15 Aug 2012

உண்மை உங்களை சுதந்திரமாக்கும்!



நள்ளிரவில் கிடைத்த  சுதந்திரம் தினம் கொண்டாட என் மகன்  தயாராகி விட்டான்.  பள்ளி நாட்களில் சுதந்திர தினத்திற்க்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளது போல் தான் உள்ளது. இன்றைய தினம் போல், ஆங்கில பள்ளிகள் அன்றும் சுதந்திர தினம் கொண்டாடியது இல்லை. ஆனால் எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கொடி பிடித்து பாரத மாதாகி ஜெய்....வந்தேமாதரம் என கத்தி சென்றது இன்று நினைக்கும் போது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது.  தங்கள் ஜாதி, மதம் , இனம் கடந்து  தங்கள் நாட்டை பற்றி சிந்திப்பது மகிழ்ச்சி தரும்.

இன்று சிலர் சுதந்திர தினம் கொண்டாட்டம் வீண் என்று சொல்வதில்  சில அர்த்தங்கள் இருப்பினும், கொண்டாட்டம் என்ற நிலையை கடந்து நம் முன்னோர்கள் கொள்கைப் பிடிப்பு, அவர்கள் போராட்டம், லட்சியம், சுதந்திரத்தின் மேலுள்ள வேட்கை, அடிமைத்தனத்திலிருந்துள்ள விடுதலை, உண்மையான சுதந்திரம் பற்றி  தெரிந்து கொள்ளும், கருத்துக்கள் பரிமாறும், கற்று கொள்ளும் நாளாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

நாம் இன்று கொண்டாடும் சுதந்திர தினம் நாள் அன்று பாகிஸ்தான் -இந்தியா பிரிவினையால்  பல்லாயிரம் இந்து -இஸ்லாம் மக்கள் இறந்த நாள் என்ற வகையில் சுதந்திர தினம் வருந்ததக்க நாள் தான். அதே போல் சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை, கல்லாமை, அறியாமை ஒழியவில்லை. அன்றைய நிலை விட மிக கொடிய நிலையில் தான் மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.  பணம் , பதவி, அதிகாரம், பொருளாசை, பொறாமை போன்ற தீய குணங்களின் அடிமைகளாகவே உள்ளனர் பெரும்வாரியான மக்களும்,  தலைவர்களும். அசாம் மக்களுக்கு இன்று சுதந்திர தினம் மகிழ்ச்சியான நாட்களாக தான் இருக்குமா என்ன?

 ஆனால் தான் நினைத்ததை மட்டும் சுதந்திரமாக எடுத்து கொண்டு அடுத்தவர்களின் சுதந்திரத்தை பற்றி எண்ணாது செயலாற்ற இயல்கின்றது என்றால் இந்தியாவில்  மட்டுமே முடியும். இது தான் சுதந்திரமா? உண்மையான சுதந்திரம் என்ன என்று  தெரியாதே சுதந்திரம் கொண்டாடுகின்றோம் என்பதே துயர். ஆசிரியர் சுதந்திரம் என்ற பெயரில் மாணவனை அடிமையாக நடத்துவதும், அரசு அதிகாரம் படைத்தோர் இல்லாதவர்களை கண்டு அடிமையாக நினைப்பதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாக அடிமைகளாக நடத்துவதும், இதே பெற்றொர் வயதான நிலையில் பிள்ளைகளால் அடிமையாக நடத்தப்படுவதும்  சுதந்திரத்தின் அல்லது அடிமை நிலையின் வெளிப்பாடா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

நம் நாட்டிலுள்ள பெரும் சிக்கலே சுதந்திரம் என்றால் என்ன சுதந்திரம் எந்த அளவு எடுத்து கொள்ளலாம் என்ற புரிதலின் தவறே.  இன்று வெளிநாடுகளில் வசிப்பவர் என்றால் நமக்கு தெரியும் நினைத்த சத்ததில் நினைத்த நேரம் பாட்டு கேட்க இயலாது, நினைத்த் இடத்தில் துப்பவோ பொது இடத்தை கழிப்பிடமாக பயண்படுத்தவோ, துப்பக்கூட முடியாது. ஆனால் நம் நாட்டு சுதந்திரம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுக்ன்றது என்றால் பேருந்தில் இருந்து ரோட்டில் போவோர் மேல் துப்புகின்றனர்.  ஒரு மனிதன் வண்ணார்பேட்டையில் புலம்பி கொண்டு செல்கின்றார்.  எனக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளது, இதுவரை என்னை யாரும் அடித்தது கிடையாது. காரணம் இல்லாது அந்த பொலிஸ்க்காரர் என்னை அடிக்கின்றார், எங்கு புகார் கொடுப்பது?  இது தான் நம் நாட்டு  சுதந்திரமா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்கள் பெயரை கெடுக்கும் விதம் எழுதுவது பேசுவது சுதந்திரமா?, மனைவியை பொது இடத்தில் வைத்து அடிப்பதும், கணவனையும் கணவன் குடும்பத்தவரையும் பொலிஸில் அனுப்புவது சுதந்திரமா?  ஒருவர் இருப்பை இன்ன்ருவர் பறிப்பது சுதந்திரமா?  சுதந்திர தினம் மேலுள்ள வெறுப்பால் சுதந்திரத்திற்க்கு என பாடுபட்டவர்களை கேவலாமக சித்தரிகரித்து பேசுவது சுதந்திரமா? இப்படி பல கேள்விகள் கேட்டு கொண்டே போகலாம்.

பைபிளில் ஒரு கூற்று உண்டு; "உண்மை உங்களை சுதந்திரமாக்கும்'.  ஆம்! உண்மையாக இருப்பது வழியாக நாம் உண்மையான சுதந்திரம் அடைய முடியும். நம் பாரதத்தில் பொய்மை பரப்பவும் உண்மையை உடைக்கவும் தான் சுதந்திரம் பயன்படுத்த படுகின்றது என்பது உண்மையாகும் போது, உண்மை தோற்க்கும் போது  சுதந்திரம் செத்து விடுகின்றது. 


சுதந்திரமாக சிந்திக்கின்றோம் எங்கள் உரிமையில் தலையிடக்கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையாகவும் இருக்க வேண்டும். நம் தலைமுறையை உண்மை பக்கம் திருப்பி  உண்மை சுதந்திரத்தை மீட்டு சுதந்திரமாக சுதந்திர தினம் கொண்டாடுவோம்.

5 comments:

  1. ந. பத்மநாதன் · Subscribed · Top Commenter · Leader at Pathman hypnoterapi · 3,392 subscribersAugust 15, 2012 6:47 am


    ஆம் சுதந்திரத்தை விமர்சனத்துடன் கொண்ட்டாடும் உங்கள் எழுத்து உண்மையானதே..

    ReplyDelete
  2. Punitha Vellasamy · Top Commenter · Petaling Jaya, MalaysiaAugust 15, 2012 7:00 pm


    தான் அடைந்த சுதந்திரத்தை ஏட்டில் வாசித்து அறிந்துகொள்ளும் நிலைமாறி, அதை முழுதாக உணர்ந்து சுவாசிக்கும் நாடாக உருவாக வேண்டும். அன்றே, இந்தியா சுதந்திரம் பெற்ற நாடு. அதற்கு இன்றே என் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வருகை தாருங்கள்!
    தலைப்பு ; படித்தவர்கள்.....

    ReplyDelete
  4. தோழர் சீனா அவர்களின் அறிமுகம் மூலம் உங்கள் பதிவை கண்டேன், இது என் முதல் வருகை! உங்களின் பதிவுகள் அருமை!
    "விடை தேடும் காதல்" .......
    காதலிக்கும் அனைவருக்காகவும்... காதலை நேசிப்பவருக்கும்... காதலின் விடை தேடும் காதலி எழுதும் கவிதை இது....
    உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete