header-photo

ஒரு புத்தகம் கதை!

ஒய்யாரமா மேஜை விளிம்பில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு விமர்சனம் பெறப்பட்டேன். நான் எழுதிய புத்தத்தில் வார்த்தைகள் கண்ணியமாக பயண்படுத்தவில்லை என்று! எல்லோரையும் புரியவைக்க நான் உலகமகா குரு அல்ல என்றாலும் கூட சும்மா அவல் மென்று   சாப்பிடுவது மாதிரி பேசுவது தான் சிரிப்பாக இருந்தது.                                                                                                                                                இதுவெல்லாம் பொறாமை ஜுவாலை என தள்ளி விட்டாலும் என் புத்தகம் பற்றி சரியான புரிதல் எனக்கு கிடைத்துள்ளது அதை உங்களுடன் பகிரும் போது இன்னும் தன்னம்பிக்கையுடன் கதைப்பேன். நான் ஒரு எழுத்து பின்புலனுள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை, என் மூலதனம் என் சிந்தனைகள், எண்ணங்கள், என் சில அனுபவங்கள், அதை பகிரும்  துணிவும், உண்மையின் மேலுள்ள தீராத பற்றும் தான்.  8 வயதில் இருந்தே எழுத்து என்னுடன் தான் உள்ளது ஆனால் அது எல்லாம் தேவையற்றது என எரிக்கப்பட்டது கிழிக்கப்பட்டது தான் உண்மை. பின்பு என் முதுகலை படிப்பு ஊடகம் சார்ந்தது என்றதும் நான் கற்ற உத்தியை கையாளும் முயற்சியில் ஒரு புத்தகம் வந்துள்ளது.  எனக்கு பின்புலமாக விளங்கும் என் கணவர் நான் விரும்பும் போல் சுதந்திரமாக எழுத அனுமதிக்கின்றார், என் நண்பர்கள் உதவுகின்றனர் இதனால் மட்டுமே புத்தக உலகத்தில் என் புத்தகவும் இடம் பிடித்து விட்டது.  நான் கன்னிமார நூலகம் இன்னும் சென்று விடவில்லை என்றாலும்  என் புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் இடம் பிடித்துள்ளது என்பதே மகிழ்ச்சி தானே.                                                                                         நான் எழுதிய புத்தகம் நான் கண்ட நிகழ்வுகள், சூழல்கள் என இருந்தால் கூட என் வாழ்கை சரிதமல்ல.  சம்பவங்களை இயல்பாக எழுத முற்பட்ட போது என் வாழ்கை சரிதமாக சிலருக்கு படுகிறது என்றால் இவர்கள் இன்னும் வாழ்கை சரிதம் வாசிக்கவில்லை என்பதே பொருள்.  நான் இப்புத்தகம் எழுதிய போது ஒரு காலத்தை சில சாதாரண மனிதர்களை பதியவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். என் கதைகளில் சாதாரண மக்கள் கொண்ட போராட்ட வாழ்கையை சித்திரிகரிக்கவே முயன்றேன். பல பெண் தோழிகள் எனக்கு தொலைபேசி ஊடாகவும் மின் அஞ்சல் வழியாகவும் கருத்தை தெரிவித்திருந்தனர்.  ஒரு விமர்சகை  எல்லா கதையிலும் நான் என்ற கதாபாத்திரம் உண்டு என்று வருந்துவதாக சொல்லியிருந்தார். நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தலைப்பு உள்வாங்கி எழுதிய போது நான் என்ற கதாபாத்திரம் தவிற்க இயலாது ஆகி விட்டது.                                                                         இப்புத்தகத்திற்க்கு ஆக்கபூர்வமான விமர்சனம் பெறும் நோக்குடன் கல்லூரி பேராசிரியர்கள்,ஊடகவியாளர்கள், நண்பர்கள் கைகளில் என் சொந்த செலவில் எட்ட வைத்துள்ளேன். உழைப்புக்கு விலை கிடைக்காத தொழில் எழுத்து என்று தோன்றினாலும் முதல் படி சறுக்காததில் நான் மகிழ்வேன். லண்டனில் 30 புத்தகம், நார்வே 25 புத்தகம் சென்றுள்ளது என்பதும் மகிழ்ச்சியே.  ஒரு புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கு செலவானது அதை வெளிநாடுகளில் எட்ட செய்ய.  இருப்பினும் நண்பர்கள் அன்பு வேண்டுதலுக்கு இணங்க என்னால் இயன்ற மட்டும் நண்பர்கள் உதவி கொண்டும் விரும்பியவர்கள் கைகளில் சேர வைத்து விட்டேன். சிலர் புத்தகத்தின் செலவை அனுப்பி உற்சாகப்படுத்திய போது  சிலர் புத்தகம் பற்றிய விமர்சனத்துடன் என்னை மெருவேற்றியுள்ளனர்.                                                 எழுதுவதும் ஒரு கலை தான்.  எழுத ஒரு கரு உருவாகுவதும் எழுத்தாளன் உரிமை, விருப்பம் என்பதையும் கடந்து ஒரு படைப்பாளியின் வாழ்கையில் இருந்து பெறப்படும்  அனுபவத்தில் இருந்து  பெறும் உன்றுதல் என்றே சொல்ல இயலும்.  அந்த உற்றுதல் ஒரு சமூக அக்கறை, நலன் சார்ந்து சிறப்பாக அமைகின்றது.                                                                                                                               இது போன்ற வாசகர்களின் விமர்சங்களையே நான்  எடுத்து கொள்கின்றேன் இதுவே எனக்கும் பலமாகவும் அமைகின்றது.  I'm Savithri Mohanaruban. Subi gave me your book (short stories) when I met her in Chennai.I love my mother tongue.I'm a fan of Tamil lanuage but I don't go deep in to it as Subi does. So with some some hesitation -I took the book.
While on the flight back home to Singapore I was looking for something to read and found your book in my handbag.
The rest is history!. I really enjoyed it .It was very interesting,easy to read,we written and very true to life. Infact I couldn't keep the book down. So the end result is I finshed reading the book in one go!.By the end of the flight I was ready to pass on the book to my friends in singapore to read!
You can see I have never wirtten a "Review " on any books in my life!!??. As I've enjoyed reading your book-that too your maiden effort- I thought I should pen few of my thoughts/ feeling (mine is just a drop in the ocean as i'm sure you would have received many acclaims) to encourage you to write books full of more wonderful scenarios in the future.
Wishing you the very best for futre ventures.
Best wishes
Savithri.
உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.


வலைப்பதிவர் நண்பர் சுரேஷ்.                                                                                                                                  ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது.


ஒரு பார்வை – செல்வி ஷங்கர்

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
                                                                                              சிவசுதன் -சிலோண்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,
1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .


கவிஞர் வைகறை வைகறை                                                          
சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது!  கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது!  கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்!  அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!!                                                                                                                                 இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான எச்.பீர்முஹமத்                                                                  
நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி

லசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

4 comments:

சித்திரவீதிக்காரன் said...

தங்களுடைய சிறுகதைத் தொகுப்பு குறித்த பலரது கருத்துகளையும் வாசித்தேன். புத்தகம் எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை குறிப்பிட்டால் வாய்ப்பிருக்கும் போது வாங்கி வாசிக்க உதவியாகயிருக்கும்.
தங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள்.

Subi Narendran · Top Commenter · Works at M&S said...


ஜோஸ் எல்லா மனிதர்களின் பார்வையும் ஒன்றல்ல. ஒரே விடயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரித் தெரியும். எனவே விமர்சனங்களும் மாறுபட்டே இருக்கும். எழுத்தாளருக்கு எதையும் ஏற்கும் தன்மை வேண்டும். கவலை வேண்டாம், கூடாத விமர்சனங்களும் உங்கள் ஏற்றத்துக்கு படிக்கட்டுகளே. நல்ல விமர்சனங்களை தன்னம்பிக்கையோடு எடுத்துக்கொண்டு மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள் தங்கையே.

J.P Josephine Baba said...

தகிதா பதிப்பகம்-கோயம்பத்தூர்

Srikandarajah கங்கைமகன் · Works at Asian Star Bern said...


வணக்கம் பாபா. தங்கள் புத்தகத்தில் "நான்" என்ற தொனி இருப்பதாக ஒருவர் குறைகூறியதாகச் சொல்லியுள்ளீர்கள். அவ்வாறான தொனி இல்லாத புத்தகங்கள் உயிர்ப்புள்ளவையாக இருக்காது. புத்தகத்தின் கதையையும் தலைப்பையும் வைத்தே அதன் போக்குத் தீர்மானிக்கப்படும். கவலை வேண்டாம். தொடர்ந்து வெல்லுங்கள். புத்தகங்களை ஏசுவதும் எரிப்பதும் இன்று நேற்று அல்ல பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. தன்நம்பிக்கையே உங்கள் பலம். வாழ்த்துக்கள்.

Post Comment

Post a Comment