11 Jul 2011

சாதாரணமானவளின் அசாதாரணமான நாள்!!!

இந்த வருடம் சாதாரணமானவளின் இந்த  நாளை அசாதாரணமாக்கி  தந்தனர்  என் முகநூல் உறவுகள் சிறப்பாக உளவியல் மன நிபுணரும் கணிணி மென் பொருள் வடிவமைப்பாளருமான பத்மன் அண்ணா!  பத்மன் அண்ணாவின் நட்பு தாமதமாக கிடைத்தாலும் ஆழமாக என் வாழ்க்கையில் பதிந்தது.                                                                                      2 நாட்களுக்கு முன்பே அத்தான் அவரின் விருப்பமான மாடலில் சுடிதார் வாங்கி தந்து விட்டார். கலர் தான் தோற்ற கட்சி திமுகவின் கொடிக்கலர் கருப்பும் சிவப்புமாக இருந்தது. ஆனால் டிசைன் அரிதானதும் அருமையாகவும்  இருந்தது. மேலும் கடந்த மாதம் சென்ற போது எனக்கு பிடித்த கலர் அவருக்கு பிடிக்கவில்லை அவருக்கு பிடித்த மாடல் எனக்கு பிடிக்க வில்லை  ஒரு மணிநேர போராட்டத்திற்க்கு பின்பு எதற்க்கு வம்பு என்று ஒரு சேலையுடன் வந்து விட்டேன்.  இந்த முறை கடைக்குள் சென்ற போதே போன முறை எடுத்து தந்த ஆள் கண்ணில் படக் கூடாது என்று நினைத்து கொண்டேன்.
பெரிய துணிக் கடைகளில் இப்போது பெரிய சோபாக்கள் கணவர்கள் உட்கார்ந்து தூங்க, குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதியும்  அமைத்து விடுகின்றனர்.  என்னவர் கூட அம்மா மஹாராணி  நான் அங்கு சென்று இருந்து கொள்கின்றேன் நீ எடுத்த பின்பு தெரிவித்தால் போதும் பணம் கொடுத்து விடுகின்றேன் என்பார்! முதலில் வரிசை வரிசையா அடுக்கி வைக்கப்  பட்டிருக்கும் துணிகளை காணும் போது எதை எடுக்க என்ற அங்கலாயிப்பு பின்பு கிட்ட நெருங்கினால் நமக்கு பிடித்த மாடல் ஒரு மாதம் உணவு செலவாக இருக்கும் அல்லது சுடிதார் தலை பக்கம் டிசைன் நன்றாக இருந்தால் கால் பக்கம்  துணி  அந்தளவு நல்லதாக இருப்பதில்லை.  இது இரண்டும் நன்றாக அமைந்து விட்டால் இடும் ஷால் சொதப்பி விடும். எல்லாம் பரவாயில்லை என்று எடுக்க சென்றால் இதன் கலர் கண்டாங்கி கலராக உள்ளது இது எனக்கு பிடிக்கவில்லை என்ற எதிர்ப்பு குரல் நம் வலது பக்கம் இருந்து வரும்!  அவர் விரும்பாது  அல்லது துணி எடுப்பிலும் அவரை நோகடிக்க வேண்டுமா என்ற நல்ல மனதில் அவர் கை காட்டும் சுடியில் இருந்து இரண்டு தள்ளி ஏதாவது ஒன்றை எடுத்து நகழ வேண்டியது தான்.



அவருக்கு பெண்டாட்டி எந்த கூட்டத்தில் நின்றாலும் தகதகவென்று மின்னி தெரிய வேண்டும் என எண்ணும் போது எனக்கோ யாரும் விரும்பாத /யாரும் எடுக்காத மாடலாக நான் தேடுவேன்; அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கணக்கு!



சமீப நாட்களாக தோழிகளுடன் சென்று ஒரு முனிவரின் முகநூல் முற்றத்தில்  சென்று பஜனை பாடுவது  வழக்கமாக இருந்தது.  முனிவரும் பெரிய மனது கொண்டு பொறுத்து வந்ததால்; பஜனை பாட்டு, பின்பு கும்மியடியாக பரிமணித்து போனது. சுவாமிஜியும் தியானத்தில் இருந்து திடீரென விழித்தவராக அவருடைய சுவரில் ஒரு பாட்டை பதிய “அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் கடிதம்…” இதை கேட்டவுடன் இந்த குரங்குக்கு துள்ளி விளையாட ஆசை. சுவாமிஜி கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை என்று தன் குசும்பை ஆரம்பிக்க சுவாமிஜியும்  உனக்கு அந்த அருள் வாக்கு இல்லையம்மா என்று மறுவாக்கு தர அப்போ அந்த கடிதம் எங்கு சேர்ந்தது என்று எல்லா பெண் குரங்குகளும் ஒன்று சேர்ந்து கும்மியடிக்க கலியிளகிய முனிவர் ஆசிரமம் விட்டு கடற்கரை தேடி ஓடி போய் விடும் சூழல் உருவாக்கப்பட்டது.  முனிவரின் அன்பை கருணையை வேண்டுவதால்  சுவாமிஜி அடியேனின் பிழையை பொறுங்கள் என்று காலில் மண்டியிட்டு அவருக்கு மட்டும் ஒரு ரகசிய கடிதம் பிறப்பிக்கப்பட்டது. அடியேனுக்கு நாளை பிறந்த நாள் தங்களுடைய ஆசிர்வாதத்தை மறக்காமல் தந்து விடுங்கள் என்று.  மறு நாள் விடியும் முன்பே ஆசிர்வாதம் வருகின்றதா என்று காத்திருந்தாலும் சுவாமிஜி தியானத்தில் இருந்ததால் என்னமோ இன்னும் செய்தி வந்து சேரவில்லை.  அதற்க்குள் நோர்வேயிலுள்ள என் உடன்பிறவா சகோதரர் பத்மன் அண்ணா ஆளை அனுப்பி  பந்தல் கால் நட்டு பந்திக்கு ஏற்பாடு செய்து என் பிறந்த நாளுக்கான எல்லா  ஏற்பாடும் முடக்கி விட்டுள்ள  செய்தி வந்து சேர்ந்தது.


பண்பிலே சிறந்தவர் ..
படிப்பிலே உயர்ந்தவர்..
பாசத்திலே நிறைந்தவர் ..
இலங்கைத் தமிழரை ஆராய்ந்தார் ..
எமது வாழ்க்கையால் கவரப்பட்டார்…
எங்களை தனது சகோதரராக்கினார்..
அண்ணா என்னும் வார்த்தையால் அன்பூட்டும்
எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரிக்கு
யோசெபின் பாபாவுக்கு (J.P .Josephine Baba)
வாழ்வு மேலும் உயர்ந்திட ..
உங்கள் நற்சேவைகள் மேலும் பெருகிட
உங்கள் குடும்ப மகிழ்ச்சி மேலும் பெருகிட
அன்பான வாழ்த்துக்கள்…
ஆரவார வாழ்த்துக்கள் ..
மகிழ்வூட்டும் வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..


கொஞ்சம் நேரம் கொண்டு மண்டபத்திற்க்கு நண்பர்கள் வர ஆரம்பித்தனர் வருபவர்களுக்கு நன்றி வணக்கம் மகிழ்ச்சி என்று நான் கதைத்து கொண்டு இருக்கும் போதே என் சகோதரர் பத்மன் அண்ணா அவர்களுக்கு காப்பி, ஜூஸ், கேக் என பரிமாறி கொண்டிருந்தார்.  சுவாமிஜியும் தன் ஆசிர்வாதத்தை இப்படியாக “அண்ணா என்ற சொல்லைத் தன் மூச்சிற்குள் செருகிவைத்திருக்கும் பாபாவின் வழிப்போக்கருள் நானும் ஒருவன். உலகப்பந்தின் பல புள்ளிகளில் இருக்கும் நட்புக்களுக்குள் இவர் ஒரு பெரிய புள்ளி. அதனால் இவரை அடிக்கடி காண்கின்றேன். வாழ்க வளமுடன்” பதிந்து விட்டார் சிஷியைக்கு மனம் பேரானந்தம் ஆகி விட்டது.



கருத்துக்கு மறுகருத்து விருப்பத்திற்க்கு நன்றி என அந்த நாள் சூடு பிடித்தது.  மாயப் பெட்டியுடனே முழு நேரவும் போயன! அக்காள் விம் சிவ் அவர்கள் அம்பாள் ஆலயம் முழுநாள்  பூசைக்கு திறந்துள்ளது என தன் பங்கு கருத்தை பகிர்ந்து குடும்பமாக வாழ்த்து அனுப்பியிருந்தார். எதிர்பாராத நட்பு வட்டங்கள் வந்தது ஆச்சரியவும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அதில் ரஞ்சனி ராஜா,  ரஞ்சனி ஸ்ரீ போன்றோர் அடங்குவர்!  தோழி ரஞ்சனி ஸ்ரீயை பல பொழுதும் நான் செல்லும் முற்றங்களில் சந்தித்தாலும் சிறு புன் சிரிப்புடன் விலகி கொண்டோம்  அவரிடம் இருந்த வாழ்த்து பெற்ற போதுதான்  என் பார்வை அவர் மேல் இருந்தது போல் அவரும் என்னை உற்று நோக்கியுள்ளார் என்று புரிந்து கொண்டேன்.



பெரும் மதிப்பிற்க்குரிய விம் சிவ் அக்கா, தோழி பிரமிளா சுகுமார், சந்திரவதனா அக்காள், என் ஆராய்ச்சிக்கு உதவிய தோழி  கானடாவில் இருந்து வந்துள்ள தமிழ்நதி அவர்கள், தமிழக தோழியும் அக்காவுமான ரேவதி போன்ற அக்கா தோழிகள் விருந்துக்கு வந்தது  இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


என் பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய சகோதரர் பத்மன் அண்ணா, தன் எல்லா வேலைக்கும்  விடுப்பு கொடுத்து விருந்தின் எல்லா நடைவடிக்கையிலும் முழுவீச்சில் ஏற்பட்டிருந்தார்.




வாழ்க்கை போராட்டத்தில் வழி தெரியாது தவித்து நின்று அழுது கொண்டிருந்த போது, என்  கண்ணீரை துடைத்து விட்டு தன் அனுபவம் என்ற விளக்கை  தந்து வழி காட்டிய சஞ்சயன் அண்ணா மீன் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால் விருந்துக்கு வராவிட்டாலும் அவர் வீட்டு சன்னல் பக்கம் இருந்தே ‘ஹாய் செல்லம்’ என்று கைகாட்டி அருள் பொழிந்ததும் மகிழ்ச்சியே!





மதியம் சாப்பாடை கையில் எடுத்த  வேளையில் பிரான்சில் இருந்து நண்பர் “தேவாதாசன் அவர்கள் 10 மணிக்கு(பிரான்ஸ் நேரம்) அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. உங்கள் சுவரில்  தோரணத்தை கண்ட போது வந்தேன்” என்று கதைக்க ஆரம்பிக்க ½ மணி நேரம் போனதே தெரியவில்லை. பெண்களிடம் அரசியலா என்று இளக்காரமாக எண்ணும் சூழலில் பெண்கள் இன்னும் சம உரிமை பெற வேண்டியவர்கள்.  முகநூலில் தஞ்சம் அடையாது ஆக்க பூர்வமான செயலிலும் சிந்தனை செலுத்த வேண்டும் என்று என்னை எப்போதும் நினைவுறுத்துபவர் ஆண்களில் மாணிக்கம் போன்ற என் நண்பர் தேவாதாசன் அவர்கள்.





இதனிடயில் காலை  அவசரமாக கேரளாவில் இருந்து என் உடன் பிறந்த சகோதரர் ஜாண்சன் வந்து சென்றார். அவர் மனைவியும் கிளம்பியுள்ளதாகவும் வந்து சேருவார் என்றும் சொல்லி விட்டு சென்றார். தங்கை  தூத்துகுடியில் இருந்து மிகவும் அவசர அவசரமாக “அக்கா பிள்ளைகளை தூங்க வைத்து வந்துள்ளேன். எனக்கு ஐஸ்சிரீம் மட்டும் போதும்” என வந்த வேகத்தில் பறந்தார்.  என்னை பெற்ற என் பெற்றோர் பல வருடங்கள் ஆகியதால் மறந்து விட்டார்களோ அல்லது இனியும் இந்த கொண்டாட்டம் தேவையோ என்று எண்ணினார்களோ தெரியவில்லை, தம்பியிடம் கதைக்கும் போது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அம்மா பின்னால் நின்று வாழ்த்துவது மட்டும் கேட்டது!





நாகர்கோயில் சேர்ந்த அரசு அதிகாரியும் வலைப்பதிவர் சந்திப்பில் கண்டுகொண்ட நல்ல நண்பர் முருகன் தங்க சிவம், தம்பி பொன் பாண்டி, என் வகுப்பு தோழனாக இருந்த பிரகாஷ், என் ஆய்வு வழியாக சந்தித்த என் முதல் ஈழ சகோதர் கானா பிரபா அவர்கள், பாசமிகு சகோதரர் டோமினிக் சாவியோ, நண்பர் கண்ணன் சங்கர லிங்கம்,  நண்பர் குமார் குரு, நண்பர் கௌதம சின்னசாமி, என் வளர்ச்சியில் என்றும் அக்கரையுள்ள ஆனால் இதுவரையிலும் முகம் காணாத நெல்லை நண்பர் முனீஷ் குமார்,  சகோதரர் குருசாமி கனகராஜ், என் நண்பர் நடா சிவா தமிழ்க்கிறுக்கன், என் பாசத்திற்குரிய நண்பரும் சகோதருமான செல்வரஞ்சன் செல்லதம்பி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்து சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் அனுப்பி தந்த சிவகாசியின் சொந்த மகளான ஜெயா வேல் அவர்கள், பத்திரிக்கையாளர் நண்பர் கன்னியப்பன் ஜெகதீஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, கூல் ஜோய் போன்றோரும் வருகை தந்தனர். விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்த பாசமிகு  தமிழக சகோரர் சி.பி. செந்தில் குமார் 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்து அனுப்பியிருந்தார்.  தமிழ்வாசி முதல் பந்திக்கு வந்து தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
 


எனக்கு அரிய புத்தகங்கள் அனுப்பி தரும் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா அவர்கள் மனைவியார்  உமா அம்மாவுடன் வந்திருந்தார்.  என் வாசிப்பை எப்போதும் உற்சாகப் படுத்தும் மாற்று கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள்  என்னை சேர உதவும் குமரகுருபரன் அண்ணாவும் தன் வாழ்த்தை தந்து சென்றனர்.  



அன்பு கவிஞ்சி தங்கைகள் கல்பனா,  சிவமேனகை பாசக்கார தங்கை அனு, தம்பி வலைப்பதிவர் ஜெயந்து, எங்கள் துறை மாணவர் தம்பி ராம் குமார் சகோதரர் முத்து குமார், நண்பர் பேராசிரியர் சக்தி வேல் அவர்கள், நண்பர் வந்திய தேவன் சோமசுந்தரம், பத்திரிக்கையாளர் ஐயா குமரேசன் ஆசாக் அவர்கள், தோழி கிருபா, சென்னை நண்பர் சூரிய சுரேஷ் , தமிழ்க திரைப்பட பாடல் காதலர் பவல் ராஜதுரை, கார்த்திகேயன் சரவணன், நபர் செம்மலர் செல்வன், கண்ணன் சுந்தரலிங்கம், சுரேஷ் நைட்ச்கை, பfஹாட் இப்ராஹிம், சென்னை சுரேஷ் , இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையாளரும் என் ஆய்வுக்கு உதவிய என் இனிய சகோதரர் எம் ரிஷான் ஷாரிfபின் வரவும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 



சகோதரர் ஸ்ரீதரன் கனகலிங்கம், சௌதியில் இருந்து அந்தோனி சேகர், மதுரை சிதம்பரம் காசிவிஸ்வநாதன் ஐயா, நெல்லையை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் எல்.வி பாலாஜி, நண்பர் பரணீதரன், நண்பர் சிங்கப்பூர் ராஜன், என் சொந்த தேசத்தில் இருந்து தற்போது டில்லியில் பத்திரிக்கையாளராக உள்ள பால் முருகன் அவர்கள் மலையாளத்தில் வாழ்த்து அனுப்பினார். மந்திரியின் அதிகாரி செல்வகுமார், சௌந்தர் பாண்டியன், தூத்துகுடி நண்பர் சாந்தகுமார், பிசாசு குட்டி, என் எழுத்தை எப்போதும் ஊக்கப் படுத்தும் நண்பர் ஜோசப் பொன்னுதுரை அவர்கள், புன்னகை அரசி சித்திரா சாலமன், என் நெடு நாளைய நண்பரும் நெல்லையின் மகனுமான ராம்ஜி யாஹூ அவர்கள் யாவரும் வந்து சென்றது வாழ்க்கையில் மறக்க இயலாத நெகிழ்ச்சியான சம்பவமாகின!




பத்மன் அண்ணா தோட்டம் வழியாக வந்த சகோதரர் பெண்களை மதிக்கும் சந்திரன் தர்மதேவி, தோழி வனஜா வேலாயுதம் பிள்ளை, ஐயா சுந்தர குமார் கனகசுந்தரம், மீரான் மொஹதீன், மாடசாமி சன்முகசாமி, நெல்லையை சேர்ந்த மலேசியாவில் வசிக்கும் என் சகோதரர் செந்தில் சுப்பு, மனோகரா மனோகர், நண்பர் ரவிசங்கர், பாடகர் ஹரிஹரனின் விசறி நண்பர் நாகா சிவா, ரஜி ரமா, நாகரத்தினம் போன்ற என் உயிரிலும் பெரும் உறவுகளான என் நண்பர்கள் வந்து சென்றனர்.


என் எழுத்தை எப்போதும்  உற்சாகப் படுத்துத்தும் இலங்கையின் பிரபல பதிவராம் பெரும் பாசத்திற்குரிய டொக்டர் சாப் M.K முருகானந்தம் அவர்கள்  என்னுடன் என்னவர் தன் மைத்துனரையும் வாழ்த்தி சென்றது மறக்க இயலாத மகிழ்வூட்டும் இன்பமகிழ்ச்சி!




ஜெயகுலராசா அவர் தோட்டத்திலுள்ள அழகிய பன்னீர் பூக்கள் அனுப்பினார். ஆசிரியர் சோ லிங்கம், நெல்லை வலைப்பதிவர் சங்கம் தலைவர் சங்கரலிங்கம் ராஜகோபால், என் பாசமிகு சகோதரர் என் ஆன்மீய வாழ்க்கையில் அக்கரையுள்ள சகோதரர் ஜெர்மெனியில் இருந்து தாவாவிஜய் அண்ணன், என் சமையல் குருவும் உலகின் பல முகங்களை பற்றி கதைக்கும்  தோழருமான பாடல் குறும்தட்டு அனுப்பி மகிழ்வித்த இங்கிலாந்திலுள்ள அன்பு நண்பர் பேட்ரிக் ஜூலியாஸ், மலேஷியாவில் இருந்து கேக்கு அனுப்பி மகிழ்வித்த தோழி ஜெயா நல்லப்பன், கவிஞர் ஐய்யப்ப மாதவன், நாகர்கோயில் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சிவராஜ மோகன், நண்பர் பத்திரிக்கையாளரும் உயர்நீதி மற்றம் வழக்கறிஞ்சருமான  சுந்தரராஜன், மலையாள கரயோர குமுதம் பத்திரிக்கையாளர் சிந்து




நல்ல நாளுமாக என் பேராசிரியர் முனைவர் கோவிந்த ராஜு அவர்கள் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்க சென்றிருந்தேன். அவர் அன்பு மனைவி கையால் இனிப்பு தேனீர் கிடைத்தது பாக்கியமாக இருந்தது.  கைகடிகாரம் பார்த்தால் 7.45 pm. ஆகா 8 மணிக்கு சுவிசில் இருந்து ஸ்ரீஅண்ணா 8 மணிக்கு வரவுள்ளாரே என்று பைக்கில் பறந்து வந்து வீடு சேர்ந்தோம். கடிகாரம் முள் தப்பலாம் நான் வாக்கு பாலிப்பவர் என்று அண்ணா 8.04 pm க்கு  காத்திரமாக வந்திருந்தார். "இவர் தான் மனித மனங்களின் உணர்வுகள் பற்றிய "ஆத்மலயம்" என்று நூலின் ஆசிரியர் Srikandarajah கங்கைமகன். என் மனதின் தோழனான ஆசானான  அண்ணாவின் கரிசனையான பாசமான அமைதியான இனிமையான வாழ்த்துக்கள் எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகள் அத்தானுக்கும் கிடைத்து.



மதிய உணவுடன் விருந்தை முடித்து கொள்ளலாம் என்று இருக்கும் தருவாயில் இனியும் நண்பர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வர இரவு டின்னரும் தயார் படுத்தி காத்திருந்தோம்.  ஜமுனாநதி நாகரத்தினம், ராணி  போன்ற தோழிகள் காலை 2.30 க்கு வந்திறங்கியவர்கள்  நடு நிசி 12மணி ஆகி விட்டது அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப. அவரை எங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்ல கூறினேன். அவர் குழந்தையை வீட்டில் விட்டு வந்து விட்டார் என்று விடைபெற்று சென்றுவிட்டார்!. 



பத்மன் அண்ணா, “போதும் அம்மா  விருந்து கொண்டாட்டங்கள் இனி நித்திரக்கு செல்லுங்கள் என உரிமையுடன் கொஞ்சம் கண்டிப்புடனே நினைவுப்படுத்தினார்”. பாசமிகு அண்ணா இன்றைய உதயம் முதல் உங்கள் தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கென நேரம், பொருள்,ஆவியும், செலவிட்டு பந்தியும் பரிமாறி விருந்துனர்களையும் வழி அனுப்பு மட்டும் என்னுடன் இவ்வளவும் நின்று நிகழ்ச்சிகளை சீறும் சிறப்புமாக நடத்திய என் பாசமிகு அண்ணா உங்களை வணங்குகின்றேன்.  அண்ணனின் அன்புக்கு அடுத்த ஜென்மத்திலாவது தங்கையாக பிறந்து கைமாறு செய்ய இயலும் என்றாக இருப்பினும் அவருக்காக ஒரு பாட்டு பாடி  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே…………….!! http://www.youtube.com/watch?v=fsKk0g9P32Qபாடி நின்றேன்.





அம்மா தான் நான் சிறு குழந்தையாக இருக்கும் போது சொல்வார்கள் உன் உள்ளம் காலில் ஒரு மச்சம் உண்டு உலகு எல்லாம் சுற்றி வருவாய் என்று இந்த பிறந்த தினத்தில் உலகில் மிக முக்கிய நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தேன் என் உடன்பிறவா சகோதரர்கள் என் அன்பு நெஞ்சங்கள் நண்பர்கள் தோழிகள், சகோதர்கள் எல்லோரையும் கண்டு வர.    நானும் இன்றய பயணக்களைப்பு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களால் வந்த அசதியில்  கண் மூடும் முன்பே தூங்கி விட்டேன். என் அன்பு பாச நெஞ்சங்களை என் கனவிலும் நினைவிலும் நீங்கள் மட்டுமே!   

13 comments:

  1. அடேங்கப்பா! பாசமலர் ரேஞ்சுக்கு போயிருக்கிறீங்களே. என்னழல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

    ReplyDelete
  2. >>அவருக்கு பெண்டாட்டி எந்த கூட்டத்தில் நின்றாலும் தகதகவென்று மின்னி தெரிய வேண்டும் என எண்ணும் போது எனக்கோ யாரும் விரும்பாத /யாரும் எடுக்காத மாடலாக நான் தேடுவேன்; அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கணக்கு


    என்ன ஒரு வித்தியாசமான காம்பினேஷன்!!

    ReplyDelete
  3. நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போன்று இருந்தது உங்கள் வர்ணிப்பு

    ReplyDelete
  4. இன்னுமொரு பிறந்தநாள் கொண்டாடியது போல் இருந்தது. குதிக்கால் மச்சம் நல்லாய் வேலை செய்யுது தான் ...

    ReplyDelete
  5. உங்க டெம்ப்ளேட் சூப்பர். இன்றைய பதிவு நச்.... மனைவியை கூட்டிட்டு துணிமணி எடுக்க கடைக்கு போனா நம்ம பாடு, பாவம்ங்க நாங்க...

    ReplyDelete
  6. உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கியவிதம் அருமை. சிறிய உலகத்தில் பெரிய மனிதர்களைச் சந்தித்து விருந்து படைத்திருக்கின்றீர்கள். உங்கள் விழாமண்டபச் சுவரில் தொங்கும் எனது படம் "கத்தரித் தோட்டத்து மத்தியில் நிற்கும் ஒருவரை ஞாபகம் ஊட்டுகிறது. எல்லாவிடையங்களையும் திறம்படக் குறியிருந்தீர்கள். விருந்தில் வயிறு நிரம்பியது.ஒன்றைமட்டும் மறைத்து விட்டீர்கள். எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். உங்களுக்கு எத்தனையாவது பிறந்துநாள் என்பதை மறைத்துவிட்டீர்கள். கண்டுபிடிக்கிறேன். அன்புடன் கங்கைமகன்.

    ReplyDelete
  7. வயது! அரை கிணர் தாண்டி விட்டேன் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  8. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. காரியம் ஆனதும் மறந்து விடு என்ற சமகாலச் சூழலில் இம்மாதிரி அரிதான நன்றி நவிலல் பதிவுகள், மனிதம் பற்றி மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது.

    ReplyDelete
  10. என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி வணக்கங்கள்.

    ReplyDelete
  11. மனிதம் தெரிகிறது.

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete