header-photo

பிச்சைகாரர்கள் ஈஸ்டர் கொண்டாட்டம்!

ஈஸ்டர் அன்று வகுப்பு தோழனின் சகோதரிக்கு திருமணம்.  நண்பர்களையும் நிகழ்ச்சியில் கண்டு விடலாம் என்ற ஆர்வத்தில் நானும் கலந்து கொண்டேன்.   என் வகுப்பில் 7 பெண்களும் 7 ஆண்களும் படித்தனர்.  7 வகுப்பு தோழர்களும் தமிழகத்திலுள்ள ஊடகத்துறையில் பணிபுரிகின்றனர்.  2 வருடம் கழிந்து மறுபடி சந்திக்கும் போதும் வகுப்பில் கண்ட அதே நட்புடன் அதே தோழமையுடன் பேசி மகிழ்ந்தது உண்மையிலே நல்ல ஈஸ்டர் ஆக தான் இருந்தது.

 விருந்து முடிந்து குழந்தைகள் விருப்பத்திற்க்கு இணங்க பயணத்திற்க்கு தயாரானோம்.  மகன்களுக்கு கடலில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம்,

எனக்கு  மணல் மாதா கோயில் செல்ல வேண்டும் என  ஆர்வம்!  பலமுறை நினைத்தும் பல காரணங்களால் செல்ல முடியாது போனது.   மிகவும் சிரமப்பட்டு கோயில் வளாகம் சென்றடைந்தோம்.  நினைத்து சென்ற ஒரு பிரமாண்டவும் தெரியவில்லை.   அதன் அமைப்பு கோயில் போல் அல்லாது வீடு போன்று இருந்தது.   முதல் முதலாக மாதா கோயில் இப்படியான தோற்றத்தில் காண்கின்றேன்.  

குடும்பம் குடும்பமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி விட்டு செல்கின்றனர். பலர் உணவு பொட்டலங்கள் கொண்டு வந்து அங்கு இருக்கும் எளியவர்களுக்கு கொடுக்கின்றனர். நாங்கள் சென்ற போது ஒரு பெரிய குடும்பம் வந்திருந்தது. அதில் 2  ஆண்கள் கோயில் வாசலில் நின்று  எய்ட்ஸ் வந்த பெண்கள் எப்படி இருப்பார்கள்   ஒருவன் சொல்கின்றான், பார்க்க நல்லா தான் இருப்பார்கள் ஆனால் எய்ட்ஸ் இருக்கும்.  அவர்கள் மனைவிகள் பக்தியாக கோயிலை சுற்றி சுற்றி வந்து பிரார்த்தனையிலும்,  கோயில் வளாகத்திலுள்ள  சிவப்பு மண்ணை பற்றி தேவைக்கதிமான பிரமிப்பை காட்டி தீர்க்கமாக பேசி கொண்டிருந்த போது இவர் கணவர்களுக்கு இந்த பேச்சு அவசியம் தானா என எண்ண தோன்றியது.


கோயிலை சுற்றி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது ஒரு குழு, தங்களுக்கு கிடைத்த பணத்தை பங்கிட்டு கொண்டிருந்ததை கண்டேன். அங்கு உருவான தர்க்கத்தை அந்த குழு முதியவர் தீர்த்து வைத்து கொண்டிருந்தார்.  அதில்  ஒரு முதிய பெண் வந்து என்னையும் புகைப்படம் பிடியுங்கள் என கேட்டு கொண்டார்.  அவர்கள் அங்கு பிச்சை எடுப்பவர்களாம். மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.  என்னையும் படம் பிடியுங்கள் என கேட்டு கொண்டு இன்னும் சில பெண்களும் முன் வந்தனர். 

"துட்டு தாங்க" என்ற போது என்னிடவும் கை தொலைபேசி தவிர ஒன்றுமில்லை. உங்களை போல் தான் நானும், என்றதும் மிகவும் அன்னியோன்யமாக இயல்பாக கதைக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு முதிய பெண் நீங்க என்ன ஆளு என்று கேட்டார்.  திருநெல்வேலிக்கே உருத்தான ஒரு கேள்வி என்றாலும் கூட, பிச்சைக்காரர்களிடமும்  ஜாதி எண்ணம்; என்பது புதிதாக, புதிராக தான் இருந்தது.  நான் சிறிது முந்து கொண்டு ஜாதியா!  உங்கள் ஜாதியை தெரிந்து கொள்ளலாமா பாட்டி? என்றேன் அவர் சொன்ன ஜாதியே நானும் அந்த ஜாதி தான் என வைத்து கொள்ளுங்கள் என்றதும் தாயே நீ என் அம்மா என்று இன்னும் ஐக்கியமாகி விட்டார்கள்.

சாப்பிட்டீர்களா என வினவிய போது "கண்ணு, நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும் அதுவே பிச்சை எடுக்க வந்து விட்டோம்". வீட்டிலே யாரையும் குறை சொல்லக்கூடாது மகனுக்கு 3 பிள்ளைகள் ஒரு நாள் இரு நாள் சோறு கிடைக்கும் அப்புறம் குழந்தைகளுக்கு உணவகங்களில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவார்கள் பட்டிணியாக இருப்பதற்க்கு இங்கு நல்ல வாழ்க்கை. பிறந்தாலும் பிச்சைகாரர்களாக பிறக்கலாம் என பெருமைப்பட்டு கொண்டார். 

உடனே வேறு ஒரு முதிய பெண் வந்து சொல்லுதா பாரு, ஆக்கம் கெட்டவா, என்ன  சொல்ல தாய்? 4 மகன்கள், மருமகள்களுக்கு பிடிக்கவில்லை அதான் வந்துட்டேன் என தன் சோக கதையை பகிர்கின்றார் இப்படியாக.

இன்னும் ஒரு பெண், பரவாயில்லை  இன்னிக்கு இங்கு இருப்போம் நாளைக்கு உவரி கோயில் போகனும், புதன் மணப்பாடு என வாரத்திற்க்கு 7 நாட்களும் 7 கோயில் அட்டவணை வைத்துள்ளனர்.  பொறுப்புணர்ச்சியுடன், "தாயி உங்க ஊரில் கோயில் திருவிழா ஏதும் வருதா" என விசாரித்து கொண்டனர்.  எங்க பிச்சை எடுத்தாலும் தூங்க புளியக்குடி கோயிலுக்கு போயிடுவாகளாம் அங்கு இவர்கள் தங்குவதற்க்கு என்றே சத்திரம் உண்டாம் பாதுகாப்பான இடம் என்று சொல்கின்றனர்.

போலிஸ், மற்றும் குடிகாரர்களிடம் இருந்து  அவர்கள் பாதுகாப்பிற்க்கு ஒரு வயதான பெரியவர் தலைமையாக  உள்ளார். அவர் பேசும் போது ரொம்ப அவதானித்து, கவனமாகவே பேசி கொண்டார். மேலும் இந்த முதியவர்கள் வீட்டிற்க்கு பாரம் என்று பிச்சை எடுக்க வரப்பட்டாலும் தங்கள் செலவுக்கு போக வீட்டிற்க்கு கொடுத்து உதவுகின்றார்களாம். ஒரு முதிய பெண் தன் கையை காட்டினார் . திராணியாக இருக்கும் போது வயலுக்கு களை எடுக்க சென்றாராம் இப்போது கை வேலை செய்ய இயலாத அளவு வளைந்து விட்டதாம். பிச்சை எடுப்பதால் தன் தேவைக்கு மிஞ்சி கொஞ்சம் பணம் வருவதாகவும் மகள் வந்து வாங்கி செல்வாராம்.

பெரும் பகுதியானோர் முதியவார்களாகவே உள்ளனர். இரு இளம் பெண்கள் மட்டும் கூட்டத்தில்  இருந்தனர் அவரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்படிருந்தது போன்று காட்சி அளித்தார். இன்னொருவர் மகிழ்ச்சியாகவே கதைத்து கொண்டிருந்தார் அம்பை பக்கம் தேவர் தலைமையில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததாகவும் தேவர் இறந்து போனதால் தற்போதுள்ள முதியவர் தலைமையில் பிச்சை எடுப்பதாக கூறி கொண்டார்.

நானும் அவர்களிடம் கதைத்து முடித்து விடைபெற்று வந்து விட்டேன்.  இந்த சுயநலமான உலகில் நானும் அவர்களுக்கு பணம் ஏதும் கொடுக்காது ஒரு சில படங்களை மட்டும் எடுத்து ஏமாற்றி விட்டேனோ என்று தோன்றியது. மறுபடி வரும் போது உணவு பொட்டலம் கொண்டு வர வேண்டும் என மனதில் நினைத்து கொண்டேன்.

பண ஆசை பிடித்த மனிதர்கள் தங்கள் பல தலைமுறைக்கு என கொள்ளையிடும் போது இப்படியான வறியவர்க்ள் உருவாகுவதை தவிர்க்க இயலாது.  காலத்தில் கட்டாயம் என எண்ணி இவர்களையும் மனித நேயத்துடன் நோக்கி அரசு, ரேஷன் அருசி என்பதற்க்கு பதில் ரெடிமேட் உணவு கொடுக்கலாம்.  தங்குவதற்க்கு என   விடுதிகள் அமைத்து கொடுக்கலாம். கேரளாவில் பல ஊர்களில் பணக்காரர்கள் இப்படியான வறியவர்களுக்கு டோக்கன் வழியாக உணவு  கொடுப்பது உண்டு.  நெல்லையிலும் காஜா குழுமம் தினம் 200 பேருக்கு உணவு பொட்டலம் கொடுத்து வருகின்றனர். நம்முடன் நம்மை போன்று வாழ வேண்டிய மக்கள் காலத்தின் கோலத்தால் தெருவில் கொண்டு வரப்படாலும் ஒரு சாண் வயிற்க்காவது நம் கருணையை காட்ட வேண்டும்!

14 comments:

Muruganandan M.K. said...

பரிதாபமான அந்த மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
முதிர்ந்தபோதும் பாரமாக இல்லாது
உதவ முயலும் அவர்களது எண்ணம் மனதைத் தொட்டது.

Anonymous said...

வணக்கம் பாபா. நீங்களும் ஒரு திரைப்படம் எடுக்கலாம். உயிரோட்டமான உண்மைக் கதைகளைச் சொல்லும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.(கங்கைமகன்)

J.P Josephine Baba said...

Varun Prakash Paulraj · Software Engineer at Chella Software

நானும் அவர்களிடம் கதைத்து முடித்து விடைபெற்று வந்து விட்டேன். இந்த சுயநலமான உலகில் நானும் அவர்களுக்கு பணம் ஏதும் கொடுக்காது ஒரு சில படங்களை மட்டும் எடுத்து ஏமாற்றி விட்டேனோ என்று தோன்றியது.// ஆமாம் ஏமாற்றிவிட்டீர்கள்.

J.P Josephine Baba said...

ஆயிரத்தில் ஒருவன் · மேற்பார்வையாளர் at R.G POWER CONSORTIUM

(பண ஆசை பிடித்த சில மனிதர்கள் தங்கள் பல தலைமுறைக்கு என என கொள்ளையிடும் போது இப்படியான வறியவர்க்ள் உருவாகுவதை தவிர்க்க இயலாது.) நிதர்சனமான உண்மை

Seeni said...
This comment has been removed by a blog administrator.
punithavella said...
This comment has been removed by a blog administrator.
J.P Josephine Baba said...
This comment has been removed by the author.
J.P Josephine Baba said...

Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni

அடுத்தமுறை பாபா நிட்சயமாக அவர்களுக்குச் சாப்பாடும் கொடுத்து அல்வாவும் கொடுப்பார். நன்றி

J.P Josephine Baba said...

Theva Thasan

மிகவும் அழகானதும் .ஆழமானதுமான பதிவு சகோதரி..... கடந்த சில நாட்களில்தான் இலங்கையில் இருந்து வந்தேன் 1980க்கு முன் ஒரு பிச்சைக்காரரைக்கூட யாழ்ப்பாணத்தில் காண முடியாது ஆனால் இப்போது யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் பெருமளவு பிச்சைக்காரர்கள் காணப்படுகிறார்கள் ......தமிழ் மக்களின் தவறான விடுதலைப்போராட்டம் கொடுத்த பரிசு.......உங்கள் பதிவு என் தேசத்தின் நினைவை மீட்டுக்கொடுத்தது......

சி.பி.செந்தில்குமார் said...

Yosikka vaiththa post

Varun Prakash Paulraj · Software Engineer at Chella Software said...

நானும் அவர்களிடம் கதைத்து முடித்து விடைபெற்று வந்து விட்டேன். இந்த சுயநலமான உலகில் நானும் அவர்களுக்கு பணம் ஏதும் கொடுக்காது ஒரு சில படங்களை மட்டும் எடுத்து ஏமாற்றி விட்டேனோ என்று தோன்றியது.// ஆமாம் ஏமாற்றிவிட்டீர்கள்.

ஆயிரத்தில் ஒருவன் · மேற்பார்வையாளர் at R.G POWER CONSORTIUM said...

(பண ஆசை பிடித்த சில மனிதர்கள் தங்கள் பல தலைமுறைக்கு என என கொள்ளையிடும் போது இப்படியான வறியவர்க்ள் உருவாகுவதை தவிர்க்க இயலாது.) நிதர்சனமான உண்மை

Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni said...

அடுத்தமுறை பாபா நிட்சயமாக அவர்களுக்குச் சாப்பாடும் கொடுத்து அல்வாவும் கொடுப்பார். நன்றி

Theva Thasan said...

மிகவும் அழகானதும் .ஆழமானதுமான பதிவு சகோதரி..... கடந்த சில நாட்களில்தான் இலங்கையில் இருந்து வந்தேன் 1980க்கு முன் ஒரு பிச்சைக்காரரைக்கூட யாழ்ப்பாணத்தில் காண முடியாது ஆனால் இப்போது யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் பெருமளவு பிச்சைக்காரர்கள் காணப்படுகிறார்கள் ............உங்கள் பதிவு என் தேசத்தின் நினைவை மீட்டுக்கொடுத்தது.

Post Comment

Post a Comment