header-photo

மரண தண்டனை தேவையா?


இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் யாவரையும் கவலை கொள்ள செய்த விடயமே மூன்று பேருக்கு  தூக்கு தண்டனை  என்ற செய்தி!  தூக்கு தண்டனை என்பது தண்டனை பெறுபவர்களுக்கா அல்லது அவர்களை நேசிப்பவர்களுக்கா என்று நம்மை கலக்கம் அடைய செய்தது கடந்த வார நிகழ்வுகள்!  ஒரு தாயின் 20 வருட கண்ணீருக்கு கிடைத்த விடை ஒரு மகனின் மரணமா? அல்லது 20 வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே  தந்தையை கண்டுள்ள  மகளின் துக்கத்தின் உச்சநிலை தான் இந்த தண்டனையோ? என்று நம்மை கலக்கம் அடைய செய்ததுபிறக்கும்   ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் உண்மையே என்று தெரிந்திருந்தும்  ஒரு மனிதனின் மரணத்தை  ஒரு சமூகம் தன் சட்டம் கொண்டு திட்டமிட்டு நிகழ்த்துவதை  ஏற்று கொள்ள இயலாத கசக்கும் உண்மை ஆகும்

 தண்டனை, என்ற பெயரிலுள்ள மனித கொலைகள் 3700 வருடங்கள் முன்பு; பாபிலோன் காலம் தொட்டே நிகழ்ந்துள்ளதை  காணலாம்.  தண்டனை என்பது ஆட்சியின் அதிகாரத்தின் ஒரு பாகமாகவே இருந்துள்ளது.  ஏதென்ஸ்  சேர்ந்த சாக்ரடீஸ் மதத்தை துவேஷித்தார் இளைஞர்கள் மனதை கெடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு B.C 399 விஷம் அல்லது நாடு கடத்தல் என்ற தண்டனை வழங்கப் பட்டது.  ஹெம்லோக் என்ற விஷத்தை  தன்  தண்டனையாக ஏற்று கொண்டு மரணத்தை தழுவியுள்ளார் அச்சிறந்த தத்துவஞானி.   5வது  நூற்றாண்டு முதற்கொண்டே  கடவுளின் சட்டம்என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ”12 கட்டளைமீறுபவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.  இதை பற்றி  பைபிளில் பல கதைகள் காணலாம்.  சிலுவையில் அறைவது, மரணம் வரை அடிப்பது, தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்வது,  அம்பு ஈட்டியால் குத்தி கொல்வது, கழுகு மரத்தில் ஏற்றுவது, பட்டிணி கிடைக்கும் சிங்க கூட்டில் இடுவது, எரியும் தீயில் தள்ளி கொலை செய்வது, கல் எறிந்து கொல்வது   என  தண்டனை என்ற பெயரில்  பல வழிகளில்  மக்களை கொலை செய்துள்ளனர்.  தமக்கு பிடிக்காதவன் வேதனையால் சாகவேண்டும் என்ற வன்முறையே இதில் ஒளிந்து கிடக்கும் உண்மை.  யேசு நாதரும், தான் சொல்லிய   கருத்துக்களுக்கு(பேச்சுரிமை) மதவாதிகளின் தூண்டுதலால் அரசியல் அதிகாரிகளால்   சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவரே

1400-1800 காலயளவில் தான் தண்டனை என்ற பெயரில் மனிதன் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள்  நடந்துள்ளது.  16ஆம்  நூற்றாண்டில், இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த ஹென்றி வில்லியம் -viii என்ற மன்னன்    72 ஆயிரம் மக்களை தண்டனை என்ற பெயரில்  கொன்றுள்ளான்.   இரண்டாம் உலக போரில் ஹிட்லர் படை யூதர்களை தோலை உரித்தும், பட்டிணி இட்டும் விதவிதமாக மனிதனை கொன்று ரசித்துள்ளது.  சமீபத்தில் ஈழப்போரில் இராசபக்சே  ராணுவம் தமிழர்களை கொன்றும் அதை படம் பிடித்து நோக்கியும் ரசித்ததை நாமும் கண்டதே.   

வரலாற்றை புரட்டி பார்த்தால் தூக்கிலிடுவது, தலையை வெட்டி கொல்வது சகஜமாக இருந்துள்ளது. 18 ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் 1830 ல் வெடித்த மக்கள் புரட்ச்சிக்கு பின்பு மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கூக்குரல் ஒலித்து கொண்டு தான் வந்துள்ளது. பின்பு தூக்கு தண்டனை என்பதை மின்சாரம் உதவி கொண்டு அல்லது  மீதேல் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை வழங்குவது என்று மாற்றினர்.  ரோமாவில் 1849லும், வெனிசூலா நாட்டில்  1883 லும், போர்ட்டுகலில் 1867லும் மரண தண்டனை மக்கள் ஆர்வலர்களால் முற்றிலும் நீக்கப்பட்டது.  உலகத்திற்கே கொடும் கொலைகள் கற்று கொடுத்த ரோமா சாம்ராஜியத்தின் பகுதியான வத்திக்கான் என்ற நாடு 1969 மரண தண்டனையை நிர்த்தி விட்டது.  சமீபத்தில் 2010 ல் கபான் நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்க முடிவு எடுத்தனர்.  பிலிப்பைன்ஸில் 1987 ல்  ரத்து செய்து விட்ட பின்பு 1993 ல் மறுபடியும் நிறுவி 2006 ல் முற்றிலும் ஒழித்து கட்டிவிட்டனர்.  பல நாடுகளுக்கு அச்சுறுத்தலும் மற்று பல நாடுகளின் கண்ணில் கரடான இஸ்ராயேலில்  1961ல் அடோல்ப் எய்ச்மேன் (Adolf Eichmaan)என்பவருக்கு மட்டுமே மரண தண்டனை விதித்து கொன்றுள்ளனர்.  அவர் 2 உலகபோரில் ஹிட்லரின் நாஜி படையில் இருந்து கொண்டு பலஆயிரம்  ஜூதர்களை துள்ள துடிக்க கொன்றவர் என்ற காரத்தால் நிறைவேற்றினர். 2006-ல் சதாம் ஹுசைனுக்கு வழங்கிய தூக்கு தண்டனை உலக அளவில் விவாதிக்கப்பட்ட ஒரு மரணமே.

நமது நாடு இந்தியாவில் 1983 உச்ச மற்றத்தின் தீர்ப்பு படி மிக அரிதான   குற்றங்களுக்கு மட்டுமே தூக்க தண்டனை என்று முடிவாகியதுகொலை, கொள்ளை, குழந்தைகள் மற்றும் தற்கொலைகளுக்கு தூண்டுபவர்களுக்கு மட்டுமே  தூக்க தண்டனை என்று கட்டாயமாக்கியுள்ளனர்.   1989 ல்   நாட்டின் ஒருமை பாட்டுக்கு  எதிரான கலவரத்தை  தூண்டுப்பவர்களுக்கும் தீவிரவாதம் மற்றும்  கவுரவ கொலைகாரர்கள், என்கவுண்டர் என்ற பெயரில் பொது மனிதர்கள் மரணத்திற்க்கு காரணமாகும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்துள்ளனர்

சுதந்திரத்திற்க்கு பின்பு நமது நாட்டில் 55 நபர்கள் மரண  தண்டனையால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அரசு கணக்கு உள்ளது. ஆனால் வெறும் 10 வருட காலையளவில் மட்டுமே 1953-1964 வரையிலும் 16 மாநிலங்களிலுமாக 1422 நபர்கள் மரண தண்டனையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று  மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் The People's Union for democratic Right(PUDR) கூக்குரல் கொடுக்கின்றது.  சுதந்திர இந்தியாவில் உலகத்திற்க்கு அஹிம்த்சை வழிகள் சொல்லி கொடுத்த மகாத்ம காந்தியின் கொலையாளி என்று சொல்லப்படும் நாதூராம் கோட்சே முதல் முதலாக 1949 ல் தூக்கிலேற்றப் பட்டார்வேலூர் சிறையில் இருந்த ஆட்டோ சங்கருக்கு 1995 ல் தூக்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.  கருணை மனுக்கள் கொடுத்து மறுதலிக்கப்பட்ட 29 பேர்களில் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3 பேர்களும் அடங்குவர்.  ராஜிவ் கொலையில் 26 மனிதர்களுக்கு தூக்க தண்டனை கொடுக்க ப்பட்டு 23 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்போது 3 பேர் மட்டும் வாழ்வா சாவா என்ற போராட்ட்த்தில் தள்ளப்பட்டு விட்டனர். இவர்களை தவிர்த்து தேவேந்தர் பால் சிங், காலிஸ்தான் போராளியும், வீரப்பனின் 4 உதவியார்கள், அமிர்தசரசிலுள்ள 3 நபர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற பிரவீண் குமார், பார்லிமென்று தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஹமத் அப்சல் குரு போன்றவர்களும் தூக்கு கயற்றின் நிழலில் வாழ்பவர்களே.  பல வருடங்களாக 29 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் நிற்கும் சூழலில் பிரதிமா பாட்டிலின் ஆட்சியில் 20 பேரின் மரணதண்டனை கருணை மனுவை முடக்கியது வழியாக 20 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. (தொடரும் )

2 comments:

Pathman said...

வழமை போல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது..தொடராகவும் உள்ளது ...தொடருங்கள் ...பாராட்டுக்கள் .ஆனால் அந்த மூவரையும் விடுதலை செய்யப் படும் வரை போராட்டம் தொடர வேண்டும் மரணதண்டனையும் முற்று முழுதாக ஒளிக்கப் படவேண்டும் .. நோர்வேயில் ஒரு பெண் மூன்று கொலை வழக்கில் கது செய்து நிரூபிக்கப் பட்டுச் சிறைக்குச் சென்று 15 வருட சிறையை அனுபவித்து விட்டு வெளியில் வந்து வேலையுடன் சதாரண வாழ்வைத் தொடங்கி விட்டார் ... மக்கள் அவரைச் சாதாரணமாகவே பார்க்கிறார்கள் ..அவர் கிட்டத்தட்ட 15 வருடச் சிறையை அனுபவித்து விட்டார் ...இந்தியா எப்போ மனிதாபிமானத்தில் முன்னேறும்??

Anonymous said...

நல்லாயிருந்தது...தொடருங்கள் ஜோஸபின் ...

Post Comment

Post a Comment