12 Aug 2011

சமச்சீர் கல்வி நிஜமா நிழலா?


சமச்சீர், சமச்சீர் என கேட்டு கேட்டு இப்போ எப்போ முடிவுக்கு வரும் என்றாகி விட்டது. ஆனால் அந்த ஆசையிலும் மண் விழுவது போல் தான் நேற்று, இன்றைய  நாளேடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகனிடம் “தம்பி  கதை புத்தகமாவது எடுத்து படியுங்க நேரத்தை  விரயப் படுத்தாதீர்கள்” என்று  சொல்லும் நிலைக்கு  பெற்றோர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

சமச்சீர் கல்வி திட்டம்,  இதன் நோக்கம் எல்லாம் நல்லதாக இருந்தாலும் ‘கழுதை பொதியில்  வாய் வைத்தது போல்’ தேவைக்கு அதிகமான அரசியல் புகுந்து நாசம் செய்து விட்டது இந்த நல் திட்டத்தை!.  தமிழகத்தில் அரசு பாடதிட்டம், மத்திய அரசு பாடதிட்டம், ஆங்கிலோ இந்தியன்,  மெட்ரிகுலேசன் என்று 4 பிரிவுகளாக இருந்ததை ஒரே திட்டத்திற்க்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆவலர்கள் சிந்தனையாளர்கள் கல்வியாளர்களால் ஆரம்பிக்கப் பட்ட திட்டம்; சமூக சிந்தனையற்ற அரசியல் வாதிகளால் இவ்விதம் வந்து நிற்க்கின்றது.  2006 ல் மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பாரதிதாசன் முன்னால் பல்கலைகழக துணைவேந்தராக இருந்த குமரன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் சமர்ப்பித்த கொடுத்த 109 பரிந்துரையில் வெறும் 4 பரிந்துரைகளை மற்றுமே ஏற்று கொண்டு சமச்சீர் கல்வி என பெயரிட்டு ஆரம்பத்த்திலே பெரிய கப்பலுக்கு ஒரு சிறு ஓட்டை இட்டு கடலுக்குள் பயணத்திற்க்கு அனுப்பியது தான் இந்த சமச்சீர் கல்வி திட்டம்!   திட்டம் 2006 ல் ஆரம்பித்தாலும் 2009 ல் சமச்சீர் கல்வி சட்டம் அமலுக்கு வந்து,   2010 ல் நடைமுறைபடுத்த பட்டுள்ளது,  அதுவும் இரண்டே இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் 6 ம் 9 ம் வகுப்புகள்.  இந்த வருடவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் பாடம் தவிர்த்து மற்று பாடப் புத்த்கங்கள் எந்த  பாட திட்டத்திலும் தேர்வு   செய்ய அனுமதி கொடுத்திருப்பது நகைப்புக்குரியதாக தான் இருக்கின்றது.http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3098

சமச்சீர் என்ற பெயருக்கு பதிலாக தமிழக பொது கல்வி என பெயரிட்டிருக்கலாம்.  சம தர்மபுரம், சமத்துவபுரம், சம பந்தி போன்றே கல்வியிலும் அரசியல் புகுத்தியிருக்க வேண்டுமா என்று கேட்க தோன்றாதில்லை.   நம் குழந்தைகள் சாற்றிதழிலும் இதே பெயர் தான் வரும் அடுத்த மாநிலங்களில் சொல்லவே தயங்கும் வார்த்தையாக இருக்கும் இது.   மேலும் ஒரு குழுவை நியமித்து கருத்து கேட்டு விட்டு அதில் 109 பரிந்துரைகளில் வெறும் 4 மட்டும் எடுத்தால் என்ன சிறப்பான பலன் கிடைக்க  போகின்றது இத்திட்டத்தால்.  பிரதான பரிந்துரைகளான பொதுபள்ளி முறை, தாய் மொழி கல்வி ஏற்று கொள்ளப்படவில்லை. இதற்க்கு காரணமாக சொல்லப்படுவது பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை என்பதாகும் . பெற்றோர் என்பவர்கள் யார் அரசு பள்ளி பெற்றோர்களா தனியார் பள்ளி பெற்றோரா? அதை பற்றி ஒரு ஆக்கபூர்வமான விவாதம் அல்லது ஓட்டெடுப்பு நடந்ததாகவும் தெரியவில்லை!  பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், ஜப்பான், ஜெர்மனி, சீனா   போன்ற நாடுகளில் தாய் மொழியில் பாடம் கற்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஆங்கில மோகம்.  அப்படியே தேவை என இருப்பினும் கேரளா மாநிலங்களில் போன்று ஆங்கில வழி, தமிழ் வழி என ஒரே பாடதிட்டத்தில் கொடுக்கலாம் தானே.  தற்போது கூட எங்கள் ஊரில் அரசு பள்ளிகளால் தமிழ், ஆங்கிலம், மலையாளம் வழி கற்பிக்கும் போது தமிழகத்தில் மட்டும் இது ஏன் சாதியப் படுவதில்லை.

பள்ளி திறக்க வேண்டியது ஜுன் 5 ஆனால் திறந்ததோ  15 தியதி தான்; புத்தகமோ இன்னும் 100 நாட்களாகியும் கொடுக்கப்படவில்லை.   இந்நாட்டு அரசியல் வாதிக்கு  வரும் தலைமுறை பற்றி  என்ன அக்கறை.  இதில் வேறு, வெற்றி எனக்கு- தோல்வி உனக்கு என்ற போட்டி வேறு.  இவர்கள் குழந்தைகள் சமச்சீர் கல்வி பள்ளியில் படிக்க போவதில்லை என்பதே உண்மை.  இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து விதியும் வந்து விட்டது  புத்தகம் கொடுக்க சொல்லி ஆனால் மோசமான பகல் கொள்ளையர்களான தனியார் பள்ளிகள் தங்கள் நிலைபாட்டை சொல்லிவிட்டனர், இரண்டு வகை புத்த்கங்களும் பாவிப்பார்களாம் பள்ளியின் பெயரை மெட்ரிக்குலேசம் என்று தான் இருக்குமாம், பள்ளி கட்டணம் மழலை பள்ளிக்கு 5ஆயிரம், 8 வகுப்பு வரை மாணவனுக்கு 15 ஆயிரம், 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு 20 ஆயிரவும், 12 வகுப்பு வரை மாணவனுக்கு 25 ஆயிரவும் வேண்டுமாம்.   இதுவெல்லாம் எப்போதோ வாங்கி விட்டனர் பெற்றோரிடம் இருந்து பள்ளி நிற்வாகத்தினர்.  8 வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சேர்க்கும் போது 15 ஆயிரம் 2வது பருவத்திற்க்கு 5,500 ரூபாய் 3 வது பருவத்திற்க்கு 4 ஆயிரம்.
மேலும்  ஒவ்வொரு பள்ளியிலும் மத்திய கல்விக் கழக பாடதிட்டம்  பள்ளி ஆரம்பிக்க அனுமதி வேண்டுமாம். கொள்ளைகாரனை திருத்த வழியில்லை போல் தான் தெரிகின்றது.  அரசு குழு அமைப்பது, புத்தகங்கள் போட்டிக்கு  அச்சிட்டு பணத்தை விரயம் பண்ணுவதற்க்கு பதில் ஊருக்கு ஊர் அரசு பள்ளி நிறுவ வேண்டியது அவசியமே. தற்போது 12 ஆயிரம் தனியார் பள்ளி உண்டு என கணக்கிலிடப் பட்டுள்ளது.  இவை யாவும் அரசு உடமையாக்க வேண்டும். அது மட்டுமே தீர்வாக முடியும்.  தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் மட்டுமல்ல பயண வசதி, கேண்டீன் வசதி, மேலும் குடி தண்ணீருக்கு கூட பணம் வசூலித்து விடுகின்றனர்.

அரசியல் அமைப்பு சாசனத்தின் 21 ம் பிரிவில் வலியுறுத்தும் படி கற்கும் உரிமை அடிப்படை உரிமை என்றும் அனைத்து 14 வயது வரையிலுமுள்ள குழந்தைகளுக்கு  தரமான இலவசமான கல்வி வழங்க வேண்டும் என்பதே.  அரசும் தனியார் நிர்வாகவும்  சேர்ந்து கூட்டு வைத்து கொண்டு உரிமையை மறுதலிப்பது வழி அரசியல் சாகனத்திற்க்கே சவால் விடுகிறது போல் அல்லவா உள்ளது.


இன்னொரு விமர்சனம் பாடபுத்தகங்கள் தரமில்லை என்பதாகும்.  சமச்சீர் கல்வி  புத்தகங்கள் 150 கல்வியாளர்களால் 200 கோடி செலவில் 9  கோடி பாடநூல்கள் 197 தலைப்புகளில் அச்சிட்டுள்ளனர். பாடபுத்தகங்களுக்கு என உழைத்தவர்களையும் கேலிக்கு உள் ஆக்குகின்றனர் என்பது தானே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் நோக்கமுள்ள பாட பகுதியை நீக்கி விட்டு பாடபுத்தகங்களை கொடுத்திருக்கலாம்.  தனியார் பள்ளிகளில் தரும் புத்தகவும் தரம் பார்த்தா கொடுக்கின்றனர்?  புத்தகம் பதிப்பாளர்களின் கமிஷன் கண்டு வாங்குகின்றனர் என்பதும் அறிந்த உண்மையே. ஒரு வேளை புத்தக்கங்கள் தரமுள்ளதாகினும் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரவும் நோக்க வேண்டியுள்ளது.  கடந்த வருடம் என் மகன் படித்த நெல்லையில் பெயர் பெற்ற பள்ளியில்  ஒரே வருடத்தில்  4 வகுப்பு ஆசிரியைகள் மாறிமாறி வந்தனர்.  கல்வியில் பட்டபடிப்பு தேற்வாகாத ஆசிரியைகளை கூட நியமித்திருந்தனர்.   தனியார் பள்ளியில் ஆசிரியைகளுக்கு 2-4 ஆயிரத்துக்குள் ஊதியம் கொடுப்பதும் மட்டுமல்லாது அவர்களை கேள்வி கேட்க இயலாத அடிமைகளாக வேலை வாங்குவதால் அவர்கள் கொள்ளும் மன அழுத்தம் குழந்தைகள் கல்வியிலும் பாதிக்கின்றது என்பதை மறக்கல் ஆகாது.

பொதுகல்வி திட்டத்தில் என்ன தான் குறைகள் இருந்தாலும் தற்போதைய தமிழக கல்வி சூழலில் ஒரு மாற்றம் நிச்சயமாக தேவையே.   மேலும் கேரளாவில் போல் அரசு சேனல் நிகழ்ச்சியாக ஒவ்வொரு பள்ளியின் செயலாக்கத்தையும் சமூகம் கேள்வி கேட்க தளம் கொடுக்க வேண்டும்.  ‘நான்’ அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவன் என்ற வேறுபாடு குழந்தைகள் மனதில் மறைய வேண்டும்.   தனியார் பள்ளி மாணவனை ஒரு அடிமையை போன்று உருவாக்குகின்றனர் போராட்ட குணம் இல்லாது வெத்து பந்தாவில் வாழும் சூழலும்  நிலவுகின்றது.  வாசிப்பு  திறன்,  நாட்டு நலனில் அக்கறை அற்றவர்களாகவே கிணற்று தவளை போல் தான் உருவாகின்றனர்.  அவர்கள் போட்டியிடும் விளையாட்டுகளில் கூட அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றாக பங்கு பெறாது இருப்பது இன்னும் கண்டனத்திற்க்கு உரியதே. 

அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.
அரசு பள்ளியிலும் ஒரு வகுப்பில் 100 -150 மாணவன் என்ற நிலை மாறி 20-30 மாணவன் என்ற நிலையில் வசதிகள் பெருக்க வேண்டும்
கல்வித் துறையை அரசியல் நோக்கமில்லாத குழு கண்காணித்து வழிநடத்தும் சூழல் உருவாக வேண்டும்

இன்று அரசு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று எல்லா தனியார் பள்ளிகளையும் அரசு உடமையாக்கி ஒரே சமூகமாக சமதர்ம சமூகமாக உருவாக்குவது தான் . மெட்ரிக்குலேசன் வந்த பின்பு மனிதமான்பு, பண்பு அன்பு எல்லாம், சிறார்கள் மத்தியில் குறைந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள்- மாணவர்களை ஆகட்டும் மாணவர்கள் தங்களுக்குள்ளும் பெயர் சொல்லி பண்பாக பழகுவதை விடுத்து ஏய்  பாய்(Ai boy!) என்று அழைக்கும் கலாச்சாரமே வளந்து வருகின்றது என்பது துயர் தரும் நிஜம் ஆகும்!!!

7 comments:

  1. சமசீர் கல்வியின் தரத்தை இனிமேலும் தரமானதாக உருவாக்கலாமே.சந்தைக்கு வந்து விட்டதல்லவா. வெளிப்படையாக தெரியும் குறைகள் களைந்து நிறைவான பாடப்புத்தகங்கள் வர வேண்டும்.

    நல்ல திட்டங்கள் எதுவுமே பயனாளிகளைச் சேர்வதில்லை.

    சீருடை வந்தது. பேதமிலா ஒரு சமுதாயம் உருவாகும் என நினைத்தோம்.ஆனால் அவர்கள் வருவது காரில்.

    இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியை அல்லது ஆசிரியர் தான் இருக்கணும்..... நடக்குமா?

    கோட்டாரில் உள்ள பள்ளி மூடும் நிலையில்... கவிமணி படித்த பள்ளி இன்று இல்லை. பல கிராமங்களில் ஆரம்பப் பள்ளி பரிதாபமான நிலையில் தான் இருக்கிறது.1948-க்கு முன்னால் பள்ளிக்கல்வியை முடித்தவர்களின் தமிழ் அறிவும் ஆங்கில அறிவும் மிகவும் அதிகமாகவே இருந்தது. மன்னன் கொண்டு வந்த கல்வி முறை அது.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆன பிறகு ... நடப்பதை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

    ReplyDelete
  2. சிந்திக்க பல கருத்துக்களைத் தந்து, சமூக நலன் கருதி எழுதி இருக்கீங்க. ஆனாலும், தனியார் பள்ளிகளை அரசாங்க உடமை ஆக்குவது, ஜனநாயக முறை இல்லையே. பிசினஸ் செய்யும் மனப்பாங்குடன் அவை தொடங்கப்பட்ட போதே, கட்டுப்பாடுகள் விதிக்காமல் - பணம் வாங்கி கொண்டு லைசன்சு கொடுத்ததில் அரசாங்கத்துக்கும் பங்கு உண்டுதானே? கல்வி அமைப்பில், ஒரு பெரிய மாறுதல் வர வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் மனதில் வர வேண்டும். எந்த பள்ளிக்கு தன் குழந்தை செல்கிறது என்பதை கூட status க்கு ஆதாரமாக நினைப்பவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தானே.

    ReplyDelete
  3. // இந்த வருடவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் பாடம் தவிர்த்து மற்று பாடப் புத்த்கங்கள் எந்த பாட திட்டத்திலும் தேர்வு செய்ய அனுமதி கொடுத்திருப்பது நகைப்புக்குரியதாக தான் இருக்கின்றது//....

    idu enna pudhu saithiyaha ulladu...
    oru payalum ithai patri vivathikkavillaiyea

    ellam vilangama pongada...

    ReplyDelete
  4. http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3098

    ReplyDelete
  5. கருத்து பகிர்வுக்கும் பின்னூட்டம் தந்தமைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. கடைசி வரி மிக முக்கியம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல,
    பள்ளிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும், கல்வி இனி தனியார் வசம் இருக்காது என்று எந்த அரசாவது முடிவெடுத்தால், அன்றிலிருந்து கல்விக் கொள்ளைகள் ஒழியும்.

    ReplyDelete