28 Nov 2012

என் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை!




நான் தேடும் வெளிச்சங்கள்.'ஜோ உங்கள்  எழுத்து மனசை தொடுகிறது. உங்கள் முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு லாவகமாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.உங்களை வாழ்வில் உயர்த்திய வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் அருமை. 





ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவ பாடங்கள். நோகாமல் நொங்கு உண்டது போல வாசிப்பவர்களுக்கு அனுபவங்களைத் தாமே பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. 'ஒற்றை மரம்' மனதை ஆழ ஊடுருவி அந்தச் சிறுவனை தழுவி சோகத்தைப் போக்கவேண்டும் என்ற தவிப்பையும்,'என் தோட்டம் சொல்லும் கதை' நகைச் சுவையாக மனித மனங்களை உணரவும், 'என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம்' நாம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் மன ஓட்டத்தையும் அதன் பயங்கர விளைவையும் உணர்த்துகின்றன.

ப்படி எல்லாக் கதைகளும் ஒரு நல்ல கருத்தை மனதில் பதியவைக்கிறது. நீங்கள் தேடிய வெளிச்சங்கள் அனுபவமாக சிந்திக்க வைக்கிறது. ஜோ உங்களை உறவாக பெற்றதில் பெருமைப் படுகிறேன் முகநூலுக்கு நன்றியும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உயர எனது ஆசிகளும் வாழ்த்துகளும். வழமோடு வாழ்க தங்கையே..

அக்காவுடனான நட்பில் துவக்கம் என் பதிவுகளுக்கு அக்கா தரும் பின்னூட்டங்களில் இருந்து துவங்கியதே. படைப்பாளியை தாங்கும் படைபாளியாக அக்கா இருந்து வருகின்றார் என்பதே உண்மை. ஏனோ தானோ என்றில்லாது  வாசித்து  ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்வதே அக்காவின் வழமை. சில வேளை ஒப்புரவு ஆகாத பதிவுக்கு தன் கருத்தையே பகிர்ந்து செல்லவும் தயங்குவது இல்லை. அதே போன்று அக்காவின் பூந்தோட்ட பதிவுகளுடன் எனக்கு தீராத மோகமே இருந்தது. பூக்களில் அரசியான ரோசாபூக்கள் நட்டு வளர்ப்பதில் அக்கா அரசியாகவே திகழ்ந்தார். இந்த பதிவுலகு உறவால் உருவான உறவு பல வருட உறவு போலவே மலர்ந்து மணம் வீசியது எங்கள் வாழ்கையில்.

எங்கள் இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆற்வம் இருந்தாலும் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என சந்தேகங்கள் இருந்ததை ஊண்மையாக்கியவர் சுபி அக்காள். சுபி அக்காவும் தன் அன்பு கணவர் நரேன் அண்ணாவுடன் நெல்லை வர நாங்களும் குடும்பத்துடன் வரவேற்று நெல்லை சுற்றுலா தலங்களை சுற்றி வந்த நாட்கள் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். பிரியும் நேரம் மிகவும்  கனத்த மனதுடன் கண்ணில் முட்டி வந்த கண்ணீர் துளிகளுடன் விடைபெறும் கணங்களாக இருந்தாலும் உடன் பிறந்த சகோதரியை கண்டு கொண்ட ஒரு மகிழ்வில் பிரியா விடைபெற்றோம். அடுத்த விடுமுறையில் சந்திக்கும் நாட்களை எண்ணி காத்திருக்கின்றோம். எங்கள் அன்பை புரிந்து சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாக்கி தந்த நரேன் அண்ணாவுக்கும் என் கணவருக்கும் எங்கள் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 

என் புத்தக வேலையில், ஆரம்பம் தொட்டு கடைசி வரையிலும் என்னுடன் இருந்த  அக்காவின் பங்கு அளவிட இயலாதது.  இந்த காலகட்டத்தில் பல சோதனை- வேதனையில் கடந்து செல்லப்பட்டேன்.  தன் வார்த்தைகளால் தேற்றினார் வலுவூட்டினார். புத்தகம் பலர் கையில் சென்று சேர வேண்டும் என முயற்சி எடுத்து தன்னுடைய நண்பர்கள் கையில் கிடைக்க செய்துள்ளார்; தான் வசிக்கும் லண்டனுக்கும் கொண்டு சென்றுள்ளார்.    தன் நண்பர்கள் ஊடாக  நெல்லையில் அறிமுகம் ஆக அக்கா சில தடங்களையும் இட்டு சென்றுள்ளார். 


அக்காவிடம் இருந்து  புத்தகம் பற்றிய கருத்து பெருவதில் பெருமிதம் கொள்கின்றேன் மகிழ்கின்றேன். அக்கா அமைதியில் அரசியாக,  எளிமையின் நிறைகுடமாக பல அறிய குணநலன்களை கற்பித்து சென்றுள்ளார். தன் தனித்துவமான ஆளுமையினால் அன்பினால் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அக்காவின் அன்பு தங்கையாக  பாக்கியம் பெற்றதில்  நான் உண்மையிலே நெகிழ்கின்றேன். ஆயுசின் கடைசி மட்டும் அக்காவின் அன்பில் அன்பு தங்கையாக வாழ பிரார்த்தித்து கொண்டு அன்புடன் உங்கள் ஜோஸ் .......அக்கா!



4 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள். புத்தகம் பற்றிய விவரங்களை வெளியிடலாமே?

    ReplyDelete
  2. http://josephinetalks.blogspot.com/2012/11/blog-post_6.html என் புத்தகம் பற்றிய தோழர் கங்கைமகனுடைய கருத்து. தாங்கள் முகவரி அனுப்பினால் புத்தகத்தை தங்களுக்கு அனுப்ப மிகவும் விருப்பமாக உள்ளேன். முகநூலில் உங்களை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை. நட்பு கோருகின்றேன். தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி மகிழ்ச்சிகள்.

    ReplyDelete
  3. Subi Narendran · Top Commenter · Works at M&SDecember 09, 2012 6:42 am


    ஜோஸ் இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனசை தொடுகிறது. உங்கள் அன்பு கண்ணீரைக் கூட வரச் செய்கிறது. மிகவும் நன்றி. உங்கள் உயர்ந்த உள்ளத்தைப் போல் வாழ்விலும் உயர்வே உங்களுக்கு.

    ReplyDelete
  4. Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,madurai. Dr.Ambdekar's govt law college,chennaiDecember 09, 2012 6:42 am


    on seeing your family's hospitality & affection on friends, I உண்மையிலே நெகிழ்கின்றேன்...proud of u & your family...

    ReplyDelete