header-photo

இணையத்தை பயண்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியது!


தொடர்பியலில் முதுகலைப் பாடத்திட்டத்தில் ‘நவீன ஊடகம்’ ஒரு பாடப்பகுதியாக இருந்தது.  பேராசிரியர் இணையமுகவரி உள்ளவர்களை பற்றி வினவிய போது 14 பேரில் 3 பேருக்கே இருந்தது.  எனக்கும் இருந்தது என்பது ஒரு பெருமையாகத்தான் இருந்தது. ஆனால்  கணவர் உதவியில்லாது தனியாக கையாள தெரிந்திருந்தேனா என்றால்  இல்லை என்பதே உண்மை. பின்பு இணையத்தில் கணக்கு துவங்கி இதனூடாக வலைப்பதிவுகள் உலகில் வந்த பின்பு தான் கணினி பயண்பாடு அதிகரித்தது.  

வலைப்பதிவுகள் தான் என்னை ஈர்த்த ஒரு இணையப்பகுதி. இதனாலே என்னுடைய இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கு என ஈழ வலைப்பதிவுகளை பற்றிய ஆய்வை தேற்வு செய்திருந்தேன். நம் கருத்துக்களை அச்சுறுத்தல் அற்று வெளியிட தகுந்த தளமாக உள்ளதும்; தான் காணும் கற்று உணரும், நம்மை பாதிக்கும் அச்சுறுத்தும் செய்திகளை தகவல்களாக தர இயல்கின்றது என்பதை சிறப்பாக கண்டேன்.    நம்மை அறிவாளிகள் என்று காட்டி கொள்வதை விட மனதில் தோன்றுவதை இயல்பாக  வெளியிட வலைப்பதிவுகள்  ஒரு தளம் அமைத்து கொடுக்கின்றது என்பது தான் இதன் பயன்பாட்டில் மிகவும் ரசிக்க வைத்தது.

எங்கள் வீட்டுக்கு என தனி இணைய இணைப்பு வந்த போது முதல் என் தொலைகாட்சி காணும் நேரம், வாசிக்கும் நேரம், பேசும், தூங்கும் நேரம் கூட விழுங்கும் பூதமாக இணையம் வந்து சேர்ந்தது.  இணையம் வழி பல அறிய பாட புத்தகங்கள், கட்டுரைகள், கதைகளில் நான் சென்று வந்துள்ளேன். பல  உன்னதமான மனிதர்களுடனான நட்பும் அறிமுகவும் கிடைத்தது. 

தமிழக கலசாரத்தில் பெண்கள், ஆண்களுடன் பேசினாலே கற்பு கலைந்துவிடும் என்று நம்பும் சமூகத்தில், அழகான நட்பை உருவாக்க பெரிதும் பயண்படுகின்றது. யாரிடம் என்ன பேசுகிறோம் என்ற கருதல் இருந்தால் ஆபத்து வருவதற்க்கு வாய்ப்பு இல்லை. இது ஒரு கருத்து பரிமாற்ற, தகவல் பரிமாற்ற தளம் மட்டுமே என்ற புரிதல் மிகவும் அவசியமாகின்றது. இதில் புது உறவுகளை தேடுவதோ, நாடுவதோ தான் ஆபத்தில் கொண்டு போய் விடும். இந்த உறவையும் திறந்த புத்தகமாக பேணும் போது நம் பாதுகாப்பை சொந்தமாக்கி கொள்கின்றோம். முகநூல் போன்ற தளங்களால் கொலை செய்யப்பட்ட பெண்கள் செய்திகள் வரை எட்டுகின்றது.  இங்கு எல்லாம் தொழிநுட்பத்தை குறை சாராமல் பயண்படுத்தும் விதத்தையே நோக்க வேண்டும். 

ஆனால் பெண்கள் குழந்தைகள் இதை பயண்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யும் படியாக   வெகுசன ஊடகம் வழியாகவும் கருத்து பரவப்படுகின்றது.  இன்றைய வாழ்கையில் முகநூல் போன்ற தளங்கள்  கருத்து பரிமாற்றத்திற்க்கு மிகவும் பயண்படுகின்றது. அரசியல்வாதிகள் கூட இதை பயண்படுத்தவும், பயண்படுத்துபவர்களை கட்டுப்படுத்தவும் விளைவது இதன் பலன் தெரிந்ததாலே. 

படித்தவ்ர்கள் பயண்படுத்தும் இணைய தளங்களில் கூட தேவையற்ற சண்டை அதை தொடர்ந்த கெட்ட வார்த்தைகள் பயண்படுத்துதல் என ஆக்கம் கெட்டு பயண்படுத்துபவர்களும் உண்டு. ஒருவர் பேசுவது விரும்பவில்லை என்றால் தறிகெட்டு பதில் பேசுவதை விடுத்து நட்பு வட்டத்தில் இருந்து விலகுவது, விலக்குவது அல்லது  பதில் தராது மைவுனம் காத்து வீழ்த்துவதே சிறந்தது.

உள்பெட்டி கருத்து பரிமாற்றம் மூலம் தான் பலர் சிக்கல்களை சந்திக்கின்றனர். வெளியாகாத ரகசியங்கள் இல்லை அதிலும் நவீன ஊடகத்தில் எல்லா தகவல்களும் சேகரிக்கப்படுகின்றது என்ற புரிதல் இருக்கும் போது பயண்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக கையாள முன்வருவோம். இதில் பெண்கள் இன்னும் ஜாக்கிரதையாக தகவல்கள் அனுப்ப வேண்டியுள்ளது.  சுவரில் மிகவும் பண்பானவர்கள் அறிவாளிகள் போன்று காட்டி கொள்பவர்கள் கூட உள்பெட்டி வழியாக தகாத தகவல்கள் அனுப்பக்கூடும். உடன் நட்பு வட்டத்தை துண்டிக்காது,  பதில் கொடுத்து அவர்களை பகுந்தாய்ந்து கொண்டு இருப்பது மேலும் சிக்கலையே வரவழைக்கும்.

இதில் ஒரு சில இளைஞர்களுக்கு சில வெற்று எண்ணங்கள் உண்டு. பல மணிநேரம் இணையத்தில் செலவழிக்கும் பெண்களை தாங்கள் நினைத்த படி வளைத்து விடலாம் என்றும் வெட்டியாக கதையளப்பவர்க்ள் என்றும். இந்த தருணங்களில் பெண்கள் இம்மாதிரியான நபர்களை புரக்கணிப்பதே சிறந்த வழியாகும். இவர்களை விட ஆபத்தானவர்கள் முதிர்வயது சில ஆண்கள்!ரொம்ப நல்லவர்களாக பொறுப்பானவர்களாக நமது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களாக  பேசி மடக்க பார்ப்பார்கள். கவிஞர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... கவிதைகள் வடிவில் செய்திகள் வரும். நாம் புரிந்து கொள்ளவும் இயலாது புரியாது இருக்கவும் இயலாது. நாம் பொருள் கேட்டாலும் நம் மனநிலை புரிந்து மாற்றி பொருள் சொல்வார்கள். நான் இப்படி தான் நினைத்து அனுப்பினேன், நான் உங்களை அப்படி பாவிக்கவில்லை என பல சமாதானங்கள் வந்து சேரும். இவைகளில் மாட்டாது தப்பிப்பது பெண்களிம் புத்தியை பொறுத்தது.

பல பதவியிலுள்ள, படித்த அறிவுள்ள பெண்கள் என நினைப்பவர்கள் கூட மாட்டிகொள்கின்றனர். துவக்கத்தில் விளையாட்டாக எடுத்து அது பின்பு பரிவாக மாறி தங்கள் வாழ்கையை அழித்துகொள்ளும் மட்டும் காத்திருக்கல் ஆகாது. நம்பக தன்மை என்பது இணையத்தில் எதிர்பார்ப்பது மிகவும் அரிதாகும். வார்த்தை ஜாலங்களால் பெண்களை மடக்கும் நபர்கள் இணையத்தில் உண்டு. இவர்களை கயவர்கள், நம்பிக்கை துரோகிகள் என அழைத்து நாம் கோபப்படுவதை விட அவதானமாக கண்டு விலகியிருப்பதே சிறந்தது. 

முகநூல் போன்றவற்றின் மூலம் நட்பாகிறவர்கள் எல்லோரையும் தெரிந்திருக்க கூடும் என்பது இயலாத விடயம். ஆனால் இவர்களை நம் நட்பு வட்டத்தில் சேர்க்க தகுந்த நபரா என்று அவர்கள் நண்பர்கள், அவர்கள் இடும் புகைப்படங்கள் மற்றும் தொகுப்பால் நாம் அவர்களை கண்டு உணர இயலும்; . திருமணம் ஆகாத பெண்கள் என்றால் பெற்றோர் அறிவோடும் திருமணம் ஆனவர்கள் என்றால் கணவர் புரிதலோடும் சமூகத்தளங்களில் பங்கு கொண்டால் தங்கள் பாதுகாப்புக்கும் வாழ்கைக்கும் நலம்.

ஆண்கள் தான் பெண்கள் பாதுகாப்புக்கு களங்கம் விளைவிப்பவர்கள் என்றில்லை. சில பெண்களும் உண்டு. ஒரு நபருக்கு அறியாது அவர் நிலத்தகவல்களை தன் சுவரில் பதிந்து கேலி செய்வது, விவாதத்திற்க்கு உள்ளாக்குவது, அவர்கள் பெயரை கெடுக்க முற்படுவது என எல்லா வில்லத்தனங்கள் செய்பவர்களில் பெண்களும் உண்டு. ஒரே வழி நட்பில் இருந்து விலகுவது, அவர்களை நம் பக்கம் நெருங்காது தடுத்து நிறுத்துவது ஒன்று தான். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபெறுவது மட்டுமல்ல தெளிவான சிந்தனையுடம் நாம் நம் வேலையை நோக்கலாம்.

என் அனுபவ கதையுடன் பதிவை முடிக்கின்றேன். நெல்லை அக்கா எருவர் மிகவும் நட்பாக பழகி வந்தார். அழைப்பது கூட அம்மா என்றே இருக்கும். ஒரு முறை திடீர் என எனக்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தார், உங்களை நல்லவர் என எண்ணியிருந்தேன் உங்களுக்கு இன்னார் இன்னாருடன் நட்பு. அவர்கள் மோசமானவர்கள் ஆகையால் உங்களை நட்பில் இருந்து விலக்குகின்றேன் என்று. இதுவும் நல்லதே என்று இருந்த போது சில நாட்கள் கடந்த பின் உங்களை பற்றி புரிந்து கொண்டேன்,பழையதை மறக்கவும் உங்களிடம் நட்பு கரம் நீட்டவும் வந்துள்ளேன் என்றார். நானும் ஏற்று கொண்டேன். இதே நபர் நான் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன் என தெரிந்து கொண்டு நான் எழுதும் கதைகளை அவர் சுவரில் இட்டு விவாதிக்க ஆரம்பித்தார், பின்பு நான் பகிரும் சில சம்பவங்களை கூட கேலியாக குறிப்பிட்டார் . நான் இல்லாத இடங்களில் என் பெயரை பயண்படுத்துவதை அறிந்ததும் தடை செய்து(block) வெளிவந்தேன். 


இன்னும் சிலர் உண்டு நாம் பகிரும் படங்கள், மற்றும் எழுத்துக்களை வைத்து நம்மை பற்றி ஒரு கணக்கு வைத்து கொண்டு கதைக்க முன் வருவார்கள். இவர்கள் அனைவரையும் தயாதாட்சண்ணியம் இன்றி விரட்டி அல்லது வெட்டி விடுவது மட்டுமே சுதந்திரமாக மனச்சுமை இல்லாது இணையத்தில் சுற்றி  வர நமக்கு உதவியாக இருக்கும். பெண்களுக்கு சமூக ஆளுமையில் முக்கிய பங்கு உள்ளது போலவே இணையத்திலும் தங்கள் ஆற்றலை உணர்ந்து இணையத்தில் ஆளூமை செலுத்துவோம். மாயயில் சிக்காமலும் அடிமையாக வாழாது இருந்தால் எங்கிருந்தாலும் சொர்கமே! 

  

8 comments:

Anonymous said...

Mam,
Miga nandraga ezuthuirukirirgal. Aanal thalipuku etrathupol innum athiga thagavalgal ethirparthen.
Vazthukal.
Karunakaran

இராஜராஜேஸ்வரி said...

ஒருவர் பேசுவது விரும்பவில்லை என்றால் தறிகெட்டு பதில் பேசுவதை விடுத்து நட்பு வட்டத்தில் இருந்து விலகுவது, விலக்குவது அல்லது பதில் தராது மைவுனம் காத்து வீழ்த்துவதே சிறந்தது.

நடைமுறைக்கு ஏற்ற கருத்து ...

இராஜராஜேஸ்வரி said...

ஆபத்தானவர்கள் முதிர்வயது சில ஆண்கள்!ரொம்ப நல்லவர்களாக பொறுப்பானவர்களாக நமது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களாக பேசி மடக்க பார்ப்பார்கள். கவிஞர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... கவிதைகள் வடிவில் செய்திகள் வரும். நாம் புரிந்து கொள்ளவும் இயலாது புரியாது இருக்கவும் இயலாது. நாம் பொருள் கேட்டாலும் நம் மனநிலை புரிந்து மாற்றி பொருள் சொல்வார்கள். நான் இப்படி தான் நினைத்து அனுப்பினேன், நான் உங்களை அப்படி பாவிக்கவில்லை என பல சமாதானங்கள் வந்து சேரும். இவைகளில் மாட்டாது தப்பிப்பது பெண்களிம் புத்தியை பொறுத்தது. //

மிகச்சரியான பார்வை ....

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

அப்பாதுரை said...

உங்கள் எண்ணங்களைக் கொட்டியிருக்கிறீர்கள் :)

எழுத்தை வைத்து ஆளை எடைபோடுவது இணையத்தைப் பொருத்தவரை, தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறது. இணையத்துக்கு முந்தைய நாட்களில் கூட இப்படித்தான். ஒரு எழுத்தாளரை அவர் எழுத்தை வைத்தே எடை போட்டுப் பழகினோம். 'பேனா நட்பு' இருந்த நாட்களில் (ஸ்.. ஏதோ ஒரு காலம்..) இதே கதை.

சரி.. விடுங்கள்.. கட்டுரை தலைப்புக்கும் நீங்கள் எழுதிய விவரங்களுக்கும் தொடர்பில்லையே? என்னென்ன பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள் பெண்கள் என்ற உங்கள் கருத்தை அறிய முடியவில்லையே? இதற்கு ஒரு teaser கட்டுரை வேறு எழுதியிருக்கிறீர்களே :-)

J.P Josephine Baba said...

தோழர் அப்பாதுரை அவர்களே உங்கள் பின்னூட்டம் சிந்திக்க தூண்டியது. ஆகையால் பதிவின் தலைப்பை மாற்றி விட்டேன்.தங்களுக்கு என் நன்றிகள்!

J.P Josephine Baba said...

பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி வணக்கங்கள்.

சித்திரவீதிக்காரன் said...

நல்ல பதிவு. எந்த தொழில்நுட்பத்தையும் முறையாக பயன்படுத்தினால் யாருக்கும் சிக்கல் இல்லை.

Post Comment

Post a Comment