header-photo

வீரபாண்டிய கட்ட பொம்மன் சுதந்திர போராட்ட வீரரா?

பாஞ்சால குறிச்சி கோட்டை காண வேண்டும் என்ற பல நாள் ஆசை இந்த வாரம் நிறைவேறியது.  திருநெல்வேலியிலிருந்து புளியம் பட்டிவழியாக ஓட்டபிடாரம் கடந்து பாஞ்சாலகுறிச்சி வந்தடைந்தோம்.   வரவேற்பறையில், தலைக்கு சிறியவருக்கு 1 ரூ பெரியவருக்கு 2  ரூபாய் வசூல் செலுத்தி உள்ளே அனுமதிக்கின்றனர்.  மேலும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு புத்தகம் 25 ரூபாய்க்கும் தமிழக வரைபடம் ஒன்று 10 ரூபாய்க்கும் பெறலாம்.  “மாதிரி கோட்டை” தூரத்தில் இருந்து கண்ட போது சிவப்பு வண்ணத்தில் அழகாக காட்சி தந்தது. 
  
 கோட்டையின் இடது பக்கம் “உண்மை கோட்டையின்” எச்சம் அரசின் அகவாராய்ச்சியாளர்களால் பாதுகாக்க படுகின்றது.   அரசு ஊழியரான வழிகாட்டி கோட்டையின்  மகிமையை பற்றி கதைக்கின்றார்.  பின்பு மிக  அருகில் வந்து ஏதாவது பார்த்து தாங்க என்று கெஞ்சுகின்றார். 10 ரூபாய் தாளுடன் இடத்தை காலி செய்து அடுத்த பயணிகளை தேடி செல்கின்றார்.   கோட்டையின் மத்தியில் ஒரு வெள்ளை கல் கொண்ட ஒரு மேடையும் அது வீர பூமி எனும் அடையாளப்படுத்துகின்றனர்.   ஒரு  நாள் ராஜாவின் பணியாளர்கள் இந்த வழியாக வேட்டையாடி வந்தார்களாம் .   அந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு முயல் தன்னை துரத்திய நாயை வீரமாக எதிர்கொண்டதாம்.    இதனால் கவரப்பட்ட மன்னர் இங்கு ஒரு கோட்டை கட்ட இவ்விடத்தை தேர்வு செய்த்தாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் என்னுடைய கணிப்பு பாளையில் இருந்து நாம் பாஞ்சாலைக்குறிச்சி நோக்கி செல்லும் போது வழியெல்லாம் வரண்ட வெறும் புல் செடியும் கள்ளி செடியுமே சீமை ஒடையுமாகவே  காட்சி தருகின்றது. பாஞ்சாலகுறிச்சி நெருங்கி வருகையில் நீர் ஓட்டம், பச்சை பசேலான பகுதி காண முடிந்தது. எனக்கு என்னவோ மன்னர் இந்த வளமான பூமியை கண்டு தான் இந்த இடத்தை  தன் ஆட்சிக்கு என தேர்வு செய்திருப்பார் என்று தோன்றுகின்றது.
வெள்ளைகாரர்கள் முற்றிலும் கோட்டையை அழித்து மறுபடியும் கோட்டையை கட்டாதிருக்க ஆமணக்கு விதையை நட்டு சென்றதாகவும் தற்போது தமிழக அகவாராய்ட்ச்சி குழுவே மறுபடியும் புதுயுண்ட கோட்டையை தோண்டி கண்டதாகவும் சொல்லபடுகின்றது.   மேலும் கோட்டை ஒரு சிறு அளவு இடத்தில் தான் உள்ளது.   மன்னர் கைவீசி நடந்திருக்க இவ்விடம் இயன்றிருக்குமா எனவும் சந்தேகமாக இருந்தது.   வழிகாட்டி அதற்க்கு காரணமாக பகவர்களிடம் இருந்து தப்பிக்க குறுகலும் நெடுகலுமாக கட்டியிருந்ததாக சொன்னார்.
ஒரு வெள்ளை தரை கொண்ட மேடையில் நடன மங்கைகள் நாட்டியம் ஆடியதாகவும் கதைத்தார்.  பக்கத்தில் மஹாராணி குளித்த குளவும் அவர்கள் தங்கியிருந்த மாளிகையின் அடிப்பகுதியும் காட்டினர்.  ஒரு வேளை அந்த கால அரசிகள் சிறிய இடங்கலில் வாழ பழகி இருக்கலாமோ என்னவோ! நம் அரசியல் வாதிகள் கண்டிப்பாக கண்டு பின்பற்ற வேண்டியது தான்.  மன்னர் ஆட்சியை அழித்து அதிகாரத்தில் வந்த குடியரசு ஆட்சியின் தலைவர்களின் கல்லறைகளுக்கு கூட ஆயிரக்கணக்கில்  ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது இன்று!
மாதிரி கோட்டையாக கட்டியிருக்கும் கட்டிடம் தான் சுத்த அபத்தமாக உள்ளது.  கட்ட பொம்மரை கேலி செய்கின்றார்களா என்றும் தெரியவில்லை.   இக்கோட்டையை 1974 ல் கருணாநிதி திறந்து வைத்ததாக ஒரு கல்லில் கொத்தி வைக்க பட்டிருந்தது. கோட்டைக்குள்  ஒரு அறை நடுவில் கருப்பு கல்லிலான வீரபாண்டிய மன்னனின் சிலையும் அதன் அடியில் அவருடைய பெயரும் அதற்க்கு கீழ் வரிசையில் கருணாநிதியின் பெயரும் பொரிக்க பட்டுள்ளது.   மண்டம் கட்டியதிலும் ஒரு நோக்கம் நிறைவேறி இருப்பதையும் இப்பலகையில் இருந்தே காணலாம்.  சிலையை சுற்றி படங்களால் வரலாறு சொல்லும் சித்திரங்களும் உள்ளது.
 இம் மண்டபத்திற்குள் 100 மக்கள் ஒரே நேரம் கோட்டைக்குள் சென்று வர இயலுமா என்பது சந்தேகமே. 1000 பேர் வந்து வருடம் தோறும் திருவிழா கொண்டாடுவதாக சொல்லபடுகின்றது.    மிகவும் தாழ்ந்த கூரை இடுங்கலான பாதை காற்று புகராத அமைப்பு என கோட்டை  மூச்சடைக்கும் இடமாக தான் உள்ளது.   கட்ட பொம்மனின் தலைக்கு மேல் ஒரு ஒளி கண்ணாடி பதிப்பித்துள்ளதும் அதன் சுற்று பகுதி கீறல் கொண்டு பழுது பட்டும் காணப்படுகின்றது.  
அங்கு இருக்கும் கல் சிறப்பங்களில் பெரிய அளவிலான நத்தை கூடு கட்டி வரிசையாக இடம்பிடித்து  இருக்கின்றது.   கோட்டையை சுற்றி ஒழுங்காக பெருக்கி கூட பல மாதங்கள் ஆகி இருக்கலாம்.  புல் செடி களையுடன் அசுத்தமாக காட்சியளிக்கின்றது.  அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கண்ட இடத்தில் எல்லாம் குழந்தைகளை சிறு நீர் கழிக்க அனுமதிக்கின்றனர்.  கொடுமையிலும் கொடுமையாக வீரபாண்டியரின் உண்மை கோட்டை பற்றி வழிகாட்டி விவரித்து கொண்டு இருக்கும் போது அக்கோட்டக்கு மேல் ஒரு சிறு குழந்தை ஒன்ஸ் அடைக்கின்றது!!!
கோட்டைக்கு வலது புறம் மன்னர் வணங்கிய  ஜக்கம்மா தேவியின் ஆலயம் உள்ளது. பங்குனி உத்திரம் என்பதால் பல மக்கள் சாப்பாடு வைத்து சாமி கும்பிட  வாகனங்களுடன் குவிந்திருந்தனர்.
கோட்டையை விட்டு வெளிப்புறம் வரும் போது கோட்டை வளைவில் ‘கழிப்பறை’ என்று ஒரு பக்கவும் மறுபக்கம் ‘குடி நீர்’ ‘என்று எழுதி வைத்திருந்தனர்.  சுற்றலாத்துறையின் அழகு உணற்ச்சியை எண்ணி நாம் பெருமை பட்டு கொள்ளவேண்டியது தான்!!  மண்டபத்திற்க்குள்ளும் புகைப்படம் எடுக்கல் ஆகாது என்ற கட்டுபாடும் உள்ளது.
ஊமதுரை போன்றோரின் கல்லறை எங்கு என்று தென்படவில்லை.  ஊர் மக்கள் இருந்து கதை அடிப்பதற்க்கு என சிறு சிறு மண்டம் கட்டி வைத்துள்ளனர்.   செல்லும் வழியில் ஊமதுரை ஜக்கமாள், போன்றவர்களின் வளைவு தூண்கள் உள்ளது.   நமது தமிழக சுற்றலா பயணிகள்
கதைத்து கொண்டு, சத்தமிட்டு ஓலமிட்டு கொண்டே மண்டத்தினுள் நடமாடுகின்றனர்.   சேலைகட்டிய பெண்கள் சேலை ஒரு பக்கம், அவர்கள் ஒரு பக்கம் ஒரே கலவரமாக தங்கள் இருக்கும் சூழலை மறந்த நிலையில் நடந்து செல்கின்றனர்.  அவர்களின் குழந்தைகளும் மண்டபத்திற்க்குள் நெடுகையும் குறுகையுமாக ஓடுவதும் கத்துவதுமாக  அங்கு எழுதியிருப்பதை வாசிக்வோ சித்திரங்களை கண்டு  கருத்தை உள்வாங்கவோ அனுமதிக்காத சூழலாக இருக்கின்றது.   மேலும் கொரியன் க்ரோஸ் போன்ற புல் செடியில் மிதிக்காதீர்கள் என்று எழுதி வைத்ததையும் மீறி காலிட்டு அச்செடியை நோண்டி கூட பார்க்கின்றனர்.   பெற்றோரோ சிரித்து உற்சாகப்படுட்த்துகின்றன்ர்.   கேரளா சுற்று பயணம் தான் அப்போது நினைவில் வந்தது. திருவனந்த மிருகை சாலையில் கூட கடைபிடிக்க வேண்டிய அமைதியை கடை பிடித்து    அமைதியாகவே நடந்து கொள்வதை பார்க்கலாம்.  

மேலும் ‘மண்பம் கட்டி விட்டோம்’ என்று போக்கு காட்டும் அரசு, பள்ளி  கல்லூரி, பல்கலைகழகம் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று சிந்தித்திருந்தால் சுற்று வட்டார மக்களும் பயண்பட்டிருப்பர். கட்டபொம்முவின் வம்சா வழியர் வாழ வீடு கட்டி கொடுத்துள்ளனர். சிலர் குடியிருக்கின்றனர்; பலர் வீடு பயன்படுத்தாது கரயான் பிடித்து கிடக்கின்றது.   சில ஆண்கள் குப்பியும் தண்ணியுமாக மதுவில் கலந்திருந்தனர் உடைந்த வீடுகளின் முன்பு!!.  சுகாதாரமற்ற குடியிருப்பு, களையற்ற மக்கள் என கட்டபொம்மனின் துயரமுடிவும் அவர் வம்சத்தின் தொடர் துயரும் கண்கூடா தெரிகின்றது.
கட்டபொம்மனை இந்திய சுதந்திர தாகத்திற்க்கு வித்திட்டவர் என்ற புகழ் சூடப்பட்டிருக்கும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் படிக்கும் போது வரட்டு பிடிவாதத்தாலும் அவருடைய மந்திரி தானாபிள்ளை கண்மூடித்தனமாக நம்பியதால் வஞ்சிக்க பட்ட மன்னாகவே தெரிகின்றார்.   சுதந்திரத்திற்க்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரியவில்லை. பிரிட்டிஷாரை எதிர்த்த மைசூர் டிப்பு சுல்த்தானே எதிர்த்து போராட உதவிய  புதுகோட்டை தொண்டமானே அவர் உற்ற நண்பராக இருக்கின்றார்.   எட்டப்பன் என்ற தன் இன அரசானாலே அழிக்க பட்டவரும் தொண்டமான் என்ற நண்பனால் காட்டி கொடுக்க பட்டவருமே கட்ட பொம்மு.   தன் நாடு, வீடு நலன் எண்ணாது தன் தாய் மாமன், தம்பி, தாய் ,மனைவி பேச்சை கூட பொருட்ப்படுத்தாது கண்மூடி தனமாக குள்ளை நரி- தன்னலம் பிடித்த மந்திரி பிள்ளைக்கு துணை போனதால் அழிவையே தேடி கொண்டவரே வீரபாண்டிய கட்டபொம்மர்!!!!. சுதந்திர போராட்டதை எதனால் இவருடன் இணைத்தனர் என்பது தான் மர்மமாக உள்ளது?  அன்னிய நாட்டு பிரிடீஷாரை எதிர்த்தார் என்றதால் அவர் சுதந்திர வீரத்திற்க்கு வித்திட்டவரும் தற்கால கொள்ளைகார உள்ளூர் அரசியல் வாதிகளை எதிர்த்தால் இந்திய இறையாமைக்கு எதிராளி ஆகவும் மாற்றிவிடுகின்றது தான் அரசிய வரலாறோ?.


திரும்பி வரும் போது தூத்துகுடி வழியாக நெல்லை வந்து சேர்ந்தோம்.  தூத்துகுடியின் இயர்க்கை க்கு பங்கம் விளைவிக்கும் ஸ்டெர்லயிட்  வழியாக வந்த போது ஒரு கருப்பு புகை அப்பிரதேசம் சுற்றி ஆழ்ந்திருப்பதை காண முடிந்தது.   ஆலை பணியாளர்கள் தங்கள் உடலை மறைக்கும் உடையணிந்து  பயணிக்கின்றனர்.  மிதி வண்டியில் செல்லும் சட்டை அணியாத ஏழைகள் பாடு தான் திண்டாட்டம்.  அதன் வழியே வரும் போது கண்ணுக்கு எரிச்சலும் தொலியில் அரிப்பும் தெரிகின்றது.  குடியிருப்புகள் சாக்கடை மத்தியிலும் அலுவலங்கள், பெரிய தொழில்சாலைகள் அழகாக மிடுக்காக காட்சியளிக்கின்றது.  மனிதனின் விலையை விட தொழில்சாலைகள் விலையேற பெற்றது என்று சொல்லாது சொல்கின்றது நம் தற்போதயை சூழல்.

4 comments:

ஊரான் said...

”மேலும் ‘மண்டம் கட்டி விட்டோம்’ என்று போக்கு காட்டும் அரசு, பள்ளி கல்லூரி,பல்கலைகழகம் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று சிந்தித்திருந்தால் சுற்று வட்டார மக்களும் பயண்பட்டிருப்பர். கட்டபொம்முவின் வம்சா வழியர் வாழ வீடு கட்டி கொடுத்துள்ளனர். சிலர் குடியிருக்கின்றனர்; பலர் வீடு பயன்படுத்தாது கரயான் பிடித்து கிடக்கின்றது.சில ஆண்கள் குப்பியும் தண்ணியுமாக மதுவில் கலந்திருந்தனர்
உடைந்த வீடுகளின் முன்பு!!. சுகாதாரமற்ற குடியிருப்பு, களையற்ற மக்கள் என கட்டபொம்மனின் துயரமுடிவும் அவர் வம்சத்தின் தொடர் துயரும் கண்கூடா தெரிகின்றது.

”அன்னிய நாட்டு பிரிடீஷாரை எதிர்த்தார் என்றதால் அவர் சுதந்திர வீரத்திற்க்கு வித்திட்டவரும் தற்கால கொள்ளைகார உள்ளூர் அரசியல் வாதிகளை எதிர்த்தால் இந்திய இறையாமைக்கு எதிராளி ஆகவும் மாற்றிவிடுகின்றது தான் அரசிய வரலாறோ?.

சமூகப் பார்வையுடன் அமைந்துள்ளது உங்களது பயணக் கட்டுரை.

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
www.hooraan.blogspot.com

ராம்ஜி_யாஹூ said...

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman


இதைப் படியுங்கள்.
கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டம் பொருளாதார ரீதியான எதிர்ப்பு தகவல்கள் உள்ளன.

J.P Josephine Baba said...

கிழக்கு இந்திய கம்பனியின் பிரதிநிதியான ஜாக்சனிடம் நெருடலான உறவாக இருந்தாலும் டேவிசன் உதவியுடன் ஜாக்சனை பிரிடீஷ் அரசின் கண்டனத்திற்க்கு உள்ளாக்கும் கட்டபொம்மன், நெல்லை கொள்ளையிட்ட தானாபதி பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவது மூலம் ஜான் பானர்மென் என்ற ஆங்கில அதிகாரியை பகைப்பதை பற்றி தானே சொல்கின்றீர்கள் நண்பர் ராம்ஜி அவர்களே?

Anonymous said...

கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்தது உண்மை ,அவர் வெள்ளயர்களின் ஆதிக்கத்தை அடியோடு வெறுத்தார் , அவர்களுக்கு வரி செலுத்தவும் மருத்தார் .இறுதியல் இந்த மண்ணுக்காக தனது INNYUIRAI யீந்தார் ... இந்த அரசு அவரக்கு என்ன செய்தது ?

Post Comment

Post a Comment