று பழைய காலத்தில் பயண்படுத்தும் பருத்தி துணியிலான நாப்கின் அவசியவும் உணர்த்த வேண்டும். ஒரு நாளைக்கு 5 என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 15 நாப்கின் இன்று சந்தையில் பெற 65 ரூபாய்க்கு மேல் செலவாகும்.  எல்லா நாப்கினும் சுகாதாரமானதோ பாதுகாப்பானதோ அல்ல. ஆவணப்படத்தில் செய்து காட்டும் தடிமனான துணியிலான நாப்கின் முறை தவறானது ஆகும். இது குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்த காரணமாகும். மேலும் சுகாதாரமான வசதிகளை அரசு செய்து கொடுப்பது போன்றே மக்களுக்கும் தங்களை சுகாதாரமாக பேண கடமை உண்டு. இதற்கும் தேவையான தகவல்கள் ஆவணப்படம் ஊடாக பெற்றிருந்தால் முழுமை பெற்றிருக்கும். இலவச நாப்கின் எனபது 60 ஆண்டு ஆட்சி சாதனையாக கருதுவதும் இகழ்ச்சியாக தான் உள்ளது. ஒரு நாப்கினுக்கு கூட அரசை கெஞ்சும் சூழலுக்கு நம் பெண்கள் வீழ்ந்து விட்டனரா ?பழைய பண்பாட்டை வெறுக்கவும் அடியோடு ஒழிக்கவும் நினைக்கும் போது அதில் இருந்து நாம் பெறும் சில நல்லவைகளையும் எடுத்துரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  பெண்களுக்கு சத்தான, தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. துணை பேராசிரியர் பிரேமா கடைகளின் நாப்கினை பேப்பரில் பொதிந்து கறுப்பு பையில் தருவதை கேள்வி எழுப்பியுள்ளார். அது விற்பனையாளரின் மரியாதையை பொறுத்தது என எடுத்து கொண்டாலும்; வீட்டில் வாடிய முகத்துடன் இருக்கும் அம்மாவிடம் மகன் என்னாச்சு என்ற கேட்டால் அம்மாவும்; "இன்று மாதவிடாய் அதுவே சோர்வாக இருக்கின்றேன்" என்று சொல்ல எத்தனை அம்மாக்களுக்கு துணிவு வரும் என்று கேட்க தோன்றுகின்றது. 


எது எதையோ படமாக எடுக்கும் இந்த காட்சி ஊடக உலகில்; பலர் வெட்கப்படும் கவனத்தில் கொள்ளாத ஆனால் பிகவும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய  மாதவிடாய் பற்றி இயக்கி தயாரித்த கீதா இளங்கோவனுக்கு நம் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  மேலும் பல ஆக்கபூர்வமான சமூக கருத்துள்ள படங்களுடன் தோழியை மீண்டும் சந்திக்கலாம் என்று வாழ்த்து கூறி விடைபெறும் போது , இந்த ஆவணப்படத்தினை  மிகவும் கருதலுடன் அனுப்பி தந்து பதிவாக வெளியிட பரிந்துரைத்த  பாசமிகு மதிபிற்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தின வேல் ஐயாவுக்கு என் நன்றி வணக்கங்கள். ஆவணப்படம் இலவசமாக பெற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி geetaiis@gmail.com .

வாழ்கையும் போராட்டவும்!

ஆங்கில எழுத்து உலகில் தனக்கென்று ஒரு இடம்பிடித்த எழுத்தாளர் பத்திரிக்கையாளர் இவர்.  தனது கதைகளை எளிமையான சொல்லாடல்கள் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கதைகள் நாம் புரிந்து கொள்ள அகராதி தேடிசெல்ல வேண்டியது இல்லை. சிறு வாக்கிய அமைப்புடன் எளிதாக பாமர மக்களின் மொழியில் கதை- எழுதும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது.  புலிசர் விருது மட்டுமல்ல 1954 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் தட்டி சென்றவர் இவர் என்றால் இவருடைய கதைகள் வாசித்தவர்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு  இல்லை.  20 ஆம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் ,  நோபல் பரிசு பெற்றவர்,  போர்க்களத்தில் செய்தி சேகரிக்கும் துணிவு கொண்டவர், வேட்டை, ஆழ்கடலில் மீன் பிடிப்பது, காளை போர் போன்ற சாகச விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். ஆனால் 1961 ல்தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என அறியும் போது ஒரு மனிதனின் வெற்றி தான் தோல்விக்கான படிகளாக மாறுகின்றதோ என எண்ண வைக்கின்றது.  அவர் தான் ஏர்னெஸ்ட் ஹெய்மிங்வே.
அமெரிகாவில் சிக்காகோ நகரத்தில் மத்திய தர பணக்காரகுடும்பத்தில்  மருத்துவரின் ஆறு குழைந்தைகளில் இரண்டாவது மகனாக பிறந்தார் இவர்.  தந்தை அறிவிலும் வீரத்திலும் மகனை வளர்த்திய போது தாய்  கடவுள் நம்பிக்கையிலும் பக்தியிலும் வளர்க்கின்றார்.  தன்அப்பாவிடமிருந்து  வேட்டை, மீன் பிடித்தல் கற்றது போலவே தாயின் உன்றுதலால் ஆலைய பாடகக்குழுவிலும் பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் வளர்க்கப்படுகின்றார்.  பிற்காலத்தில் இவருடைய கதைத்தளமாக இவையும் உருமாறுகின்றது என்பதும் எடுத்து கொள்ளப்பட வேண்டியது. இவருக்கு நோபல் விருது வாங்கி தந்த கதை The Old Man and The Sea. என்ற குறும் நாவலில் மீன்களை பிடிக்கும் ஒரு மீனவனின் சிந்தனைகளை அருமையாக இயல்பாக, நுணுக்கமாக விவரிப்பது இவர் தனது தந்தையிடம் இருந்து குழந்தைப்பருவத்தில் கற்ற வித்தயே!
தன் பெற்றோருக்கு தன் மகன் தாங்கள் நினைக்கும் நிலைக்கு எட்டவில்லை என்ற வருத்தம் வாட்டியது. இதனார் அச்சுறுத்தல் கொடுத்து கொண்டே இருந்ததால் இரண்டுமுறை தன் வீட்டை விட்டு ஓடுகின்றார்.  தனது 19 வதுவயதில் ராணுவ பயிற்சியில் தீவிர ஆற்வம் கொண்டு, முதல் உலகப்போரில் பங்குபெற தானாக முன் வந்து விருப்பம் தெரிவிக்கின்றார்.  கண்ணில் பார்வை குறை பாடுஉண்டு என புரக்கணிக்கப்பட்டாலும் சாரணியர்இயக்கம் வழியாக அமெரிக்கா-இத்தாலி படையுடன்  ஆம்புலன்ஸ் ஓட்டுனராக போர்தளத்தில்  பணிபுரிகின்றார். ஆனால் இரண்டே மாதத்தில் போர்களத்தில் காயமுற்றுவெளியேறும் சூழல் வந்து சேருகின்றது.  அங்கு தான் 19வது வயதில்  ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் தாதியுடன் முதல் காதல்  அரும்புகின்றது. போரால் சாதாரண மக்கள் கொள்ளும் துயர், காதல் கைகூடாத வீரர்களின் துயர், போர் அரசியல் பற்றி மிக அருமையான  கதைகள் எழுதி பிற்காலத்தில் பாராட்ட பெறப்படுகின்றார்.


கால் ஒடிந்த நிலையில் காயங்களுடன் வீட்டில் வந்து சேர்ந்த ஏர்னெஸ்டுக்கு பெற்றோரில் இருந்து பரிவோ இரக்கமோகிடைக்கவில்லை  மேலும் புரக்கணிக்கப்படுகின்றார். தாய் மிகவும் இரக்கம் அற்றவராக நடந்து கொள்கின்றார். மேல்படிப்பிற்கு செல் அல்லது வேலைக்கு போ என கடிந்து கொள்கின்றார். இராணுவத்தில் கிடைத்த 1000 டாலர்இருந்ததால் ஒரு வருட காலம் எழுத்து வாசிப்பில் நாட்கள் கடத்திய ஏர்னெஸ்ட் ஒரு கனடா பத்திரிக்கையில் வேலைக்கு சேர்கின்றார்.  நண்பன் வீட்டில் சந்தித்த தன்னை விட எட்டு வயது முதியவரான பெண்னை மணம் முடிக்கின்றார். கணவருக்கு உளவியலாகவும் எல்லா பணக் கஷ்டங்களிலும் தாங்குபவராகவும் அவருடைய இலக்கிய பணிக்கு துணிபுரிபவராகவும் உள்ளார்.  தன் காதல் மனைவியுடன் பாரிஸில் வாழ்ந்த தினங்களை எண்ணி அவர் எழுதிய நாவலாகும் The Paris Wife.  மனைவியுடன் வாழ்ந்து முதல் நாலு வருடங்கள் அவருடைய இலக்கிய பயணத்திற்கு புது பரிணாமங்கள்  நல்கிய காலமாக மாறுகின்றது. இக்காலயளவில் அவர் எழுத்துலைகில் பெயர் பெற்ற நபராக மாறுகின்றார்.  ஜாக் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் தன் மனைவியின் நண்பியான பேஷன் பத்திரிக்கையார் பவுளில், பூஜைக்குள் புகுந்த கரடியாக நுழைகின்றார்.  மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை விட 4 வயது முதியவராக பவுளினுடனான  வாழ்கை 12 வருடம் நீடிக்கின்றது.ஏர்னெஸ்டின் எழுத்தை மெருகூட்ட இத்திருமணம் உதவுகின்றது.  பாட்ரிக் என்ற மகனுடன் நிம்மதியாக வாழ  மார்த்தா  என்ற மூன்றாவது நபருடனான தொடர்பு  திருமண பந்ததில் அடுத்த  விரிசலுக்கு  வெடிக்கின்றது.
ஏற்னெஸ்டு தேற்தெடுத்த மூன்றாவது மனைவி மார்த்தா போர்க்களத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர் ஆவார். இவர் மனநிலையை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய மனைவி இவர் ஆவார். இவருடன் வாழ்ந்த 10 வருடங்களில் இலக்கிய வாழ்கை முற்றும் ஸ்தம்பிக்கின்றது.  தன்னை எப்போதும் குற்றம் கூறுவதே கடமையாக கொண்ட மார்த்தாவுடனான தொடர்பு விரைவில் கசந்து நாலாவது மனைவி மேரியில் தஞ்சம் அடைகின்றது வழியாக மீழ்கின்றார்.  இக்காலயளவில் தான் பல விருதுகள் பெறுகின்றார்.  இவருடைய புத்தகங்கள் பல எதிர்பார்க்காத அளவு விற்கப்படுகின்றது.

தன் அடுத்த புத்தகப்பணிக்காக மகிழ்ச்சியுடன் ஆப்பிரிக்கா நாட்டை நோக்கி பயணிக்கும் வேளையில் எதிர் கொண்ட விமான விபத்தால் மிகவும் சோர்வுக்குள்ளாகின்றார்.  இந்த உடல் நலம்   சூழலே பிற்காலத்தில் இவரை தற்கொலை செய்து மரணிக்க வைக்குகின்றது. மேலும் அமெரிக்கா அரசியல் கொள்கையுடன் எப்போதும் எதிர்ப்பு கொண்ட இவர் க்யூபாவில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆனால் அரசியல் பிரச்சனையால் பிடரல் காஸ்டோ அரசில் இருந்து பல வகைகளில் மன அழுத்தம் கொண்டு நாட்டை விட்டு வெளியேற நிற்பந்திக்க படுகின்றார்.  1960ல்அங்கிருந்து வெளியேறி அமெரிகாவில் குடியேறிய ஏர்னெஸ்ட் தனது தகப்பனார் போன்றே கைதுப்பாக்கியால் தன்னை தான் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றார்.  இது ஒரு விபத்தாக எண்ணி கத்தோலிக்க முறைப்படி அடைக்கம் செய்யப்படுகின்றார். ஐந்து வருடம் பின்பே இவருடைய நாலாவது மனைவி மேரி இவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நேர்முகத்தில் தெரிவிக்கின்றார்.  இவருடைய  ஒரு சகோதரும் சகோதரியும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர் பிற்காலத்தில்.  நடிகையான இவருடைய பேத்தியும் 90களில் தற்கொலையை தேடுகின்றார்.
தன்னுடைய தகப்பனார் தற்கொலை செய்து இறந்ததிற்கு  ஆதிக்கம் குணவாதியான தன்னுடைய தாயை குற்றம் சாருகின்றார்.  இவருடைய தற்கொலைக்கு இவருடன் வாழ்ந்த பெண்கள் அல்ல என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.  பெண்கள் உற்றார் உறவினரை விட தன் எழுத்தை நேசிக்கும் சுயநலவாதியாகவே வாழ்ந்துள்ளார்.  கடைசி நாட்களில் பார்வை இழந்து  தன் உயிர் மூச்சான எழுத்தை தொடர இயலவில்லை என்றதும் மனம் உடைந்து தற்கொலையை தேடி கொள்கின்றார் என்றே சொல்லப்படுகின்றது. பிற்காலத்தில்அரசியல் காரணங்களும் இருந்தது என சொல்லப்பட்டது.
இவருடைய பல நாவல், சிறு கதைகளில் கதைத்தளம் இவர் வாழ்கையே.  அதனால் இக்கதைகள் உயிர் ஓட்டம் நிறைந்ததாக மக்கள் மனதில் நிலைத்து நிற் கசெய்தது. இவருடைய எழுத்து பாணி தன்னை ஒரு கதாபாத்திரமாக கொண்டு நேரடியாக கதை சொல்வதாக இருந்தது. இதுவே இவருடைய எழுத்துலக வெற்றிக்கும் பலருடைய விமர்சனத்திற்க்கும் காரணமாகின. ஏர்னெஸ்ட் ஈகோ பிடித்த எழுத்தாளர் தன் கதாபாத்திரம் மட்டும் நல்ல, சிறந்த, போராட்ட குணமுடைய வெற்றி வாகை சூடும் கதாபாத்திரமாக புனையுவார். மற்று கதபாத்திரங்களை தன் நண்பரை கூட நம்பிக்கை துரோகியாக காட்டுகின்றார் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

இவருடைய பல திருமணங்களுக்கும் இவரை மனஅழுத்த நோய்க்கும்  காரணமாகியது.  இவர் குழந்தைப் பருவத்தில் தன் தாயால் அதீதமாக ஆட்சி செய்யப்பட்டதே. தன்னை விட வயதிற்கு அதிகான பெண்களை மணம் முடித்து தாய் பாசம் தேடியதாகவும், ஆனால் தன் கடைசி திருமணத்தில் ஒரு மகளுடைய பாசமே தேடினார் என்றும் சொல்கின்றனர்.  இவர் வேட்டைப்பிரியரும் முழு குடிகாரருமாகவே இருந்துள்ளார்.  தன் முதல் மனைவியை பிரிந்ததில் இவர் என்றும் வருந்தினார் என்றும், தன் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் அவருடன் பல முறை பேசியுள்ளார் என்றும் தகவல் உள்ளது.  இவருடைய வெற்றியில் மனைவியில் பங்கும் பெரும் அளவு உண்டு என்றும் இவருடைய தோல்விக்கு முதல்படி இவர் தன் மனைவியை பிரிய நேர்ந்ததுமே என்றும் இவர் விரும்பிகள் கருதுகின்றனர்.   இவருடைய முதல் மனைவியிலுள்ள மகன் பிற்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாகினார்என்று மட்டுமல்ல இவருடைய முதல் மனைவியும் தன் வாழ்கை சரிதம் வழியாக பல வாசகர்களை சென்றடைந்தார்.                                      ஆனால் இவருடைய கதைகளில் அடிநாதமாக ஒழுகி வரும் செய்தி போலவே வாழ்கையில் வெற்றி என்பது இலக்கை அடைந்து விட்ட நிலையை விட வெற்றி இலக்கை அடையும் போராட்டமே சிறந்த  வாழ்கை என்பதற்க்கு இணங்க  வாழ்கையில் சிறப்பாக போராடியவரும் தான் ஏர்னெஸ்ட்.யை தேடி கொள்கின்றார். அரசியல் காரணங்களும் இருந்தது என சொல்லப்பட்டது.  அடுத்த பதிவில் The Old Man and The Sea பற்றிய சிறு விளக்கத்துடன் வருகின்றேன்.உங்கள் பாதுகாப்பு யாரிடம்?


கேட்க வித்தியாசமாக இருந்தாலும் உண்மை நிலவரம் இதுவே.  பிறக்கும் குழந்தையில் இருந்து மரணப் படுக்கையில் இருக்கும் மனிதன் வரை அடுத்தவர்கள் தயவை, மனிதத்தை எதிர்பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம். இந்த சூழலே நம்மை சமூக ஜீவியாகவும் மாற்றுகின்றது. மனித வாழ்வில் இந்த சுற்றியுள்ள நல்ல மனிதர்கள் அதாவது நாம் வாழும் சுமூகமான சமூகம் இன்றிமையாதாகின்றது. ஆனால் சமூகம் தனி நபர் மகிழ்ச்சியின் சிறிதேனும் பங்குபெறுகின்றதா என்றால் பல காரணங்களால் மவுனித்து அல்லது கண்டு கொள்ளாது வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு நிற்கின்றது. ஒரு குழந்தை மகிழ்ச்சியாக வளர அதன் பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது போலவே பல வாகன விபத்துகளில் ஒரு மனிதனின் பாதுகாப்பு அந்த பாதையில் பயணிக்கும் சகபயணிகள்  கைகளில் தான் உண்டு. இரண்டு வருடம் முன்பு நெல்லை பல்கலைகழகம் முன்பு நடந்த ஒரு விபத்து தான் நினைவில் வருகின்றது.  காலை நேரம் 10 மணி !  இளம் வயதிலே நோய் வாய்ப்பட்டு இறந்த தகப்பனுடைய மகள்.  தாயும் நோயால் இறந்து சில நாட்களே ஆகி விட்ட நிலையில் தேற்வு எழுத வருகின்றார். ரோட்டை கடக்கும் நேரம் பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இடித்து தள்ளி விட்டு நகர்ந்து விட்டது. சில விநாடிகளில் அவ்வழியாக பல்கலைகழக பேருந்துகள், பல மகிழுந்துகள் கடந்து செல்கின்றது. ஆனால் 108 அழைப்பால் ஆம்புலஸ் வரும் வரை மாணவி ரோட்டில் கிடந்தே உயிரை விடுகின்றார்.  அதன் பின் மரணாந்தர கிரியகளுக்கு பங்கு பெறுகின்றனர்; சிலர் போராடலாம் என கூக்குரலிடுகின்றனர் சிலரோ பரிதாபப்படுகின்றனர். ஆனால் மேல்நிலை பள்ளியில் படிக்கும் அவள் சகோதன் மட்டும் தான் அந்த கொடிய தவிப்பை, இழப்பை அனுபவித்திருப்பான்.

டெல்லி மாணவி வழக்கில் அவருடைய நண்பர் மொழியில் இருந்து புரிந்து கொள்வதும் அந்த கொடூரமான மனநிலை கொண்ட சமூகத்தை தான். சொல்லப்போனால் அந்த 6 கொடிய  நபர்களை விட இரக்கமற்றது இந்த சமூகம் தான்.  அந்த மாணவி ஆடையற்றும் இரத்த போக்குடனும் பல மணி நேரம் தெருவில் வீழ்ந்து கிடந்த போதும் இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டு தன் போக்கில் கருத்துக்கள் விதறி கொண்டும் நகர்ந்தது,  ஒரு உடை கொடுக்க முன் வரவில்லை ஏன் பாதிக்கப்பட்ட நபரே இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்னொரு நபரை வானகத்தில் ஏற்றுகின்றார். இந்த இடங்களில் தான் சமூகத்தின் மனசாட்சி செத்து விட்டதே நாம் காண்கின்றோம்.  அதே சமூகம் தனி நபர்களை விரட்டுவதில் தண்டிப்பதில் நியாயத் தீர்ப்பிடுவதில் துடிக்கின்றது.

நம் சமூக வாழ்கை எல்லா நிலையிலும் மற்றவர்கள் தயவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் காண்கின்றோம்..  ஒரு வயதான முதியவர் நிம்மதியாக உயிர் வாழ அவ்வீடிலுள்ள சிறுவயதினர் கரிசனையாக நடந்து கொள்ள  வேண்டும். அதே போன்று அந்த வீட்டிற்கு வாழ வரும் பெண் நிம்மதியாக வாழ கணவர் மட்டுமல்ல அந்த வீட்டு முதியவர்களும் அனுமதிக்க வேண்டும். ஏன் பிறந்த வீட்டில் கூட ஒரு பெண் ஆகட்டும் ஆண் ஆகட்டும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ அந்த வீட்டில் தன்னுடன் வசிக்கம் மற்ற நபர்களின் அனுமதியும் தேவையாக வருகின்றது. என் உறவுக்கார பெண் வசதியான வீடு,  நல்ல குடும்பம் என திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அவ்வீட்டு முதியவர்கள் எங்கள் காலம் பின்பு தான் வீட்டில் உரிமை என்றதும் வாடகை வீடு,  நிரந்த வேலையின்மை என வறுமை கோட்டின் கீழ் தான் வாழ்ந்து வந்தனர்.

அதே போன்று தான் ஒரு மாணவன் நல்ல கல்வி பெற வேண்டுமா அந்த கல்வி நிறுவனம் ஆசிரியர்களின் தயவு பெற்றோரின் அனுமதி தேவையாக உள்ளது. எதிர் வீட்டு பெண்மணி கூறிய நிகழ்வு வருத்தம் அடையச் செய்தது. மகனை படிப்பிக்க ஆசைப்பட்டாராம்.  ஆனால்என்னால் பள்ளியில் அடிவாங்க இயலாது” என மகன் தன் படிப்பை தொடரவில்லையாம்.  இன்றைய அரசியலை பாருங்கள் அரசியல் வாதிகள் புரியும் ஊழல் கடைநிலை மனிதனையும் பாதிக்கின்றது. அதிகாரிகள் அரசியல்வாதிகள் சதியால் பல மக்கள் வறியநிலையிலும் அகதிகளாகவும் மாற்றப்படுகின்றனர். மேற்குலகு நாடுகளின் இரக்கமின்மையால் கிழக்கு தேச நாட்டு மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.வேலையிடங்களிலும் இதே சம்பவங்கள் தான் அனுபவங்களில் காண்கின்றோம். என் தோழரிடம் கேட்டேன். எப்படி வேலை போகின்றது. அவர் சொல்கின்றார் வேலை எளிதே; அங்குள்ள அரசியலை சமாளிப்பது தான் சிரமம். கொத்தனார் நூல் பிடிப்பது போல் நிற்க வேண்டும். அல்லை என்றால் நம் வேலையை பறித்தெடுக்க ஓநாய் கூட்டம் போல் ஒரு கூட்டம் பல்லிளித்து கொண்டு சுற்றும் நிற்கும். இதுவே மிகவும் மன அழுத்தம் தருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இங்கு தான் மனித நேயம், மனிதம், அறம் உயிர் பெற வேண்டியுள்ளது. சிலருக்கு சிலரை பிடிப்பது இல்லை என்றால் அழிக்க வேண்டும் ஆள் வைத்தாவது கொல்ல வேண்டும் என்ற மன நிலை மனிதமல்ல. சிலருக்கு தாழ்வு மனபான்மை என்ற நோய் போலவே பலருக்கு அதற்கு நேர் எதிரான மேட்டிமை மனநிலையால் பலர் அல்லல்ப்படுவது  உண்டு.  தாழ்வு மனப்பாட்மை தன்னை தானாக கொல்வது போல மேட்டிமை மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை அழிக்கின்றனர்.  இவர்களை கண்டு பிடிப்பது எளிதே.  தன் கருத்தே சரி, தான் நம்பும் கடவுளே மிகவும் சிறந்தவர், அல்லது நான் நம்பாததால் கடவுள் உண்டு என யாரும் நம்பக்கூடாது, தன் கொள்கையை உயர்வானது, தன் குடும்பத்தான் சிறந்தது., தன் குழந்தைகளே சிறந்தவர்கள், இப்படி தான் தான் என தான் சார்ந்த விடயங்களில் வெறிபிடித்தவர்களாக இருப்பார்கள். இவர்களை இனம் கண்டு விலகி தப்பித்து வாழ்வது தான் மிகப்பெரிய சவால். எப்படியோ பலருடைய நல் வாழ்வுக்கு காரணமாகாவிடிலும்  துன்பத்திற்கு சக மனிதனை ஆளாகாதீர்கள்