23 Jun 2011

வலைப்பதிவர் சங்கமம்- என்ன நடந்தது?


முதல் சுற்றில் பெயரும் தங்கள் வலைப்பதிவின் பெயரும் அறிமுகப்படுத்தினர் மறு சுற்றில் ஏன் எப்படி பதிவுலகத்தில் புகுந்தோம், தாங்கள் பெறும் அனுபவங்கள் எவ்வகையானது என்ற கேள்விக்கு விடை காண்வதாக இருந்தது.
 தமிழ்மணம் வலைப்பதிவில் முதல் வரிசையிலுள்ள சி.பி செந்தில் குமார், தான் எப்படியாக முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றார் என்பதும், அவர் பதிவு உலகத்தை ஒரு போட்டியை நோக்கி நகத்துவதகவும் தெரிந்தது.  பலா பட்டறை சங்கரோ வலைப்பதிவுகளில் ஆக்க பூர்வமான நம் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு இட்டு செல்லும் தளமாகவும்  காத்திரமான பதிவுகள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  இன்னும் சில பதிவர்கள் தங்கள் வேலையின் நெருக்கத்தால் வாழ்க்கையில் சுவாரசியம் அற்று போகாது நட்பு, தொடர்பாடல் பேணவே வலைத்தளம் என்று வலியுறுத்தி முடித்தனர். வேளான்மைத்துறையில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவரும் முதல் தமிழ் வலைப்பதிவரான டொக்டர் P. கந்தசாமி மற்றவர்களின் இடையூறு இல்லாது  தங்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும் சுதந்திரமகவும் பதிய தகுந்த தளமே வலைப்பதிவு என்றும்  விவரித்தார்.  ஐயா N.ரத்தின வேல் அவர்கள் தங்கள் காணும் விடயங்களை சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை பகிர துணை புரிகின்றது என தெளிவுபடுத்தினார்.  வெடிவாள் சகதேவன் ஐயா கூறுகையில் தங்கள் ஓய்வு வயதில் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் கருத்துரையாடல்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலர் வலைப்பதிவர்களாக வலம் வர வேண்டும் என்ற தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.  தங்க சிவம் போன்றோர் அரசு அதிகாரியாக இருப்பதால் தங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் சமூகத்துடன் பங்கிட வலைப்பதிவுகள் என்பது நல்லதொரு வடிகால் என்று உரைத்தார்.  மதுரை மணிகண்டன் நான் ஒரு சின்ன சிறு வலைப்பதிவர் என்று அடையாளப்படுத்தி கொண்டாலும் அவருடைய எழுத்தின் வீரியம், மதுரை தமிழின்  அழகு எழுத்து நடை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிட்ட வில்லை என்றே உணர்ந்தேன்.  என் நிலை பாடான வலைப்பதிவுகள் என்பது சமூக்க மாற்றத்திற்க்கு பயன்பட வேண்டும் என்றும் சிறப்பாக பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை தாங்கள் காணும் உலகத்தை தாங்கள் வாழ்வில் கண்ட இழப்பை பகிர்வது வழியாக ஒரு சுவாரசியாமான உலகில் புகுந்து விட துணை புரிகின்றது என்பதை பகிர்ந்தேன். சில வலைப்பதிவர்கள் மாற்று கருத்து கொண்ட வலைப்பதிவுகள் விரும்பவில்லை என்பதும் வலைப்பதிவுகள் என்பது வெறும் பொழுது போக்கு  தான் என்ற கருத்துக்கள் என்னால் ஏற்று கொள்ள கடினமாக தான் இருந்தது.இளம் வலைப்பதிவர்களான தமிழ்வாசி, கோமாளி செல்வா, ஜெயந்து, ஜாஹிர்ஜுசைன், நாய்குட்டி கருவாளி ராமன் போன்றோர் இளம் புயலாக வலம் வந்தனர்.
  
பின்பு அரும் சுவையான உணவு குழுப்படம் எடுத்து கொண்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது. ஒரு பார்சல் அல்வா, கடலை மிட்டாய் காரம் கடலை, இன்னும் பால்கோவா போன்ற ஒரு இனிப்பு பார்சலில் தந்து வழி அனுப்பினர். இவை அனைத்தும் இலவசமாக பெறப்பட்டதும் அங்கத்தினர் ஒரு குழுவாக இணைந்த சாற்றோ இல்லாது பிரிந்ததும் வருத்தமாக இருந்தது.  வந்திருந்தவர்களின்  வலைப்பதிவுகளின் அறிமுகம் முழுமையாக பெற இயலாது இருந்ததும் மேலும் அவர்களுடைய தொடர்பு மின்னஞ்சல் முகவரி கிடைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றியது.

எனக்கு தெரிந்திருந்த வலைப்பதிவர்கள் ஆனால் அறிமுகம் இல்லாத நாறும் பூ, போகன் போன்றோரை சந்திக்க இயலவில்லையே என்ற கவலை மனதில் இருந்தது அடுத்த வலைப்பதிவர் சங்கமத்தில் சந்திக்கலாம் என்று மனதை தேற்றி கொண்டேன்.

இருப்பினும் பதிவர் சந்திப்பால் என்ன பலன், இது எதற்காக, யாருக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகள் நம் சுதந்திரத்தை பறிக்கின்றதா என்ற கேள்வி என் மனதை கிளர ஆரம்பித்து விட்டது.  அடுத்த பதிவில் அதை பற்றியே  கதைக்க வேண்டும்!!! 

20 comments:

  1. பனித்துளி சங்கரோ வலைப்பதிவுகளில் ஆக்க பூர்வமான நம் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு இட்டு செல்லும் தளமாகவும் காத்திரமான பதிவுகள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.//

    பனித்துளி சங்கர் நெல்லை வலைப்பதிவர் சந்திப்பிற்கு வரவில்லை என நினைக்கிறேன்.
    அது பலா பட்டறை சங்கர் ஆகத் தான் இருக்கும்,

    ReplyDelete
  2. நெல்லை வலைப் பதிவர் சந்திப்பினைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete
  3. உங்கள் அனைவரினதும் பதிவினைப் படிக்கையில் நெல்லைச் சந்திப்பினை மிஸ் பண்ணி விட்டேனே என்ற ஏக்கம் தான் மனதில் எழுகிறது.

    ReplyDelete
  4. ஆமாம் பலா பட்டறை சங்கர் அவர்கள் தான். என் தவறுக்கு வருந்துகின்றேன். நீங்கள் சுட்டி காட்டியமைக்கு நன்றி செலுத்துகின்றேன்.

    ReplyDelete
  5. முதல் ஆளா பந்திக்கு உக்கார்லாம்னா அதுக்கு முன்னவே,பந்தி நடந்துட்டு இருக்கு போல....ஹா ஹா ஹா.

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு...

    நல்ல எழுத்து நடை....

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. >>அவர்களுடைய தொடர்பு மின்னஞ்சல் முகவரி கிடைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றியது.

    உணவு உலகம் பிளாக்ல ஆல் பிளாக் லிங்க் இருக்கு.. அங்கே போனா மெயில் முகவரி கிடைக்கும்..

    நீங்க என்ன பேசுனீங்க?ன்னு போட்டிருகலாம்.. ஓக்கே அதுவும் நல்லது தான்.. இன்றைய என் பதிவில் நான் முந்திக்கறேன் ஹா ஹா

    ReplyDelete
  8. ஜோசபினுக்கு ஒரு ஜே ! இளம் வலைப்பதிவாளர்கள் வரிசையில் என்னை சேர்த்ததற்கு - நாய்க்குட்டி மனசு

    ReplyDelete
  9. போகன் வந்து இருந்தாரா

    என்னவோ, இன்னமும் ஒரு முழுமையான பதிவு , சந்திப்பு பற்றி வர வில்லை என்ற உணர்வே எனக்கு மிஞ்சி உள்ளது. பல பதிவுகளும் அரை குறையாக குறிப்பிட்ட சில பார்வைகளில் மட்டுமே வந்து உள்ளன

    ReplyDelete
  10. //இருப்பினும் பதிவர் சந்திப்பால் என்ன பலன், இது எதற்காக, யாருக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகள் நம் சுதந்திரத்தை பறிக்கின்றதா என்ற கேள்வி என் மனதை கிளர ஆரம்பித்து விட்டது.//
    நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.சிறு விண்ணப்பம். சிலர் முகங்காட்ட விரும்பாவிட்டால், அவர்களின் உரிமையில் நாம் தலையிடாமல் இருப்பதே நலம் என்பது என் கருத்து.அவர்கள் கருத்துக்கு மதிப்பளிப்போம்.

    ReplyDelete
  11. என்னைப் பற்றியும் கதைத்ததிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. அக்கா என்னைப்பற்றி கதைக்காம விட்டுட்டிங்க,பார்த்து செய்யுங்க.

    ReplyDelete
  13. தம்பி பொருத்தருளுங்கள். முகம் மறக்கவில்லை பெயர் தான் பதியாது போய் விட்டது. அடுத்த சந்திப்பில் இன்னும் காத்திரமாக அவதானித்து எழுதுவேன். உங்களை குறிப்பிடவில்லை என்று உங்களை மறந்து விட்டேன் என்று எண்ண வேண்டாம். உங்கள் வலைப்பதிவு வழியாக நாம் கதைப்போம்.

    ReplyDelete
  14. அன்பின் ஜோசஃபின் - சீனா சீனான்னு ஒருத்தர் மதுரையில் இருந்து வந்தாரா -அவர் ஒண்னூமே பேசலயா ? ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  15. http://adrasaka.blogspot.com/2011/06/5_24.html
    ஐயா, வந்திருந்தார் சிறப்பாக பேசினார் என் நினைவில் வந்தவை எழுதினேன். இருப்பினும் சிபிசெந்தில் குமார் போன்ற பதிவர்கள் அழகாக பதிந்துள்ளனர். பொறுத்தருளுங்கள் என் விவரம் அவ்வளவே!

    ReplyDelete
  16. http://adrasaka.blogspot.com/2011/06/5_24.html
    ஐயா, வந்திருந்தார் சிறப்பாக பேசினார் என் நினைவில் வந்தவை எழுதினேன். இருப்பினும் சிபிசெந்தில் குமார் போன்ற பதிவர்கள் அழகாக பதிந்துள்ளனர். பொறுத்தருளுங்கள் என் விவரம் அவ்வளவே!

    ReplyDelete
  17. உண்மையில் இத்தனை பதிவர்களும் ஒரே இடத்தில சந்தித்தது பெரிய விஷயம் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. உங்களது எழுத்து நடை, சொல்வழக்கு, உங்களது தமிழ் மிக நன்றாக உள்ளது கேரளாவில் பிறந்த உங்களது தமிழைப்பார்த்து பெருமையாகவும் இருக்கிறது.தமிழ் வாழ்க..வளர்க...

    ReplyDelete
  19. \\ என் நிலை பாடான வலைப்பதிவுகள் என்பது சமூக்க மாற்றத்திற்க்கு பயன்பட வேண்டும் என்றும் சிறப்பாக பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை தாங்கள் காணும் உலகத்தை தாங்கள் வாழ்வில் கண்ட இழப்பை பகிர்வது வழியாக ஒரு சுவாரசியாமான உலகில் புகுந்து விட துணை புரிகின்றது என்பதை பகிர்ந்தேன்.//
    அருமையான கருத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஜோசபின்..

    இன்றே உங்கள் பதிவை நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்வு பற்றிய இடுகைகளின் வழியாக அறிந்துகொண்டேன்.

    ReplyDelete