24 Apr 2012

புத்தக கண்காட்சி!

நெல்லையில் புத்தக கண்காட்சி என பத்திரிக்கையில் கண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகின்றது என்றதும் சென்று காண வசதி என எண்ணி கொண்டேன். நேற்று எங்கள் இளைய மகனுடன் சென்றால் புத்தக் கண்காட்சி என்ற விளம்பரமோ, வழிகாட்டும் படியான் ஒரு போஸ்டரோ காண இயலாது திரும்பி வர வேண்டியதாகி போனது.


என் மகன் தான் புலம்பி கொண்டே வந்தான். அரசு  வளாகம் சுத்தமாகவே இல்லை, நான் அரசு பணிக்கு போகப்போவது இல்லை தனியார் அலுவலங்கள் தான் சுத்தமாக உள்ளது..... உங்களுடன் வந்ததால் நடக்க வேண்டியாதாகி போனது. எனக்கு பசிக்கின்றது... என அவனுடைய குற்றப்படுத்தலுகள் நீண்டு கொண்டே போனது. நடந்து வரும் வழியில் உணவகம் கண்டதும் மகிழ்ச்சியுடன் "அம்மா எனக்கு காப்பி வேண்டும்" என அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். வேறு வழி இல்லை என்பதால் நானும் உணவகம் சென்று ஒரு காப்பிக்கான 8 ரூபாய் டோக்கன் பெற்று வாங்கி ஆற்றி கொடுத்தேன். நீங்களும் குடியுங்கள் என பாசமழை பொழிந்து  கொண்டிருந்தான்.  கடைசி மடக்கு மட்டும் வாங்கி தொண்டையை நனைத்து கொண்டு என்னவர் வந்ததும் வீட்டுக்கு பயணம் ஆனோம்.



திருநெல்வேலியில் எல்லா விடயங்களிலும் இப்படி தான். பிரமாண்டமாக விளம்பரப்படுத்தியிருப்பார்கள் ஆனால் நாம் எதிர்பார்த்து செல்லும் நேர்த்தி கண்டதில்லை. கடந்த வாரம் இது போன்றே அரசு அருட்காட்சியகத்தில்  ஓவிய கண்காட்சி என்று செய்தித்தாள் வழியாக தகவல் கொடுத்திருந்தனர். நெல்லையின் புகழ்பெற்ற மறைந்த ஓவியர் இசக்கியின் படம் கூட காட்சிக்கு வைக்கப் படவில்லை. 5 ஓவியர்களின் படங்களை அடுக்கி வைத்து கொண்டு ஓவிய கண்காட்சி நடத்தியதாக் ஆறுதல் பட்டு கொள்கின்றனர். உண்மையான உழைப்பு ஆத்மார்த்தமான செயலாக்கம் என்பதை காண்பது அரிதிலும் அரிது என எங்கள் ஊரில் ஆகி விட்டது.  ஒரு இலக்கிய கூட்டம் 6 மணிக்கு என்றால் 7.30 க்கு தான் வருவார்கள்,  இப்படியாக அல்வா ஊரில் எல்லா நிகழ்வுகளும் அல்வா கொடுக்கும் நிகழ்வாகவே மாறுகின்றது.

ஒரு பக்கம் கோபமாக இருந்தது! புத்தக கண்காட்சி என்று ஆசையாக சென்றும் புத்தகம் வாங்க இயலவில்லையே என்று. இன்றைய செய்தித்தாளில் பிஎஸ்னல் வளாகத்தில் நடப்பதாக செய்தி வந்திருந்தது. இன்றும் தவற விடக்கூடாது என எண்ணி காலையில் சென்று விட்டோம். அலுவலகம் வாசல் சமீபம் காணும் படியாக புத்த்கங்கள் அடுக்கி வைத்திருந்தனர்.

இருவர் மேற்பார்வையில்  4 பெஞ்சுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் விருது கிடைத்த புத்த்கங்கள் ஒன்றும் காணக் கிடைக்கவில்லை. சிறப்பாக வழக்கறிஞர் செல்வ ராஜின் "தோல்" என்ற புத்தகம் தேடிய போது கிடைக்கவில்லை.

தேடியது கிடைக்காவிடிலும் என் ஆசிரியை பணிக்கு உதவும் விதமாக திரைப்படம் தொலைகாட்சி பற்றிய புத்தகம் வாங்கிய போது  ச. மாடசாமியின் 'எனக்குரிய இடம் எங்கே? என்ற புத்தகம் கண்ணில் பட்டது. சிறு பள்ளி குழந்தையின் படம் அட்டைப்படமாக கண்ட போது குழைந்தைகள் பற்றி சொல்லியிருப்பாரோ என எண்ணி கொண்டு  ஆர்வமாக வாங்கி வந்தேன்.

ஒரு கல்லூரி ஆசிரியரின் மாணவர்களுடன் உள்ள  அனுபவக்குறிப்பாக இருந்தது. இன்றைய காலம் ஒவ்வொரு ஆசிரியரும் வாசித்து தங்கள் வகுப்பறையில் செயல் ஆற்ற வேண்டிய பல சிறந்த வழி முறைகள் பகிர்ந்திருந்தார். ஆசிரியரின் பார்வை என்று மட்டுமல்லாது ஒரு மாணவ்னின் கண்ணோட்டத்திலும் ஆசிரியப்பணியின் நோக்கம் தாக்கம் அதன் சிறப்பு சவால்களை பற்றி சுவாரசியமாக விவரித்திருந்தார். ஆசிரியர்கள் களைய வேண்டிய தலைக்கணம், அடக்குமுறை பற்றி ஆசிரியர்கள் மனம் நோகாதுவாறு சிறப்பாக எழுதியிருந்தார்.


  தினிப்பதல்ல கல்வி; 
  வசப்படுத்துவது அல்ல கல்வி.
  பங்கேற்க வைப்பது கல்வி.
  உருவாக்குவது கல்வி.


128 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் "ஒருஆசிரியனுக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூற்றுக்கணக்காய்க் கண்கள் வேண்டும். எதற்க்கு? ஒவ்வொரு மாணவனையையும் பார்ப்பதற்க்கு! கண்டுபிடிப்பதற்க்கும்! இப்படியாக பல கருத்துக்கள் குவிந்து கிடைக்கின்றன.ஒரு சிறந்த புத்தகம் கிட்டியுள்ளது என்ற மனநிறைவில் இன்றைய அக்ஷ்ய திருதி கொண்டாடி விட்டேன்!

5 comments:

  1. kadaisi thakaval!
    tharamaana thakaval!

    ReplyDelete
  2. //தினிப்பதல்ல கல்வி;
    வசப்படுத்துவது அல்ல கல்வி.
    பங்கேற்க வைப்பது கல்வி.
    உருவாக்குவது கல்வி. //

    மிக நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள். இது எனைக்கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  3. அலைந்து களைத்தாலும்
    இறுதியில் கல்வி பற்றிய நல்ல புத்தகம் அகப்பட்டது மகிழ்ச்சி்யே.

    ReplyDelete
  4. சிவ மேனகைMay 13, 2012 4:05 pm

    சிவ மேனகை அட்சர கோர்வையில் அட்சய திருதிகை கொண்டாடிய ,பேராசிரியைக்கு என் வாழ்த்துக்கள் ,,,,,,,,,என் வாழ்நாளில் என்னுடன் என்றும் கூட இருக்கும் உறவுகள் புத்தகங்கள் ,,,,

    ReplyDelete
  5. Ramji Yaho · Top Commenter · Works at OwnMay 23, 2012 10:18 pm

    பொதுவாக புத்தகக் கண்காட்சி மதி தா இந்து மேல் நிலைப் பள்ளி மைதானத்தில்/வளாகத்தில் தானே நடக்கும்.

    ReplyDelete