14 Apr 2011

விஷு- சித்திரைத் திருவிழா!!!


திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மால் கடைபிடிக்கப் படுவதும் மதம் இனம் , மொழி சார்ந்து அடையாளங்களை நிலை நாட்டவும்  மனித இனத்தின்  அடையாளமாகவும் திகழ்கின்றது.  நம் வாழ்வில் விழாக்கள் மிகவும் உணர்வு பூர்வமான தருணங்களை  விட்டு செல்கின்றது. அவ்வகையில் விஷு பண்டிகையின் பங்கு மலையாளிகளின் வாழ்க்கையில் இன்றிமையானது ஆகும்.  

கேரள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் விஷு மிகவும் பிரதானமானதாக உள்ளது.   விஷு என்ற  பண்டிகை மதம் இனம் கடந்து  மலையாளிகளின் மிகவும் விருப்மானதும் உணர்வுபூர்வமாக கொண்டாடுவதும் பல இடங்களில் வசிக்கும் அவர்களை மலையாளிகள் என்ற தனித்துவத்துடன் ஒன்றிணைப்பதுமாக இருந்து வருகின்றது.  விஷு கிரேகரியன் கலண்டர் படி மலையாள  வருடத்தின் முதல் மாதம் "மேடம்" மாதத்தின் முதல் நாள்   ஆகும்.  அவ்வருட  வெற்றி- தோல்விகள் புதுவருடத்தின் துவக்க நாளில் உள்ளடங்கி இருக்கின்றது என்ற நம்பிக்கை உள்ளதால் வருட துவக்கம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டாடப்படுகின்றதே விஷு பண்டிகை. சாதாரணமாக ஏப்ரல் 14 ம் நாள் புதுவருட நாட்களாகும்.  ஆனால் இந்த வருடம் 15 தியதியில் தான் விஷு பண்டிகை மலையாளிகளால் கொண்டாடப்படுகின்றது.    முதல் அடி அடுத்த அடிக்கு தளம் என்பதால் வருடத்தில் முதல் நாளில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் (காலை 4 க்கும் 6 க்கும் மத்தியில்)நல்லதை காண்பது வழியாக அந்த வருடத்தின் முழு  ஐசுவரியவும்  தங்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றனர் .

விஷு கொண்டாட்டத்தின் உச்சம் என்பது விஷுக் கணி காண்பது தான். கணி என்றால் மலையாள மொழியில் நாளின் முதலில் முதல் முதலாக காண்பதாகும். விஷு அன்று முதலில் காண்பதை விஷுக் கணி என்று அழைக்கின்றனர்.
விஷுவில் முதல் நாள் அன்றே வீட்டிலுள்ள முதிர் பெண் அல்லது இல்லத் தாய் விஷுக் கணிக்கு என ஏற்பாடுகள் செய்கின்றார். மலையாளிகளின்  பாரம்பரிய உருளி என்ற வெங்கல பாத்திரத்தில் நெல், பணம், தங்க நாணயம், மஞ்ச பூக்கள், மஞ்ச வாழைப்பழம்,கேரளா மக்களின் பாரம்பரிய உடை,  உடைத்த இரு முறி தேங்காவில் கப்பு போன்ற பகுதியில் தேங்காய் எண்ணெயில் திரியிட்டு தீபமிட்டு, விஷ்ணுவை பிரதிபலிக்கும் கிருஷ்ணரின் உருவப்படம் அல்லது சிலை அத்துடன் கண்ணாடியும் வைக்கின்றனர்.  விஷுவின் அன்று வீட்டிலுள்ளவர்களை அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் 4-6க்குள் எழுப்பி கண்ணை கையால் மூடி இப்பொருட்களை காணவைப்பதுடன் விஷு கொண்டாட்டம் ஆரம்பம் ஆகின்றது.  பின்பு இப்பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டும் என்பதே சம்பிரதாயமாக பின்பற்ற படுகின்றது 
 

அடுத்தது ‘விஷுக் கைநீட்டம்’ என்பதாகும்.  விஷுவன்று வீட்டிலுள்ள முதியவர்கள் வீட்டிலுள்ள எல்லோருக்கும் சிறப்பாக குழந்தைகளுக்கு கையில் பணம்  கொடுப்பதாகும். தங்கள் வீட்டிலுள்ள ஐசுவரியத்தை தன் இளைய தலைமுறைக்கு கைமாறுகின்றனர் விஷுக் கைநீட்டம் என்ற கொடுக்கல் வழி.

பின்பு பாயசத்துடன் விருந்து( மலையாளத்தில் சஃத்தியா-sadya என்று அழைக்கின்றனர்) பின்பு வெடிக் கெட்டுடன் விஷுவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  விஷு அன்று விவசாய வேலை ஆரம்பிக்கவும் செய்கின்றனர்.  

சித்திரை மாதத்தில் பூக்கும் கொன்னா என்ற பூவை இன்று விசேஷமாக பயன்படுத்தும் பூவாக உள்ளது. சூரியனின் நிறம் கொண்ட கொன்னப் பூவின் இடம் விஷுவில் இன்றிமையாயது.  கிருஷ்ணனின் ஆலய தரிசனம் வழி ஆலயவழிபாடும் நடத்துகின்றனர்.  சபரிமலை கோயில் நடையும் அன்று திறப்பது உண்டு.

கேரளாவில் விஷு என்றும் தமிழகத்தில் புத்தாண்டு அல்லது சித்திரை திருவிழா என்றும் ஒரிஸா, பஞ்சாப் ஆந்திரா போன்ற ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பகுதி சார்ந்த பெயருடன் கொண்டாடுகின்றனர்.  தமிழர்கள் கோயிலுக்கு போவது விசேஷமாக மதுரை மீனாச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொண்டாடுவது உண்டு.  தமிழகத்தில் 2008ல் சட்டசபையில் எடுத்த  தீர்மானம் படி பொங்கல் நாளை முதல் நாளாக கொண்டாடு மாறு  மக்களுக்கு பணியப்பட்டாலும் ஈழத்து தமிழர்கள், மலேசியா சிங்கப்பூர் , பாண்டிச்சேரி தமிழர்கள் என  உலக தமிழ் இன மக்கள்  சித்திரை திருநாள் அன்றே வருட பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.  விசேஷமான பிரார்த்தனைக்கு சிறந்த நேரம் என்று எடுத்து கொள்ளப்படுகின்றது.  நாமும் கொண்டாடுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.



6 comments:

  1. மிகவும் அருமையான இந்த நேரத்துக்கு அவசியமான பதிவு...நல்ல தகவல் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்... இன்னொரு சந்தேகம் இந்த உலவன் மகனுக்கு சித்திரை மாதம் பஞ்சாங்கப்படி மேசமாதம் முதலாக இருக்கிறது. இதைக்கொண்டாடுவது இந்துக்களுக்கு சிறப்பு தான் இருந்தும் இது பார்பனர்கள் போட்ட கணக்கு,கச்சிதமாகத்தான் இருக்கு.இருந்தும் உலவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மூதோர் வாக்கு அதன் படி நல்லவழிகாட்டும் நாளில் இருந்தே ஆண்டு தொடங்கினால் நன்றாகத்தானே இருக்கும்.இது கூட என் வினா தான் விடை அல்ல... :) .

    கோடையில் கையில் காசு இல்லாத நேரத்தில் கொண்டாட்டங்களை விட தை மாதம் கொண்டாடினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக இருக்கும் என்று நினைக்கிறேன்.கருணாநிதி சொல்லிட்டார்ன்னு செஞ்சிடுவோமா..என்று அவர்மேல் இருக்கும் பகையை மனசுல வைக்காம சிந்திச்சிப்பார்த்தோம்னா...ஒரு முடிவு கிடைக்கும் இது பற்றிய கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.starkarthik1@gmail.com)விசித்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. விஷு தின ஆசம்சகள்

    http://www.youtube.com/watch?v=V16l5dQrhs8

    ReplyDelete
  3. அற்புதம் என் இனிய சகோதரி

    ReplyDelete
  4. சித்திரை தின வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  5. விஷுக்கனி என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். கணி என்பது காணுதல் என்பதிலிருந்து வந்தது என்பதை அன்பு ஜோசபின் 'கதெச்சதினால் மாத்திரமே ஞான் அறிஞு. ஒருபாடு சுவாரசயமானு. ஒரு கிருத்தியாயினி என்னாலும் இந்து பண்டிகயுட வார்த்தகள் படிக்கான் வளர சந்தோஷமானு!'
    ( மலையாளம் செரிதன்னே?)
    தனிப்பட்ட கருத்து-தை என்றாலும், சித்திரை என்றாலும் மக்கள் கூட்டம்கோவில்களில் அலைமோதுவது என்னவோ ஜனவரி ஒன்று உலகப் புத்தாண்டில்தான்!-கேரளம் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.தை மாதம் என்பதில் என்ன சிறப்பு என்றால் உலகப்புத்தாண்டு-பொங்கல் பண்டிகை என்று தொடர்ச்சியான விழாக்காலமாக இருக்கும்.அவ்வளவுதான்.இதில் தலைமயிர் பிளக்குமளவுக்கு விவாதம் தேவையில்லை.
    -இரா.குமரகுருபரன்

    ReplyDelete