header-photo

தசரா ! சில வரலாறு..................


 தசரா பண்டிகை நேபாள நாட்டின்  தேசியத் திருவிழா ஆகும். ஜப்பான், சுமித்திரா போன்ற சில நாடுகளிலும் பிரமாண்டமாக  கொண்டாடுகின்றனர். இந்தியாவில் பெங்களூரில், மைசூர் ராஜாக்கள் கொண்டாடினதை நினைவூட்டும் விதமாக 10 நாட்களும் அரசு நிகழ்வாக; அரண்மனையும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து உலக மக்களே திரண்டு வந்து பார்க்கும் அளவுக்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  சாமுண்டீஸ்வரி என்ற துர்கா தேவியை யானைமேல் வைத்து பவனி வருவது தான் இங்கு  சிறப்பு.  நம் ஊரில் காளி மகிஷாசுரனை வதம் செய்ததை கொண்டாடுவது போல் அங்கு சாமுண்டீஷ்வரி மகிஷாசுரனை வதம் செய்தாக கொண்டாடுகின்றனர்.

 வட இந்தியாவில் விஜயதசமி என்ற பெயரில் சக்தியை வணங்குவது வழியாக உலகத்திலுள்ள தீமையை அழிந்து நன்மை வெற்றி பெற்றதாகவும், இருள் மறைந்து ஒளி பிறந்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது.   விஷ்ணுவின் 8 வது அவதாரமான ராமர், ராவணன் என்ற அசுரனை  (லங்கா ஆண்ட சிவபக்தனான திராவிட மன்னன்) கொன்ற நிகழ்வை நினைவு படுத்துவதாக கொண்டாடப்படுகின்றதுவிஜய தசமி என்பது 10ஆம் நாளில் கண்ட வெற்றி என்று அர்த்தம் கொள்ளப்படுவதுடன் வியாசன் என்ற கல்வியின் குருவை நினைவு கூர்ந்து கல்வி துவங்கும் நாளாகவும் கொண்டாடுகின்றனர். கேரளாவிலும் குழந்தைகளுக்கு அரிசியில் தங்கள் விரலால்ஹரிஸ்ரீஎன எழுத வைத்து கல்வி துவங்கும் நிகழ்வாக கொண்டாடுகின்றனர். சிறப்பாக கிறுஸ்தவ ஆலயங்களிலும் தங்கள் மத ஆசாரப்படி குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் நாளாக கொண்டாடுகின்றனர் விஜயதசமி என்ற தினத்தை!

 பெண்களின் அழகுணர்ச்சிக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் விதம் கொலு பொம்மைகளை கலை நயமாக பாவித்து வைப்பதுடன் மனித உறவுகளை சிறப்பாக பேணும் விதமாக நண்பர்களையும் அண்டை வீட்டுகாரர்களையும் அழைத்து   சுண்டல், பரிசு பொருடகள் கொடுத்து மகிழும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றதும் இவ்விழாவின்  சிறப்பாகும்!

ஆனால் தமிழகத்தில், சிவனின்  பாதியாம் காளி என்ற சக்தி,  மக்களை துன்புறுத்தி வந்த மஹிஷ என்ற அசுர மன்னனை வதம் செய்த நாளாகவே  தசரா கொண்டாப்படுகின்றது.  காளி இருட்டின்  கடவுள் என்பதால் முகம் உடல் என இருட்டாகவே காட்சி தருகின்றனர் பக்தரில் பெரும்வாரியனவர்கள். சக்தியின் வெளிப்பாடாம் தீயை ஏந்தி வருவதும் பறையின் ஒலியில் தன்னை மறந்து பக்தி மயக்கத்தில் ஆடி, துள்ளி செல்வதை ஒரு ஆசாரமாகவே கடை பிடிக்கின்றனர்

, காக்கா கூட எட்டி பார்க்காத கடலோர கிராமம் ஆகும் தென் தமிழகத்திலுள்ள குலசேகர பட்டிணம். குலசேகர மன்னன் வந்து வணங்கி சென்ற 300 வருடம் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோயில் இக்கடற்க்கரையில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய மன்னன் வந்து சென்ற ஊர் என்பதால்  குலசேகரபட்டிணம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகின்றது.  மன்னர் ஆட்சியில் இருந்தே இக் கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறுகின்றதாம். அமைதியான இக்கடலோர கிராமத்தில் தசரா திருவிழா நாட்களில் சுமார்  10 லட்சம் மக்கள் பக்தர்களாகவும், பார்வையாளர்களாகவும் இங்கு வந்து செல்கின்றனர்.  ஒரு காலத்தில் சிலோனுடன் வியாபாரம் பேணி வந்த துறைமுகம் இது என்பதால் சிலோன் பணத்தால் கட்டப்பட்ட அழகிய பிரமாண்ட வீடுகள் காண இயன்றது. தூத்துகுடி, பின்பு துறைமுகம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்த போது குலசேகரப்பட்டிணம் தன் பொலிவை இழந்து தற்போதைய நிலையில்  வீழ்ந்துள்ளது.

 சுதந்திர போராட்டத்தில் இந்த ஊரை சேர்ந்த பல பிரமுகர்கள் பங்கு பெற்றதாகவும் வெள்ளகார அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்க்கு  என குற்றம் சாட்டப்பட்டு கொலைமரம் அருகே போய் திரும்பி வந்த வரலாறும் இந்த ஊருக்கு உண்டுகொலை செய்யப்பட்ட வெள்ளகாரரின் கல்லறையும் இவ்வூரில் தற்போதும்  உள்ளது.   சுதந்தரத்திற்க்கு பின்பு என்ன வளர்ச்சி கண்டது என்றால் அதன் சோக முகம் மட்டுமே வெளிப்படும். பழைய வீடுகளின் அழகுடன் இன்றும், மாற்றங்கள் காணாது நிலைகொள்ளும் கிராமமே குலசேகரப்பட்டிணம்!  தமிழகத்திலுள்ள  அழகான கடலோரங்களில்  ஒன்றாகும் இது.   இஸ்லாம் இன மக்கள் இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.  இங்கு வரும் பக்தர்களுக்கு தங்கள் வீட்டு முற்றத்தில் தங்க வசதி செய்தி கொடுத்துள்ளனர் வடை, ஜூஸ் போன்ற வியாபாரவும் வீட்டு பெண்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகின்றதுஅரசு சார்பில், மக்கள் குழுமும் விழா காலங்களுக்கு  ஏற்ற  வாகனம் நிறுத்தும் பாதுகாப்பான ஏற்பாடோ, சிறப்பான முன்கருதல்களோ ஒன்றும் செய்து கொடுத்திருப்பதாக காண இயலவில்லை.  வழி நெடுக தடி கம்புடம் அச்சுறுத்தும்  பார்வையுடம் நிற்க்கும் காவலர்களை மட்டுமே காண இயன்றதுபெண் காவலர்களின் உதட்டில் எந்த அளவு நக்கல் சிரிப்பு உள்ளதோ அதே போல் கண்ணில் ஒரு கேலி பார்வையும் நிழலிடுகின்றது. மக்கள் நண்பர்களாக போலிஸ் மாற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாமோ  என்று ஒரு வித கலக்கத்துடன் கடந்து சென்றோம்!  

வழி நெடுக கடைகள் அணிவகுப்பு மட்டுமல்ல பக்தி போதையையில் வரும் பக்தர்களுடன் குடிபோதையுடன் நடமாடும் மனிதர்களையும் காணலாம்.  திருவிழாக்களில் காணும் எல்லா கேளிக்கை விளையாட்டுகள் சர்க்கஸ் என  சுவாரசியமான நிகழ்வுகள் ஒருங்கே இங்கு கண்டு களிக்கலாம். கிளிக்கூடுடன்  வரும் காலத்தை கணித்து சொல்லும் சோஸியக்காரர்கள் துவங்கி தென் தமிழக சிறப்பான தேன்குழல் மிட்டாய் வியாபாரிகள் என  சட்டியில் இருந்து உடன் எடுத்த சூடாக பண்டங்கள் வாங்கி உண்டும் மகிழலாம்!


ஆகா இரவு 8 மணி ஆகி விட்டது. மின் விளக்குகள் அங்கங்கே வெளிச்சத்துடன் நிற்க்கின்றது.  நமக்கு பக்தர்களில் தீ பந்தமே வெளிச்சத்தை அள்ளி வழங்குகின்றது.  அப்பாடா கடற்க்கரை நெருங்கி விட்டோம், இந்த கொடிய வெப்பத்திலும் மெல்லிய கடல் காற்று வந்து நம்மை அணைக்க ஆரம்பித்து விட்டது. இனி கடற்க்கரையில் என்ன நடக்கிறது என்று அடுத்த பதிவுடன் வருகின்றேன்!!!

3 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

புதிய தகவல்கள் நன்றி...!!!

Muruganandan M.K. said...

பக்தி போதையும் குடிபோதையும் சுவார்ஸம்.
தகவல்களும் புகைப்படங்களும் அருமை.

Post Comment

Post a Comment