28 Jun 2011

ஒரு வடக்கன் வீர காதா! மலையாள திரைப் படம்


22 ருடங்களுக்கு முன்பு கண்ட மலையாளத் திரைப்படம் மறுபடியும் காண ஆவல் நமக்கு தான் இணைய நண்பர் உள்ளாரே.  1989 ல்  மிகவும் பேசப்பட்ட படம் இது.  நடிப்பு, திரைக்கதை, கலை இயக்கம், உடை அலங்காராம் என இந்திய அரசின்  நாலு விருதுகளை தட்டி சென்றது “ஒரு வடக்கன் வீர காதா” என்ற திரைப்படம். கதாசிரியர், துரோகியான சந்து என்ற வரலாற்று கதாபாத்திரத்தை நல்லவனாக காட்டுவது வழியாக வரலாற்றை திரித்து விட்டார் என்று கண்டனம் செய்யப் பட்டாலும் மக்களால் பெரும் அளவில் கவரப்பட்டு 250 நாட்கள் கேரளாவில் ஓடியது இந்த படம்!  மேலும் கேரளா அரசின் சிறந்த பாடகருக்கான பரிசு சித்திராவுக்கும் , நடிப்புக்கு மம்மூட்டி, கீதா, திரைக்கதை வாசுதேவன் நாயர் என 6 விருதுகளை வென்றது.


வரலாறு
 “வடக்கன் பாட்டுகள்” 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேகவர்கள் என்ற மக்களை பற்றிய வாய்-வழி மொழி நாட்டுப் புற பாடல்களை தழுவி எடுக்கப் பட்டதே இப்படம். கேரளா போர் வரலாறில் சேகவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சேகவர்கள்  என்பவர்கள் நாட்டை ஆளும் மன்னர்களுக்கு படைசேவகர்களை உருவாக்கி கொடுப்பவர்கள். மேலும் இரு குறும்நில மன்னர்களுக்கு இடையிலான தீர்க்க இயலாத சண்டையில் நம் ஊரில் நடக்கு கோழி சண்டை போல் மனிதர்களான சேகவர்கள் பயன்படுத்தி   வெற்றி தோல்வி நிர்ணயம் செய்ய இவர்கள் ஒருவரின் மரணம் துணை செய்யும். இவர்கள் பற்றி சங்ககாலத்தில் துவங்கியே சொல்லப்பட்டது என்றும் கேரளா, இலங்கை, தமிழகம் சில இடங்களளில் வாழ்ந்து வந்ததாகவும் வரலாறு சொல்கின்றது.  இவர்கள் வழி தோன்றல்களே சேர ராஜாக்கள் பரம்பரையினர் என்றும் இவர்கள் அடையாளம் கூட வில்லு என்பதும் வில்லவர்கள் என்று நம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. பின்பு பிராமணர்கள், மற்றும் திருவிதாம் கூர் ராஜாக்களின் வருகையுடன் இவர்களை சோவர்கள் என்று தரம் தாழ்த்தியதுடன் மட்டுமல்லாது  கேரளாவின் தீண்டதக்க ஜாதி என்றும் பனையேறும், கள்ளு தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.  இவர்கள் தற்போது ஈழவர்கள்  என்ற சமூதாயமாக கேரளாவில் வசித்து வருகின்றனர்.




கதைத் தளம்
இப்படத்திற்க்கு கதைத் தளமாக உள்ளது  வடக்கு கேரளாவில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற களரி பயிற்று ஆசிரியர்  கண்ணப்ப சேகவர் என்பரும்  அவருடைய மகன்கள் ஆன ஆரோமல் சேகவர், உண்ணி கண்ணனும் உண்ணியார்ச்சா என்ற  ஒரே மகளும், அவருடைய மகன் ஆரோமல் உண்ணி போன்றவர்களின் கதை ஆகும். வீரத்திற்க்கு அழகிற்க்கு பெயர்கொண்ட  உண்ணியார்ச்சையை திருமணம் முடிக்க இயலவில்லை என்ற கோபத்தால் கண்ணப்பரின் சகோதரி மகன் ‘சதியன் சந்து’ என்று அழைக்கப்பட்ட சந்துவால் ஆரோமல் சேகவர் கொலை செய்யப்பட்டார் என்றும் உண்ணியார்ச்சையின் மகன் வளர்ந்து தன் மாமாவை கொன்றவரை கொன்று பழி தீர்த்தான் என்றுமே வரலாற்று கதை!   தமிழகத்தில் துரோகத்திற்க்கு மறுபதிவாக எட்டப்பனை காட்டியது போல் சந்துவை சதியன்/துரோகி என்று முத்திரை குத்தி வைத்திருந்து கேரளா இலக்கியம் வரலாறு!  சிறு குழைந்தை விளையாட்டில் கூட ஏமாற்றிய நண்பனே ‘சதியன் சந்து’ என்று அழைத்து கேலி செய்வது உண்டு.



உண்ணியார்ச்சா என்பவள் வீரத்தின் பெண்மையின் அடையாளமாகவும் ஆரோமல் சேகவர் வீரத்தின் அடையாளமாகவும் போன்றப் பட்ட கதையை யாரும் நினைத்து பார்க்க இயலாத திசையில் எல்லாவராலும் வெறுக்கப் பட்ட சந்துவின் பார்வையில் உற்று நோக்குவதே “ஒரு வடக்கன் வீரகாதா” என்ற படத்தின் சிறப்பு.

இதே கதை தளத்தில் 1961 ல் உண்ணியார்ச்சா, 1989 ல் ஒரு வடக்கன் வீர காதா, 2002 ல் புத்தூரன் வீடு என்று மூன்று படங்கள் வந்திருந்தாலும் “ஒரு வடக்கன் வீர காதா” போன்று மக்கள் மனதில் பதிந்த படம் வேறு இல்லை.  துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்பாகவும் பரிதாபமாகவும் பார்க்க இந்த படம் வழி வகுத்தது.

தி. ஹரிஹரன் இயக்கத்தில் வந்த இந்த படம் சரித்தித்திர கதைகளை சாதாரண மக்களாலும் மாத்தி யோசிக்கவும் வைத்தது.  ரவி பாம்பே  என்ற இசையமைப்பாளரின் பாடல்கள் படத்திற்க்கு இன்னும் வலு சேர்த்தது. ஆண்கள்  பெண்களுக்கான உடை சிகை அலங்காரம் எடுத்து சொல்ல வைத்தது இப்படத்தில். http://www.youtube.com/watch?v=AVmnlQsorxc பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது கலையாகவும் காவியமாகவும் படைத்துள்ளனர்.

படத்தின் கதை
சந்து என்ற குழந்தை பெற்றோர் இருவரும் தவறிவிட்ட நிலையில்  தன் 5 வது வயதில் தன் தாய் மாமா வீட்டிற்க்கு அனாதையாக வந்து சேருகின்றான். அவன் மாமாவால் பாசமாக வளர்க்கப் பட்டாலும் ஏழ்மை, அனாதை என்ற நிலையில் தன்னுடைய மாமா மகன் ஆரோமல் சேகவரால் பெரிதும் கேலி பேச்சுக்கும் இளக்காரத்திற்க்கு உள்ளாக்க படுகின்றான் .  சேகவரின் மகள் உண்ணியார்ச்சையை பாலிய திருமணத்தால் தனக்கே என்று நம்பி கொண்டிருந்த சந்துவுக்கு , ஆரோமல் சேகவரின் வசதி படைத்தவர் நண்பன் குஞ்சு ராமனுக்கு திருமணம் முடித்து வைக்கின்றனர்.  உண்ணியார்ச்சையும் வசதி வாய்ப்பான வாழ்க்கையில் பற்று கொண்டு தன் காதலை உதறி தள்ளி விட்டு பணக்காரருக்கு மனைவி ஆக முடிவு செய்கின்றாள்.  வசதியான வாழ்க்கையாக இருப்பினும்  தன் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில்  பணக்கார கணவர் இல்லை என்று தெரிந்ததும் சந்துவை பின் வாசல் வழி தன் படுக்கை அறைக்கு அழைக்கின்றாள் வீரப் பெண் உண்ணியார்ச்சா!  கணவரால் பிடிக்கப் பட்ட உண்ணியார்ச்சா சுயநலமாக தன் மானத்தை கருதி சந்துவே தன்னை தேடி வந்ததாக பொய் பட்டம் கொடுத்து தன்னை காப்பாற்றி கொள்கின்றாள். பெண் பித்தனாக சித்திரிகரிக்கப் பட்ட சந்து அங்கிருந்து மன உளைச்சலுடன் வெளியேறுகின்றான்.http://www.youtube.com/watch?v=MvOqvpslXvM&feature=related

மனம் உடைந்த சந்து தான் விரும்பிய பெண் தான் கிடைக்க வில்லை தன்னை விரும்பிய பெண்ணையாவது மணக்கலாம் என்று பெண் கேட்க சென்றால் அப்பெண் ஆரோமலுக்கு மனைவி என்று முடிவு செய்யப்படுவது தெரிகின்றது.

இனி தன் சொந்த நிலையில் தன் தகப்பனார் வீட்டில் வாழலாம் என முடிவு எடுத்த சூழலில் புதிய ஆசானிடம் வித்தை கற்க செல்கின்றார். அங்கு ஆசானின் மகள் சந்துவின் எல்லா விடயங்கள் தெரிந்தும் அவரை முழு அன்போடு காதல் செய்கின்றார்.

இப்போது தான் கதையின் உச்சகட்டம் நெருங்குகின்றது இரு குறுநில மன்னர்களுக்கு வழக்கு முடிக்க இரு சேவகர்கள் சண்டை இட வேண்டிய சூழலில் ஒரு பக்கம் மச்சுனன் ஆன ஆரோமல் சேகவரும் மறுபக்கம் தன் குருவும் என்று இருக்கையில் தான் ஆரோமலுடன் செல்ல விரும்பா விடிலும் தன் மாமாவின் விருப்பத்திற்க்கு இணங்க, மேலும் உண்ணியார்ச்சாவின் மேல் கொண்டுள்ள பற்றால் “ஜெயித்து வந்தால் சந்துவுடன் தான் மனைவியாக வருகின்றேன்” என உண்ணியார்ச்சா கதைத்ததை நம்பி ஆரோமலுடன் துணைக்கு செல்கின்றார்.

தன் குரு போர்க்களத்தில் ஆரோமலின் நியாயமற்ற போர் யுக்தியால் வீழ்த்தப் பட்டு கொல்லப்படுகின்றார்.   தன் மச்சுனன் ஆரோமல் சேகவரோ போர் களத்தில் சரியல்லாத வாளை கொடுத்து ஏமாற்றி விட்டாய் என்று சண்டையிட அந்த சண்டையில் சேகவர் தவறுதலாக நிலைவிளக்கு மேல் விழுந்து கொல்லப் பட கொலைகுற்றம் சந்து மேல் விழுகின்றது.

வாள் சரியல்லாது போக கொல்லனுக்கு தன் குருவின் மகள் தான் காசு கொடுத்தாள் என்று அறிந்து அவளை தண்டிக்க தேடி வர அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாள்.

குருவின் மருமகளை மனைவியாக ஏற்று  ஒரு சேகவராக பற்றுக்கள் அற்று  வாழ்ந்து வரும் வேளையில் உண்ணியார்ச்சா தன் மகனையும் ஆரோமலின் மகனையும் சந்துவிடம் பழிக்கு பழி கேட்டு அனுப்பி விடுகின்றார். உண்ணியார்ச்சாவின் மகன் என்னிடம் போரிடு நானா நீயா என்று பார்ப்போம் என சொல்ல உண்ணியார்ச்சா மகன் என்று தெரிந்த மறுகணமே அவள் பேரிலுள்ள காதலால் உருகி “எனக்கு பிறக்காத மகன் நீ என்னிடம் தோற்க்க வேண்டாம் என்று சந்து தற்கொலை செய்து கொள்கின்றார்.

குருவின் மகள் ஒரு காட்சியில் சந்துவிடம் கேட்பார் “உண்ணியார்ச்சா தொடப்பம் வைத்து எத்தனை முறை அடித்து விரட்டினாலும் நீ அவளிடம்  மயங்கி கிடைக்கின்றாயே என்று”  அந்த மயக்க நிலையே சந்து என்ற நல்ல மனிதனை அழித்தது.  அவள் பெயரிலுள்ள அன்பின் தூய காதலின் பெயரால் தன்னை பலமுறை ஏமாற்றியவளாக இருந்தும் அவளை நம்பி அவள்  பின் வாசல் வழி அவள் வீட்டிற்க்கு செல்வதும்  இன்னொருவனுக்கு குழந்தை பெற போகும் அவளை அவள் விரும்பம்  தன்னை மணக்க என்று அறிந்ததும் மனைவியாக ஏற்று கொள்ள துடிப்பதும், தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்கள் மனநிலை புரிந்து கொள்ள இயலாது போவதும் வியர்ப்பு என்றாலும் காதலுக்கு கண் மட்டுமல்ல மூளையும் இல்லை என்று நிரூபித்து தன் வாழ்க்கையில் பெரும் துயரை உண்ணியார்ச்சா என்ற பெண்ணால் சந்தித்து தன் முடிவையும் தானே தேடி காதலுக்கு மரியாதை தருகின்றார்.

உண்ணியார்ச்சா என்ற கதாபாத்திரம் வழியாக பெண்கள் பூ போல் மென்மையானவள் மட்டுமல்ல  பணம், காமம், அந்தஸ்து, தங்கள் சுய லாபத்திற்க்கு, பழிவாங்கும் வெறிக்காய் ஆண்களை பகடை காய்களாக நகர்த்தும் யுக்திகளையும் பல இடங்களில் காட்சி மொழி வழியாக கோடிட்டு காட்டுகின்றனர் இப்படத்தில். மேலும் ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் முடிவதும் பெண்ணில் நின்றே என்று வலியுறுத்துகின்றனர் இப்படத்தில். அழகாக தோன்றும்    பெண்மையிலும் ஒரு சாத்தான் உண்டு என சொல்லப் படும் இப்படம் பார்த்து ரசிக்கப் பட வேண்டிய கற்று கொள்ள வேண்டிய படமே. கேரளாவில் உள்ள புன்னத்தூர் கோட்டையில் இதன் படம் பிடிப்பு நடந்துள்ளது என்பதும் ஒரு சிறப்பே.http://en.wikipedia.org/wiki/Punnathurkotta  22 வருடம் பின்னிட்ட போதும் சுவாரசியம், காதல், சண்டை காட்சிகள் என பரபரப்பு விடாது நம்மை காண தூண்டும் படம் இது!!http://mooshikan.com/component/content/article/68-watch-malayalam-old-hit-movies-online-download-/2050-oru-vadakkan-veeragatha-1989?start=2

20 comments:

  1. நீளமா இருக்கு.... அப்புறமா படிச்சுட்டு என் கருத்தை சொல்றேன். ஹே...ஹே... இப்ப எஸ்கேப்...

    ReplyDelete
  2. துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்பாகவும் பரிதாபமாகவும் பார்க்க இந்த படம் வழி வகுத்தது.>>>>>

    வரலாற்றை மாற்றிய படமா? ரைட்டு.

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை. வரலாறு, கதை களம், பட கதை, என பிரித்தெடுத்து அலசியுள்ளீர். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. இதை வாசிக்கப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது ...எப்படியும் இந்தக்கிழமைக்குள் பார்க்கிறேன் ... ஆரம்பம் ஒரு 5 நிமிடம் பார்த்தேன் ..பார்க்கலாம் போல் இருந்தது....

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வித்தியாசமான முறையில், இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலெழும் வகையில் விமர்சனத்தோடு, கூடிய படம் பற்றிய படத்தின் சிறப்பு அறிமுகத்தினையும் தந்திருக்கிறீங்க.
    படம் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete
  7. அற்புதமான பதிவு ஜோசெபின் ..நீங்கள் எழுதியதிலேயே சிறந்த பதிவு இதுதான் என்று நான் நினைக்கிறேன்.இதை கூகிள பஸ்சில் பகிர்கிறேன்.நீங்கள் அங்கு வாங்களேன்.முகப் புத்தகத்தைவிட அது பரவாயில்லை என்பது எனது கருத்து

    ReplyDelete
  8. ரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    ஆனா, பாருங்க என்னுடைய விதி அதைப் படிக்க விடமாட்டேங்குது?

    ReplyDelete
  9. கூகிள பஸ்ஸை ஆன் செய்யும் வசதி உங்கள் ஜி மெயில் அக்கவுண்டிலேயே இருக்கிறது ஜோசெபின் அங்கு சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  10. என் பதிவுக்கு வந்த நண்பர்கள் தமிழ்வாசி,பத்மன் அண்ணா, சகோதரா நிரூபன், ரத்னவேல ஐயா, DR. கந்தசாமி ஐயா,போகன் அவர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  11. விரிவான விமரிசனம்.

    ReplyDelete
  12. I saw this film many times in Asianet tv but now only I Understand the story behind this movie.Very Informative thank you

    ReplyDelete
  13. நல்ல ஆழமான பரந்த விமர்சனம்.
    வாசிக்கும் எவர்க்கும் படம் பார்க்க விருப்பம் வந்து விடும். நன்றிகள்

    ReplyDelete
  14. ஆஹா.. நீங்களும் சினிமா விமர்சனாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இருங்க படிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
  15. >>பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது கலையாகவும் காவியமாகவும் படைத்துள்ளனர்.

    குறிப்பிட்ட சில ஒளீப்பதிவாளர்களூக்கு மட்டுமே இது கை வந்த கலை

    ReplyDelete
  16. >>ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் முடிவதும் பெண்ணில் நின்றே என்று வலியுறுத்துகின்றனர் இப்படத்தில். அழகாக தோன்றும் பெண்மையிலும் ஒரு சாத்தான் உண்டு

    ஆஹா. அழகு வரிகள்.. ஒரு பெண்ணிடம் இருந்து பெண்களூக்கு எதிர்க்கருத்து

    ReplyDelete
  17. நல்ல வேளை நீங்க தமிழ்ப்படம் எல்லாம் பார்க்கறது இல்ல.. பார்த்தா விமர்சனம் பண்ணுவீங்க.. அப்புறம் எங்க கதி? ஹி ஹி கலக்கல் விமர்சனம்

    ReplyDelete
  18. வித்தியாசமா இருக்கு இந்த வலைப்பூ. இன்று முதல் நானும் பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
  19. நண்பர்களே தங்கள் அனைவரின் கருத்துக்கிற்க்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நன்றி வணக்கங்கள்!

    ReplyDelete
  20. பெண்மையில் பேதமையும்,பேய்மையும் உண்டு என்பதனை விளக்கிய விதம் அருமை...

    ReplyDelete