26 Jun 2011

செட்டிநாடு கோழி- மிளகு குழம்பு


இன்று கோழி குழம்பு செய்வோமா!   சில வீடுகளில் பள்ளி சீருடை போல் ஒரே போன்று குழம்பு வைப்பது வழக்கமாக உள்ளது. இன்று கொஞ்சம் வித்தியாசமான விதத்தில் வைப்போம். சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து உண்ண   மிகவும் சுவையான கோழி குழம்பு இது.

தேவையான பொருட்கள்:
1.கோழிக் கறி    : ¾ கி.லோ
2.பெரிய வெங்காயம்  : 3 எண்ணம்
3.பச்சை மிளகாய்     : 2
4.தக்காளி  :2
      (2,3,4 மிகவும் சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்)
5. மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்
6. குருமிளகு பொடித்து வைத்து கொள்ளவும்
7. வெள்ளப்பூடும் இஞ்சியும் அரைத்து வைத்து கொள்ளவும்
8. கொத்த மல்லி      : சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
9. கறிவேப்பிலை


முதன் முதலாக அடிப்பக்கம் கட்டியான பாத்திரம் அடுப்பில் வைய்யுங்கள். அடுப்பை பற்ற வைத்த விட்டு சமையல் எண்ணை விடுங்கள்.
கடுகு இட்டு பொரிந்து வந்தவுடன் ஒரு நுள் சிறு ஜீரகம் சேருங்கள்.
அடுத்ததாக  பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இனி பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்
அரைத்து வைத்துள்ள வெள்ளப்பூடும் இஞ்சியும் சேர்த்து வதக்கவும்
இனி மஞ்சள் பொடி வெங்காயத்தில் படாது எண்ணையில் சேர்த்து வதக்க வேண்டும்

அடுத்ததாக தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி 10 நிமிடம் நன்றாக வதங்க நேரம் கொடுங்கள்
இனி மல்லி, மிளகாய் தூள்கள் சேர்த்து கோழிக் கறியும் சேர்த்து நன்றாக வேக அனுமதியுங்கள்.
கறிவேப்பிலையை முழுதாக போடாது கைவைத்து பிய்த்து போட வேண்டும். அதுவே ருசிக்கு உதவும்.

இனி பொடித்து  வைத்துள்ள குருமிளகு சேர்த்து அலங்கரித்த மல்லி இலையும் சேர்த்து அழகாக ருசித்து சாப்பிடுங்கள்.

8 comments:

  1. "செட்டிநாடு கோழி- மிளகு குழம்பு">>>>

    சுடச்சுட... இப்பவே எனக்கு...

    ReplyDelete
  2. இப்பவே சாப்பிடணும் போல இருக்குது. ஆனா விதி சதி பண்ணுது. வீட்டம்மா சுத்த சைவம்.

    ReplyDelete
  3. ஆகா.............டாக்டர் ஐயா உங்களை நினைத்தால் பரிதாபம் தான்!

    ReplyDelete
  4. தமிழ்வாசி அனுப்பிவிட்டேன் ஸ்பீடு போஸ்டில் வந்து விடும் ....

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    ஒரு முறை வீட்டில் தயார் செய்து பார்த்து விட்டு ருசி எப்படி இருக்கிறது என்று சொல்கிறோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பர் ஷ்ர்புதீன் உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கின்றது!

    ReplyDelete
  7. good recipe! will discuss after tasting!!!

    ReplyDelete