header-photo

தென் தமிழக குலசேகரப்பட்டிணம் தசரா பண்டிகை.............திருநெல்வேலியில் குடி புகுந்த நாள் முதல் என்னை கேள்வி கேட்கும் பண்டிகையே குலசேகரபட்டிணம் தசரா!  இதில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து கோவிலுக்கு அழைத்து செல்வது தான் நெருடலான, ஒப்புறவு ஆகாத நிகழ்வாகபட்டது.  இந்த திருவிழா காலையளவில் புது பேருந்து நிலையம், ஜங்ஷன் என மக்கள் கூடும் இடம் எங்கு நோக்கினும் வேஷமிட்டு பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் காணலாம்இதில் இன்ன ஜாதி, இனம் என்றில்லாது பிச்சை எடுப்பதில் சம உரிமை கண்டுள்ள இந்த பண்டிகை என்னவெற்று அறியவே  திருச்செந்தூர் பக்கம் உள்ள குலசேகரபட்டிணம் நோக்கி சென்றோம். உடன் குடி சென்றதும் வழியோரம் ஒரு கடையில் உழுந்த வடையும் தேத்தண்ணீரும் குடித்து விட்டு நின்ற போது சாரை  சாரையாக லாரிஇரு-சக்கிர வாகனம் மற்றும் பேருந்துகளில்  மக்கள் கூட்டம் குலசேகரபட்டிணம் நோக்கி படை எடுத்து கொண்டிருந்தது!

அங்கு சில வசதிவாய்ப்பான  பெற்றோர் தங்கள் வேண்டுதலுக்கு என  பிள்ளைகளுக்கு  ரெடிமேடு முகமூடி வாங்கி அணிவித்து பக்கத்தில் சில கடைகளில் மட்டும் பிச்சை எடுக்க வைத்து  கொண்டிருந்தனர்.  கடவுளுக்கு என்னவெல்லாமோ வேண்டுதல் செய்ய இருக்கும் போது இவ்விதமான வேண்டுதல் தேவையா என என் மனம் கேட்டு கொண்டது.  இருப்பினும் பக்தி மயக்கத்தில் குடி கொள்ளும் மக்களை  திருத்த அவர்கள் சார்ந்த இந்து சகோதர்ர்களே முன் வர வேண்டும். இந்து(வேத) மதநூலில் இந்த மாதிரியான பக்தி வழக்கங்களுக்கு இடம் உண்டா என தெளிவு படுத்த வேண்டும்

லாரிகளில் மக்கள் பாட்டு இசை ஒலி எழுப்பி கொண்டு வேக..வேகமாக போய் கொண்டிருந்தனர்.   லாரியில் பேய்குரங்கு  உருவத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை நோக்கி டாடா.. காட்டி சென்று கொண்டிருந்தனர்.   உடன்குடி தொழில் அதிபர் ஒருவர் தன் செலவில் தசரா குழு ஆடி செல்ல தளம் அமைத்து கொடுத்துள்ளார், அதை காணொளியாகவும் பதிவு செய்து கொண்டிருந்தனர். தங்கள் ஆவி அடங்கும் வரை மக்கள் ஆடி கொண்டிருந்தனர்.  நிறைய ஆண்கள், பெண்கள் ஆடை அலங்காரத்துடன்  அழகு மங்கைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.  உண்மை பெண்ணை விட முன்னழுகுக்கு  வஞ்சகம் செய்யாமல் மேக்கப் இட்டு, பெண்களை விட மென்மையாக காட்ட  முகச் சாயம் பூசி பெண்களாகவே மாறி இருந்தனர்.  ஆனால் பாவாடையை மடித்து கட்டி இரு சக்கிர வாகனங்களில் பாய்ந்து செல்வது தான் வேடிக்கையாக இருந்தது.  சில நவயுக பெண்களாக வேஷம் இட்டவர்கள் பாவாடை  சட்டை, இன்னும் சிலர் ஜீன்ஸ், சுடிதார் போன்ற உடைகளும் அணிந்திருந்தனர்.  பெண்களுக்கு தான் ஆண்களாக பிறக்கவில்லையே என ஏக்கம் இருக்கும் என்றால் ஆண்களுக்கு பெண்கள் உடை-அணிகலன்கள் மேல் இந்த அளவு ஈர்ப்பா என ஆச்சரியம் கொள்ள வைத்தது.

    10 கை 10 தலையுடன் காளி, ராவணனாக வேடமிட்ட அஜானுபாகுவான பல ஆண்களை  நடந்து செல்லும் உருவம் காண்பவர்களுக்கு திகிலாக தான் இருந்தது.  ஒரு லாரியில் ஒரு ஆண் கிழிந்த; பெண்கள் உள்ளாடை தெரியும் வண்ணம் உடையணிந்து சென்றார். அதன் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்று தான் தெரியவில்லை.                                                                                                                                  கடற்கரை வந்து சேர இன்னும் சில மைலுகள் உண்டு நடந்து மட்டுமே செல்ல இயலும். நாம் வந்து சேரும் இடம் வரை என் கதைப்புகள் உங்களுடன் வந்து கொண்டே இருக்கும்! 

6 comments:

ம.வேணுதன் said...

பகிர்வுக்கு நன்றி சகோதரி.
நீங்கள் சொல்வதைப்போல இந்த பண்டிகையின் தோற்றுவாய், பின்புலம், பற்றி அறிந்தவர்கள் (ஹிந்து(வேத)மதம் புரிந்தவர்கள்) இங்கு விவாதிக்க முன்வந்தால் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிபிறக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

முற்றிலும் புது தகவலா இருக்கே ஜோஸ்....!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகள் பிச்சை எடுப்பது என்பது வெறுக்கத்தக்க விஷயமே...

Rathnavel said...

நல்ல பதிவு.
இந்த திருவிழா பற்றி தெரிந்தவர்கள் எழுதட்டும்.
நல்ல விவாதத்திற்கு வழி பிறக்கட்டும்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

சீனி said...

nalla thagaval ithu

சித்திரவீதிக்காரன் said...

நானும் கடந்த மூன்று வருடங்களாக குலசேகரப்பட்டிணம் தசரா பண்டிகைக்கு வர வேண்டுமென்று இருக்கிறேன். முடியவில்லை. இந்த வருடமாவது வர வேண்டும். உங்கள் பதிவு அருமை. பகிர்விற்கு நன்றி.

Post Comment

Post a Comment