header-photo

திலகனும் அம்மாவும்!

திலகன் என்ற மாபெரும் நடிகரை துயரில் ஆழ்த்தி அவரை விரைவில் கொல்ல காரணமாக இருக்க "அம்மா" என்ற மலையாள திரை உலக இயக்கம்  பங்கு மிக அளவில்  உண்டு. 

ஆனால் நான் சொல்ல வருவது திலகனுடைய பெற்ற தாய்-சேய் பற்றிய சிறிய தொகுப்பாகும். திலகனிடம் ஒரு செய்தியாளர் அம்மாவை பற்றி வினவிய போது அம்மா என்றால் ஒரு பந்தம் மட்டுமே. அது ஆத்ம உணர்வு  என்ற அளவிற்க்கு இல்லை என்றிருந்தார்.  அவருடைய வாழ்கை சொல்லிய ஆழமான பாடமாகும். 

திலகன் ஒரு எஸ்டேட் அதிகாரியின் 6 குழந்தைகளில் இரண்டாவது மகனாக பிறக்கின்றார். திலகனின் எதிர்ப்பு குணம் ஆரம்பித்ததே திலகனுடைய வீட்டில் இருந்து தான்.  தன் கீழ் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை ஆட்சி செய்யும் ஒரு அதிகாரியான அவர் அப்பா காங்கிரஸ்காரராக இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருடைய மகனான திலகனால் தன்னுடைய கம்னீஸ்ட் சிந்தனையை வெறுக்க இயலவில்லை. தன் தகப்பன் அறிந்தால் பூட்ஸ்காலால் மிதிப்பார் என்று அறிந்தும் கம்னீஸ்ட்காரராக மட்டுமல்ல ஆட்சி செய்யும் போக்கை எதிர்க்கும் நாடகம் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதில் குறியாக இருக்கின்றார்.

திலகன் தகப்பனார் மகன் கல்லூரியில் படித்து நல்லதொரு நிலையில் வர வேண்டும் என விரும்புகின்றார். ஆனால் மருத்துவ படிப்பில் ஒரு வருடம் படித்து தோல்வியுடன் திரும்பி வருகின்றார்.  தங்கள் ஜாதி மதம் சிந்தனையில் ஆழமான வேரூன்ன்றிய குடும்பத்தில் பிறந்த திலகன் இது போன்ற சுவர்களை உடைப்பவராகவே இருக்கின்றார்.

திலகனின் போங்கு பிடிக்காத தாய் திலகனுக்கு உணவு கூட கொடுக்க மறுத்து வீட்டுக்கு வெளியில் அடித்து துரத்துகின்றார். தோட்டத்திலுள்ள மரச்சீனி கிழங்கை உணவாக உண்டு பல நாட்கள் வாழ்ந்ததாகவும் பல நாட்கள் படியுடன் அழுது கொண்டே தோட்டத்தில் தூங்கி போனதகாவும் சொல்கின்றார். ஆனால் அவருடைய அம்மாவோ கிருஸ்தவர்கள் வீட்டில் உணவு உண்ணக்கூடாது. அவர்கள் பாத்திரங்களை சோப்பால் கழுவதால் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாய் உணவு கொடுக்காத போது ஒரு கிருஸ்த குடும்பத்தில் தான் உணவு உண்டதாக நினைவு கூறுகின்றார். 

 ஒரு முறை ஒரு நாடக வேலை முடிந்து தன்னுடன் நடித்த நடிகைகளை வழி அனுப்பி விட்டு வரும் மகனிடம் தாய் சந்தேகமாக நடந்து கொள்வது மட்டுமல்லாது வார்த்தைகளால் குத்தி பேசி  நோவடிக்கின்றார். சினம் கொண்ட திலகன் அயலை மீனுடன் சோற்றையும்  தூக்கி எறிந்து விட்டு போனவர் பின்பு 40 வருடம் கடந்தே தன் தாயை எதிரேற்க  வருகின்றார். தன் தாயும் தன்னை காண விளையாததை எண்ணி வருந்தும் திலகன் தாய் சேய் உறவுக்கு தேவைக்கு அதிகமாக கற்பனையான சில அவஸ்தைகள் சொல்லப்பட்டாலும் இதில் துளியும் உண்மை இல்லை என்பதாக தான் உணருவதாகவே சொல்கின்றார். இது போன்ற அடக்கு முறையில் வளர்ந்த திலகனின் தந்தை பல படங்களில் தனக்கு ரோல் மாடலாக இருந்ததாகவும் சொல்கின்றார். ஆனால் திலகன் தனது இரு ஆண்- பெண் குழந்தைகளுக்கு அன்பான அப்பாவாகவே தன் முடிவு மட்டும் இருந்துள்ளார் என்பதும் எடுத்து கொள்ள வேண்டிய தகவலாகும்.

 
இப்படியாக தான் பேசிய கருத்துக்களுக்காக வாழ்கை முழுதும் போராடி வாழ்ந்து காட்டி மரித்தவர் திலகன் என்றால் மிகையாகாது. மலையாள திரை உலகில் இவர் போன்ற பல ஆளுமைகளை கண்டு உணரலாம். அதில் தன் உருவத்தாலும் குரலாலும் மற்றவர்களுக்கு கவுரவமான கோபக்காரராக தெரிந்திருந்தாலும் நான் யாரையும் பின்னால் நின்று சதி செய்தது இல்லை, பிடிக்காததை முகம் நோக்கியே சொல்லியுள்ளேன். சொல்வதை சொல்லும் நேரம் சொல்ல வேண்டும். பிடிக்காத உண்மைகளும் உண்மை தான். மழுப்பல் நம் சமூக நம்பகதன்மையை அழித்து விடும். உண்மையை உண்மையாக முகம் நோக்கி பேச வேண்டும் என சொல்வது மட்டுமல்லாது வாழ்ந்தும் காட்டி சென்றுள்ளார்.

3 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

மழுப்பல் நம் சமூக நம்பகதன்மையை அழித்து விடும். உண்மையை உண்மையாக முகம் நோக்கி பேச வேண்டும் என சொல்வது மட்டுமல்லாது வாழ்ந்தும் காட்டி சென்றுள்ளார்.// இதைத்தான் பலரால் கடைபிடிக்கமுடியாமல் முதுகில் குத்திக்கொண்டிருக்கின்றனர். தொடருங்கள் தோழி.

kumaraguruparan said...

எழுத்தாளர் ஜெயகாந்தனும் இளம்பருவத்தில் அவ்வளவாக தந்தையால் நேசிக்கப்பட்டதில்லை !....ஒருபுறம் தனி சோகமாக இருப்பினும், அப்படி இருந்ததனால் வாசகர்கள் சிறந்த எழுத்தாளர் கிடைக்கப் பெற்றார்கள்! Boon on disguise!...
நேற்று நள்ளிரவு திலகன் நடித்த ஒரு மலையாளப் படம் சூர்யாடீவியில் கண்டேன்! படத்தின் பெயர் தெரியவில்லை! பாதியிலிருந்து பார்த்தேன் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் பாத்திரம். அவரை கவுன்சலிங் செய்யும் இன்னொரு பாத்திரம்!...இரண்டு அறைக்குள் காமிரா அவர்கள் உடல்மொழியைப் பதிவு செய்கிறது...குறிப்பாக திலகன் 'சேஷ்டைகளை'!...இடுக்கு வழியே நுழையும் செய்தித்தாளுக்காகக் காத்திருந்து பரவசப்பட்டு, சோபாவில் அமர்ந்து நீட்டாக அதை நீவி ஒழுங்குபடுத்தி விட்டு...பின் அதிலிருக்கும் மூன்றாவது பக்கத்தை உற்றுக் கவனித்து அதில் இடம்பெறும் போட்டோக்களை 'காலம் (column) காலமாக' கலையழகோடு கிழிக்கத் 'துடங்கி' (சரியல்லே?) முடித்து கசக்கி குப்பைக் கூடையில் திணித்து விட்டு வாயைக் கோணலாக்கியபடியே ஒரு நமட்டுச் சிரிப்போடு அமர்ந்திருப்பார்.அவருடைய கரகரப்பான குரலே ஒலிக்காத படம்! உடல் மொழி 'மாத்ரமே'!...காமிரா என்று ஒன்றிருப்பதையே அறியாதமாதிரி அமர்ந்திருக்கும் 'கல்லுளிமங்கராக' அந்தக் கலைஞர் திலகன்!

Prabu M said...

முதுமையான தோற்றத்திலும் மிரட்டியெடுத்த வில்லன் நடிகர்....... அவரைப் பற்றி அறிந்திராத விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ..... "அம்மா" எனும் வார்த்தையே அவருக்கு அதிர்ஷ்டமானதாஅ இல்லை என்று நினைக்கிறேன்...... :-)

Post Comment

Post a Comment