23 Feb 2012

என்கவுன்டர் நீதி!!!

இனி நம் இந்தியாவில் சட்டம் நீதித் துறை, சிறைச்சாலைகள்,வழக்கு ஒன்றும் தேவை வராது. குற்றம் செய்தவர்களை, குற்றம் செய்ததாக  சந்தேகிப்பவர்களை குருவியைப் போல் சுட்டு ஒரே நாளில்  வழக்கை முடித்து விடலாம்!

மனித நலம், மனித உரிமை எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டு    கொடிய முடிவுடன்  5 மனிதர்களை கொன்று வழக்கை முடித்துள்ளனர்.  இந்த என்கவுன்டர் வழியாக பல உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் உண்மை கொள்ளையர்களா அல்லது கை கூலிகளா என்பவை இனி இவர்கள் ஆவி வந்து சொல்லப்போவது இல்லை.

இதே போல் தான் கோயம்பத்தூர் பள்ளி குழந்தைகள் கொலையாளியை கொன்றும் கொலையின் பின்னனியை மக்கள் மத்தியில் வர விடாது செய்தனர்.

ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களுக்கு;   அவர்கள் நியாயம் கதைக்க இடம் கொடுத்த போது இவர்கள் வெளி மாநிலத்தவர்கள் என்பதால் யார் என்றே கேள்வி இல்லாது கொல்லப்பட்டார்களா . அல்லது     இந்தியாவில் பிறந்த சாதாரண மனித உயிருக்கு  தான் விலை இல்லாது ஆகி விட்டதா? குற்றம் என்னவாகினும் குற்றம் விசாரிக்கப்படாது மனிதனை மனிதர்கள் வேட்டையாடியது நியாயமல்ல, நீதியுமல்ல!

  

7 comments:

  1. நியாயமான சந்தேகம்.
    பண்ணிய கேடுகளை
    மூடி மறைக்கும் கைங்கரியங்கள்
    அரங்கேறுகின்றன.

    ReplyDelete
  2. Paavathin sambalam maranam.... Padichiruppingalla apram enna madam :(

    ReplyDelete
  3. //ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களுக்கு; அவர்கள் நியாயம் கதைக்க இடம் கொடுத்த போது//

    ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களையும் என் கவுண்டரில் போட்டுதள்ளினால் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்.அப்போது இந்த செயலை பாரட்டலாம்.

    ReplyDelete
  4. பாவத்தின் சம்பளம் மரணமாவது சுப்பனுக்கும் குப்பனுக்கும் மட்டும் தான்! அதுவே வருந்ததக்கது.

    ReplyDelete
  5. எவ்வளவோ குற்றவாளிகள் வெள்ளைவேட்டிகளோடு வெளியில்தான் திரிகிறார்கள்.பாவப்பட்டவர்கள் மட்டுமே அகப்பட்டுக்கொள்கிறார்கள் !

    ReplyDelete
  6. கொலை,மேலும் கொலைகள் கொள்ளைனு நடக்க அதை தடுக்கதிராணி இல்லாதவர்கள்
    செய்த படுகொலை

    ReplyDelete