28 Feb 2012

பொய்கள் உரைக்கும் ஊடகங்கள்!


மக்களுக்கு செய்தி, தகவல்கள் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு நல்கிய ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் பயம், பொய்கள் பரப்புவதில் மும்முரமாக செயல் பட்டுகொண்டிருக்கின்றது. தமிழ் பத்திரிக்கையில், பத்திரிகை தர்மம் என்பது  உண்டு என பலரால் புகழப்பட்ட தின மணி பத்திக்கை செய்திகள் பொய்களின் அணிவகுப்பாகவே உள்ளது .

தலையங்கம் என எழுதும் தலைமை ஆசிரியர், திடீர் என உணர்ச்சி வசப்பட்டு எது எதையோ எழுதி கொண்டு வருகின்றார்.  செய்திகளள விட இந்த காமடி பீஸ் எழுத்தை தேடி படிப்பது இன்னும் சுவாரசியமே.  மாணவன் ஆசிரியை கொலை செய்தி மறு நாள் “இறைவா எங்கே போகின்றோம் “ inamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=551168&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்:இறைவா, எங்கே போகிறோம்?என்ற தலையங்கத்தில் கண்ணீர் விட்டு உணர்ச்சிவசப்பட்டு  எழுதிய பத்திரிகை ஆசிரியர் சில கதைகள் சொல்லி புலைம்பியிருந்தார். அதில் ஒன்று மாணவர்கள் கெடாது இருக்க கடவுள் பயமே ஒன்றே வழி என்று சொல்லி விட்டு திடீர் என சாமியார்கள் மேல் சந்தேகம் வந்ததும் ஹாஜியார்,  பாதிரியார் என அனைவரையும் ஒரே குட்டைக்குள் இறக்கி விட்டு கதை கதையாக  கோள் சொன்னவர்  உண்மையான காரண காரணங்கள் பற்றி அலசாது முடித்து விட்டார். ஆனால் அதே வாரம்  ஒரு மாணவன் ஆசிரியரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட போது பத்திரிக்கை ஆசிரியருக்கு உணர்வோ கண்ணீரோ வரவில்லை.

அடுத்தாக கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்ட போது கொள்ளையர்கள் தற்கொலை செய்து கொண்டது போல “கொள்ளையர்கள் சாவு” என முதல் பக்க செய்தியாக  வெளியிட்டது.  மட்டுமல்ல காவலர்கள் சொன்ன பொய் கதைகளை உண்மை கதை போன்று பக்கம் பக்கமாக வெளியிட்டனர். முந்தின நாள் தொலைகாட்சியில் சொன்ன செய்திகள் கூட பத்திரிக்கை செய்தியாக வந்து சேரவில்லை.  கொள்ளையர்களை பிடிக்கின்றேன் என  சமீபத்தில் குடியிருந்த  மக்களுக்கு பயமூட்டி 5 பேரை 200 பேர் சேர்ந்து எலியை அடிப்பது போல் கொடூரமாக கொல்லப்பட்டதை "சாவு” என முடித்து கொண்டது தினமணி. கொள்ளையர்கள் விடயத்தில்  5 பேரே கொன்று முடித்த பின்பு அவர்கள் முகவரி தேடும் காவலர்களையை நாம் காண்கின்றோம். போலிஸுக்கு அன்று ஏன்  அவசரம்? 5 உயிர்கள் பலியிடப்பட வேண்டும் என்ற கட்டளையா?    

இந்த நிலையில்  மத்திய அரசின் பயங்கர வாத தடுப்பு முகாம் என்ற கருத்தையும் மக்கள் நலனுக்கு தேவை என்பது போல்  எழுதி பக்கம் நிரப்பியது. http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=555372&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!

பத்திரிக்கையின் குரல் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டும், ஆனால் ஆளும் கட்சியின் ஊது குழல் போன்று அல்லது அவர்களின் கைப்பாவைகளாக செய்தி இடுவதால் என்ன நியாயம் உண்டு.    எந்த செய்தியும் தகவல்களையும் ஆழமாக பகுந்தாய்வு செய்யாது பொய்  தகவல்களை மக்களுக்கு தருவதால் பயன் இல்லை என உணர வேண்டும்.
 
எங்கள் பத்திரிகை மாணவர்களுக்கு செய்தி தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் 5-6  பொருட்களை கொடுத்து ஒரு செய்தியாக எழுதி வர கூறுவது உண்டு. அவர்களும் அவர்கள் கற்பனை வளங்களை ஒன்று திரட்டி கதை எழுதி வருவார்கள்.  அதே போன்றே கொள்ளையன் பயன்படுத்திய சிவப்பு சட்டை காய்ந்து கொண்டு இருந்ததை வைத்து அவர்கள் குடியிருப்பை நெருங்கியதாகவும் போலிஸ் கதை சொல்லினர்.

அடுத்த நாள் தலையங்கமாக என்ன செய்தி வர போகின்றது என்று காத்திருந்த போது கூடங்குளம் பற்றிய கதையை அவிழ்த்து விட்டார். ஆசிரியரின் கருத்துப்படி ஆட்சி செய்யும் அரசு முன்பே கூடங்குளம் http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=557340&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D!எதிர்ப்பாளர்களை ஒடுக்கியிருந்தால் இந்த பிரச்சனைக்கு இடம் வந்திருக்காது என்றும் அணு உலை ஆபத்து என்றால் கூட இனி ஒன்றும் செய்ய இயலாது என்றும் தங்களுக்கு வரும் லாபத்தை மனதில் கண்டு செயலாற்ற  உபதேசம் செய்தார். அதாவது பழைய கால தமிழ் சினிமா போல் கொடூரனான முரடனால் கற்பழிக்கப்படட பெண் அவனுடன் வாழ்ந்து தன் வாழ்க்கையும் கண்ணீரில் மூழ்கி, படம் முடியும் போது அவனை திருத்துவாள் அல்லது அவள் மகனை வைத்து அவன் கதையை முடிப்பாள்! 


 பத்திரிக்கைகளுக்கு சமூக பொறுப்பு வேண்டும்.  எப்படியும் வாழ வேண்டும் என்று சொல்லும்  பத்திரிக்கைகள்; மாணவர்களுக்கு மட்டும் நீட்டி முழங்கி அறிவுரை சொல்லும் போது நகப்பு மட்டுமே வரும் அதில் அர்த்தம் ஒன்றும் இல்லை….. http://adiraipost.blogspot.in/2011/02/blog-post_08.html

4 comments:

  1. உண்மைகளை நாம் உடனுக்குடன் நாம் எழுது போது அவர்களுக்கு என்ன எழுதுவது என்பது தெரியவில்லை அதனால் சம்பந்தமில்லாமல் கட்டுகதைகளை அள்ளி விடுகிறார்கள்.


    நீங்கள் சொல்ல வரும் விஷ்யங்களை மிக அழகாகவும் மிக தெளிவாகவும் எழுதி வருகீறிர்கள், சில சமயங்களில் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது..உங்களிடம் இருந்து நான் கற்று கொள்ள வேண்டியது அநேகம் . உங்களிடம் இருந்து கற்று கொள்ள ஆசை ஆனால் உங்களிடம் ஹாய் சொல்வதற்கு கூட நேரமில்லை என்பதுதான் உண்மை

    உங்களிடம் நல்ல ஜர்னலிஸ்ட்டுக்கு உள்ள திறமை ஒளிந்து இருக்கிறது ஒரு காலத்தில் நீங்கள் இந்தியாவில் புகழ் பெற்ற ஜர்னலிஸ்டுக்களில் ஒருவராக திகழப்போகிறிர்கள் என்பதில் எனக்கு சிறிது ஐயமில்லை எனக்கு.

    வாழ்த்துக்கள் ஜோஜபின் பாபா...வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. எப்பொருள் யார்யார் வாய் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

    ReplyDelete
  3. அன்புள்ள சகோதரி ஜோஸபின் http://josephinetalks.blogspot.com/ ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
  4. unmaithaan!

    neengal ezhuthiyathu!

    ReplyDelete